ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 அக்டோபர், 2017

கோபாஷ்டமி !!!

_638. கோபாஷ்டமி !_

கன்றுக்குட்டிகளை மேய்த்த "வத்சபாலன்" ஆன கண்ணன் மாடுகளை மேய்க்க ஆரம்பித்து "கோபாலன்" ஆன நாளே கோபாஷ்டமி !

கோவர்த்தன மலையைத்
தன் பிஞ்சுக் கையால்,
7 நாள் தூக்கிவைத்திருந்த,
கண்ணன் அம்மலையை கீழே
வைத்த நாளே கோபாஷ்டமி !

ஏழு நாளாக ஒன்றும்
சாப்பிடாமல் இருந்த
கண்ணனுக்கு கோபிகைகள்
56 விதமாக நிவேதனம்
செய்த நாளே கோபாஷ்டமி !

மழையைப் பொழிந்து
விருந்தாவனத்தை அழிக்க
நினைத்த இந்திரன்
கர்வமொழிந்து கண்ணனை சரணடைந்த நாளே கோபாஷ்டமி !

ஆகாச கங்கை ஜலத்தாலும்,
காமதேனுவின் பாலாலும்,
கண்ணனுக்கு அபிஷேகம் செய்து,
கோவிந்தன் என தேவர்கள் கொண்டாடினே நாளே கோபாஷ்டமி !

கண்ணனுக்கு அபிஷேகம் செய்த பாலும் ஆகாச கங்கா ஜலமும்
ஒன்றாய் சேர்ந்து
கோவிந்த குண்ட் (குளம்)
ஆன நாளே கோபாஷ்டமி !

கண்ணன் ஸ்வயம்
நாராயணனின் அவதாரம் என்று
கர்க்க முனிவர் சொன்ன
ரஹஸ்யத்தை நந்தகோபர்
எல்லோருக்கும் சொன்ன நாளே
கோபாஷ்டமி !

கண்ணனும் கோபர்களும்,
கோபிகைகளும் ஆசையாய்,
கோமாதாக்களுக்கு
பூஜை செய்த நாளே கோபஷ்டமி !

கோமாதாக்களுக்கு
இந்திரன் கண்ணனே
என்று கோவிந்தா கோவிந்தா என்று காமதேனு கூவி
அழைத்த நாளே கோபாஷ்டமி !

கோமாதாவைக் கொண்டாடி,
ஆசையாய் வலம் வந்து,
கோமாதாவிற்கு ஆகாரம் தந்து,
கோவிந்த நாமம் சொல்லி
பூஜிக்க வேண்டிய
நாளே கோபாஷ்டமி !

கோமாதாவை பூஜிப்போம் !
கோபாலனைக் கொண்டாடுவோம் !
கோபாஷ்டமியைக் கொண்டாடுவோம் !

© குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🍃 *ஆனந்தவேதம்* 🌱🖋

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP