ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 அக்டோபர், 2017

மாமுனியோ !

_636. மாமுனியே !!!_

ஆழ்வார் திருநகரி,
மக்களை நலியும் கலியை நசிக்க
பொலிக பொலிக பொலிகவென்று தந்த அருந்தவ மாமுனியோ !

ஆசார்யன் திருவாய்மொழிப்பிள்ளையின் உள்ளமறிந்து,
உன்னத ரத்னமாய் பேசும் அன்பான சிஷ்ய மாமுனியோ !

பெரியாழ்வாரின் திருமொழிக்கு,
பெரியவாச்சான் பிள்ளையைப் போல் வியாக்யானம் சொன்ன தமிழ்தாயின்
திவ்யமான மாமுனியோ !

அழகிய மணவாளனான
நம்பெருமாள் உகக்க
ஈட்டிற்கு ஈடு இணையில்லா விளக்கம் சொன்ன அழகிய மணவாள ஜீயரோ !

ஸ்ரீரங்கராஜனும் தன் குருவாய் ஏற்று "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" எனக் கொண்டாடின ஆசார்ய மாமுனியோ !

விரோதிகள் குடிலுக்கு
தீ வைக்க அனந்தனாய்
வெளிவந்து தான்
அரங்கனின் படுக்கை
என நிரூபித்த மாமுனியோ !

அரங்கனின் கைங்கரியத்திற்கு
இடையூறாக இருப்பதால்
குடும்ப வாழ்வை துச்சமென
துறந்த மாமுனியோ !

புளிய மரங்களுக்கும்,
தன் தவவலிமையால்,
உடனேயே மோக்ஷம்
தந்த அற்புத மாமுனியோ !

நம் ராமானுஜரின்,
திருவடியே கதியென,
வாழ்ந்து ஆர்த்திப் பிரபந்தம் சொல்லிப்
புலம்பிய மாமுனியோ !

இன்னும் என்னவெல்லாம் சொல்ல...
சொல்ல என்னால் ஆகுமோ...
சொன்னால் யுகங்களும் போதுமோ...
பெரிய ஜீயரின் பெருமையை,
இந்த சிறியன் சொல்லலாமோ...

அதனால்...
அடியார்கள் வாழ,
அரங்கநகர் வாழ,
எங்கள் கலிதீர
வந்த மாமுனியே...
மணவாள மாமுனியே...
வரவர முனியே...
சைலேச தயா பாத்ர முனியே...
ஸ்ரீரங்கராஜ குரு முனியே...
இன்னும் பல்லாயிரம் நூற்றாண்டு இரும்....

©குருஜீ கோபாலவல்லிதாசர்

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP