ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

638. தமிழ் தலைவன் !

எங்கள் தமிழ் தலைவன்,
அன்பால் நாரணனை
அனுபவித்தவன்,
வந்துதித்த
ஐப்பசி அவிட்ட நாள் இன்று !

நாங்கள் கருப்பையில்
மீண்டும் பிறவாதிருக்க,
திருக்கடல் மல்லையில்,
ஞானத் தமிழன்
உதித்த நாள் இன்று !

அன்பையே அகலாய்,
ஆர்வமே நெய்யாய்,
நாராயணனுக்கு
ஞான விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

திருக்கோவலூரில்
இடைக்கழியில்
பொய்கையாழ்வாரோடு
அமர்ந்த பக்தன்
உதித்த நாள் இன்று !

மூவரில் ஒருவராய்,
மூவரில் நடுவராய்,
முதல்வனைக் கண்டு,
அன்பாய் விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

ஐம்பூதங்களை ஆளும்
ஐம்புலன்களை ஆளும்
மஹத்பூதமான நாரணனை
அனுபவித்த பூதத்தாழ்வார்
உதித்த நாள் இன்று !

திருக்கடல்மல்லை
பக்த சிகாமணியே !
காம பூதமாய்,
கோப பூதமாய்,
அஹங்கார பூதமாய்,
ஆசை பூதமாய்,
அலையும் என்னைத் திருத்தி
ஸ்தல சயனத்தான்,
திருவடியில் இப்போதே சேர்த்து
நீர் பூதத்தாழ்வார்
என்பதை நிரூபித்து விடுங்கள் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

சனி, 28 அக்டோபர், 2017

கோபாஷ்டமி !!!

_638. கோபாஷ்டமி !_

கன்றுக்குட்டிகளை மேய்த்த "வத்சபாலன்" ஆன கண்ணன் மாடுகளை மேய்க்க ஆரம்பித்து "கோபாலன்" ஆன நாளே கோபாஷ்டமி !

கோவர்த்தன மலையைத்
தன் பிஞ்சுக் கையால்,
7 நாள் தூக்கிவைத்திருந்த,
கண்ணன் அம்மலையை கீழே
வைத்த நாளே கோபாஷ்டமி !

ஏழு நாளாக ஒன்றும்
சாப்பிடாமல் இருந்த
கண்ணனுக்கு கோபிகைகள்
56 விதமாக நிவேதனம்
செய்த நாளே கோபாஷ்டமி !

மழையைப் பொழிந்து
விருந்தாவனத்தை அழிக்க
நினைத்த இந்திரன்
கர்வமொழிந்து கண்ணனை சரணடைந்த நாளே கோபாஷ்டமி !

ஆகாச கங்கை ஜலத்தாலும்,
காமதேனுவின் பாலாலும்,
கண்ணனுக்கு அபிஷேகம் செய்து,
கோவிந்தன் என தேவர்கள் கொண்டாடினே நாளே கோபாஷ்டமி !

கண்ணனுக்கு அபிஷேகம் செய்த பாலும் ஆகாச கங்கா ஜலமும்
ஒன்றாய் சேர்ந்து
கோவிந்த குண்ட் (குளம்)
ஆன நாளே கோபாஷ்டமி !

கண்ணன் ஸ்வயம்
நாராயணனின் அவதாரம் என்று
கர்க்க முனிவர் சொன்ன
ரஹஸ்யத்தை நந்தகோபர்
எல்லோருக்கும் சொன்ன நாளே
கோபாஷ்டமி !

கண்ணனும் கோபர்களும்,
கோபிகைகளும் ஆசையாய்,
கோமாதாக்களுக்கு
பூஜை செய்த நாளே கோபஷ்டமி !

கோமாதாக்களுக்கு
இந்திரன் கண்ணனே
என்று கோவிந்தா கோவிந்தா என்று காமதேனு கூவி
அழைத்த நாளே கோபாஷ்டமி !

கோமாதாவைக் கொண்டாடி,
ஆசையாய் வலம் வந்து,
கோமாதாவிற்கு ஆகாரம் தந்து,
கோவிந்த நாமம் சொல்லி
பூஜிக்க வேண்டிய
நாளே கோபாஷ்டமி !

கோமாதாவை பூஜிப்போம் !
கோபாலனைக் கொண்டாடுவோம் !
கோபாஷ்டமியைக் கொண்டாடுவோம் !

© குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🍃 *ஆனந்தவேதம்* 🌱🖋

Read more...

வெள்ளி, 27 அக்டோபர், 2017

வேட்டையாடு பத்மநாபா !!!

_*637. வேட்டையாடு பத்மநாபா !*_

வேட்டையாடு பத்மநாபா !
இந்த தேசத்தைத் தவறாய் பேசுபவரின் குழம்பிய மனதை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
இந்து தர்மத்தை கேவலப்படுத்துபவரின் கெட்ட புத்தியை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன் தாசர்களைத்
தப்பாய் பேசுபவரின்
அகம்பாவத்தை
வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன் சொத்தைக்
கொள்ளையடிக்க
ஆசைப்படுபவரின்
பணத்தாசையை
வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன்னுடைய கேரளத்தில்,
நிம்மதியை குலைப்பவரின்
திமிரை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் அசிரத்தையை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் தற்பெருமையை
வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் காமத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் கோபத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் பொறாமையை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் வெறுப்பை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் குழப்பத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் அகம்பாவத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் முட்டாள்தனத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் வேற்றுமைகளை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் சோம்பேறித்தனத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் பாவங்களை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் கர்மவினைகளை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன்னைத் தவிர இவைகளை வேட்டையாட வேறு யாருமில்லை !

வேட்டையாடு பத்மநாபா !
வேட்டையாடி
காப்பாய் தேவா !

பத்மநாபா !
உன் திருவடிகளே சரணம் என்று காத்திருக்கும் இந்த அடிமையின் பிரிவுப் புலம்பலைக் கேட்டு, வேகமாய் வந்து இந்த விரஹத்தையும் வேட்டையாடு !!!

காத்திருக்கிறேன் !
உன் கூர்விழி என்னும் வில்லிலிருந்து... வேகமாய் வரும் கருணை என்னும் அன்பிற்காக...

©குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🍃 *ஆனந்தவேதம்* 🌱🖋

Read more...

புதன், 25 அக்டோபர், 2017

மாமுனியோ !

_636. மாமுனியே !!!_

ஆழ்வார் திருநகரி,
மக்களை நலியும் கலியை நசிக்க
பொலிக பொலிக பொலிகவென்று தந்த அருந்தவ மாமுனியோ !

ஆசார்யன் திருவாய்மொழிப்பிள்ளையின் உள்ளமறிந்து,
உன்னத ரத்னமாய் பேசும் அன்பான சிஷ்ய மாமுனியோ !

பெரியாழ்வாரின் திருமொழிக்கு,
பெரியவாச்சான் பிள்ளையைப் போல் வியாக்யானம் சொன்ன தமிழ்தாயின்
திவ்யமான மாமுனியோ !

அழகிய மணவாளனான
நம்பெருமாள் உகக்க
ஈட்டிற்கு ஈடு இணையில்லா விளக்கம் சொன்ன அழகிய மணவாள ஜீயரோ !

ஸ்ரீரங்கராஜனும் தன் குருவாய் ஏற்று "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" எனக் கொண்டாடின ஆசார்ய மாமுனியோ !

விரோதிகள் குடிலுக்கு
தீ வைக்க அனந்தனாய்
வெளிவந்து தான்
அரங்கனின் படுக்கை
என நிரூபித்த மாமுனியோ !

அரங்கனின் கைங்கரியத்திற்கு
இடையூறாக இருப்பதால்
குடும்ப வாழ்வை துச்சமென
துறந்த மாமுனியோ !

புளிய மரங்களுக்கும்,
தன் தவவலிமையால்,
உடனேயே மோக்ஷம்
தந்த அற்புத மாமுனியோ !

நம் ராமானுஜரின்,
திருவடியே கதியென,
வாழ்ந்து ஆர்த்திப் பிரபந்தம் சொல்லிப்
புலம்பிய மாமுனியோ !

இன்னும் என்னவெல்லாம் சொல்ல...
சொல்ல என்னால் ஆகுமோ...
சொன்னால் யுகங்களும் போதுமோ...
பெரிய ஜீயரின் பெருமையை,
இந்த சிறியன் சொல்லலாமோ...

அதனால்...
அடியார்கள் வாழ,
அரங்கநகர் வாழ,
எங்கள் கலிதீர
வந்த மாமுனியே...
மணவாள மாமுனியே...
வரவர முனியே...
சைலேச தயா பாத்ர முனியே...
ஸ்ரீரங்கராஜ குரு முனியே...
இன்னும் பல்லாயிரம் நூற்றாண்டு இரும்....

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

தளபதி

தேவர்களின் "தளபதி" இவன் மட்டுமே !

பக்தர்களின் "தளபதி" இவன் மட்டுமே !

தமிழகத்தின் "தளபதி" இவன் மட்டுமே !

செந்தூரின் "தளபதி" இவன் மட்டுமே !

ஞானத்தின் "தளபதி" இவன் மட்டுமே !

விண்ணவரின் "தளபதி" இவன் மட்டுமே !

மண்ணவரின் "தளபதி" இவன் மட்டுமே !

இந்துக்களின் "தளபதி" இவன் மட்டுமே !

சுனாமியையும் ஜெயித்த
"தளபதி" இவன் மட்டுமே !

சூரனையும் வதைத்த "வெற்றித் தளபதி" இவன் மட்டுமே !

இவன் மட்டுமே எங்கள் "தளபதி" !
இவன் மட்டுமே என்றும் "தளபதி" !
இவன் மட்டுமே மெய்யான "தளபதி" !

இவனே எங்கள் "அழகுத் தளபதி" !
இவனே எங்கள் "இளம் தளபதி!
இவனே எங்கள் "தெய்வத் தளபதி" !

இவனே எங்கள் செந்தூரான் !
இவனே எங்கள் ஸ்கந்தன் !
இவனே எங்கள் முருகன் !
இவனே எங்கள் ஸ்வாமிநாதன் !

இவனே எங்களின்
"நம்பிக்கைத் தளபதி " !
இவனை நம்பினார்
ஒரு நாளும் கெடுவதில்லை !!!

Read more...

திங்கள், 16 அக்டோபர், 2017

பட்டாசு வெடிப்போம் !

பட்டாசு வெடிப்போம் !

தீபாவளியன்று பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் ஒட்டகங்களை
வெட்டி மிருகவதை செய்யவில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள் பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் மதம் மாற்றும் கயமைத்தனம் செய்யவில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்
எங்கள் தீபாவளிக்கு நாங்கள் பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் எந்த நாட்டிலும்
தீவிரவாதம் செய்யவில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் எம் பணத்தில் எங்கள் சிவகாசி பட்டாசுகளை வாங்குகிறோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

எங்கள் பாட்டன், பூட்டன்,
தாத்தன் அப்பன் எல்லாரும்
பட்டாசு வெடித்தார்கள் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம்  !

நாங்கள் ஒரு நாளும்,
எங்கள் மதத்தை யார் மீதும் திணித்ததேயில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் வெளிநாட்டுக்
கம்பெனிகளின் கூலிக்காக விளம்பரங்களில் நடிப்பதில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் இயற்கையின் பாதுகாவலர்கள் !
நாங்கள் காக்கைக்கும் அன்னம் வைப்போம் !
நாங்கள் மரங்களையும் தொழுவோம் !
நாங்கள் பறவைகளையும், மிருகங்களையும், கடவுளின் உருவாய் வணங்குவோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் பட்டாசு வெடித்தோம் !
எம் பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும் !
எங்கள் வம்சமே பட்டாசு வெடிக்கும் !

எங்கள் மூதாதையர்
சொன்ன விஷயங்களை
நாங்கள் செய்யக்கூடாது
என்று எந்த பொடிப்பயல்களும் சொல்ல அவசியமில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் எங்கள் ராமனுக்காகவும்,
எங்கள் க்ருஷ்ணனுக்காகவும்,
தீபாவளியைக் கொண்டாடுகிறோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் ஜனவரி 1க்கு
கும்மாளமடிக்க பட்டாசு வெடிக்கவில்லை !
எங்கள் கலாசார பண்டிகையான
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போம் என்பது,
எங்கள் காக்கைக் குருவிக்கும்,
எங்கள் தெரு நாய்களுக்கும்,
எங்கள் மரம் செடி கொடிகளுக்கும்,
நன்றாகவே தெரியும் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

பட்டாசு வெடிப்போம் !
பல்லாயிரமாண்டு பாரம்பரியத்தை நாங்கள்
மாற்றிக்கொள்ள முடியாது !
அவசியமுமில்லை !
பட்டாசு வெடிப்போம் !
பட்டாசு வெடிப்போம் !
பட்டாசு வெடிப்போம் !

க்ருஷ்ண நாமம் சொல்லி பட்டாசு வெடிப்போம் !
ராம நாமம்
சொல்லி பட்டாசு வெடிப்போம் !

இந்து தர்மம் ஜெயிக்க பட்டாசு வெடிப்போம் !
பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சொல்பவரின் முட்டாள்தானம் அழிய,
பட்டாசு வெடிப்போம் !

இனி யாரும் இந்து தர்ம விஷயங்களில் தலையிடக்கூடாதென்று பட்டாசு வெடிப்போம் !

இந்த தேசம் இந்து தேசம் என்று சொல்லிச் சொல்லி பட்டாசு வெடிப்போம் !

இனி மூடர்கள் வாய் திறவாதிருக்க
"வந்தே மாதரம்",
"ஜெய் ஹிந்த்" என்று சொல்லிச் சொல்லி
பட்டாசு வெடிப்போம் !!!

Read more...

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

633. ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி

✍🏼🍃 *ஆனந்தவேதம்*🌱🖋

*_ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி !_*

புரட்டாசி திருவோணம், ஏற்றம் பெற்ற நாளோ இன்று !!!

மலையப்பன் திருமணி, புவியில்
வந்துதித்த நாளோ இன்று !!!

யதிராஜன் ராமானுஜர், மீண்டும்
வையத்தில் வந்த நாளோ இன்று !!!

விளக்கொளி பெருமாள் ஒளி
ஜொலித்த நாளோ இன்று !!!

வரதராஜனின் அருள், உலகிற்கு
வரமாய் வந்த நாளோ இன்று !!!

அரங்கனின் பாதுகைகளுக்கு
ஆசி கிடைத்த நாளோ இன்று !!!

ஹயக்ரீவனின் தாபமெல்லாம்
தீர்ந்த நாளோ இன்று !!!

கருடாழ்வாரின் மகத்துவம் பாரில்
பரிமளித்த நாளோ இன்று !!!

தேவநாதனின் தேவையெல்லாம்
பூர்த்தியான நாளோ இன்று !!!

ஆழ்வார்களும் ஆசார்யர்களும்,
ஆனந்தித்த நாளோ இன்று !!!

சம்ஸ்க்ருதமும், தமிழும்
குதூகலித்த நாளோ இன்று !!!

பெருந்தேவியின் பாக்கியம்
அவதரித்த நாளோ இன்று !!!

நம்பெருமாளின் நம்பிக்கை,
விருத்தியான நாளோ இன்று !!!

நரசிம்மனின் ஆனந்தம்
எல்லை கடந்த நாளோ இன்று !!!

பக்தி ஞான வைராக்கியம்,
வாழ்வு பெற்ற நாளோ இன்று !!!

பூமாதா பூரணமாய் புளகாங்கிதம்
பெற்ற நாளோ இன்று !!!

சம்சாரிகளுக்கெல்லாம் மோக்ஷம்
தீர்மானமான நாளோ இன்று !!!

நம் கொங்கில்பிராட்டி சூசகமாய்
சொன்ன நாளோ இன்று !!!

நமக்காக நிகமாந்த மஹாதேசிகன்
அவதரித்த நாளோ இன்று !!!

வைகுந்த நீள் வாசல் அடையா
நெடுங்கதவாய் ஆன நாளோ இன்று !!!

விசிஷ்டாத்வைதம் வீறு பெற்று
பேறு அடைந்த நாளோ இன்று !!!

தூப்புல் அக்ரஹாரம் குலமணியை
அடைந்த நாளோ இன்று !!!

நீசனான அடியேனும் கடைத்தேற,
ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி வந்த நாளோ இன்று !!!

இன்றே தான் !
பல் கலையோருக்கும்,
பொதுவாய் வேதாந்தமே,
தேசிகராய் வந்த நாளே இன்று !!!

©குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🏼🌱 *ஆனந்தவேதம்* 🍃🖋

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP