ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 மார்ச், 2017

நிச்சயமில்லை !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
வாழ்ந்துவிடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
சிரித்துவிடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
உதவிவிடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
கவலையை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
கோபத்தை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நல்லதையே பேசு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நல்லதையே நினை !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நல்லதையே செய் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்றே
பயத்தை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
உண்மையே பேசு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
சோம்பலை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
வெறுப்பை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நன்றாக உழை !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நாம ஜபம் செய் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
கோவிலுக்குச் செல் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
பக்தி செய் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
தெய்வத்தை வணங்கு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
அன்போடு இரு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
அகம்பாவத்தை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
மரியாதையாய் நட !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
ஆரோக்கியத்தை கவனி !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
இரக்கத்தோடு இரு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
சண்டையிடாமல் இரு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
நானும் நீயும்
நிரந்தரமில்லை !

இருக்கும்வரை
இயல்பாய் வாழ்வோம் !
இன்று வாழ்வோம் !
இதயபூர்வமாய் வாழ்வோம் !
இனிமையாய் வாழ்வோம் !
இதமாய் வாழ்வோம் !
அமைதியாய் வாழ்வோம் !
ஆர்பாட்டமில்லாமல் வாழ்வோம் !
ஆர்வத்துடன் வாழ்வோம் !
அருமையாய் வாழ்வோம் !

Read more...

ஞாயிறு, 26 மார்ச், 2017

வடுகா !!!

வடுகா...வடுகா...வடுகா...

வடுகா... நீயே சிஷ்யன்...
வடுகா...நீயே ரசிகன்...
வடுகா...நீயே தாசன்...
வடுகா...நீயே புத்திமான்...
வடுகா...நீயே சக்திமான்...
வடுகா...நீயே வல்லவன்...
வடுகா...நீயே நல்லவன்...
வடுகா...நீயே தெளிந்தவன்...
வடுகா...நீயே புரிந்தவன்...
வடுகா...நீயே உணர்ந்தவன்...
வடுகா...நீயே ஜெயித்தவன்...
வடுகா...நீயே நிரூபித்தவன்...
வடுகா...நீயே யதார்த்தமானவன்...
வடுகா...நீயே செல்வன்...
வடுகா...நீயே பாக்கியவான்...

வடுகா...
எத்தனை முறை ஸ்வாமி ராமானுஜர் உன்னை இப்படிக் கூப்பிட்டிருப்பார் !!!

வடுகா...
உமக்குத் தோற்றோம் என ஸ்வாமி ராமானுஜர் ஒத்துக்கொண்டது உன்னிடமே !!!

வடுகா...
ரங்கராஜன் வேண்டாம்,
யதிராஜன் போதும் என
உன்னால் மட்டுமே சொல்லமுடியும் !!!

வடுகா...
கூரத்தாழ்வானையும்,
முதலியாண்டானையும்,
"இரு கரையார்" எனப் பரிகசிக்க உன்னால்தான் முடியும் !!!

வடுகா...
உம் பெருமாளை சேவிக்க வந்தால்,
எம் பெருமாளுக்கு பால் பொங்கும் என உன்னால் மட்டுமே பதிலளிக்க முடியும் !

வடுகா...
ராமானுஜரின் பாதுகையும்,
ராமானுஜரின் பெருமாளும்,
சமமே என ராமானுஜரிடம் வாதாட உன்னால்தான் முடியும் !

வடுகா...
ராமானுஜரின் நாமம்,
நாராயண நாமத்தை விட,
உயர்ந்தது என உணர்ந்தது நீ மட்டுமே !!!

வடுகா...
அனந்தபத்மநாபனையும்,
புரி ஜகந்நாதனையும்,
மிரட்ட உன்னால்தான் முடியும் !!!

வடுகா...
உன் பெருமை யாரறிவார்...
திருக்குறுங்குடி நம்பியும்,
உன் ரூபம் தரித்தே,
ராமானுஜருக்கு கைங்கரியம் செய்தான் !!!

வடுகா... வடுகா... வடுகா...
ஹே வடுக நம்பி...
உன்னை நம்பி...
இந்த ஏழை...

உன்னைப்போல்
ராமானுஜ சொத்தாக
என்னை மாற்றிவிடு...

Read more...

செவ்வாய், 21 மார்ச், 2017

மரம் நட விரும்பு !

மனிதர்கள் அதிகமானால்,
வறட்சி...
பஞ்சம்...
வஞ்சம்...
பொறாமை...
ஏமாற்றம்...
துரோகம்...
கொலை...
கொள்ளை...
சுயநலம்...
பூமி வெப்பமாதல்...
செயற்கை உரங்கள்...
காற்றில் மாசு...
இயந்திர இரைச்சல்...
நெரிசல்...
பலவீனம்...
மண் சுரண்டல்...
ரசாயண மருந்துகள்...
நதிகள் சாக்கடை...
பிளாஸ்டிக் அரக்கன்...
அசுர ராஜ்யம்...
நிம்மதியின்மை...
களைப்பான காலை...
மந்தமான மாலை...
நொந்த இரவு...

மரங்கள் அதிகமானால்...
நல்ல நிழல்...
வாசமுள்ள மலர்கள்...
சத்தான காய்கள்...
சுவையான பழங்கள்...
சுத்தமான காற்று...
காலத்தே மழை...
உலகில் பசுமை...
ஆனந்த வாழ்வு...
பலமான ஆரோக்கியம்...
மண் வளம்...
இயற்கை உரங்கள்...
ஆறுகளில் நீர்...
பறவைகளின் கானம்...
தெய்வத்தின் ராஜ்யம்...
நிம்மதியான மனது...
கூட்டு வாழ்க்கை...
குதூகலமான காலை...
மயக்கும் மாலை...
குளிர்ந்த இரவு...

எந்த விதத்தில் பார்த்தாலும்,
மனிதரை விட மரங்களே உயர்ந்தது...

இறைவா...
மரத்தைப் படைத்து மகிழ்ந்த நீ...
மனிதரைப் படைத்து
நொந்தாயோ....

ஆறரிவு மனிதரைக் காக்க,
ஓரறிவு மரங்கள் உள்ளன...

ஆனால் ஆறரிவு மனிதரிடம் இருந்து,
மரங்களைக் காக்க,
இறைவா, உன்னை விட்டால் யார் உண்டு ?!?

காடுகள்...தெய்வங்கள்...
வணங்குவோம்...
காடுகள்...குழந்தைகள்...
வளர்ப்போம்...
காடுகள்...நண்பர்கள்...
உறவாடுவோம்...
காடுகள்...ஆசான்கள்...
தொழுவோம்...
காடுகள்...பெற்றோர்கள்...
மதிப்போம்...
காடுகள்...வாழ்க்கை...
நேசிப்போம்...

இன்று உலக காடுகள் தினம்...
ஒரு மரம் நடுவோம்...

மரம் நட விரும்பு...
மரம் காக்க விரும்பு...

மரத்தை மறவாதே...
மனிதா...
மரம் நம் அறம்...

Read more...

வாழ்க்கை என்னும் கப்பல் !

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
பிரச்சனைகள் என்னும்
கடலால் மூழ்குவதில்லை...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
கிண்டல்கள் என்னும்
சுறாக்களால் மூழ்குவதில்லை...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
தோல்விகள் என்னும் திமிங்கலங்களால் மூழ்குவதில்லை...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
சம்பவங்கள் என்னும் சூறாவளியால் மூழ்குவதில்லை...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
நம்பிக்கை துரோகம் என்னும்
முதலைகளால் மூழ்குவதில்லை...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
தடைகள் என்னும்
பனிப்பாறைகளால் மூழ்குவதில்லை...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
அவநம்பிக்கை என்னும் சிறிய ஓட்டையால் மூழ்கிவிடுகிறது...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
பயம் என்னும் மிகச்சிறிய
ஓட்டையால் மூழ்கிவிடுகிறது...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,
சோம்பேறித்தனம் என்னும் மிகச்சிறிய
ஓட்டையால் மூழ்கிவிடுகிறது...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய
பலமான சொகுசுக் கப்பல்,
சந்தேகம் என்னும் மிகச்சிறிய
ஓட்டையால் மூழ்கிவிடுகிறது...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய
பலமான சொகுசுக் கப்பல்,
பொறுமையின்மை என்னும்
மிகச்சிறிய ஓட்டையால் மூழ்கிவிடுகிறது...

வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பலின் மாலுமி நீதான் !

ஓட்டைகளை அடை...
கப்பலை செலுத்து...
காலம் என்னும் கடலில் ஆனந்தமாய் சுற்றி வா...
அனுபவம் என்னும் ரத்தினங்களையும், பவழங்களையும்,
முத்துக்களையும்
அள்ளு !!!

ஒரு நாள் நிதானமாய்
மரணம் என்னும் கரை சேர்வாய் !!!!

அதுவரை உலகம் என்னும் கடலில்,
தைரியமாய் சுற்றிக்கொண்டிரு !

உன் பயணம் வெல்ல,
என் வாழ்த்துக்கள் !

Read more...

வெள்ளி, 17 மார்ச், 2017

பாவமன்னிப்பு !

இயற்கை அன்னையே...
மன்னிப்பு கோருகிறோம்...
மழை தா...
நீ கருணையின் உறைவிடமன்றோ...

மரங்கள் நட்டது முன்னோரின் நல்லெண்ணம்...
மரங்களை வெட்டியது
எம் மதியீனம்....
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து,
மழை தா !

குளம் வெட்டியது
முன்னோரின் புத்திசாலித்தனம் !
குளத்தைத் தூர்த்தது
எம் சுயநலம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஏரிகள் செய்தது
முன்னோரின் முன்னேற்பாடு !
ஏரிகளைக் அழித்தது
எம் அகம்பாவம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஆறுகளை தெய்வமாய்
மதித்தது முன்னோரின்
தீர்க்கதரிசனம் !
ஆறுகளைக் கெடுத்தது
எம் முட்டாள்தனம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

விவசாயிகளைக் கொண்டாடியது,
முன்னோரின் நன்றிபெருக்கு !
விவசாயத்தை அவமதித்தது
எம் அறியாமையே !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

மண்ணைத் தாயாய் வழிபட்டது
முன்னோரின் பக்குவம் !
மண்ணை மலடாக்க ரசாயணம்
இட்டது எம் பேராசை !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

பறவை, மிருகம், பூச்சி,
எல்லாம் தம் இனமாய்
வாழவைத்தது முன்னோரின் சமத்துவம் !
நாங்களே உயர்ந்தவர்கள்,
எமக்கே எல்லாம் என
ஆக்கிரமித்தது எம் ஏகாதிபத்தியம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஆயிரம் காரணம் சொன்னாலும்,
எம் குற்றங்கள் மன்னிக்க முடியாததே...
வினை விதைத்தோம்...
வினையை அனுபவிக்கிறோம்...
ஆயினும் தாயே...
பிள்ளைகள் பிழையைப் பொறுத்து,
வாழ உலகினில் பெய்திடாய் !!!
நாங்களும் மழை நீராட
உடனே அருள் செய் !

இயற்கை அன்னையே !
நின்னை சரணடைந்தோம் !
மழை தருவாய் எனக் காத்திருக்கிறோம் !

உன்னால் தான் வாழ்கிறோம் !
உன்னிடமே பாவம் செய்தோம் !
உன்னிடமே பாவமன்னிப்பு கேட்கிறோம் !

இயற்கை அன்னையெ !
அறியாத பிள்ளைகள் !
அன்பிலாத பிள்ளைகள் !
அக்கறையில்லாத பிள்ளைகள் !
ஆனாலும் கதியில்லாத பிள்ளைகள் !

நீ கைவிட்டால் நாங்கள் அனாதைகளே !
இயற்கை அன்னையே !
கோபம் போதும் !
தண்டனை போதும் !
இதற்கு மேல்
தண்டனை அனுபவிக்க சக்தி எமக்கில்லை !

இயற்கை அன்னையே !
இரங்காய்...
அருளாய்...
விரைவாய்...

Read more...

வியாழன், 16 மார்ச், 2017

மழையே மழையே வா வா !!!

மழையே மழையே வா வா...
ஆசை முத்தம் தா தா...

மழையே மழையே வா வா...
பஞ்சம் தீர்க்க வா வா...

மழையே மழையே வா வா...
பசுமை தழைக்க வா வா...

மழையே மழையே வா வா...
உலகம் உய்ய வா வா...

மழையே மழையே வா வா...
தாகம் தீர்க்க வா வா...

மழையே மழையே வா வா...
தர்மம் தழைக்க வா வா...

மழையே மழையே வா வா...
மண்ணுலகம் செழிக்க வா வா...

மழையே மழையே வா வா...
பயிர்கள் வாழ வரம் தா தா...

மழையே மழையே வா வா...
விதைகள் முளைக்க வா வா...

மழையே மழையே வா வா...
வறுமை அழிய வா வா...

மழையே மழையே வா வா...
விவசாயி சிலிர்க்க வா வா...

மழையே மழையே வா வா...
வீறுகொண்டு வா வா...

மழையே மழையே வா வா...
தெய்வமாய் அருள வா வா...

மழையே மழையே வா வா...
நம்பிக்கை ஜெயிக்க வா வா...

மழையே மழையே வா வா...
மாதம் மும்முறை வா வா...

மழையே மழையே வா வா...
வெப்பம் தணிய வா வா...

மழையே மழையே வா வா...
பூமி புத்துணர்ச்சி பெற வா வா...

மழையே மழையே வா வா...
மண்ணைப் புணர வா வா...

மழையே மழையே வா வா...
மனம் திளைக்க வா வா...

மழையே மழையே வா வா...
உடல் குதூகலிக்க வா வா...

மழையே மழையே வா வா...
மக்கள் மதிக்க வா வா...

மழையே மழையே வா வா...
உடனே உடனே வா வா...

மழையே மழையே வா வா...
எல்லோருக்கும் பொதுவாய் வா வா...

மழையே மழையே வா வா...
பொறுப்பாய் விரைந்து வா வா...

மழையே மழையே வா வா...
இடி மின்னலோடு வா வா...

மழையே மழையே வா வா...
ஆறு குளம் ஏரி நிரம்ப வா வா...

மழையே மழையே வா வா...
கிணறு, குட்டை, நிறைய வா வா...

மழையே...
அடிபணிகிறோம் உன்னை...
அருள் செய் எம்மீது...

Read more...

ஞாயிறு, 12 மார்ச், 2017

வண்ணன் கண்ணனோடு !!!

ஹோலி கொண்டாடுவோமா...

வண்ணமயமாய் கொண்டாடுவோமா...

வண்ணன் கண்ணனோடு,
கொண்டாடுவோமா ?!?

கண்ணனின்
அழகான
கருமையை,
உடலெங்கும்
அப்பிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
கைகளின்
செந்தாமரை வண்ணத்தை
மார்பில்
பூசிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
உதட்டுகளின்
பவளச்சிவப்பை
உதட்டில்
தடவிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
செந்தாமரைக் காலின்
சிவப்பை
தலையிலே
சூடிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
பீதாம்பரத்தின்
மஞ்சளை
இடையிலே
தேய்த்துக்கொள்வோமா ?!?

கண்ணனின்
விரல்களின்
தாமரைச் சிவப்பை
நாக்கில்
உரசிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
பற்களின்
வெண்மையை
வேண்டிய இடத்தில்
தரித்துக்கொள்வோமா ?!?

கண்ணனின்
நாவின்
இளஞ்சிவப்பை
அவனுக்கு பிடித்த இடத்தில்
ஒளித்துக்கொள்வோமா ?!?

கண்ணனின்
குழலின்
கருமையை
கைகளில்
அள்ளி எடுப்போமா ?!?

கண்ணனின்
மயில் பீலியின்
வண்ணமெல்லாம்
கழுத்திலே
ஈஷிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
சலங்கையின்
வண்ணத்தை
கணுக்காலில்
தடவிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
வனமாலையின்
வர்ணமெல்லாம்
முதுகிலே
நிறைத்துக் கொள்வோமா ?!?

கண்ணனின்
கௌஸ்துப மணியின்
வண்ணத்தை
தொடையில்
பூசிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
துளசியின்
பசுமையை
மூக்கிலே
பூசிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
அக்குளின்
வர்ணத்தை
வாயிலே
தேக்கி வைத்துக்கொள்வோமா ?!?

கண்ணனின்
காது குண்டலங்களின்
வெண்மையை
பல்லில்
எடுத்துக்கொள்வோமா ?!?

கண்ணனின்
ப்ரேமையின்
ஆனந்த வண்ணத்தை
தொண்டைக்குழியில்
சேமிப்போமா ?!?

கண்ணனின்
திருமறு மார்பின்
பழுப்பு வர்ணத்தை
உமிழ் நீரில்
கலந்திடவைப்போமா ?!?

கண்ணனின்
தாம்பூல
உமிழ்நீர் வண்ணத்தை
தொப்புளில்
பூசிக்கொள்வோமா ?!?

கண்ணனின்
ராசத்தின்
வெளிர் வெண்மையை
வயிற்றில்
ஒளித்துக்கொள்வோமா ?!?

போதுமா ?!?
தாங்குமா ?!?

இன்னும் வேண்டுமா ?!?

அப்போது இன்னும்
நிறைய நாமஜபம் செய் !!!

கண்ணனின்
சொத்தாக
உடனே மாறு !!!

இன்னும் நிறைய
வண்ணங்கள்
கண்ணனிடம்
உண்டே !!!

இனி எடுப்பதும்,
கொடுப்பதும்,
உன் வேலை...

Read more...

வியாழன், 9 மார்ச், 2017

முடியுமா ?!?

முடியுமா ?!?
உன்னால் முடியுமா ?!?

முடிந்ததை முடியாதென நீ நினைத்தால்,
முடியாதபடி உன் எண்ணமே முடிவுகட்டிடும் !

முடிந்ததை முடியாதென நீ நினைத்தால்,
முடியாத பலவீனம் உன்னை வந்துசேரும் !

முடிந்ததை முடியாதென நீ நினைத்தால்,
முடிக்கும் உற்சாகம் முடிந்துவிடும் !

முடிந்ததை முடியும்போது,
நீ முடிக்க முயன்றால்,
முடியாததும் உன்னால் முடிக்க முடியும் !

முடிவை...நீ எடு...
முடியுமென...நீ நம்பு...
முடிக்க...முயல்...
முடியாவிடில்...முதல்வனின் கை உனக்காக முடிக்கவைக்கும்...

உன்னால் முடியாதென,
உலகமே சொன்னாலும்,
முதல்வனை நம்பி,
முடியுமென நீ முயன்றால்,
புதிய விடியல் உனக்காக...

Read more...

புதன், 8 மார்ச், 2017

தெய்வத் துகள் !

அடிப் பெண்ணே....
நீ தெய்வத் துகள்...

அடிப்பெண்ணே...
நீ அண்டத்தின் ஆதாரம்...

அடிப்பெண்ணே...
நீ நாளைய விதை...

அடிப்பெண்ணே...
நீ அறிவின் ஆரம்பம்...

அடிப்பெண்ணே...
நீ மொழியின் அடையாளம்...

அடிப்பெண்ணே...
நீ அழகின் சான்று...

அடிப்பெண்ணே...
நீ குடும்பத்தின் சொத்து...

அடிப்பெண்ணே...
நீ தர்மத்தின் காவலாளி...

அடிப்பெண்ணே...
நீ ஆணின் தேவை...

அடிப்பெண்ணே...
நீ வாஞ்சையின் எல்லை...

அடிப்பெண்ணே...
நீ தியாகத்தின் சின்னம்...

அடிப்பெண்ணே...
நீ உறவின் பாலம்...

அடிப்பெண்ணே...
நீ தைரியத்தின் அம்சம்...

அடிப்பெண்ணே...
நீ புனிதத்தின் ஊற்று...

அடிப்பெண்ணே...
நீ காதலின் வெற்றி...

அடிப்பெண்ணே...
நீ நீ தான்...

அடிப்பெண்ணே...
ஆணில்லாத பெண்ணும் ஜெயிக்கிறாள்...
பெண்ணில்லாத ஆண்
இழக்கிறான்...

அடிப்பெண்ணே...
நீ உயர்ந்தவள் என்பதை
நீ உணர்வாய்...

உனது வெற்றி
உன் மனதில்...

உன்னை தடுக்க
நீயே உண்டு...

அடிப்பெண்ணே...
உன்னை நான் வணங்குகிறேன்...
நீ இல்லாத உலகம்...
உலகமல்ல...
நீ பேசாத பாஷை...
பாஷையல்ல...

நீ தாய்...
நீ தாரம்...
நீ சகோதரி...
நீ மகள்...
நீ தோழி...
நீ மந்திரி...
நீ ராணி...

நீ இல்லாவிடில் இங்கே தெய்வங்களும் மரியாதை இழக்கும் !

நீ இல்லாவிடில் இங்கே
சிருஷ்டியும் நிற்கும் !

நீ இல்லாவிடில் இங்கே
தர்மமும் தடுமாறும் !

நீயே மனதின் பலத்தை
உலகிற்கு புரியவைக்க முடியும் !

நீ மனோ திடம் கொள்வாய்...
நீ உலகைக் காப்பாய்...
நீ அதர்மத்தை அழிப்பாய்...

நீ நல்லதோர் வீணை...
நீ நல்ல நிலம்...
நீ நல்ல ரசிகை...
நீயே வாழ்வை மலரச்செய்பவள்...
நீயே விடியல்...
நீயே நம்பிக்கை...

நீயே கடவுளின் செல்லம் !

Read more...

ஞாயிறு, 5 மார்ச், 2017

முதல் முறையாய் !

அமுதனே உனக்காக வருகிறேன் !

அரங்கத்து அமுதனே உனக்காகவே வருகிறேன் !

திருவரங்கத்து அமுதனே,
உன்னடிமை வருகிறேன் !

அமுதனின் அமுதான,
ராமானுஜ அமுதை,
அடியோங்களுக்கு உள்ளபடி
காட்டித் தந்த,
திருவரஙகத்தமுனாரே,
உன் திருவடியில் அடியேனைத் தர வருகிறேன் !

பல ஜன்மாக்கள்
சுற்றிவிட்டேன் !
பல உடலில்
வாழ்ந்துவிட்டேன் !
பல பிறப்புகள்
பிறந்துவிட்டேன் !
பல இறப்புகள்
அடைந்துவிட்டேன் !

இன்னும் பக்குவம்
வரவில்லை !
இன்னும் வைராக்கியம்
வரவில்லை !
இன்னும் ஆசை
விடவில்லை !
இன்னும் அகம்பாவம்
அடங்கவில்லை !
இன்னும் சுயநலம்
அழியவில்லை !

அரங்கத்தில் படுத்திருக்கும்,
அரங்கனுக்கும்
என் நிலை தெரியவில்லை !

அடியேனைக் காக்கும்
இராமானுசனை அடைய
எனக்கும் வழியில்லை !

திருவரங்கத்து அமுதனாரே !
இந்த நாயேனையும்,
உடையவரின் சொத்தாக
ஆக்கிவிடுமய்யா !

என்னிடம் உமக்குத் தர
ஏதுமில்லை...
உயிரைத் தவிர...

அதை உம் திருவடியில்
சமர்ப்பிக்கிறேன் !

இந்த ஜீவனை
ராமானுஜன்
என்னும் கருணைக் கடலில்
கரைத்துவிடுமய்யா !

காரேய் கருணை இராமனுசன் கருணையை
உம்மை விட அறிந்தவர் யார்...
இந்த ஸ்ரீரங்கத்திலே !!!
இந்த வையகத்திலே !!!

முதல் முறையாய்,
ஸ்ரீரங்கத்தில்,
உம்மை நினைத்து,
நுழைந்துவிட்டேன்...

இனி உம் பொறுப்பு....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP