ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2017

உனக்கு அறிவு இருக்கிறதா ?!?

அரிது...அரிது...
பூமியில் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...
மனிதராய் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...
குருவைப் பற்றிக் கேட்டல் அரிது...

அதனினும் அரிது...
குருவைத் தேடுதல் அறிது...

அதனினும் அரிது...
குருவின் பார்வை அரிது...

அதனினும் அரிது...
குருவைப் பார்த்தல் அரிது...

அதனினும் அரிது...
குரு அருள் அரிது...

அதனினும் அரிது...
குருவைப் புரிதல் அரிது...

அதனினும் அரிது...
குருவை நம்புதல் அரிது...

அதனினும் அரிது...
குரு வார்த்தை கேட்பது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி வாழ ஆசைப்படுவது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி நடப்பது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி எல்லாம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குருவை தெய்வமாய் பார்ப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவை தெய்வத்தை விட
உயர்வாய் பார்ப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்ய நினைப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்யக் கிடைப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குரு உகக்கும்படி கைங்கரியம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குருவோடு வாழ்வது அரிது...

அதனினும் அரிது...
குரு பெருமை உலகெலாம் செப்புவது அரிது...

அதனினும் அரிது...
குரு திருவடியில் உயிர் பிரிவது அரிது...

இப்போது புரிந்ததா...
மானிடராய் பிறத்தல் அரிது என்று ஏன் சொன்னாரென்று !!!

அரிதான பிறவியில்,
அறியாமை அழிக்கும் குருவை,
அறிவதே அறிவு...

உனக்கு அறிவு இருக்கிறதா ?!?

இல்லையா !!!!
குருவை அறி...

இருக்கிறதா !!!
உனக்கு நமஸ்காரம் !!!

Read more...

குரு அருள் !

குரு அருள் !!!

நாமே தடுத்தாலும்,
நம்மை தடுத்தாளும்....

நாமே விலகினாலும்,
நம்மை விலகாமல் காக்கும்...

நாமே ஒதுக்கினாலும்,
நம்மை ஒதுக்காமல் தொடரும்...

நாமே பரிகசித்தாலும்,
நம்மை மதித்து கூட இருக்கும்...

நாமே அவமதித்தாலும்,
நம் மீது அன்பைப் பொழியும்...

நாமே வெறுத்தாலும்,
நம் மீது உரிமையை நிலைநாட்டும்...

நாமே மறந்தாலும்,
நம்மை கரை சேர்க்கும்...

நாமே அவநம்பிக்கை கொண்டாலும்,
நம் மீது  அவநம்பிக்கை கொள்ளாது...

நாமே வீணடித்தாலும்,
நம்மை விடாமல் பலன் தரும்...

நாமாக தப்பித்தாலும்,
நம்மைத் தொடர்ந்து வரும்...

உலகமே நம்மை தள்ளினாலும்,
உள்ளிருந்து நம்மைத் தாங்கும் !

விதியே சதி செய்தாலும்,
மதி கொடுத்து வாழ வைக்கும் !

ஹே மனிதா !
குரு அருளே
குருடனான நம்மை,
குறைவில்லாமல்
வாழவைக்கும் !

குரு அருளுக்கு நீ ஒன்றும்,
ஒரு முயற்சியும் செய்யவேண்டாம் !

அது தானாய் வரும் !
அது தேடி வரும் !
அது சத்தியமாய் வரும் !

வரும்...உன்னை மாற்றும் !
அனுபவத்தில் சொல்கிறேன் !
குருவால் மாறினவன் சொல்கிறேன் !
குருவால் வளர்ந்தவன் சொல்கிறேன் !
குருவால் வாழ்கின்றவன் சொல்கிறேன் !

Read more...

வியாழன், 16 பிப்ரவரி, 2017

மன்னார்குடி ராஜகோபாலா காப்பாய் !

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னையே சரணடைந்தோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே கதறுகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே கெஞ்சுகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னையே நம்புகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே புலம்புகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன் திருவருளையே கேட்கிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னை விட்டால் கதியில்லை...
எங்களை காப்பாற்று....

மன்னார்குடி ராஜகோபாலா...
உன் குழந்தைகள் நாங்கள்...

நீ தைரியம் தா...
நீ நம்பிக்கை தா...
நீ அமைதி தா...
நீ மனோபலம் தா...
நீ வரம் தா...
நீ நிம்மதி தா...

நீதான் சரி செய்யவேண்டும் !
உன்னால் முடியும் !
உன்னால் மட்டுமே சரி செய்யமுடியும் !

உன் அருளின் மழையில் நனைந்து,
ஆனந்தக் கண்ணீரில் மிதந்து,
கூச்சலிட்டு குதூகலமாய் நாங்கள் வாழும் நாளை,
எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கிறோம்...

இப்படிக்கு...
உன் குழந்தைகள்....

Read more...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

காதலித்துப் பார் !

காதல் !
காதல் என்றால் அன்பு !
காதல் என்றால் உரிமை !
காதல் என்றால் அக்கறை !
காதல் என்றால் தியாகம் !
காதல் என்றால் புரிதல் !
காதல் என்றால் தெய்வீகம் !

காதலித்ததுண்டா !?!

இனி காதல் செய் !

காதல் பலவிதம் !
ஒவ்வொரு காதலுக்கும்
ஒரு மரியாதை, ஒரு மேன்மை உண்டு !

பெற்றோரைக் காதலிப்பவர்
பெருமை அடைகின்றார் !

குழந்தைகளைக் காதலிப்பவர்
குதூகலம் அடைகின்றார் !

கடமைகளைக் காதலிப்பவர்
கடவுளைப் பெறுகின்றார் !

பொறுப்புகளைக் காதலிப்பவர்
புகழ் பெறுகின்றார் !

மனைவியைக் காதலிப்பவர்
மன நிறைவு பெறுகின்றார் !

கணவனைக் காதலிப்பவர்
கண்ணியம் பெறுகின்றார் !

குடும்பத்தைக் காதலிப்பவர்
குலத்தைப் பெறுகின்றார் !

நல்லதைக் காதலிப்பவர்
நன்மை பெறுகின்றார் !

புத்தகங்களை காதலிப்பவர்
அறிவை பெறுகின்றார் !

உடற்பயிற்சியைக் காதலிப்பவர்
வனப்பைப் பெறுகின்றார் !

மொழியைக் காதலிப்பவர்
புலமை பெறுகின்றார் !

இயற்கையைக் காதலிப்பவர்
இனிமை பெறுகின்றார் !

தொழிலைக் காதலிப்பவர்
மேன்மை பெறுகின்றார் !

பிரச்சனைகளைக் காதலிப்பவர்
தீர்வு பெறுகின்றார் !

நாட்டைக் காதலிப்பவர்
நலம் பல பெறுகின்றார் !

உலகைக் காதலிப்பவர்
உயர்வு பெறுகின்றார் !

அமைதியைக் காதலிப்பவர்
அறம் பெறுகின்றார் !

கண்ணனைக் காதலிப்பவர்
கண்ணனையே பெறுகின்றார் !

உன் காதல் இதில் எது ?!?
இது எல்லாமே உன் காதல் என்றால்,
உன்னைக் காதலிக்க
உலகமே உண்டு !!!

Read more...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஆயிரம் ஆயிரமாய் !

என்ன சொல்வேன் !

ஆயிரம் பொய்கள் வாயினிலே !

ஆயிரம் எண்ணங்கள் மனதினிலே !

ஆயிரம் யோசனைகள் வாழ்வினிலே !

ஆயிரம் பயங்கள் சிந்தையிலே !

ஆயிரம் குழப்பங்கள் புத்தியிலே !

ஆயிரம் ஆசைகள் ரகசியத்திலே !

ஆயிரம் வியாதிகள் உடலினிலே !

ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளிலே !

ஆயிரம் ஏமாற்றங்கள் முயற்சிகளிலே !

ஆயிரம் தோல்விகள் செயல்களிலே !

ஆயிரம் வெறுப்புகள் மனிதரிடத்திலே !

ஆயிரம் அழுகைகள் கண்களிலே !

ஆயிரம் கெட்ட வார்த்தைகள் நாவினிலே !

ஆயிரம் உளரல்கள் பேச்சினிலே !

ஆயிரம் தவறுகள் வார்த்தைகளிலே !

ஆயிரம் பாவங்கள் கர்மாவிலே !

ஆயிரம் பெருமைகள் கடமைகளிலே !

ஆயிரம் எதிர்பார்ப்புகள் உலகினிலே !

ஆயிரம் சுவைகள் உணவினிலே !

ஆயிரம் வண்ணங்கள் இயற்கையிலே !

ஆயிரம் முனகல்கள் உதட்டினிலே !

ஆயிரம் அழகுகள் அண்டத்திலே !

ஆயிரம் ஆயிரமாய் இன்னும் !

இத்தனை ஆயிரம் தெரிந்த எனக்கு,
உன்னை துதிக்க ஆயிரம் நாமம்,
சொல்லவரவில்லையே !

உன் பக்தன் பீஷ்மரே,
அதை சொன்னார் உன்னிடம் !

க்ருஷ்ணா !
இனி பீஷ்மர் சொன்ன ஆயிரம் போதும் !
என்னைக் காக்க இந்த ஆயிரம் போதும் !
எப்போதும் இந்த ஆயிரம் போதும் !

என்னிடமுள்ள எல்லா ஆயிரமும் போகட்டும் !
பீஷ்மர் சொன்ன ஆயிரம் நாமம் வரட்டும் !

கண்ணா !
ஆயிரம் ஆயிரமாய் உன்னைப் பார்க்க ஆசை !

நான் பீஷ்மரில்லை !
ஆனால் அவர் சொன்ன ஆயிரம் நாமம் சொல்லி, நிச்சயமாக உன்னை ஆயிரம் கண்ணனாய் பார்ப்பேன் !

ஆயிரம் பிறவிகள் எடுத்தாவது,
ஆயிரம் நாமங்கள் சொல்லி,
ஆயிரம் கண்ணனைப் பார்க்க,
பீஷ்மா நீர் ஆசி கூறும் !

பீஷ்மா ! உமக்கு ஆயிரம் வந்தனங்கள் !
பீஷ்மா ! உமக்கு ஆயிரம் முத்தங்கள் !

பீஷ்மா ! ஆயிரம் அம்பில் படுத்து,
ஆயிரம் நாமம் சொல்லி,
ஆயிரம் கண்ணனைக் கண்டவரே !

என்னையும் ஆயிரம் நாமம் புலம்ப வையும் !

Read more...

சனி, 4 பிப்ரவரி, 2017

பீஷ்மா ! ஆயிரத்தில் ஒருவனல்ல !

பீஷ்மா !

கங்கையின் புனிதத்தை தாய்மையை,
காலமெல்லாம் எல்லோரும் நினைக்க,
உலகில் நிரூபிக்க வந்தாயோ !?!

பிள்ளை தந்தைக்குச் செய்யும்,
கடமையை புலம்பாமல் செய்யவேண்டும்,
என்று பறைசாற்ற வந்தாயோ !?!

இளமையின் பலன் காமமல்ல,
இளமையின் அடையாளம் வைராக்கியமே
எனக் காட்ட வந்தாயோ !?!

ராஜகுமாரன் என்றால் ஆள்பவனல்ல,
தேசத்திற்கு உழைப்பவன்
என்று சொல்ல வந்தாயோ !?!

சூழ்நிலைகளில் தப்பு செய்பவன் மனிதனல்ல,
சூழ்நிலைகளை ஜெயிப்பவனே மனிதன்,
என பாடம் நடத்த வந்தாயோ !?!

எங்கிருந்தாலும் கண்ணனை
நீங்காமல் நினைக்க முடியும்
என்று உறுதி தர வந்தாயோ !?!

பக்தன் சொன்னால்
பக்தவத்சலன் கேட்பான்,
என்று எமக்கு புரிய வைக்க வந்தாயோ !?!

அம்புகள் துளைத்தாலும்,
அம்பிலே படுத்தாலும்,
அன்பிலே கண்ணனை ஈர்க்க முடியும் என்று பக்தியைக் காட்டிடவே வந்தாயோ !?!

உடலெல்லாம் புண்ணானாலும்,
உதடு நிறைய நாமம் சொல்லென
உண்மையை இயம்ப வந்தாயோ !?!

ஆயிரம் அவமானங்கள் பட்டாலும்,
ஆயிரம் நாமம் சொல்லி பக்தி செய்யென
ஆறுதல் தர வந்தாயா !?!

மரணத்தை கண்டு நடுங்காதே,
மரணம் உடலுக்குத்தான் நமக்கல்ல,
சரணம் தர கண்ணனுண்டு என்று
வரம் தர வந்தாயோ !?!

எல்லோரும் நம்மை விட்டாலும்,
எப்போதும் கண்ணன் விடமாட்டான்,
முப்போதும் அவனை நம்பு என்று
செப்ப வந்தாயோ !?!

அஷ்டமி கண்ணன் வந்தான்,
அஷ்டமி நீ மோக்ஷம் அடைந்தாய்,
அஷ்டமி நல்லதே என நாங்கள்
இஷ்டமாய் ஏற்றோம் பீஷ்மா !!!

கஷ்டமெல்லாம் தீரும் என
அஷ்டமியை நீ உரிமையோடு
இஷ்டப்படுவாய் என்பதால் கண்ணனும்
அஷ்டமியில் வந்தானோ !?!

பீஷ்மா ! பீஷ்மா ! பீஷ்மா !
ஆயிரம் எண்ணங்கள் வேண்டாம் !
ஆயிரம் உறவுகள் வேண்டாம் !
ஆயிரம் ஆசைகள் வேண்டாம் !
ஆயிரம் பெருமைகள் வேண்டாம் !
ஆயிரம் லாபங்கள் வேண்டாம் !
ஆயிரம் நாமங்கள் போதும் !
நீ சொன்ன ஆயிரம் நாமங்களே போதும் !

ஆயிரம் பிறவிகள் எடுத்து,
ஆயிரம் நாமங்கள் சொல்ல,
இந்த ஏழைக்கு அருள் செய்...

ஆயிரம் கண்ணனை பார்த்த பீஷ்மா !
ஆயிரம் கோடி வந்தனங்கள் உனக்கு !
ஆயிரத்தில் ஒருவனல்ல நீ !
ஆயிரமாயிரம் கோடிகளில் ஒருவன் நீ !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP