ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

தீபம் ஏற்று ! ! !

ராதேக்ருஷ்ணா





தீபம் ஏற்று ! ! !


ராதையே அகலாக, குருவே நெய்யாக,
உன்னத ப்ரேமையே திரியாக,
க்ருஷ்ணனே ஜோதியாக
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

இந்து தர்மமே அகலாக, வேதமே நெய்யாக,
ராமாயணமே திரியாக,
 ஸ்ரீமத் பாகவதமே ஜோதியாக
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

வையகமே அகலாக, பாரதமே நெய்யாக,
அமைதியே திரியாக,
உத்தமமான அன்பே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !
 
ஸ்ரீரங்கமே அகலாக, காவேரியே நெய்யாக,
ரங்கநாயகியின் ஆசியே திரியாக,
நம்பெருமாளே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !


திருமலையே அகலாக,
ஆகாச கங்கையே நெய்யாக,
பத்மாவதியின் அருளே திரியாக,
மலையப்பனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

அத்திகிரியே அகலாக, சாலைக் கிணறே நெய்யாக,
பெருந்தேவியின் கருணையே திரியாக,
வரதராஜனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

ருக்குமாயி அகலாக, சந்திர பாகா நெய்யாக,
அபங்கங்களே திரியாக,
பாண்டுரங்கனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

ப்ரும்மமே அகலாக, ஞானமே நெய்யாக,
ஸ்ரீ சங்கர பகவத் பாதரே திரியாக,
ப்ரும்மானந்தமே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

நம்மாழ்வாரே அகலாக, சரணாகதியே நெய்யாக,
திவ்ய ப்ரபந்தங்களே திரியாக,
ஸ்வாமி இராமானுஜரே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !


உடுப்பியே அகலாக, ஸ்ரீ மத்வரே நெய்யாக,
 ஸ்ரீ ராகவேந்திரரே திரியாக,
பால க்ருஷ்ணனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒருதீபம் ஏற்று ! ! !

 ப்ருந்தாவனமே அகலாக, யமுனையே நெய்யாக,
பக்தர்களே திரியாக,
ராச க்ரீடையே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

இத்தனை தீபம் ஏற்றிவிட்டு,
என் அனந்தபுரி தீபம் ஏற்றாமல்
விடமுடியுமா ? ! ?

ஆதிசேஷனே அகலாக, ப்ரும்மதேவரே நெய்யாக,
சிவபெருமானே திரியாக,
என் பத்மநாபனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

 
நம்பிக்கையே அகலாக, திடமே நெய்யாக,
பொறுமையே திரியாக,
நாம ஜபமே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒருதீபம் ஏற்று ! ! !

இன்னும் இது போல்
கோடி தீபம் ஏற்றுவோம் . . .

நான் ஏற்றும் சில தீபங்களை
உன்னிடம் சொல்லிவிட்டேன் . . 

 இனி உன் இஷ்டப்படியெல்லாம்
வித விதமாய் தீபம் ஏற்றி
இந்த தீபாவளியைக் கொண்டாடு ! ! !


இந்த தீபங்கள் என்றும் அணையாது !
இந்த தீபங்கள் ஏற்றி
நம் வாழ்வில் ஒளியைப் பெறுவோம் ! ! !


எல்லோருக்கும் இந்தத் தீபாவளி
பக்தித் தீபாவளியாக,
ஞான தீபாவளியாக,
வைராக்ய தீபாவளியாக,
தீர்காயுள் தீபாவளியாக,
ஆரோக்கிய தீபாவளியாக,
ஐஸ்வர்ய தீபாவளியாக
அமைய
பகவானும், ஆசார்யர்களும்,
பாகவதர்களும்
பூரணமாய் ஆசீர்வதிப்பார்களாக,,,

நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் . . .

Read more...

புதன், 30 அக்டோபர், 2013

அந்த நாளும் வந்திடாதோ ? ? ?

ராதேக்ருஷ்ணா


ப்ருந்தாவனம் . . .






நடப்பது நன்மைக்கே . . . .
ஆம்....
ப்ருந்தாவனத்தில் காலாற நடப்பது நன்மைக்கே ! ! !


வாழ்வில் எதற்கெல்லாமோ,
எங்கெல்லாமோ நடக்கின்றோம் ! ! !


யார்யாருடனோ அர்த்தமில்லாமல்
சுற்றிக்கொண்டிருக்கிறோம் ! ! !

பல கோடி ஜன்மா நாமும்
பல உடல்களில் சுற்றிச் சுற்றி
பிறந்துகொண்டேயிருக்கிறோம் ! ! !

இனி ஒரு ஜன்மா உத்தமமான
ஜன்மாவாக அமையவேண்டுமென்றால்
ப்ருந்தாவனத்தைச் சுற்றுவோம் ! ! !
ப்ருந்தாவனத்தில் சுற்றுவோம் ! ! !

ப்ருந்தாவனத்தில் சுற்றினால்
என்ன கிடைக்கும் ! ? !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
என்ன கிடைக்கும் ! ? !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பக்தி கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ப்ரேமை கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
அகம்பாவம் அழியும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
தற்பெருமை ஒழிந்து போகும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பக்தியின் தன்மை புரியும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பூர்வ ஜன்ம கர்ம வினை அகலும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ஆன்ம பலம் கூடும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
நாம ஜபம் விருத்தியாகும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பொறாமை, காமம், பயம் நீங்கும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
மனதில் தெளிவு பிறக்கும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பாகவத ரஹஸ்யம் புரியும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
மனித வாழ்வின் மஹத்துவம் தெரியும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
யசோதையின் தனித்துவம் புரியும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
நந்தகோபரின் வாத்சல்யம் விளங்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கோபர்களின் தோழமை புலப்படும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கோபிகைகளின் விரஹ தாபம் தஹிக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
எல்லாம் க்ருஷ்ண லீலா என்று தோன்றும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ராதிகாவின் ப்ரேம பலம் கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கண்களில் தானாய் கண்ணீர் வரும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
உடலெல்லாம் மயிர் கூச்சல் உண்டாகும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
க்ருஷ்ண பைத்தியம் பிடிக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பாகவதர்களின் தரிசனம் கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ராதிகா ராணி ஆசிர்வதிப்பாள் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
அஷ்ட சகிகள் கொண்டாடுவார்கள் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
க்ருஷ்ணனே நம்மைத் தழுவுவான் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
இன்னும் என்னவெல்லாமோ கிடைக்கும் ! ! !

வா . . . சுற்றுவோம் . . .
ப்ருந்தாவனத்தைச் சுற்றுவோம் . . .

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர்
ப்ருந்தாவனத்தை வலம் வருகிறார்கள்,,,
தெரியுமா ? ! ?

என்றாவது ஒரு நாள்
ஸ்ரீ ப்ருந்தாவன மாதா
தனக்கு ராதையையும், க்ருஷ்ணனையும்
காட்டிக்கொடுப்பாள் என்று நம்பி,
எத்தனை பேர் தினமும் விடியற்காலையில்
நாம ஜபத்தோடு சுற்றுகின்றனர் தெரியுமா . . .

அவர்களை ரஹஸ்யமாய்
கண்ணனும், ராதிகாவும்
கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் . . .

அவர்களை அஷ்டசகிகளும்,
உத்தவரும் ரஹஸ்யமாய்
ஆசிர்வதிக்கின்றனர் . . .

ப்ருந்தாவனத்தைச் சுற்றுபவரின்
வம்சமே பரம பாவனமானது . . .

ப்ருந்தாவனம் தொண்டர் அடிப் பொடியால்
 நிறைந்த உன்னத ப்ரதேசம் .  .  .

அதனால் தான் கண்ணனும்
தினமும் த்வாரகாவில்
ப்ருந்தாவனத்தின் தூசியை
பூஜை செய்துகொண்டிருக்கிறான் . . .

ஹே ப்ருந்தாவன மாதா .  .  .
உன்னை வலம் செய்தே
க்ருஷ்ண சைதன்யர் சமாதானமானார் ! ! !

ஹே ப்ருந்தாவன மாதா .  . .
உன்னை வலம் வந்தே
மீரா மாதா கண்ணனை அடைந்தாள்  ! ! !

ஹே ப்ருந்தாவன மாதா....
ராதையும் கண்ணனும்
உன்னையே தினமும் வலம்
வந்து சந்தோஷமாய் இருக்கின்றனர் ! ! !

இனி நான் எங்கு சுற்ற ? ? ?

உன்னைச் சுற்றுகிறேன் . . .
நீ கண்ணனும் ராதையும்
என்னோடு வரும்படி செய் . . .
 
ஹே ப்ருந்தாவனமே . . .
உன்னிடம் சரண் அடைந்தேன் . . .
 
உன் திருமடியில் எனக்கும்
ஒரு வாழ்க்கைத் தா . . .
 
ஜனனம், ஜீவிதம், மரணம்
எல்லாம் ப்ருந்தாவனத்தில்
என்று எனக்கு வாய்க்கும் ? ? ?
 
ஐயோ தெரியவில்லையே . . .
 
காலை விழித்தவுடன்
ப்ருந்தாவனத்தைச் சுற்றி,
வலம் வந்த களைப்பு தீர
யமுனையில் நீராடி,
பின் பாங்கேபிஹாரியை
தரிசனம் செய்து,
நிம்மதியாய் நாம ஜபத்தோடு
ஆடிப் பாடி மகிழ்ந்து,
க்ருஷ்ண ப்ரசாதத்தை
மட்டுமே சாப்பிட்டு,
பக்தர்களோடு அளவளாவிக்கொண்டு,
இரவில் ரஹஸ்யமாய்
கண்ணனை அனுபவித்து,...
 
இப்படியே வாழும் வாழ்க்கை
என்று எனக்கு வாய்க்கும் ?  ?  ?
 
அந்த நாளும் வந்திடாதோ ? ? ?

Read more...

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஏனடா ஜொலிக்கிறாய் ? ! ?

ராதேக்ருஷ்ணா





ஏனடா ஜொலிக்கிறாய் ? ! ?

என் பத்மநாபா ஏனடா ஜொலிக்கிறாய் ! ? !


நீ எப்பொழுதும் அழகன் தான் . . .
ஆனாலும் இப்பொழுது நீ
இன்னும் அழகாக இருக்கிறாய் ! ! !


திருவனந்தபுரம் வரும்பொழுதெல்லாம்
உன்னை நான் பார்க்கிறேன் . . .
உன் அழகுக்கு ஒரு குறையில்லை . . .
ஆனாலும் இந்த தடவை
உன் அழகு என்னை என்னவோ
செய்கிறதடா என் அழகா  . . .
இப்போது இன்னும் கருமை
கூடியிருக்கிறது உன் திருமேனியில் !


உன் கன்னங்கள் இன்னும்
அதிகமாய் பளபளக்கிறது இப்போது !


உன் திருப்பவள வாய் அதரங்கள்
இன்னும் ஜோராய் தெரிகிறது !


உன் திருமூக்கின் கூர்மையும்
வனப்பும் இன்னும் அதிகமாயிருக்கிறது !


உன் திருமுகம் முன்னை விட
இன்னும் அதிகமாய் ஜொலிக்கிறது !


உன் திருக்கழுத்தில் மடிப்புகள்
வெகு ஜோராய் களை கட்டுகிறது !


உன் திருமார்பின் அழகு இன்னும்
நேர்த்தியாய் தெரிகிறது !


உன் ஸ்ரீதேவியின் இருப்பிடமான
வக்ஷஸ்தலம் அற்புதமாய் மின்னுகிறது !


உன் திருநாபியின் சுழி இன்னும்
தெளிவாய் இப்போது தெரிகிறது !


உன் திருத்தொடைகளை பீதாம்பரம்
மறைத்தாலும் அதன் அழகு கிறங்கடிக்கிறது !


உன் முழங்கால்கள் இன்னும்
நளினமாய் அழகாய் தெரிகிறது !


உன் திருவடியில் நகக்கண்கள்
நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது !


உன் திருக்கைகளின் காந்தி
இப்போது மிகவும் கூடியிருக்கிறது !


என்னவென்று சொல்ல ? ! ! ?


ஸ்ரீதேவியும், பூதேவியும் உன்னோடு
சேர்ந்து இன்னும் கருப்பாகிவிட்டார்கள் . . .


உன் நாபியில் இருப்பதால் சதுர்முக
ப்ரம்மாவும் ஆனந்தமாய் ஜொலிக்கிறார் ! ! !


உன் வலது கையின் கீழே சுகமாய் வசிப்பதால்
சிவபெருமானும் நிம்மதியாய் பரிமளிக்கிறார் ! ! !


 உன் அருகில் இருப்பதால் இந்திரன் உள்ளிட்ட
தேவர் குழாமெல்லாம் தேஜஸோடு மின்னுகின்றனர் ! ! !


சொல்ல மறந்தேனே . . .
உன் திருமுடி இன்னும் கருப்பாகிவிட்டது. . .
அதி ஜோர் அது தான் . . .


போடா பத்மநாபா . . .
பலருக்கும் உன்னுடைய ஒன்றரை லக்ஷம் கோடி
சொத்து தான் பெரியதாய் தெரிகிறது . . .


உன் அழகின் அருமை,
உன் கருணையின் பெருமை,
ஒன்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை . . .


கொஞ்சம் அவர்களுக்கு உன் அழகை
உள்ளபடிக் காட்டி மயக்கிவிடேன் . . .


அப்போது என்னைப் போல் புலம்ப,
என் விரஹத்தின் தாபத்தை உணர,
என் மனதின் ப்ரேமையை பேச,
என்னோடு உன்னைப் பற்றி மட்டுமே
பேசும் ஒரு கோபி கிடைப்பாளல்லவா . . .


உன்னைப் பார்ப்பதே சுகமடா பத்மநாபா . . .
உன்னை நினைப்பதே நிம்மதியடா பத்மநாபா . . .


உனக்குத் தெரியுமா ? ! ?
உன் அழகைப் பார்த்து உனக்கு புதிதாய்
நிறைய கோபிகைகள் கிடைத்திருக்கிறார்கள் ! ! !


எந்தக் கோபியின் ஆசைக்காய் நீ எப்படி ஜொலிக்கிறாய் ? ! ?

எந்த கோபியை மயக்க நீ எப்படி ஜொலிக்கிறாய் ! ? !


லக்ஷ தீபத்தின் ஒளியில்
எப்படியெல்லாம் ஜொலிப்பாய் ? ! ?


சரத் கால சந்திர வெளிச்சத்தில்,
எத்தனை கோபியரோடு நீ ராசம் 
ஆடப்போகிறாய் ? ! ! ?


எத்தனை பேரோடு வேண்டுமானாலும் ஆடு ! ! !
ஆனால் இந்த கோபாலவ்ல்லி கோபியையும்
உன்னோடு சேர்த்துக்கொள் . . .


இது இந்த தாசியின் விண்ணப்பம் . . .

ஒருவேளை நீ என்னை உன் ராசத்தில்
சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் கவலையில்லை . . .

நீ சுகமாயிருந்தால் அதுவே போதும் . . .


உன் முகத்தின் காந்தியில்
நான் அதை தெரிந்துகொண்டு,
அதையே அனுபவித்துக்கொண்டு
இந்த பூவுலகில் வாழ்வேன் . . .


உன் சுகமே என் சுகம் . . .
வேறு எது இங்கே சுகம் . .?


 

Read more...

சனி, 19 அக்டோபர், 2013

விருந்தாவனத்தே கண்டேனே . . .

ராதேக்ருஷ்ணா




விருந்தாவனத்தே கண்டேனே . . .


எதைத் தேடி நான்
விருந்தாவனம் வந்தேனோ
அதைக் கண்ணாரக் கண்டேனே . . .
 
 
எல்லோரும் நினைத்திருக்கிறார்கள் . . .
நான் கண்ணனைத் தேடி
சரத் பௌர்ணமிக்கு விருந்தாவனம்
வந்திருக்கின்றேன் என்று . . .


ஆனால் அவனைத் தேடி
ஏன் இங்கே வரவேண்டும் ? ! ?


விருந்தாவனம் கண்ணனின்
லீலைக்கு தான் உசத்தியோ ? ! ?
இல்லையே . . .
 
 
உன்னதமான பக்திக்காகத் தான் . . .
அதனால் தானே கண்ணனே
இங்கு வசப்பட்டிருக்கிறான் . . .


நான் தேடி வந்தது
உத்தமமான, உன்னதமான,
பக்தி செய்யும் பைத்தியங்களை . . .



கண்டேன் . . .
பக்திக்காக மட்டுமே பக்தி
செய்யும் உன்னத பக்தி பைத்தியங்களை . . .



பாங்கே பிஹாரி கண்ணன்
ஆவிர்பவித்த நிதி வனத்தில்,
ராச லீலா பூமியில்,
அந்த தூளியைத் தன் உடம்பெல்லாம் பட
அழுது புரண்ட பக்திப் பைத்தியத்தை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
வெட்கம், வயது, குலம், கோத்திரம்,
பணம், படிப்பு, அழகு எல்லாவற்றையும்
மறந்து ராதிகா அவதரித்த பர்சானாவில்
இஷ்டத்திற்கு ஆடும் பைத்தியங்களை
விருந்தாவனத்தே கண்டேனே . . .



இரவு 11 மணிக்கு பனி விழும்
விருந்தாவனத்தில் சரத் சந்திரனின்
குளிரில், 1 வயது தூங்கும் பிள்ளையை
கைகளில் ஏந்தி ப்ருந்தாவனத்தை வலம் வரும்
க்ருஷ்ணனின் தீவிர பக்திப் பைத்திய தந்தையை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
அழுக்கையும், அசுத்தத்தையும் கவனியாமல்,
இந்து தர்மப்படி உடை அணிந்து,
நெற்றியில் திலகமிட்டு, கையில் துளசி
மணி மாலையோடு, க்ருஷ்ண நாம ஜபத்தில்
திளைக்கும் வெளி நாட்டுப் பைத்தியங்களை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
ஊரே தூங்கும் இந்த இரவில்,
சரத் பௌர்ணமி நிலவின் ஒளியில்,
யமுனையில் ஓடத்தில் அமர்ந்து,
க்ருஷ்ண கீர்த்தனம் செய்து கொண்டு,
ஆடிப் பாடி திளைக்கும் அதிசயப் பைத்தியங்களை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
 
கண்ணே தெரியாமல், வாயில்
ராதிகா நாம ஜபத்தோடு வீதிகளில்,
கோலோடு தட்டுத் தடுமாறி,
சௌக்கியமாய் அலையும்,
சூர்தாஸ் போன்ற ஒரு பைத்தியத்தை
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
நமஸ்காரம் செய்து மீண்டு எழுந்து,
நமஸ்காரம் செய்து இப்படியாய்,
கோவர்தன கிரியை வலம் வரும்,
அசாத்தியமான க்ருஷ்ண பக்தியில்
உலகை ஒதுக்கித்தள்ளிய பைத்தியங்களை
விருந்தாவனத்தில் கண்டேனே . . .



இன்னும் நிறைய விசித்திர
பக்திப் பைத்தியங்களை
ஆசை ஆசையாய் அதிசயமா
அற்புதமாய் அழகாய்
விருந்தாவனத்தே கண்டேனே . . .
 
 
 
எல்லாவற்றையும் சொல்ல
என்னால் ஆகாது . . .
நீ வந்து பார்த்துக்கொள் . . .


கண்டேன் . . .
பக்திப் பைத்தியங்களை . . .
ஆனந்தம் . . .
இதையே நான் தேடி வந்தேன் .  . .


இன்னும் நிறைய தடவை வரவேண்டும் . . .

வருவேன் . . . வருவேன் . . . வருவேன் . . .


விருந்தாவனத்தில் இன்னும்
நிறைய பக்திப் பைத்தியங்களை
காணவேண்டியிருக்கிறது . . .


ஹே ராதே . . . 
உன்னிடம் சொல்லி விட்டேன் .  . .

எனக்கு இனியும் நிறைய
பக்திப் பைத்தியங்களைக்
காட்டித் தருவாய் . . .


வேறு ஒரு வரமும் எனக்கு வேண்டாம் . . .


ராதே . . . ராதே . . .

உன் அருளால் நிறைய
பக்திப் பைத்தியங்களை
இந்த ராச பௌர்ணமி அன்று
விருந்தாவனத்தே கண்டேனே . . .



 
 

Read more...

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வந்திருக்கிறேன் அம்மா . . .

ராதேக்ருஷ்ணா


வந்திருக்கிறேன் அம்மா . . .


லலிதா அம்மா . . . 
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


விசாகா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


துங்கவித்யா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


இந்துலேகா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


ரங்கதேவி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சுதேவி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சித்ரா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சம்பகவல்லி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


என்னவென்று சொல்வேன் அஷ்ட மாதாக்களே . . .
அடியாளுக்கு நவ வித பக்தியைத் தாருங்கள் . . .

இந்த தாசிக்கு நீங்கள்
ஆசைப்படும்படி ஒரு பக்தி
வந்தால் போதும் . . .

இந்த ப்ருந்தாவனத்தில் ஏதோ
ஒரு மூளையில் இவளை
பைத்தியமாய் அலையவிடுங்கள் . . .


எனக்கு ஒன்றும் தெரியாது . . .


உங்களின் திருவடிகளில்
சரணாகதி செய்கின்றேன் . . .


இந்த கோபாலவல்லியை
உங்கள் தலைவி ராதிகாராணியிடம்
சேர்ப்பித்துவிடுங்கள் . . .


அவளுக்கு அந்தரங்கம்
கைங்கர்யம் செய்துகொண்டு,
அப்படியே இருந்தால் போதும் . . .


உலகில் ராதிகா மட்டுமே சத்தியம் . . .
ராதா ப்ரேமை மட்டுமே நித்தியம் . . .

ராதிகாவுக்கு கைங்கர்யம் செய்வதே பாக்கியம் . . .

உங்கள் திருநாமங்களை
விடாமல் ஜபிக்கிறேன் . . .

லலிதா, விசாகா, துங்கவித்யா, இந்துலேகா,
ரங்கதேவி, சுதேவி, சித்ரா, சம்பகவல்லி . . .


என்னை ராதிகாவிடம் ஒப்படையுங்கள் . . .

தயவு செய்து என்னை உங்களின்
திருவடி தூளியாய் வைத்துக்கொள்ளுங்கள் . . .



Read more...

சனி, 12 அக்டோபர், 2013

வாராரு . . . வாராரு . . .

ராதேக்ருஷ்ணா



வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
கருடன் மேலே ஜோராய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ரங்கராஜனோடு அமர்க்களமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஸ்ரீநிவாசனோடு சிங்காரமாய் வாராரு ! ! !
 

வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வரதராஜனோடு வரம் தர வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஜகந்நாதனோடு ஜகத்தை ஆள வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஒய்யாரமாய் இராமானுஜரோடு வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
 உரிமையோடு பக்தர்களோடு வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
புரட்டாசியில் பொக்கிஷமாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
சங்கடங்கள் தீர்க்க சனிக்கிழமை வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
இந்துக்கள் ஜெயிக்க வீரமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வினையெல்லாம் மாற்றி சரிசெய்ய வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஊரே கொண்டாட ஆசையாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தெருவெல்லாம் பன்னீரால் நனைய வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
பக்தர்களின் குறையெல்லாம் தீர்க்க வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஆண்டாள் மாலையோடு அற்புதமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
பாவிகளையும் திருத்த பரந்தாமனாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வைகுந்தம் தந்திடவே விரைவாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
இந்துமந்திர நகரம் சிறக்க வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
விண்ணும் மண்ணும் மகிழவே வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வேத மந்திரங்களோடு வேகமாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
திவ்ய ப்ரபந்தத்தோடு சீராக வாராரு ! ! !
 
 
 வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
நாம ஜபத்தோடு நமக்காக வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தேவரெல்லாம் கைகூப்ப தெருவெல்லாம் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
உன்னையும் என்னையும் காப்பாத்த வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தூத்துக்குடி பக்திக்குடியாக மாற்றி வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
செண்டை மேளத்தோடு செழிப்பாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
நாதஸ்வர மேளத்தோடு நாயகனாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வாராரு வாராரு வசந்தம் தர வாராரு !
வாராரு வாராரு வாழ்வை மாற்ற வாராரு !
வாராரு வாராரு வெற்றி தர வாராரு !
 
 
சீக்கிரமா வா . . .
எல்லாம் வாங்கிக்க வா . . .
 
 
 

Read more...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஏதேனும் ஆவேனே ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 



எம்பெருமானார் இராமானுஜரின்
திருவடியில் பாதுகையாய் ஆகமாட்டேனா ! ? !


உடையவர் இராமானுஜரின்
திருக்கைகளில் த்ரிதண்டமாய் ஆகமாட்டேனா ! ? !


திருப்பாவை ஜீயர் இராமானுஜரின்
திருவரையில் காஷாய வஸ்திரமாய் ஆகமாட்டேனா ! ? !


பெரும்புதூர் மாமுனி இராமானுஜரின்
பூக்குடையாய் ஆகமாட்டேனா ! ? !


இளையாழ்வார் இராமானுஜரின்
திருமேனியைத் தீண்டும்
திருமண் கட்டியாய் ஆகமாட்டேனா ! ? !


காரேய் கருணை இராமானுஜர்
உணவருந்தும் ஒரு வாழை இலையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
பவிஷ்யதாசார்யன் இராமானுஜர்
கழுத்தில் ஒரு மாலையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
சங்காழி அளித்த பிரான் இராமானுஜர்
திருமேனியில் பூணூலாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
நம் கோயில் அண்ணன் இராமானுஜர்
அமரும் பீடமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
யதிராஜர் இராமானுஜர் உபயோகிக்கும்
ஒரு பொன் வட்டிலாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
பாஷ்யகாரர் இராமானுஜர் கையில்
ஒரு எழுத்தாணியாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
திருக்குறுங்குடி நம்பிக்கும் உபதேசித்த இராமானுஜரின்
ஜலபாத்திரமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
இளைய பெருமாள் இராமானுஜர்
கைவிரலில் ஒரு மோதிரமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
 ஆதிசேஷ அவதாரமான இராமானுஜரைச்
சுமக்கும் படுக்கையாய் ஆகமாட்டேனா ! ? !


லக்ஷ்மண முனி இராமானுஜரின் காதுகளில்
ஒரு குண்டலமாய் ஆகமாட்டேனா ! ? !


எங்கள் கதியான இராமானுஜ முனியின்
தலையில் ஒரு க்ரீடமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
சம்பத்குமாரனின் தகப்பனார் இராமானுஜரின்
திருக்கைகளில் அக்ஷதையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தமர் உகந்த திருமேனி இராமானுஜரின்
பாதத்தில் தூசியாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தாம் உகந்த திருமேனி இராமானுஜரின்
திருமேனியில் ஒரு போர்வையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தானான திருமேனி இராமானுஜரின்
அருகில் ஒரு விளக்காய் இருக்கமாட்டேனா ! ? !
 
 
 பஞ்ச ஆயுதங்களின் அவதாரமான,
நம் இராமானுஜரோடு ஏதேனும் ஆவேனே ! ! !


ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
 
 
அடியேன் இவற்றில் ஏதேனும் ஆக 
இராமானுஜரின் திருநாமங்களை
ஜபிக்கும் பாகவதர்கள் அடியேனை ஆசிர்வதியுங்கள் ! ! !


அடியேன் இவற்றில் ஒன்றேனும் ஆக
108 திவ்ய தேச எம்பெருமான்கள்
தயை கூர்ந்து அனுக்ரஹியுங்கள் ! ! !


அடியேன் இந்தப் பாக்கியத்தை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் ஆசார்யர்கள்
வெறிதே க்ருபை செய்யுங்கள் ! ! !


அடியேன் இந்த நிலையை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்கள்
வேகமாய் எனக்கு பக்குவம் தாருங்கள் ! ! !


இராமானுஜா . . . இராமானுஜா . . . இராமானுஜா....
\இந்த ஜந்துவையும் உங்களின்
சொத்தாய் வைத்துக்கொள்ளுங்கள் ! ! !


இந்த 500வது ஆனந்தவேதம் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இதுவரை எழுதியதும் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இனி எழுதுவதெல்லாம் உம் ஒருவருக்கே சமர்ப்பணம் ! ! !


அடியேன் இராமானுஜ தாசன் . . .


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP