ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஒருத்தியின் பிறந்த நாள் பரிசு !

ராதேக்ருஷ்ணா


ஒருத்தி (தேவகி) மகனாய் ஓரிரவில் வந்தான் !


ஒருத்தி (யசோதை) மகனாய் ஓளிந்து வளர்ந்தான் !


ஒருத்திக்கு (பூதனா) விஷப்பாலுக்கு மோக்ஷம் தந்தான் !


ஒருத்தி வீட்டில் அக்கார வடிசில் திருடினான் !


ஒருத்தி மகளின் வளையலுக்கு நாவல் பழம் வாங்கினான் !


ஒருத்தியின் இளம்பிள்ளையைக் கிள்ளி எழுப்பினான் !


ஒருத்தியின் தயிர் பானையைப் போட்டு உடைத்தான் !


ஒருத்தியிடம் வெண்ணை மத்தால் உதை வாங்கினான் !
 
 
ஒருத்தியோடு உரசிக்கொண்டு தயிர் (உயிர்) கடைந்தான் !
 
 
ஒருத்தியின் வீட்டில் பாலைத் திருடிக் குடித்தான் !
 
 
ஒருத்தியின் ஆடையை உடுத்திக் கொண்டான் !
 
 
ஒருத்திக்காக (ராதிகா) எல்லோருடனும் ராசம் ஆடினான் !
 
 
ஒருத்தியின் (மந்தரை) கூனலை நிமிர்த்தினான் !
 
 
ஒருத்தியின் (ருக்மிணி) காதல் கடிதத்துக்காக அவளை மணமுடித்தான் !
 
 
ஒருத்தியை (ஜாம்பவதி) ஜாம்பவான் தரப் பெற்றான் !
 
 
ஒருத்தியை ( சத்யபாமா) ஸ்யமந்தக மணியோடு அடைந்தான் !


ஒருத்திக்காய் (நப்பின்னை) ஏழு எருதுகளை அடக்கினான் !


ஒருத்திக்காக நாணேற்றி லக்ஷியத்தை குறி வைத்தான் !


ஒருத்தியிடம் (காளிந்தி) அர்ச்சுனனை தூது விட்டான் !


ஒருத்திக்கு(த்ரௌபதி) முடிவில்லா புடவையைச் சுரந்தான் !


ஒருத்தியின் (குந்தி) குடும்பத்தைக் காத்தான் !


ஒருத்தியின் (உத்தரை )  பிள்ளையை கர்ப்பத்தில் காத்தான் !


ஒருத்தியின் (கங்கை) மகனிடம் சஹஸ்ர நாமம் கேட்டான் !


ஒருத்தி (ஆண்டாள்) சூடிக்களைந்த மாலையை
தோளில் ஏற்றான் !


ஒருத்தியை (மீரா) த்வாரகாவில்
தன்னோடு சேர்த்துக்கொண்டான் !
 
 
 
இன்னும் எத்தனையோ ஒருத்திகள் !


இந்த க்ருஷ்ண ஜயந்திக்கு நானும்
ஏதேனும் ஒருத்தியாய் ஆகமாட்டேனா ?

மாலாய் பிறந்த நம்பிக்குப் பிடித்த
ஒருத்தியாய் வாழமாட்டேனா !

ஒருவனே என் கண்ணனே !
இந்த ஒருத்திக்காய் (கோபாலவல்லி)
இன்று இரவு ரஹஸ்யமாய் வா ! ! !
இந்த ஒருத்தி உனக்குத் தன்னைத்
தரக் காத்திருக்கிறாள் இன்று ! ! !

ஒருவனே இன்று உன் பிறந்த நாள் !
ஒருத்தியின் பிறந்த நாள் பரிசு இது ! !




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP