ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜனவரி, 2013

அதுபோலே . . .

ராதேக்ருஷ்ணா



விதைகள் பூமியில்
புதைவதால் தோற்ப்பதில்லை !


விழுதுகள் கீழ் நோக்கி
வளருவதால் அழிவதில்லை !


வேர்கள் யாருக்கும் தெரியாமல்
இருப்பதால் வீழ்வதில்லை !


எல்லோரும் நினைக்காததால்
புவி ஈர்ப்பு விசை குறைவதில்லை !


 சூரியனின் கிரணங்கள் சாக்கடையில்
விழுவதால் மாசுபடுவதில்லை !


தங்கம் ஆபரணமாக மாற
அடிபடுவதால் மதிப்பிழப்பதில்லை !


பிச்சைக்காரனின் தட்டில் விழுவதால்
காசுக்கு ஒன்றும் அவமரியாதை இல்லை !


தேய்ந்து போவதால் நிலவை
யாரும் ரசிக்காமலில்லை !


அளவில் சிறியதாயினும் கொசுவிடம்
யாரும் பயப்படாமலில்லை !


அதுபோலே . . .


உனது தோல்விகள் உன்னை
அழிப்பதில்லை !


உனது பிரச்சனைகள் உன்னை
தடுப்பதில்லை !


உனது கஷ்டங்கள் உன் வாழ்வை
தீர்மானிப்பதில்லை !


 விழுவதும், பின் எழுவதும்
வாழ்வின் கட்டாயங்கள் !


தோற்பதும், பின் வெல்வதும்
வாழ்வின் யதார்த்தங்கள் !


தவறுவதும், பின் திருந்துவதும்
வாழ்வின் ரஹஸ்யங்கள் !


வாழ்...வாழ்...வாழ்...


முடியும் வரை வாழ் . . .
வாழ்க்கை முடியும் வரை வாழ் . . .
உடல் முடியும் வரை வாழ் . . .



Read more...

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒரு துளி !

ராதேக்ருஷ்ணா



ஒரு துளி !

ஒரு துகள் !

ஒரு அங்கம் !
 
ஒரு அம்சம் !

ஒரு பகுதி !


நான் பரமாத்மாவின் ஒரு துளி !


நான் பரமாத்மாவின் ஒரு துகள் !


நான் பரமாத்மாவின் ஒரு அங்கம் !
 
 
நான் பரமாத்மாவின் ஒரு அம்சம் !
 
 
நான் பரமாத்மாவின் ஒரு பகுதி !


நீயும் தான் !


அதனால் துளியும் குறையில்லை !

ஆகவே துளியும் பயமில்லை !

நிச்சயம் துளியும் அழுகையில்லை !


எல்லாம் நம் மனதின் தாக்கம் !

மனதை க்ருஷ்ணனிடம் ஒப்படைப்போம் !



வாழ்வை ரசிப்போம் !

வாழ்வை கொண்டாடுவோம் !

வாழ்வை அனுபவிப்போம் !


மனதை சரி செய்ய முடியுமா ?

அத்தனை சுலபமா ?


நாம் வெறுமனே நாமம் ஜபிப்போம் !

முடிந்தவரை க்ருஷ்ணனை நினைப்போம் !


இதுவே பக்தி !

இது நம்மை சரி செய்யும் !
இது நம் மனதை சரி செய்யும் !

நாம் வாழ்வோம் !
நிம்மதியாக வாழ்வோம் !
த்ருப்தியாக வாழ்வோம் !
உன்னதமாக வாழ்வோம் !

உள்ளவரை வாழ்வோம் !
உயிர் உள்ளவரை வாழ்வோம் !
உறுதியோடு வாழ்வோம் !
 
 

Read more...

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கட்டும் !

ராதேக்ருஷ்ணா 
 
 
 
 
இனிமையே நீ பொங்குவாய் !
 
 
பக்தியே நீ பொங்குவாய் !
 
 
தைரியமே நீ பொங்குவாய் !
 
 
அன்பே நீ பொங்குவாய் !
 
 
நிதானமே நீ பொங்குவாய் !
 
 
சக்தியே நீ பொங்குவாய் !
 
 
வெற்றியே நீ பொங்குவாய் !


புன்னகையே நீ பொங்குவாய் !


மகிழ்ச்சியே நீ பொங்குவாய் !


 தகுதியே நீ பொங்குவாய் !


திறமையே நீ பொங்குவாய் !


சிரத்தையே நீ பொங்குவாய் !


குதூகலமே நீ பொங்குவாய் !


உண்மையே நீ பொங்குவாய் !


உழைப்பே நீ பொங்குவாய் !


ஞானமே நீ பொங்குவாய் !
 
 
வைராக்கியமே நீ பொங்குவாய் !
 
 
நட்பே நீ பொங்குவாய் !
 
 
பலமே நீ பொங்குவாய் !
 
 
இந்துக்களின் ஒற்றுமையே நீ பொங்குவாய் !
 
 
இந்த தைப் பொங்கலில்
இவையெல்லாம் பொங்கி வளரட்டும் !
 
 
நம் உள்ளங்கள் அன்பில்
திளைத்து மகிழட்டும் !
 
 
எல்லோர் வீட்டிலும்
உன்னதமான ஆனந்தம்
பொங்கி வழியட்டும் !
 

வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகட்டும் !


Read more...

செவ்வாய், 8 ஜனவரி, 2013

காணப் போனேன் !

ராதேக்ருஷ்ணா



விட்டலனைக் காணப் போனேன் !
 
 
 



சந்திரபாகா நதிக்கரையில்
புண்டலீக வரதனாக நிற்கும்
விட்டலனைக் காணப் போனேன் !


ஞான சூன்யங்களை விசேஷமாக
அனுக்ரஹிக்கும் கருமை நிற
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
மயில் பீலி சூடாத க்ருஷ்ணனை,
பாமரனுக்கும் சுலபனான
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
 தீண்டாமை பேசும் உலகில்,
பக்தனின் தீண்டலில் மயங்கும்,
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
தன்னையே தர இடுப்பில்
கை வைத்து காத்திருக்கும்
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
கூட்டமாய் பக்தர் போனால்,
கூடியிருந்து குளிர வைக்கும்,
 விட்டலனைக் காணப் போனேன் !


ருக்மிணியும்,சத்தியபாமையும்,ராதையும்
எப்பொழுதும் பிரியாமலிருக்கும்
 விட்டலனைக் காணப் போனேன் !
 
 
ஒன்றும் தெரியாத நல்ல ஜனங்களின்
குதூகல ஆட்டத்தை ரசிக்கும்
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
திருப்பாவை பாடும் மார்கழியில்,
திருடர்களில் சாமர்த்தியசாலியான
விட்டலனைக் காணப் போனேன் !
 

அவனுக்காகப் போவதே சுகம் !
அவனைக் காணப் போவதே சுகம் !
அதுவே ப்ரேமானந்தம் . . .
அவனே ஆத்மானந்தம் . . .


விட்டல் பஜோ, விட்டல் பஜோ,
விட்டல் பஜோரே . . .
மோக்ஷானந்தமே விட்டல் பஜோரே !
 
 
பண்டரியே மோக்ஷானந்தம் ! ! !
 
 
பண்டரீ செல்வோர் பாக்கியவான் !
பண்டரீ செல்வோர் புண்ணியவான் !
 
 
 பண்டரீ என்று சொல்வோர்,
வைகுந்தம் காண்பார் !
பண்டரீ என்று நினைப்போர்,
பகவானை அடைவர் !
 
 
நீயும் சொல் . . .
நீயும் வருவாய் . . .
 
 
நீயும்,நானும் ஒரு நாள்
பண்டரீ நிச்சயம் செல்வோம் ! ! !
 
 
அதுவரை சொல் . . .
அதுவரை நினை . . .
 
காலம் வரும் . . . காத்திரு . . .
 
நமக்காக அவன் காத்திருக்கிறான் !
 
 
  
  

Read more...

புதன், 2 ஜனவரி, 2013

ஆசீர்வாதம் தேவை !

ராதேக்ருஷ்ணா
 
 
 
 
கிளிகளே !
நான் சுகப்ரஹ்மம் என்னும்
கிளியை தரிசிக்க வேண்டும் . . .
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
நாரைகளே !
நான் குலசேகரன் என்னும்
திருமலை நாரையை உடனே
காணவேண்டும் . . .
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
 கழுகுகளே !
நான் ஜடாயு என்னும்
ராம தாச கழுகைப்போல்
சீதா கைங்கர்யம் செய்யவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
மயில்களே !
நான் க்ருஷ்ணனின் தலையை
ஒரு நாளாவது  அலங்கரிக்கவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
கருட பக்ஷிகளே !
நானும் கருடாழ்வார் போலே
பெருமாளை மட்டும் சுமக்க வேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
காக்கைகளே !
நானும் கண்ணனின் அழகான 
கரு வண்ணத்தை அடைய வேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
புறாக்களே !
நானும் திவ்யதேச ஆலயங்களில்
குடும்பத்தோடு வசிக்கவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
 க்ரௌஞ்ச பக்ஷிகளே !
என் மீதும் வால்மீகி மஹரிஷியின்
கருணைப் பார்வை விழவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
 குயில்களே !
நானும் ப்ருந்தாவனத்தில் கண்ணனின்
குழலிசையோடு பாடவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
நீங்கள் எல்லாம்
ஆசீர்வதித்தால் அது பலிக்கும் !
 
 
 
உடனே என்னை
மனதார ஆசீர்வதியுங்கள் !



உங்கள் மூதாதையர்கள்
பலர் மஹாத்மாக்கள் !



உங்களில் பலர் தினமும்
திவ்ய தேச எம்பெருமான்களையும்,
பாகவதர்களையும் பார்க்கிறார்கள் !



அதனால் அடியேனுக்கு
உடனடியாக உங்கள் ஆசீர்வாதம் தேவை !

 
 
என் விலாசம் . . .
க்ருஷ்ண பைத்தியம்,
இந்து மாதா இல்லம்,
கதவு எண் : 143 / 4000,
நாம சங்கீர்த்தன தெரு,
தொண்டர் அடி பொடி ஜில்லா,
பக்தி மாநிலம் ,
உத்தம பாரத தேசம்
பின் குறியீடு - கைங்கர்யம்  ...

தொலை பேசி : சத்குரு க்ருபா  ...
அலைபேசி : ஆழ்வார்கள் அனுக்ரஹம் ...


உங்கள் வரவு எனக்கு
பக்தி வரவாகுக . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP