ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 டிசம்பர், 2012

வையத்து வாழ்வீர்காள் !

ராதேக்ருஷ்ணா



வையத்து வாழ்வீர்காள் !



நாராயணனே நமக்கே எல்லாம் தருவான் !


அதற்கு நாம் ...


பாற்கடலுள் பையத் துயின்ற
பரமனடி பாடுவோம் !


ஓங்கி உலகளந்த உத்தமன்
பேர் பாடுவோம் !


தாயைக் குடல் விளக்கம்
செய்த தாமோதரனை
வாயினால் பாடுவோம் !


உள்ளத்துக் கொண்டு ஹரி
என்று உரக்கப் பாடுவோம் !


நாராயணன் மூர்த்தி கேசவனை
சுகமாய் பாடுவோம் !


தேவாதி தேவனை, கோயிலில் சென்று
நாம் சேவித்துப் பாடுவோம் !

 மாமாயன் மாதவன் வைகுந்தன்
என்றென்று நாமம் பலவும் பாடுவோம் !


நாற்றத் துழாய் முடி நாராயணனை
நாம் போற்றிப் பாடுவோம் !


சுற்றத்து தோழிமார் எல்லோரும்
முகில் வண்ணன் பேர் பாடுவோம் !


தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடுவோம் !


புள்ளின் வாய் கீண்டானை,
  பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானின்
கீர்த்தியைப் பாடுவோம் !


சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடுவோம் !


வல்லானைக் கொன்றானை, மாற்றாரை
மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடுவோம் !

மாயன் மணிவண்ணன் 
நென்னலே வாய் நேர்ந்தான்,
தூயோமாய் சென்று துயிலெழப் பாடுவோம் !


நந்தகோபனும்,யசோதையும்,பலதேவனும்,
நம் காதாலன் கண்ணனும் துயிலெழப் பாடுவோம் !

பல்கால் குயிலினங்கள் கூவ,
பந்தார் விரலியின் மைத்துனன் பேர் பாடுவோம் !

கொத்தலர் பூங்குழல் நப்பின்னையையும்,
அவள் மணாளனையும் பாடுவோம் !

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனையும்,
நப்பின்னை நங்கை திருவையும் பாடுவோம் !

 ஊற்றம் உடையானை,பெரியானை
அடி பணிந்து போற்றி யாம் பாடுவோம் !


செங்கண்ணன் அங்கண் இரண்டும்
கொண்டு நோக்கும்படி பாடுவோம் !


சீரிய சிங்கன் சீரிய சிங்காசனத்தில்
இருக்க நாம் காரியமாய்ப் பாடுவோம் !

என்றென்றும் கண்ணன் சேவகம் கிடைக்க
இன்று நாம் உருகிப் பாடுவோம் !

நெடுமாலின் திருத்தக்க செல்வமும்,
சேவகமும் அடையப் பாடுவோம் !

மாலே மணிவண்ணா ஆலினிலையாய்
என்று அருளப் பாடுவோம் !

 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனோடு
கூடியிருந்துக் குளிரப் பாடுவோம் !


குறையொன்றுமில்லாத கோவிந்தனை,
அறியாத பிள்ளைகளாய் அன்பினால் பாடுவோம் !


சிற்றஞ்சிறுகாலே சென்று சேவித்து,
மற்றை நம் காமம் மாற்றப் பாடுவோம் !

பட்டர் பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
எங்கும் திருவருள் பெற்று
இன்புறப் பாடுவோம் !

மார்கழித் திங்கள் மதி நிறைந்த
நன்னாளாகப் இப்பொழுதே பாடுவோம் !



Read more...

சனி, 29 டிசம்பர், 2012

கூப்பிடலாமா ? ! ?



ராதேக்ருஷ்ணா

இருக்கிறான் ! ! !

அந்தர்யாமி இருக்கிறான் !


உன்னுள்ளே உன்னோடு எப்போதும்
அந்தர்யாமி இருக்கிறான் !
யாரிடம் புலம்பி என்ன பிரயோஜனம் !
யாரிடம் அழுது என்ன பிரயோஜனம் !
யாரிடம் கேட்டு என்ன பிரயோஜனம் !
யாரிடம் சொல்லி என்ன பிரயோஜனம் !
யாரிடம் கெஞ்சி என்ன பிரயோஜனம் !
யாரிடம் முறையிட்டு என்ன பிரயோஜனம் !
நீ புலம்புவதை எல்லாம் எப்பொழுதும்
கேட்க உன் அந்தர்யாமி உண்டு !
உன் மனதிற்கு சமாதானம் சொல்ல
உன் அந்தர்யாமி உண்டு !
உன் கோரிக்கைகளை எல்லாம்
நிறைவேற்ற உன் அந்தர்யாமி உண்டு !
உனக்கு நம்பிக்கையும் பலமும்
தர உன் அந்தர்யாமி உண்டு !
உன் கண்ணீரை துடைக்க உன்னோடு
உன் அந்தர்யாமி உண்டு !
உன் முகத்தில் சிரிப்பை வரவழைக்க
உன் அந்தர்யாமி உண்டு !
உனக்கு வழி காட்ட என்றும்
உன் அந்தர்யாமி உண்டு !
உனக்கு தோள் கொடுக்க
உன் அந்தர்யாமி உண்டு !
அதனால் உலகில் வாழ்வாய் !
 அதனால் உலகில் சிரிப்பாய் !
அதனால் உலகில் ஜெயிப்பாய் !
இன்று முதல் உன் அந்தர்யாமியை
திடமாய் நம்பு !


த்ரௌபதி தன்னுள் இருந்த
அந்தர்யாமியைத் தான்
"ஹ்ருதயகமலவாசா" என்று
ஆபத்துக் காலத்தில் அழைத்தாள் !


உடனே கண்ணனும் வந்தான் !
புடவையைத் தந்து கொண்டே இருந்தான் !


உனக்கும் எனக்கும் அவன் உண்டு !


நாமும் கூப்பிட்டால் உடனே வருவான் !

கூப்பிடலாமா ? ! ?


அந்தர்யாமி என்னும் நீங்காத செல்வம்
உன்னோடிருக்க நீ ஏன்  அல்பர்களிடம் கெஞ்சுகிறாய் ! ! !



Read more...

வெள்ளி, 28 டிசம்பர், 2012

என் அருமைக் குழந்தையே ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
ருவார் . . . இருப்பார் . . . செல்வார் !
 
 
னிதர்கள் திரென்று ருவார் !
 
தேவையென்றால் இருப்பார் !
 
காரியம் முடிந்வுடன் செல்வார் !
 
 அனால் னிதர்கள்
ந்துவிட்டாரென்று ந்தோஷப்டாதே !
 
உன்னோடு இருக்கிறார்கள்
என்று அஹம்பாவப்டாதே !
 
திரென்று உன்னை விட்டுச்
சென்றுவிட்டால் ருதப்டாதே ! 
 
 
 
வார் . . . இருப்பார் . . . செய்வார் !
 
 
க்ருஷ்ணன் ஒரு நாளும் வார் !
 
நம்மோடு என்றுமே இருப்பார் !
 
எப்பொழுதும் மக்கு நன்மையே செய்வார் !
 
 
னால் க்ருஷ்னை
ரு நாளும் வாதே !
 
எப்பொழுதும் க்ருஷ்ணன் இருப்தால்
தற்கும் அஞ்சாதே !
 
னக்கு ன்மையே டப்தால்
ரு பொழுதும் புலம்பாதே !    
 
 
 
சொல்வார் . . . திருதுவார் . . . துவார் !
 
 
குரு மக்கு நல்விங்ளைச் சொல்வார் !
 
குரு ம்மைத் திருதுவார் !
 
குரு நம்மை நல் ழியில் துவார் !
 
 
 அனால் குரு சொல்லை
ரு பொழுதும் றாதே !
 
உன்னைத் திருதும்போது
ந்தும் அதைத் டுக்காதே !
 
குரு சொல்லும் ழியைத் வி
வேறு எதுவும் யோசிக்காதே !
 
 
ணர்வாய் . . . வாழ்வாய் . . .சுகிப்பாய் !
 
பகதியை உணர்வாய் . . .
 
நாதோடு வாழ்வாய் . . .
 
க்ருஷ்னோடு சுகிப்பாய் !
 
 
என் அருமைக் குந்தையே . . .ீ சுகா
ீ அன்னந்தன்மாய் இருக்கவ    
 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP