ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 செப்டம்பர், 2012

கொடு . . .கேள் . . .தேடு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 சில சமயங்களில்
நான் வார்த்தை . . .
க்ருஷ்ணன் அர்த்தம் . . .
 
 
சில சமயங்களில்
நான் மலர் . . .
க்ருஷ்ணன் வாசம் . . .
 
 
 சில சமயங்களில்
நான் ஆண் . . .
க்ருஷ்ணன் பெண் . . .
 
 
சில சமயங்களில்
நான் ஆள்பவன் . . .
க்ருஷ்ணன் அடிமை . . .
 
 
சில சமயங்களில்
நான் கேள்வி . . .
க்ருஷ்ணன் பதில் . . .
 
 
சில சமயங்களில்
நான் புத்திசாலி . . .
க்ருஷ்ணன் புத்தி . . .
 
 
சில சமயங்களில்
நான் தேடல் . . .
க்ருஷ்ணன் தீர்வு . . .
 
 
சில சமயங்களில்
நான் ஆகாயம் . . .
க்ருஷ்ணன் பூமி . . .
 
 
சில சமயங்களில்
நான் மரம் . . .
க்ருஷ்ணன் நிழல் . . .
 
 
சில சமயங்களில்
நான் விதை . . .
க்ருஷ்ணன் வளர்ச்சி . . .
 
 
சில சமயங்களில்
நான் கட்டிடம் . . .
க்ருஷ்ணன் அஸ்திவாரம் . . .
 
 
சில சமயங்களில்
நான் விளக்கு . . .
க்ருஷ்ணன் வெளிச்சம் . . .
 
 
சில சமயங்களில்
நான் ஓசை . . .
க்ருஷ்ணன் நாதம் . . .
 
 
 சில சமயங்களில்
நான் தந்தை . . .
க்ருஷ்ணன் தாய் . . .
 
 
சில சமயங்களில்
நான் வைத்தியன் . . .
க்ருஷ்ணன் வைத்தியம் . . .
 
 
சில சமயங்களில்
நான் கோபக்காரன் . . .
க்ருஷ்ணன் கோபம் . . .
 
 
சில சமயங்களில்
நான் குழந்தை . . .
க்ருஷ்ணன் வெகுளித்தனம் . . .
 
 
சில சமயங்களில்
நான் வீரன் . . .
க்ருஷ்ணன் வீரம் . . .
 
 
சில சமயங்களில்
நான் அனாதை . . .
க்ருஷ்ணன் ஆதரவு . . .
 
 
சில சமயங்களில்
நான் பிடிவாதக்காரன் . . .
க்ருஷ்ணன் பிடிவாதம் . . .
 
 
சில சமயங்களில்
நான் மஹாத்மா . . .
க்ருஷ்ணன் தெய்வ ரஹஸ்யம் . . .
 
 
 சில சமயங்களில்
நான் காதலி . . .
க்ருஷ்ணன் காதல் . . .


சில சமயங்களில்
நான் தியாகம் . . .
க்ருஷ்ணன் பிரயோஜனம் . . .


சில சமயங்களில்
நான் யார் . . .
க்ருஷ்ணன் யார் . . .


சில சமயங்களில்
நான் பலவீனம் . . .
க்ருஷ்ணன் பலம் . . .
 
 
சில சமயங்களில்
நான் அவனில்லை . . .
ஆனால் அவன் நானே . . .
 
 
எது எப்படியோ
என்னையும் அவனையும்
என்னாலும் பிரிக்கமுடியாது !
அவனாலும் பிரிக்க இயலாது !
 
 
இதுவே எனக்கு சுகம் . . .
இதுவே அவனுக்கு தேவை . . .
 
 
என் சுகம் அவன் . . .
அவன் தேவை நான் . . .
 
 
இதில் வேறு யாருமில்லை !
 
 
என் தேவையை யார் அறிவார் ?
க்ருஷ்ணன் சுகத்தை யார் உணர்வார் ?
 
 
அவனே என்னை அறிவான் !
நானே அவனை அறிவேன் !
 
 
இது அஹம்பாவமா ?
இல்லை . . . இல்லை . . .
இது அனுபவம் !
 
 
புரியவில்லையா ?
 
 
உன்னைக் க்ருஷ்ணனிடம் கொடு !
க்ருஷ்ணனில் உன்னைத் தேடு !
 
 
பிறகு புரியும் . . .
 
 
கொடுத்தால் கிடைக்கும் !
தேடினால் கொடுப்பான் !
 
 
 
கொடு . . .கேள் . . .தேடு . . .


உன்னைக் கொடு !
அவனைக் கேள் !
ப்ரேம ரஹஸ்யத்தைத் தேடு !
 
 
புரிந்தால் அனுபவி !
புரியாவிட்டால் கேள் !
 
 
கேட்டுக்கொண்டேயிரு !
ஏதோவொரு ஜன்மாவில் கிடைக்கும் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP