ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

காலம் உன் கையில் !

ராதேக்ருஷ்ணா
 
 
 
பயப்படாதே ! ! !
 
 
 
உலகம் உன்னைத் தூற்றும்போது
கொஞ்சமும் பயப்படாதே !
 
 
 
நீ பயப்படும் வரை உன்னை
இந்த உலகம் படாதபாடு படுத்தும் !
 
 
 
உன் மீது குற்றமே இல்லாவிட்டாலும்
இந்த உலகம் உன்னைப் பழி கூறும் !
 
 
 
"என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே"
என்று நீ அழுதால் நீ தான் குற்றவாளி
என்று உன்னை இன்னும் படுத்தும் !
 
 
 
கடவுளையே குற்றம் சொல்லும்
சுயநல உலகமல்லவா இது !
 
 
இதில் நீயென்ன, நானென்ன ? ? ?
 
 
நாக்கில் நரம்பில்லாத உலகமிது !
 
 
வாய்மூடி இருப்பவரை
சும்மா இருக்க விடாது !
 
 
 
வாய் திறந்து சண்டையிடுபவரை
வம்பிற்கிழுக்காமல் ஒதுங்கும் உலகமிது !
 
 
 
வம்பு வேண்டாம் என்று ஒதுங்குபவரை
வீண் வம்பிற்கிழுக்கும் பொல்லாத உலகமிது !
 
 
 
நீ உலகில் ஒவ்வொருவரிடமும்
உன்னை நிரூபிக்க முயற்சிக்காதே !
 
 
 
அப்படி முயற்சித்தால் நீ முட்டாளாவாய் !
 
 
 
ஒவ்வொரு மனிதரையும் நீ
நிர்ணயம் செய்து வைத்துக்கொள் !


யாருக்கு உன் வாழ்க்கையில்,
உன் மனதில் எவ்வளவு இடம்
கொடுக்கவேண்டும் என்பதை
நீ தான் தீர்மானிக்கவேண்டும் !



யாரோ நாலு பேர் சொல்வதற்காக
உன் மனதையும்,வாழ்வையும் நீ
ஏன் கஷ்டப்படுத்திக் கொள்ளவேண்டும் ?



நிமிர்ந்து நில் . . .
நீ கூன் போட்டால் உன் மீது
இந்த உலகம் சவாரி செய்யுமே ஒழிய,
உனக்கு ஒன்றும் உதவி செய்யாது !



உலகை நீ தான் ஒழுங்காக
புரிந்துகொள்ளவேண்டும் !
 
 
இது பொல்லாத விஷமக்கார
உலகம்... சரியாய் புரிந்துகொள் !



உலகம் இப்படித்தான் . . .
அதுபோல் நீயும் இப்படித்தான்
என்று உலகிற்குக் காட்டு !



இன்னும் எத்தனை காலம்
உலகத்தை நினைத்துப்
புலம்பப்போகிறாய் !
 
 
 
 புலம்பலை நிறுத்து !
வீறு கொண்டு எழுவாய் !
உன்னோடு கடவுள் உண்டு !



உலகை வென்று காட்டு !
புறப்படு . . .
காலம் உன் கையில் !


நீ பூச்சியாய் இருந்தால்
இது உன்னைக் கஷ்டப்படுத்தும் !

நீ புலியாய் உறுமினால் போதும் !
நிச்சயம் உன் வம்பிற்கே வராது !
உன்னை வம்பிற்க்கிழுக்காது !



உன்னைக் காப்பாற்றிக்க்கொள்ள
நீ உறுமித்தான் ஆகவேண்டும் !



இது ஹிம்சை அல்ல !
இது அஹிம்சை தான் !


உறுமிக் காட்டு !
கொன்று போடு என்று நான்
சொல்லவில்லை !


உன் உறுமலே உன்னைக் காப்பாற்றும் !


உனக்கு உறுமும் சக்தியை
கண்ணன் தந்திருக்கிறான் !


உறுமுதல் உன் உரிமை !
உன்னைக் காப்பாற்றிக்கொள்ள
உனக்கு முழு அதிகாரம் என்றுமுண்டு !



உன் உரிமையை நீ உபயோகப்படுத்துவது
ஒரு நாளும் குற்றமாகாது !
 
 
 
த்ரௌபதியின் சத்தியத்தைக்
கண்ணன் காப்பாற்றினான் !
 
 
த்ரௌபதி கண்ணனை சரணாகதி
செய்திருந்தாலும் தான் ஜயிக்க
சபதம் செய்தாள் !
 
 
நீயும் ஜெயிக்க சபதம் செய் !
உன் சபதத்தை நடத்திக்காட்ட
உன் கண்ணன் என்றுமுண்டு !
 
 
உலகை ஜயிக்க சபதம் செய் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP