ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வேறு ஒரு வேலையில்லை !

ராதேக்ருஷ்ணா
 
 
 
என் தலை மீது
அனந்த பத்மநாபனின்
அபய ஹஸ்தம் இருக்கிறது !
எனக்கு என்ன கவலை !!!
 
 
 
என் வாழ்வில்
அனந்த பத்மநாபனின்
பூரண அனுக்ரஹம் இருக்கிறது !
எனக்கு என்ன கஷ்டம் !!!
 
 
 
 என்னோடு என்றும்
அனந்த பத்மநாபனின்
உன்னதமான அன்பு இருக்கிறது !
எனக்கு என்ன தேவை !!!
 
 
 
என் மனதில் என்றும்
அனந்த பத்மநாபன்
சத்தியமாய் இருக்கிறான் !
எனக்கு என்ன யோசனை !!!
 
 
 
என் நாவில் எப்பொழுதும்
அனந்த பத்மநாபனின்
திருநாமம் நிறைந்திருக்கிறது !
எனக்கு என்ன தொந்தரவு !!!
 
 
 
என்னோடு எங்கும்
அனந்த பத்மநாபன்
கூடவே வருகிறான் !
எனக்கு என்ன பயம் !!!
 
 
 
எனக்கு வரும் பிரச்சனைகளில்
அனந்த பத்மநாபன்
அற்புதமாக முடிவு எடுக்கிறான் !
எனக்கு என்ன குழப்பம் !!!



என்னுடைய தேவைகளை
அனந்த பத்மநாபன்
மிகவும் நன்றாக அறிவான் !
எனக்கு என்ன சிந்தனை !!!



என்னுடைய ப்ராரப்த கர்மாவை
அனந்த பத்மநாபன்
கவனித்துக்கொள்கிறான் !
எனக்கு என்ன ப்ரயத்தனம் !!!



எனக்கு இந்த வாழ்வில்
ஒரு வேலையுமில்லை ! ! !
அனந்தபத்மநாபனின் கருணையை
அனுபவிப்பதைத் தவிர
வேறு ஒரு வேலையில்லை ! ! !


இந்த வேலையை ஒழுங்காகச்
செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன் !



Read more...

புதன், 29 ஆகஸ்ட், 2012

திருவோணம் !

ராதேக்ருஷ்ணா
 
 
திருவோணம் . . .
 
நீ பிறந்த திருவோணம் !
 
 
வாமனா . . .
இன்று நீ பிறந்த திருவோணம் !
 
 
கச்யபருக்கும் அதிதி தேவிக்கும்
நீ பிறந்த திருவோணம் !
 
 
மஹாபலிக்கு அனுக்ரஹம் செய்ய
நீ பிறந்த திருவோணம் !
 
 
இந்திரனுக்கு சொர்க்கம் தர
நீ பிறந்த திருவோணம் !
 
 
மூவடி நிலம் யாசகம் கேட்க
நீ பிறந்த திருவோணம் !
 
 
 பால ப்ரஹ்மசாரியாய் வர
நீ பிறந்த திருவோணம் !


உலகையெல்லாம் அளக்க
நீ பிறந்த திருவோணம் !


வாமனா . . .
நீ நன்றாயிருக்கவேண்டும் !
 உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !



அன்று இவ்வுலகம் அளந்தாய்
அடி போற்றி !


இன்று எங்களை ஆட்கொண்டாய்
கருணை போற்றி !


அன்று இவ்வுலகைப் பெற்றாய்
குணம் போற்றி !


இன்று எங்களை வாழவைக்கிறாய்
பலம் போற்றி !


அன்று மஹாபலியைக் காத்தாய்
சத்தியம் போற்றி !


இன்று எங்களைக் காக்கின்றாய்
நிதானம் போற்றி !


அன்று சொர்க்கம் மீட்டாய்
பொறுப்பு போற்றி !


இன்று எங்களை மீட்கின்றாய்
வாத்சல்யம் போற்றி !


 அன்று கங்கையைத் தந்தாய்
லீலை போற்றி !


இன்று திருவோணம் தந்தாய்
மஹத்துவம் போற்றி !


வாமனா . . . திருவிக்கிரமா . . .
உலகளந்தோனே . . .
உன் பெருமை பேச என்னால் முடியுமோ !


ஏதோ உன் மீதுள்ள
ஆசையால்,
ஆழ்வார்கள் சொன்ன
வார்த்தைகளால்,
அசடாய் பேசிவிட்டேன் . . .


இந்த அசடையும்,
இதோடு இருக்கும் கூட்டத்தையும்
என்றும் ரக்ஷிப்பாய் ! ! !


நாங்கள் அஹம்பாவிகள் !
நீ தான் எங்களை வழிபடுத்தவேண்டும்!


 

Read more...

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கிள்ளுக்கீரையல்ல !

ராதேக்ருஷ்ணா
 
 
 
நாம ஜபம் செய்யாமல்
ஒரு நாளும் இருக்கவேண்டாம் !
 
 
சத்குருவை வாழ்வில்
என்றும் மறக்கவேண்டாம் !
 
 
க்ருஷ்ணனை நினையாமல்
பொழுது போகவேண்டாம் !
 
 
சத்சங்கத்தை ஒரு நாளும்
தவிர்க்கவேண்டாம் !
 
 
யாரையும் தவறாக
ஒரு போதும் பேசவேண்டாம் !
 
 
இந்து மதத்தை இழிவாய்
சொல்வரோடு இணங்க வேண்டாம் !
 
 
 நம் தெய்வங்களை பழிப்பவரோடு
என்றும் பழக வேண்டாம் !


பாகவத அபசாரம் செய்பவரை
மனதாலும் நினைக்க வேண்டாம் !
 
 
உடல் ஆரோக்கியத்தை
ஒரு நிமிஷம் கூட இழக்க வேண்டாம் !
 
 
அதர்மம் செய்பவரைக் கண்டு
மறந்தும் அஞ்ச வேண்டாம் !


சத்தியத்தைப் பேசுவதற்கு
எங்கும் தயங்க வேண்டாம் !


பக்தியை எப்பொழுதும்
எதற்காகவும் விடவேண்டாம் !


யாருக்காகவும் சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கவேண்டாம் !


மனதிலே பலவீனத்தை
ஒரு சமயத்திலும் வளர்க்கவேண்டாம் !


இல்லாதவரை ஒரு நாளும்
ஏளனம் செய்யவேண்டாம் !


அக்கிரமம் செய்பவர்களுக்கு
ஒரு நாளும் அடங்கவேண்டாம் !


இப்படியும் உன்னால் வாழமுடியும் !
நீ ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல !

உன்னால் வாழ முடியும் !

உன் இயல்பை சரி செய் !
உன் மதிப்பை உயர்த்து !
உன் க்ருஷ்ணனை அனுபவி !

உன் உலகில் நீ சுகமாய் இரு !


Read more...

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

வேறு . . .வேறு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
கனவு வேறு ;
நிஜம் வேறு . . .
 
 
ஆசை வேறு ;
லக்ஷியம் வேறு . . .
 
 
தேவை வேறு ;
தேடல் வேறு . . .
 
 
நினைப்பது வேறு ;
நடப்பது வேறு . . .
 
 
எதிர்பார்ப்பு வேறு ;
கிடைப்பது வேறு . . .
 
 
படிப்பு வேறு ;
உழைப்பு வேறு . . .
 
 
சேமிப்பு வேறு ;
செலவு வேறு . . .
 
 
சுயநலம் வேறு ;
பொதுநலம் வேறு . . .
 
 
வயசு வேறு ;
பக்குவம் வேறு . . .
 
 
இயல்பு வேறு ;
நடிப்பு வேறு . . .
 
 
வார்த்தை வேறு ;
அர்த்தம் வேறு . . .
 
 
பயம் வேறு ;
தைரியம் வேறு . . .


உள்ளம் வேறு ;
புத்தி வேறு . . .


உற்சாகம் வேறு ;
சம்பாத்தியம் வேறு . . .


உண்மை வேறு ;
புரிதல் வேறு . . .


நன்மை வேறு ;
முயற்சி வேறு . . .
 
 
உலகம் வேறு ;
யதார்த்தம் வேறு . . .
 
 
விதி வேறு ;
வினை வேறு . . .



இத்தனை முரண்பாடுகளின்
சங்கமமே வாழ்க்கை . . .


இத்தனை வேற்றுமையில் ஒரு
ஒற்றுமை ஒன்றே ஒன்று . . .


அது க்ருஷ்ணன் நம்மோடு இருப்பதே !


அதனால் க்ருஷ்ணனை நினை . . .
அவனுக்காக வாழ் . . .




Read more...

சனி, 25 ஆகஸ்ட், 2012

வரமா அல்லது சாபமா ? ? ?

ராதேக்ருஷ்ணா


வியாதிகள் . . .
வரமா அல்லது சாபமா ? ? ?

 உடலை நேசிப்பவருக்கு
வியாதி ஒரு சாபமே . . .

ஏனெனில் ;
முதலில் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும் !
பிறகு ஆசையை அடக்கவேண்டும் !

இவையிரண்டும் உடல் மேல் ஆசை
உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம் !

ஆனால் பகவானையும்,
பக்தியையும் நேசிப்பவருக்கு
வியாதி ஒரு ஆசிர்வாதம் !

ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு
பக்கவாதம் என்னும் வியாதியே
அவரை நாராயணீயம் எழுத வைத்தது !


வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே அவருக்கு ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
தரிசனத்தை பெற்றுத் தந்தது !


ஸ்ரீ நாராயண தீர்த்தருக்கு அவரின்
வயிற்று வலியே வராஹ தரிசனத்தையும்,
க்ருஷ்ண லீலா தரங்கினியையும் தந்தது !


ஸ்ரீ சனாதன கோஸ்வாமிக்கு அவரின்
உடல் புண்களே அவருக்கு ஸ்ரீ சைதன்யரின்
பரிபூரண ப்ரேமையைக் கொடுத்தது !


பீஷ்ம பிதாமகருக்கு அவரின் உடலில்
தைத்த அம்புகளின் வலியே அவரை
சஹஸ்ர நாமத்தை சொல்ல வைத்தது !



மாறனேரி நம்பிக்கு ராஜ பிளவை நோயே
அவருக்கு ஆளவந்தாரின் அனுக்ரஹத்தையும்
மோக்ஷத்தையும் சாபல்யமாக்கியது !



இப்படி பல மஹாத்மாக்களின்
வாழ்வில் வியாதிகளே மிகப்பெரிய
மாற்றத்தையும், பக்குவத்தையும்
கொண்டுவந்திருக்கிறது . . .



நீ வியாதிகளை வரவேற்க வேண்டாம் !
ஆனால் வியாதிகளில் துவண்டு போகாமலிரு !


இதுவே நான் சொல்லும் விஷயம் !


நீ வியாதியால் வாடும் வெறும் உடலல்ல !
நீ வியாதியே இல்லாத சுத்தமான ஆத்மா !


வியாதிகள் உன் வாழ்வை தீர்மானிப்பதில்லை !
பக்தியே உன் வாழ்வை நிர்ணயிக்கிறது !


உடலை கவனித்துக்கொள் !
வியாதி வராமல் காத்துக்கொள் !
வியாதி வந்தால் சரி செய்து கொள் !


வியாதிக்காக மனமுடைந்து போகாதே !
வியாதியில் வாழ்வை வெறுக்காதே !


வியாதியை வெல்ல முயற்சி செய் !


வியாதியில்லாமல் நீ வாழ
என்றும் என் வாழ்த்துக்கள் . . .


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
இது சத்தியமான ஒரு வாக்கு . . .
இதை என்றும் மறவாதே . . .



Read more...

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

குருவாயூரப்பா ! பத்மநாபா !

ராதேக்ருஷ்ணா
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் என்ன செய்துவிட்டேன் உனக்கு !
என் மேல் ஏனடா இத்தனை பரிவு உனக்கு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன் நாமத்தை ஜபிப்பவனில்லை !
ஆயினும் ஏனடா இத்தனை பரிவு என் மேல் ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன்னை தியானிப்பவனில்லை !
ஆயினும் ஏனடா உனக்கு இத்தனை பரிவு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் ஒன்றும் உன் பூந்தானமில்லை !
ஆயினும் என் மேல் ஏன் இத்தனை பரிவு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன்னைப் பற்றிப் பாடும்
நாராயண பட்டத்திரி இல்லை !
ஆயினும் ஏனடா இத்தனை பரிவு உனக்கு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உனக்காக அழும் குரூரம்மை அல்ல !
ஆயினும் ஏன் என் மேல் இத்தனை பரிவு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உனது அடிமை மஞ்சுளா அல்லவே !
ஆயினும் ஏன் எனக்காக நீ ஏன் பரிகிறாய் ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன்னைத் தொழும் வசுதேவரில்லை !
ஆயினும் என்னிடம் இத்தனை பரிவா ?
 
 
 
குருவாயூரப்பா . . .
என்னைக் காக்கவைப்பதிலும் உனக்கு ஆசை !
என்னை சீக்கிரம் அழைப்பதிலும் உனக்கு ஆசை !
 
 
குருவாயூரப்பா . . .
நீ யாரப்பா ?
ஸ்வயம் ஸ்ரீமன் நாராயணனா ?
 
 
இல்லை . . .
ஸ்வயம் தீராத விளையாட்டு க்ருஷ்ணனா ?


நீ இருவரும் இல்லை . . .
என்னை வம்பிற்கு இழுக்கும்
திருட்டுப் பிள்ளை . . .


போடா . . .குருவாயூரப்பா . . .
என்னைப் படுத்துவதில் உனக்கு
என்ன இத்தனை ஆனந்தம் . . .


நீ யார் தெரியுமா ?
நின்றிருக்கும் என் பத்மநாபன் !



இன்னும் என்னைப் படுத்துவாய் !
எனக்கு உன்னை ரொம்ப பிடித்துவிட்டதே !
 
 
பத்மநாபா . . . குருவாயூரப்பா . . .
குருவாயூரப்பா . . . பத்மநாபா . . .
 
 
இவர் இருவரல்ல . . .
இருவரும் ஒருவரே . . .
ஒருவரே இருவரானார் . . .
 
 
 
பத்மநாபர் சிவபெருமானுக்குத்
தன் வலது கையடியில் இடம் தந்தார் !
 
சிவபெருமான் குருவாயூரப்பனுக்கு
தன் இடத்தையும் குளத்தையும் தந்தார் !
 
 
 
குருவாயூரப்பனுக்கு
பட்டத்திரி நாராயணீயம் தந்தார் . . .
 
பத்மநாபனுக்கு
ஸ்வாதித் திருநாள் சதகம் தந்தார் . . .
 
 
 
இதுபோல் ஆயிரம் ஒற்றுமை . . .
பத்மநாபனுக்கும், குருவாயூரப்பனுக்கும் !


அதனால் இருவரும் ஒருவரே . . .


என் பத்மநாபனை நான்
குருவாயூரில் அப்பனாகக் கண்டேன் !

குருவாயூரப்பனை நான்
பத்மநாபனாக அனந்தபுரியில் காண்கிறேன் !


குருவாயூரப்பா . . . பத்மநாபா . . .



 

Read more...

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

குருவாயூரப்பன் . . .

ராதேக்ருஷ்ணா

அப்பனிடம் வந்துவிட்டேன் !
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

வசுதேவரின் குலதெய்வமான
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

நாராயண சரஸில் ருத்ரகீதம் கேட்கும்
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

சிவபெருமானும் ஆனந்தமாய் அனுபவிக்கும்
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

 
க்ருஷ்ணனும் ஆராதனை செய்த
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

குருவும்,வாயுவும் ப்ரதிஷ்டை செய்த
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

கேரள தேசத்தின் பால க்ருஷ்ணனான
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !



இவனை ஏன் அப்பன் என்கிறார்கள் ?
இவனோ சிறு பிள்ளை அல்லவா ! ! !

இவன் ரக்ஷிக்கும்போது அப்பன் . . .
இவன் விளையாடும்போது குட்டன் . . .
 என்றுமே இவன் லீலாப்ரியன் . . .

என்றுமே இவன் உன்னிக்ருஷ்ணன் . . .
என்றுமே இவன் பக்தவத்சலன் . . .
என்றுமே இவன் என் பிள்ளை . . .

Read more...

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தாயின் மடியில் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
தாயான பூமி . . .
 
 
அண்டவெளியில் ஒரு
அழகான தாய் நம் பூமி !
 
 
 
எத்தனை அதிசயங்கள் . . .
எத்தனை அற்புதங்கள் இவளிடத்தில் !
 
 
 
 ஒரு புறம் அழகான மலைகள் !
 
ஒரு புறம் அற்புதமான பள்ளத்தாக்குகள் !
 
 ஒரு புறம் வறண்ட பாலைவனம் !
 
ஒரு புறம் அடர்ந்த காடுகள் !
 
ஒரு புறம் பயங்கர குளிர் !
 
ஒரு புறம் சுட்டெரிக்கும் வெயில் !
 
ஒரு புறம் பனிக்கட்டிகள் !
 
ஒரு புறம் எரிமலைகள் !
 
ஒரு புறம் நல்ல வெளிச்சம் !
 
ஒரு புறம் இருண்ட ப்ரதேசம் !
 
ஒரு புறம் நகரங்கள் !
 
ஒரு புறம் கிராமங்கள் !
 
 
 
பூமித்தாய்க்கு பலவித முகங்கள் !
 இன்று வரை பலரும் அறிந்ததில்லை !



பூமி என்னும் தாயின் மடியில்
நான் கற்றது பக்தி என்னும் பாடம் !


பக்தி என்னும் பாடத்தில் நான் 
புரிந்துகொண்டது அற்புதமான க்ருஷ்ணனை !
 
 
 
மலையில் நான் கண்டது
க்ருஷ்ணனின் தோள்களை . . .
 
 
மேகங்களில் நான் கண்டது
க்ருஷ்ணனின் திருக்கேசத்தை . . .
 
 
குளிரில் நான் அனுபவித்தது
க்ருஷ்ணனின் அன்பை . . .
 
 
சிவந்த மலர்களில் நான் கண்டது
க்ருஷ்ணனின் அழகான கண்களை . . .
 
 
தித்திப்பான பழங்களில் நான் ருசித்தது
க்ருஷ்ணனின் செங்கனிவாயை . . .
 
 
வெதுவெதுப்பான இளம் வெய்யிலில்
நான் சுகமாய் பெற்றது
க்ருஷ்ணனின் அன்பான அரவணைப்பை . . .
 
 
எல்லாவற்றையும் மறைக்கும்
திடீர் மேகங்களில் நான் கண்டது
க்ருஷ்ணனின் மாயா பலத்தை . . .
 
 
பறவைகளின் இனிமையான சப்தத்தில்
நான் கற்றுக்கொண்டது
க்ருஷ்ணனின் ஆசிர்வாதத்தை . . .
 
 
 பச்சை வண்ண புல்வெளிகளில்
நான் கண்டுகொண்டது
க்ருஷ்ணனின் எல்லையில்லா அன்பை . . .
 
 
 
பூமித்தாயே . . .
உன்னை நான் என்றும் மறவாதிருக்க
நீயே எனக்கு க்ருஷ்ண பக்தி தருவாய் . . .


க்ருஷ்ணா . . .
நான் என்றும் பூமியில் உன் பெருமையைப்
பேசும் வாய்ப்பையே எனக்குத்
திரும்பத் திரும்பத் தருவாய் . . .




Read more...

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

என்னிடம் வா ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
 
வாழ்க்கை முழுதும் வழித்துணையாய்
நான் இருக்கிறேன் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் மார்கபந்து !
 
 
 
மோக்ஷம் என்னும் பரமபதத்திற்கு
உனக்கு வழித்துணை நான் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் காளமேகம் !
 
 
 
உன் மோஹம் எனக்குதான்
அதற்கும் வழித்துணை நான் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் வழித்துணைவன் !
 
 
 
உன் தாபத்தை தீர்க்கவே நான்
திருமோகூரில் காத்திருக்கிறேன் . . .
என்னிடம் வா என்றான்
மோஹனவல்லியின் நாதன் !
 
 
 
உனது ப்ராரப்த கர்மாவிற்கு
பதிலளிக்க நான் இருக்கிறேன் . . .
 என்னிடம் வா என்றான்
திருமோகூர் ஆப்தன் !
 
 
 
உனது எதிர்காலத்திற்கு
உத்திரவாதம் நான் தருகிறேன் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் சுடர்கொள்ஜோதி !
 
 
 
 உனது வம்சத்திற்கே
பக்தி தருவது என் பொறுப்பு . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் நண்பன் !
 
 
 
உன் துக்கங்களை ஆனந்தமாக்குவது
என்னுடைய முதல் கடமை . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் ப்ரார்த்தனா சயன பெருமாள் !
 
 
 
உனது அஞ்ஞானத்தை அழித்து
ஞானத்தைக் காட்டுவது என் வேலை . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் மரகதமணித்தடன் !
 
 
 
நானாக செல்லவில்லை . . .
மோஹினி அவதாரம் எடுத்தவன்
என்னை அவனிடம் மோஹிப்பிக்க
வைத்து என்னை இழுத்தான் !
 
 
 
சென்றேன் . . .
ப்ரமையை மழையாய் பொழிந்தான் !
 
 
நனைந்தேன் . . .
இன்னும் உடல் சிலிர்க்கின்றது !
 
 
சிலிர்க்கின்றேன் . . .
திருமோகூர் நாதனை நினைத்து !
 
 
மனமும்,உடலும்,ஆத்மாவும்
மோஹனின் வசமாயிற்று !
 
 
திருமோகூர் மோஹன்
எனது மோஹத்திற்கு காரணன் . . .
 
 
 

Read more...

புதன், 15 ஆகஸ்ட், 2012

நேசிக்கிறாயா ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
நேசிக்கிறாயா ?
 
 
நிஜமாகவே நேசிக்கிறாயா ?
 
 
 சத்தியமாக நேசிக்கிறாயா ?
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
 
 
சும்மா சொல்லாதே . . .
நிஜமாகவே நீ நேசிக்கிறாயா ?
 
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
அப்படியென்றால் இனி
கண்ட இடத்தில் குப்பை போடாதே . . .
 
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
அப்படியென்றால் இனி
பாரதபூமியை கேவலமாய் பேசாதே . . . 
 
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
இனி யாராவது இந்த பாரதம்
உருப்படாது என்று சொன்னால்
அவர்களிடம் வாதாடு . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
இனி எப்பொழுதும் பாரத பூமி
எல்லாவிதத்திலும் முன்னேற
திடமாக ப்ரார்த்தனை செய் . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
ஒவ்வொரு நாளும் இந்த
பாரத பூமிக்காக எதையாவது
நீ உருப்படியாக செய் . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
இந்த நாட்டில் ஊழல் அழிய,
சட்டதிட்டங்கள் ஒழுங்காக,
நீ முயற்சி செய் . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
 
 
யோசி...யோசி...யோசி
 
 
பல நாள் நாம் இந்த தேசத்திற்காக
ஒன்றுமே செய்யவில்லை . . .
 
 
இந்த சுதந்திர நன்னாளில்
நம் முன்னவர் செய்த த்யாகத்தை
நாம் செய்ய தயாராவோம் . . .
 
 
நமக்காக அல்ல . . .
நம் சந்ததிக்காக . . .
 
 
பாரதம் வெல்லும் . . .
பாரதம் நிருபீக்கும் . . .
பாரதம் வாழும் . . .
 
 
பாரதமாதாவுக்கே ஜயம் . . .
 
 
     
 
 

Read more...

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

பார்த்துவிட்டேன் ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
தன்னைத் தொடச்சொல்லி
ஆனந்தம் தரும்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
 
தன்னடக்கம் உள்ளவருக்கே
எளியவனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
 
தரணியெல்லாம் புகழும்
சந்திரபாகா நதிக்கரையில்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
 
புண்டலீகனுக்காக நிற்கும்
த்வாரகாநாதனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !



இடுப்பில் கையை வைத்திருக்கும்
சாக்ஷாத் மன்மத மன்மதனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !



ருக்குமாயியின் ப்ரிய நாயகனான
செங்கல் மேல் நிற்கும் வரதனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
 
தன்னைத் தேடுபவரைத்
தான் தேடிச் செல்லும் சுலபனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
 
அவன் என்னை நினைத்தான் !
அவன் என்னை அழைத்தான் !
அவன் தன்னைத் தந்தான் !
 
 
அடியேனை அவனே பார்க்கவைத்தான் !
அடியேனை அவனே தொடவைத்தான் !
அடியேனை அவனே ஆட்கொண்டான் !
அடியேனை அவனே ரக்ஷிக்கின்றான் !
அடியேனை அவனே போஷிக்கின்றான் !
 
 
விட்டலனைப் பார்த்துவிட்டேன் . . .
விட்டலனைப் பார்த்துவிட்டேன் . . .
விட்டலனைப் பார்த்துவிட்டேன் . . .
 
 
ஆகாயமே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
காற்றே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
நெருப்பே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
ஜலமே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
பூமியே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
 ஹே பண்டரீபுரமே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !


ஹே சந்திரபாகா !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
ஹே பறவைகளே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
ஹே விதியே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 
 
ஹே ஊழ்வினையே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
 உன்னால் இனி என்ன செய்யமுடியும் !
 
 
வா . . .நீயா , நானா என்று பார்க்கலாம் !
 நீயும் எத்தனை நாள் தான் என்னை
ஆட்டுவிப்பாய் . . .


இனி என் முறை . . .
இனி நானே உன்னை ஆட்டுவிப்பேன் . . . .


ஹே ஊழ்வினையே . . .
இதோ என் விட்டலனைப் பார்த்த
அபரிமிதமான பலத்தோடு
உன்னை ஜயிக்க வந்திருக்கிறேன் !



என்னைக் கண்டு ஓடாதே . . .
என்னைக் கண்டு ஒளியாதே . . .


ஊழ்வினையே . . .
வா . . .
நீ அல்லது நான் . . .
 
 
இன்றே முடிவு செய்வோம் . . .
 


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP