ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஆதிகேசவனை அடை . . .

ராதேக்ருஷ்ணா



திருவட்டாறு ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

கேசனை வதம் செய்து, கேசியின்
மேல் துயில் பயிலும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

என் பத்மநாபனின் அண்ணன் ஆதிகேசவன்
 அடி இணை அடை மட நெஞ்சே . . .

சேர நாட்டு ஸ்ரீரங்கனான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


22 அடி உயரமான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

16008 சாளக்ராம மூர்த்தியான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


கங்கையும் தாமிரபரணியும் தொழும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

திருவடி அருகில் சிவனுக்கு
இடம் தந்த அழகன் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


மது கைடபரையும் தன் திருவடியில்
பத்திரமாய் வைத்திருக்கும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


பஞ்சாயுதங்களையும் ஜாக்கிரதையாய்
தன் கண்பார்வையில் கொண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . . 

வசீகர முகம், ஈர்க்கும் கண்கள்,
காக்கும் கைகள் கொண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . . 

ஹாதலேய முனிவரின் தகப்பன் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆதி அனந்தபுரத்து ஆதி கேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


வசிஷ்டரும் தவமிருந்து கண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

பரசுராமரின் பூஜையில் திளைத்த ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


நம்மாழ்வார் மயங்கின ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

சூரியனும் தன் கதிர் கரங்களால்
புரட்டாசி, பங்குனியில் பூஜை செய்யும்
ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யருக்கு
ப்ரும்ம சம்ஹிதை தந்த ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆற்காட் நவாபையும் தனக்கு
மண்டபமும்,தொப்பியும் தர வைத்த
ஆதிகேசவன் அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆர்ப்பாட்டம் இல்லாத பக்தர்களின்
பக்தவத்சலனான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

 வட்டமாய் பரளி ஆறு சூழ்ந்திருக்க,
பூமி தேவி தந்த சிறிய மேட்டில்,
நிம்மதியாய் சயனிக்கும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


பத்மநாப தாசனான கோபாலவல்லியையும்,
தன் கருணையால் ஆண்ட
அண்ணன் ஆதி கேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

  

Read more...

திங்கள், 30 ஜூலை, 2012

நீயே ஜெயிப்பாய் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
 விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு !
 
 
தோற்றால் புலம்பாதே . . .
போராடு !
 
 
கிண்டலடித்தால் கலங்காதே . . .
 மன்னித்துவிடு !
 
 
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !


நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !


ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !


நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !
 
 
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !


உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !
 
 
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !


மொத்தத்தில் நீ பலமாவாய் . . .
சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .
 
 
உன்னால் முடியும் . . .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
 
 
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
 உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .


 நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .


நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .


நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .


நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய் . . .

Read more...

சனி, 28 ஜூலை, 2012

திருமகளே . . .

ராதேக்ருஷ்ணா






திருமகள் பிறந்ததால்
திருப்பாற்கடலும் மஹிமை பெற்றது !




திருமகளைப் பெற்றதால்
சமுத்திரராஜனும் மேன்மையடைந்தான் !




திருமகளோடு பிறந்ததால்
சந்திரனும் அம்புலி மாமாவானான் !



திருமகளைத் திருமணம் செய்ததால்
திருமாலும் தேவாதி தேவனானான் !




திருமகளோடு சம்மந்தம் ஏற்பட்டதால்
தாமரைக்கும் தெய்வீகம் வந்தது !



திருமகளின் திருவடியில் இருப்பதால்
சலங்கையிலும் நாதம் பிறந்தது !




திருமகள் பிடித்து சேவை செய்வதால்
திருமாலின் செவ்வடியும் திருவடியாயிற்று !





திருமகளுக்கு தன் மார்பில் இடம் தந்ததால்
பெருமாளும் திருமால் ஆனார் !




திருமகளின் கருணையால் தான்
சம்சாரிக்கும் சரணாகதி கிடைத்தது !




திருமகளே வர மகளாய் வந்ததால்
விதேஹனும் விண்ணை அடைந்தான் !




திருமகளே மருமகளாய் வந்ததால்
தயரதனும் துயரம் தீர்ந்தான் !




திருமகளின் திருவடியை அடைந்ததால்
சிறியவனும் மன்னவனின் தகப்பனானான் !




திருமகளுக்காகத் தீரமாய் போரிட்டதால்
ஜடாயுவும் திருலோகம் அடைந்தார் !




திருமகளின் திருவாபரணத்தால்
சுக்ரீவனும் திருமாலின் தோழனானான் !




திருமகளிடம் தூது சென்றதால்
ஆஞ்சனேயனும் சிறிய திருவடியானான் !




திருமகளுக்காகப் பேசினதால்
விபீஷணனும் திருப்பாதம் அடைந்தான் !




திருமகள் வந்ததாலேயே வால்மீகியும்
திருத்தமாக ராமாயணம் சொன்னான் !




திருமகளைத் தந்தும் ஏற்றும்
பூமியும் திருந்திய செல்வமடைந்தாள் !




திருமகளே ஒரு மகளாய் கிடைத்ததால்
பீஷ்மகனும் கண்ணனின் மாமனாரானான் !




திருமகளுக்காகத் தூது போனதால்
பெரிய திருவடியும் தாபம் தீர்ந்தான் !



திருமகள் திருநாரணனைத் தடுத்ததாலேயே குசேலனும் குறைவிலா திருமகனானான் !




திருமகள் தைரியமாய் துளசியைத் தந்ததால்
சத்தியபாமாவும் சமத்தானாள் !




திருமகள் வயிற்றில் சுமந்ததால்
காமனும் கண்ணனின் மகனானான் !




திருமகளால் தேவதேவியின் காதலனும்
தொண்டரின் அடிப் பொடியானான் !




திருமகளின் தாகம் தணிக்கத் தானே
ராமானுஜனும் தீர்த்தம் சுமந்தான் !




திருமகளின் கருணைக் கண் பார்வைக்கு
பராசர பட்டரும் ரங்கனின் வாயடைத்தான் !




திருமகளே . . . நீயே எங்களுக்கு
திருமாலின் திருவடியைத் தருவாய் !




திருமகளே . . .கருவிலே
திருவிலாததால் இருளிலே இருக்கின்றேன் . . .




திருமகளே . . . உன் கருவிலே
ஒரு நாள் வாழ  விரைந்து அருள் தா . . .




திருமகளே . . . உன் நிழலிலே
மழலையாய் உழல அனுமதி தா . . .




திருமகளே . . .
உன் மடியிலே மரணம் அடைய
நின் மகனுக்கு வரம் தா . . .




திருமகளே . . .
அடியேன் மறப்பேன் . . .
நீ மறவாய் . . .
சிறியேன் உன் தாசன் ! ! !




திருமகளே . . .திரு வாய், , , திறவாய் . . .
திருமகளே . . .வருவாய் , , ,தருவாய் . . .








Read more...

வியாழன், 26 ஜூலை, 2012

அதுவே திருவனந்தபுரம் . . .

ராதேக்ருஷ்ணா




மூன்று துன்பங்கள் . . .
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் !
ஒரு தீர்வு !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று உலகங்கள் . . .
பூலோகம், புவர் லோகம் , ஸ்வர் லோகம் !
ஒரு ராஜாதிராஜன் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று நிலைகள் . . .
விழிப்பு, கனவு, உறக்கம் !
ஒரு காப்பு !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று குணங்கள் . . .
சாத்வீகம், ராஜஸம், தாமஸம் !
ஒரு சமாதானம் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தொழில்கள் . . .
படைத்தல், காத்தல், அழித்தல் !
ஒரு தலைவன் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தெய்வங்கள் . . .
ப்ரும்மா, விஷ்ணு, சிவன் !
ஒரு ப்ரும்மம் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று வியாதிகள் . . .
பிறப்பு, இருப்பு, இறப்பு !
ஒரு மருந்து !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று மனித சரீரங்கள் . . .
ஆண், பெண், அலி !
ஒரு காவலன் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று புதிர்கள் . . .
அஞ்ஞானம், விஞ்ஞானம், மெய்ஞானம் !
ஒரு விடை !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று மதங்கள் . . .
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் !
ஒரு வழி !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தீர்த்தங்கள் . . .
பத்ம தீர்த்தம், வராஹ தீர்த்தம், சங்குமுகம் !
ஒரு புண்ணியம் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தேவிமார்கள் . . .
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி !
ஒரு நாயகன் !
அதுவே திருவனந்தபுரம் . . .



மூன்று வாசல் . . .
திருவடி வாசல்,திருநாபி வாசல்,திருமுக வாசல் !
ஒரு தெய்வம்  !
அதுவே திருவனந்தபுரம் . . .





Read more...

புதன், 25 ஜூலை, 2012

சுதாமா . . .

ராதேக்ருஷ்ணா



சுதாமா . . .
ஸ்ரீ க்ருஷ்ணனின் சகா !


சுதாமா . . .
தரித்ரத்தை ரசித்த வைராக்யசாலி !


சுதாமா . . .
பகவானிடம் எதையும் கேட்காதவன் !


சுதாமா . . .
பகவானை தன்னிடம் கேட்க வைத்தவன் !


சுதாமா . . .
சாந்தீபனி ரிஷியின் உன்னத சிஷ்யன் !


சுதாமா . . .
ஸ்ரீ க்ருஷ்ணனின் பால்ய சினேகிதன் !


சுதாமா . . .
வேதத்தை உள்ளபடி அறிந்தவன் !


சுதாமா . . .
ப்ரும்மத்தை அறிந்த சரியான ப்ராம்மணன் !


சுதாமா . . .
பக்திக்காக பக்தி செய்த பக்தன் !



சுதாமா . . .
க்ருஷ்ணனை ஆனந்தத்தில் அழ வைத்தவன் !



சுதாமா . . .
ருக்மிணியை சாமரம் வீச வைத்த ஞானி !



சுதாமா . . . 
அவலையும் பக்தியோடு தந்தவன் !



சுதாமா . . .
க்ருஷ்ணனோடு 64 நாள் பயின்றவன் !



சுதாமா . . .
க்ருஷ்ணனை பாத பூஜை செய்யவைத்தவன் !



சுதாமா . . .
என்னை தெளிய வைத்தவன் . . .



சுதாமா . . .
எனக்கு ஞானம் தந்தவன் . . .



சுதாமா . . .
எனக்கு வைராக்யம் அருளினவன் . . .



சுதாமா . . .
சுதாமா. . . சுதாமா. . .
க்ருஷ்ணனே ஜபித்த இந்தத் திருநாமம்
எனக்குப் போதும் . . .


சத்தியமாய் க்ருஷ்ணன்
என்னிடம் ஏதாவது கேட்பான் . . .





Read more...

செவ்வாய், 24 ஜூலை, 2012

இன்றோ திருவாடிப்பூரம் !

ராதேக்ருஷ்ணா 





இன்றோ திருவாடிப்பூரம் !



இன்றோ நம் கோதை பிறந்தாள் !



இன்றோ பெரியாழ்வார் பெற்றார் !




இன்றோ வடபத்ரசாய் மகிழ்ந்தான் !



இன்றோ துளசி நெகிழ்ந்தது !



இன்றோ விண்ணவர் மகிழ்ந்தனர் !



இன்றோ மண்ணவர் திருந்தினர் !



இன்றோ நாம ஜபம் ஜெயித்தது !



இன்றோ க்ருஷ்ண ப்ரேமை சித்தித்தது  !




இன்றோ கலி கெட்டது !




இன்றோ பூமி சிலிர்த்தது !




இன்றோ பாபங்கள் அழிந்தது !



இன்றோ க்ருஷ்ணன் திளைத்தான் !




இன்றோ ரங்கன் மயங்கினான் !



இன்றோ ஸ்ரீநிவாசன் புலம்பினான் !



இன்றோ ஞானம் பிறந்தது !



இன்றோ வைராக்கியம் வந்தது !



இன்றோ ஸ்ரீவில்லிபுத்தூர் ப்ருந்தாவனமானது !



இன்றோ இடைச்சிகள் காதலடைந்தது !



இன்றோ பிராமணர்கள் அடங்கியது !



இன்றோ நமக்கு பக்தி வந்தது !



இன்றோ கோபாலவல்லி
ஆண்டாள் கைக் கிளியானது !



இன்றே தான் . . .



Read more...

திங்கள், 23 ஜூலை, 2012

நான் அறியேன் . . .

ராதேக்ருஷ்ணா



திருவனந்தபுரத்தில்
இருக்கிறேன் . . .



எல்லா இடர்களையும்
கெடுக்கும் பத்மநாபனின்
அந்தப்புரத்தில் இருக்கிறேன் !



இன்று போய் புகுவாய்
என்று நம்மாழ்வார் சொன்ன
அனந்தபுரியில் இருக்கிறேன் !



பாகவத ப்ரியனான
பத்மநாபன் படுத்திருக்கும்
ஸ்யானந்தூரத்தில் இருக்கிறேன் !



விண்ணோர் அகப்பணி செய்து
அனந்தனின் அருளுக்காக ஏங்கும்
அனந்தபுரத்தில் இருக்கிறேன் !



ஆராட்டு நாயகனின், வேட்டைக்காரனின்
விந்தையான திருவனந்தபுரத்தில்
சுகமாய் இருக்கிறேன் !






ராமானுஜரை இரவோடு இரவாக
திருக்குறுங்குடியில் கொண்டு விட்ட
திருடனின் புரத்தில் இருக்கிறேன் !






ஒன்றரை லக்ஷம் கோடி கொண்ட,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனின் அருகில் இருக்கின்றேன் !






த்வாரகையிலிருந்து ஓடி வந்து,
அனந்தன் காட்டில் ஒளிந்திருக்கும்
மாயனின் ஊரில் இருக்கிறேன் !






பதினெட்டு மைல் த்ரிவிக்ரமன்,
பதினெட்டு அடியாய் சுருங்கி வாமனான
உத்தமனின் புரியில் இருக்கிறேன் !






கண்ணும்,கையும்,காலும் தாமரையான,
கையில் தாமரையோடு சயனிக்கும்
தாமரையாள் கேள்வனோடு இருக்கிறேன் !



இன்னும் எத்தனை நாள்
பத்மநாபன் என்னை இங்கே
வைத்திருப்பானோ ?
அவனே அறிவான் . . .
நான் அறியேன் . . .






திரு அனந்த புரம் . . .
திருவுக்கும் அந்தப்புரம் . . .
அனந்தனுக்கும் அந்தப்புரம் . . .
பத்மத்திற்கும் அந்தப்புரம் . . .
பத்மநாபனுக்கும் அந்தப்புரம் . . .



இந்த கோபாலவல்லிக்கு ஆனந்தபுரம் . . .





Read more...

சனி, 21 ஜூலை, 2012

வில்லிபுத்தூர் . . .

ராதேக்ருஷ்ணா





 கோதை பிறந்த ஊர் !
பேதைமையை நீக்கும் ஊர் . . .



கோவிந்தன் வாழும் ஊர் !
கோமாதாவை ரக்ஷிக்கும் ஊர் . . .



சோதி மணிமாடங்கள் தோன்றும் ஊர் !
நித்தியமாய் பக்தி செய்யும் ஊர் . . .



நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் !
நீங்காத செல்வம் நிறைந்த ஊர் . . .



நான் மறைகள் ஓதும் ஊர் !
நாலாயிரமும் ஜெபிக்கும் ஊர் . . .



வில்லிபுத்தூர் வேதக் கோன் ஊர் !
விதியை மாற்றி வாழவைக்கும் ஊர் . . .



பாதகங்கள் தீர்க்கும் ஊர் !
பாவியரை பக்தராக்கும் ஊர் . . .



பரமனடி காட்டும் ஊர் !
பரமனை மாப்பிள்ளையாய் அடைந்த ஊர் . . .



வேதம் அனைத்திற்கும் வித்தான ஊர் !
வேதநாதன் சயனிக்கும் ஊர் . . .



கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் பாடும் ஊர் !
அறியாத மானிடரை திருத்தும் ஊர் . . .



கருடனையும் கர்ப்பக்ருஹத்துள்
மரியாதையாய் தொழும் ஊர் !
காரேய் கருணை ராமானுசனை
மாமனாய் அடைந்த ஊர் . . .




திருவாடிப்பூரத்தை ரசிக்கும் ஊர் !
திருந்தண்கால் அப்பனும் வரும் ஊர் . . .



யமுனையும் திருமுக்குளமான ஊர் !
எமனையும் விரட்டியடிக்கும் ஊர் . . .



நாழிக்கிணற்றில் கண்ணன் வரும் ஊர் !
நாழிகையில் கண்ணனைக் காட்டும் ஊர் . . .



கிளியும் நாமம் சொல்லும் ஊர் !
கலியும் கெடும் என்று உணர்த்தும் ஊர் . . .



சூடிக் களைந்தாளின் சுடர் மிகு ஊர் !
பல்லாண்டு பாடுபவரின் பக்தி ஊர் . . .



ஐந்து கருட சேவை ஊர் !
ஐயமெல்லாம் தீர்க்கும் ஊர் . . .



கோபாலவல்லியின் காதல் ஊர் !
கோபாலவில்லியாக்கிய விந்தை ஊர் . . .



வினைகள் எல்லாம் நீங்கும் ஊர் !
வில்லிபுத்தூர் என்னும் ப்ரேமை ஊர் . . .



Read more...

புதன், 18 ஜூலை, 2012

சோறு வேண்டுமா ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
ஆகாரம் . . .
உலகின் ஆதாரம் . . .
 
 
 
சிறு பூச்சிக்கும் ஆகாரம் தேவை !
பெரிய யானைக்கும் ஆகாரம் தேவை !
நல்ல மனிதருக்கும் ஆகாரம் தேவை !
மஹா பாபிக்கும் ஆகாரம் தேவை !
உத்தம பக்தருக்கும் ஆகாரம் தேவை !
நாஸ்தீகவாதிக்கும் ஆகாரம் தேவை !
 
 
பணக்காரருக்கும் ஆகாரம் தேவை !
பிச்சைக்காரனுக்கும் ஆகாரம் தேவை !
அழகிக்கும் ஆகாரம் தேவை !
குரூபிக்கும் ஆகாரம் தேவை !
சிறுவருக்கும் ஆகாரம் தேவை !
பெரியவருக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
ஞானிக்கும் ஆகாரம் தேவை !
அஞ்ஞானிக்கும் ஆகாரம் தேவை !
யோகிக்கும் ஆகாரம் தேவை !
போகிக்கும் ஆகாரம் தேவை !
ஆரோக்கியவானுக்கும் ஆகாரம் தேவை !
நோயாளிக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
ப்ரும்மசாரிக்கும் ஆகாரம் தேவை !
க்ருஹஸ்தருக்கும் ஆகாரம் தேவை !
பற்றில்லாதவருக்கும் ஆகாரம் தேவை !
சன்னியாசிக்கும் ஆகாரம் தேவை !
தொழிலாளிக்கும் ஆகாரம் தேவை !
முதலாளிக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
 ஆகாரம் தேவையில்லை என்று
ஒருவரும் சொல்லமுடியாது !


தெய்வத்திற்கும் ஆகாரம் தேவை . . .
ஆனால் நமக்காக தெய்வத்திற்கு
ஆகாரம் தேவை . . .



தெய்வம் உண்ட ஆகாரம்
நமக்கு என்றும் நன்மை பயக்கும் !



அதுவே நிவேதனம் . . .



தெய்வத்திற்கு ஆகாரம் தரும்
உன்னத வழக்கம் நம்முடைய
சனாதன ஹிந்து தர்மத்திலேதான் உண்டு !
 
 
 
நாம் சாப்பிடுவதை, நம் தெய்வங்கள்
ஏற்பதுதானே அற்புதம் . . .
 
 
 
தெய்வம் சாப்பிடுவதை நாம் ஏற்பதுதானே
தெய்வத்திற்கு நாம் தரும் மரியாதை . . .
 
 
 
இதுவே நிவேதனத்தின் ரஹஸ்யம் . . .
 
 
 
நிவேதனம் என்றால் அர்பித்தல்
என்று அர்த்தம் . . .
 
 
 
 பகவானுக்கு அர்பிக்கத் தானே
வாழ்க்கை . . .
பகவான் தருவதை அனுபவிக்கவே
வாழ்க்கை . . .
 
 
பகவான் அனுபவித்த
ஆகாரத்தைச் சாப்பிட்டால்
சுகமாய் வாழலாம் . . .
 
 
 
தினமும் ஹிந்துக்கள் வீட்டில்
பகவானுக்கு நிவேதனம் உண்டு !
தினமும் நம் கோயில்களில்
பகவானுக்கு நிவேதனம் உண்டு !
 
 
பகவானுக்காக சமைப்பதே சுகம் !
 
 
 
அதுபோல் ஒரு கைங்கர்யம்
கிடைத்தால் . . .
சொல்ல வார்த்தைகளில்லை . . .
 
 
 
அதுவும் பூரி ஜகந்நாதனின்
திருமடைப்பள்ளியில் (சமையலறை)
கைங்கர்யம் கிடைத்தால் . . .
ஆஹா . . . ஆஹா . . . ஆஹா . . .
 
 
 
உலகின் மிகப்பெரிய சமையலறை !
கண்டு அசந்து போனேன் . . .
மயக்கம் தான் வரவில்லை . . .
 
 
 
எத்தனை பேர் சுழன்று சுழன்று
வேலை செய்கிறார்கள் . . .
அம்மம்மா . . .எத்தனை சக்தி !
 
 
 
 எல்லாமே பெரியது இங்கே...
ஜகந்நாதனைப் போல் !


தினம் தினம்
பக்தருக்காக சமையல் . . .


அடுப்பு : 752
சமையல்காரர்கள் : 500
உதவியாளர்கள் : 300
ஆகார வகைகள் : 56

என்ன தலை சுற்றுகிறதா . . .



பகவானின் சமையலுக்காக
கங்கையும், யமுனையும்
இங்கே கிணற்றில் சுறக்கிறார்கள் !
 
 

தண்ணீரை இறைக்கவே
ஒரு கூட்டம் . . .



தண்ணீரை கொண்டுசெல்ல
ஒரு கூட்டம் . . .



காய்கறி நறுக்க ஒரு கூட்டம் . . .



தேங்காய் துறுவ ஒரு கூட்டம் . . .



மண்பானைகளை கொண்டுவர
ஒரு கூட்டம் . . .



அரிசியை இடிக்க ஒரு கூட்டம் . . .



துவையல் அறைக்க ஒரு கூட்டம் . . .



காய்கறி அலம்ப ஒரு கூட்டம் . . .



சமைத்ததை எடுத்து வைக்க ஒரு கூட்டம் . . .



சாமான் எடுத்துக் கொடுக்க ஒரு கூட்டம் . . .



விறகு கொண்டு வர ஒரு கூட்டம் . . .
 
 
 
கோயிலில் பக்தர்களின்
கூட்டத்தை விட,இந்த
சமையலறைக் கூட்டம்தான் பெரியது !



வெய்யிலோ,மழையோ,பனியோ
ஒரு நாளும் இது மாறுவதில்லை . . .



ஜகந்நாதனுக்கு தன் பக்தருக்கு
வயிறார ஆகாரம் கொடுப்பதே தவம் . . .


கோபால குழந்தைகளின்
பசியைப் போக்க ப்ராம்மணர்களிடம்
கையேந்தி கெஞ்சினவனாயிற்றே !


ப்ராம்மண பத்னிகளின் பக்தியோடு
கூடிய ஆகாரத்தைத் தானும்
அனுபவித்து பக்தருக்கும் தந்தவனாயிற்றே !



ப்ராம்மணர்கள் ஆகாரம் தரவில்லை !
அதனால் அவர்களையே சமைக்கும்படி
ஒரு உத்தரவு இட்டுவிட்டான் போலும் !



அதிலும் சமையலறையில் வேலை
செய்பவர் தன் வீட்டில் வயிறார
உண்டு விட்டுதான் தினமும்
இவனுக்கு சமைக்க வரவேண்டும் !



ஜகந்நாதனுக்கு தேங்காய், பரங்கிக்காய்,
வாழைக்காய், இவையெல்லாம்
ரொம்பப் பிடிக்கிறது !
 
 


எத்தனை சுவை . . .
ஜகந்நாதனின் ப்ரசாதம் சாப்பிட
சத்தியமாய் உனக்கு பத்து வயிறாவது
நிச்சயம் வேண்டும் . . .
ஒரு வயிறு போதவே போதாது . . .



ஜகந்நாதனின் மனது போலவே
கொடுப்பவரின் மனதும் . . .
அள்ளி அள்ளித் தருகிறார்கள்
ஜகந்நாதனின் ப்ரசாதத்தை . . .



இன்றும் என் நாவிலும்,
மனதிலும், ஆத்மாவிலும்,
கலந்து விட்ட சுவை . . .



ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரும்
தன்னை மறந்து அனுபவித்த ப்ரசாதம் !



ஜகந்நாதனே ப்ரசாத ரூபம் . . .


நாமோ நாவிற்கு வசப்பட்டவர் . . .
நாம ஜபத்தில் ருசி இல்லை . . .
ஆனால் சாப்பாடு ருசியோ
ஆசையோ துளியும் குறைவதில்லை . . .



அதனால் ஜகந்நாதன் தானே
பக்தருக்கு ஆகாரமாய் வருகிறான்  . . .




விறகு அடுப்பில், மண் பானையில்
சமைத்த சோறு வேண்டுமா ?
சுடச்சுட வேண்டுமா ?
சுவை மிகுந்ததாய் வேண்டுமா  ?



உடனே ஜகந்நாதனின் புரீக்குக் கிளம்பு !



Read more...

செவ்வாய், 17 ஜூலை, 2012

வாழ்க்கை உயரும் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
மனிதர்கள் மாறுவார் . . .
க்ருஷ்ணன் மாறுவதில்லை !
 
 
 
மனிதர்கள் மறப்பார் . . .
க்ருஷ்ணன் மறப்பதில்லை !
 
 
 
மனிதர்கள் ஏமாற்றுவார் . . .
க்ருஷ்ணன் ஏமாற்றுவதில்லை !
 
 
 
மனிதர்கள் துரோகம் செய்வார் . . .
க்ருஷ்ணன் துரோகம் செய்வதில்லை !
 
 
 
மனிதர்கள் தப்பாய் பேசுவார் . . .
க்ருஷ்ணன் தப்பாய் பேசுவதில்லை !
 
 
 
மனிதர்கள் புரிந்துகொள்ளார் . . .
க்ருஷ்ணன் புரிந்துகொள்கிறான் !
 
 
 
மனிதர்கள் பொய்யாய் சிரிப்பர் . . .
க்ருஷ்ணன் உண்மையாய் இருக்கிறான் !
 
 
 
மனிதர்கள் ஒதுங்குவார் . . .
க்ருஷ்ணன் ஒதுங்குவதில்லை !
 
 
 
மனிதர்கள் ஒதுக்குவார் . . .
க்ருஷ்ணன் ஒதுக்குவதில்லை !
 
 
 
மனிதர்கள் அவமானப்படுத்துவர் . . .
க்ருஷ்ணன் அவமானப்படுத்துவதில்லை !
 
 
 
மனிதர்கள் சிறியவர் . . .
க்ருஷ்ணன் பெரியவன் . . .
 
 
 
அல்ப மனிதரை மற . . .
அழகு க்ருஷ்ணனை நினை . . .
 
 
 
மனிதரோடு இரு . . .
க்ருஷ்ணனோடு வாழ் . . .
 
 
 
மனிதருக்கு மனதைத் தறாதே . . .
க்ருஷ்ணனிடம் மனதைத் தந்துவிடு !
 
 
 
வாழ்க்கை உயரும் . . .
 
 
 

Read more...

திங்கள், 16 ஜூலை, 2012

நெருக்கடி . . .

ராதேக்ருஷ்ணா


 சின்னதாய் ஒரு
இடைக்கழி . . .



அதிலே
ஒருவர் படுக்கலாம் . . .
இருவர் இருக்கலாம் . . .
மூவர் நிற்கலாம் . . .



நாலாவதாய் இன்னொருவர்
வந்தால் ? ? ?
அதனால் என்னவாகும் ? ? ?
 நெருக்கடி அதிகமாகும் . . .



இட நெருக்கடி . . .
யாருக்கும் பிடிக்காது . . .
மிகவும் சிரமம் . . .



யாரால் நெருக்கடி வருகிறதோ,
அவர் மீது கோபம் வரும் . . .



ஒரு சமயம் ஒரு நெருக்கடி !
ஒரு மழைக்காலத்தில் ஒரு நெருக்கடி !
ஒரு ரிஷியின் வீட்டில் நெருக்கடி !
ஒரு இரவில் ஒரு நெருக்கடி !
ஒரு இடைக்கழியில் ஒரு நெருக்கடி !




மூன்று பக்தர்கள் . . .
பொய்கையாழ்வார் . . .
பூதத்தாழ்வார் . . .
பேயாழ்வார் . . .




வந்தனர் திருக்கோவலூருக்கு . . .
ஆயனைக் காண்பதற்கு . . .
உலகளந்த ஆயனைக் காண்பதற்கு . . .




உலகளந்தவன் மூவரையும்
அனுபவிக்க ஆசைகொண்டான் . . .
மழையால் மூவரையும் இணைத்தான் . . .
ஓர் இரவில்,ஓர் இடைக்கழியில்,
மூவரையும் இணைத்தான் . . .
தானும் வந்தான் . . .
திருமகளோடு வந்தான் . . .




நெருக்கடி கொடுத்தான் . . .
இட நெருக்கடி கொடுத்தான் . . .
மனதிலும் நெருக்கடி கொடுத்தான் . . .




உடனே மூவரும் விளக்கேற்றி
கண்டனர் ஆயனை . . .
திவ்யப்ரபந்தம் விளைந்த
இடமாயிற்றே திருக்கோவலூர் . . .




நானும் போனேன் . . .
நெருக்கடி ஊருக்கு . . .
உடலை நெருக்கி,
ஆத்மாவுக்கு ஒளி தரும் ஊருக்கு . . .




ஊருக்குள்ளே நுழையும்போதே
நெருக்கடி தான் . . .
 கோவிலுக்கு வெளியேயும்
நெருக்கடி தான் . . .

  


என்னை யாராவது நெருக்க
மாட்டார்களா என்று ஆசையோடு
நுழைந்தேன் . . .




 என் காமம் தான் என்னை நெருக்கியது !
என் கோபம் தான் என்னை நெருக்கியது !
என் திமிருதான் என்னை நெருக்கியது !
என் அஞ்ஞானம் தான் என்னை நெருக்கியது !
என் சந்தேகம் தான் என்னை நெருக்கியது !
என் ஆசைகள் தான் என்னை நெருக்கியது !
என் பயம் தான் என்னை நெருக்கியது !



சன்னிதி அருகில் நின்றோம் . . .
உள்ளே சிலர் நெருங்கி நின்று
உலகளந்தவனைத் தரிசித்தனர் !
ஆழ்வார்களையே நெருக்கி
தன்னைக் காட்டினவனாயிற்றே . . .



ஆழ்வார்களையே நிறுத்தினவன் . . .
எங்களையும் நிறுத்தினான் . . .


எனக்கு சந்தோஷமாய் இருந்தது !
இனம் புரியாத சந்தோஷம் !



அதற்குள் சில பக்தர்களும் வந்தனர் !
அதில் ஒரு வயதான பெண்மணியும்
கூட்டத்தில் வந்தாள் . . .
எல்லோரையும் இடித்தாள் . . .
சிலர் சப்தம் போட்டனர் . . .



"ஏனம்மா இப்படி இடிக்கிறாய்" என்று
எல்லோரும் சப்தம் போட்டனர் . . .



எனக்குத் தூக்கி வாரிப்போட்டது . . .
ஆனந்தமாய் சிரித்தேன் . . .



சன்னிதி வரைக்கும் சாந்நித்தியம் . . .
ஆழ்வார்களின் சாந்நித்தியம் . . .
இடிக்கும் சாந்நித்தியம் . . .



சன்னிதிக்குள்ளும் ஆயன்
ப்ரும்மா,மஹாபலி,நமுசி,
முதலாழ்வார்கள்,ம்ருகண்டு மஹரிஷி,
அவரின் தர்மபத்தினி என்று
ஒண்டிக்குடித்தனம்
நடத்திக்கொண்டிருக்கிறான் . . .



இந்த ஆயனுக்கு
இடித்துக்கொண்டிருப்பதுதான்
மிகவும் பிடித்த விஷயம் . . .



நான் கேட்டேன் . . .
ஏன் இப்படி இடித்துக்கொண்டு
நீ சிரமப்படுகிறாய் . . .
உலகளந்தவன் சொன்னான் . . .



தாய்க்கு சேய் இடிப்பது கடினமோ ?
காதலனுக்கு காதலி இடிப்பது கசக்குமோ ?
மரத்திற்கு கொடி இடிப்பது வலிக்குமோ ?
நண்பனுக்கு நண்பன் இடிப்பது  சிரமமோ ?
கண்ணுக்கு இமை இடிப்பது தொந்தரவோ ?
மேகத்துக்கு காற்று இடிப்பது இம்சையோ ?
 எனக்கு என் பக்தர் இடிப்பது சுகமல்லவா ! ! !



என் கண்ணோரம் கண்ணீர் இடித்தது . . .
என் மனதோரம் ஆனந்தம் இடித்தது . . .
என் ஆத்மாவை பரமாத்மா இடித்தான் . . .
என் உடலை பக்தர்கள் இடித்தனர் . . .



இப்பொழுது புரிந்தது . . .
ஏன் ஆழ்வார்களை ஆயன் இடித்தான் ! ! !
ஏன் ஆழ்வார்கள் அதை அனுபவித்தனர் ! ! !



நெருக்கடி சுகம் . . .
இட நெருக்கடி சுகம் . . .


வாழ்வில் நெருக்கடி பலம் . . .



சத்தியம் . . .
திருக்கோவலூர் சொன்ன பாடம் . . .
உலகளந்தவன் சொன்ன பாடம் . . .




மூன்று அடிக்கு ஒரு அடி குறைய,
அந்த நெருக்கடியில் மஹாபலிக்குக்
கிடைத்தது ஆயனின் திருவடி !




மூவர் படுக்க இடமில்லாமல்,
இடைக்கழியில் நெருக்கடி வர,
ஆழ்வார்களுக்குக் கிடைத்தது ஆயன் அன்பு !




ஆகமொத்தத்தில் நெருக்கடியில்
ஆயன் வருகிறான் . . .வருகிறான் . . .



இதுவே நான் உணர்ந்தது . . .
இல்லை... நெருக்கடி ஊர் உணர்த்தியது !


நெருக்கடியே நீ வாழ்க . . .
இட நெருக்கடியே நீ வாழ்க . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP