ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஜூன், 2012

நிறைந்திருப்பதாக . . .

ராதேக்ருஷ்ணா

உன் வீட்டில் க்ருஷ்ணனின்
ஆசீர்வாதம்    நிறைந்திருப்பதாக . . .


உன் உடலில் க்ருஷ்ணனின்
சக்தி நிறைந்திருப்பதாக . . .


உன் மனதில் க்ருஷ்ணனின்
சமாதானம் நிறைந்திருப்பதாக . . .


உன் வாழ்வில் க்ருஷ்ணனின்
க்ருபை நிறைந்திருப்பதாக . . .


உன் குடும்பத்தில் க்ருஷ்ணனின்
அன்பு நிறைந்திருப்பதாக . . .


உன் புத்தியில் க்ருஷ்ணனின்
அறிவு நிறைந்திருப்பதாக . . .


உன் இந்திரியங்களில் க்ருஷ்ணனின்
பலம் நிறைந்திருப்பதாக . . .


உன் சிந்தனைகளில் க்ருஷ்ணனின்
அருள் நிறைந்திருப்பதாக . . .


உன் வார்த்தைகளில் க்ருஷ்ணனின்
நிதானம் நிறைந்திருப்பதாக . . .


உன் சிரிப்பில் க்ருஷ்ணனின்
சந்தோஷம் நிறைந்திருப்பதாக . . .


உன் நடையில் க்ருஷ்ணனின்
வெளிச்சம் நிறைந்திருப்பதாக . . .


உன் வழியில் க்ருஷ்ணனின்
காப்பு நிறைந்திருப்பதாக . . .


உன் எதிர்காலத்தில் க்ருஷ்ணனின்
கருணை நிறைந்திருப்பதாக . . .


உன் தூக்கத்தில் க்ருஷ்ணனின்
சாந்தி நிறைந்திருப்பதாக . . .


உன் விழிப்பில் க்ருஷ்ணனின்
தேஜஸ் நிறைந்திருப்பதாக . . .


உன் காரியங்களில் க்ருஷ்ணனின்
மேற்பார்வை நிறைந்திருப்பதாக . . .


உன் வெற்றிகளில் க்ருஷ்ணனின்
நிதானம் நிறைந்திருப்பதாக . . .


உன்னுடைய தீர்மானங்களில் க்ருஷ்ணனின்
முடிவு நிறைந்திருப்பதாக . . .


உன் ஆகாரத்தில் க்ருஷ்ணனின்
ரசம் நிறைந்திருப்பதாக . . .


உன் உடைகளில் க்ருஷ்ணனின்
காப்பு நிறைந்திருப்பதாக . . .


உன் கனவுகளில் க்ருஷ்ணனின்
ராசலீலை நிறைந்திருப்பதாக . . .


உன் பக்தியில் க்ருஷ்ணனின்
சாந்நித்தியம் நிறைந்திருப்பதாக . . .


உன் நாவில் க்ருஷ்ணனின்
திருநாம ஜபம் நிறைந்திருப்பதாக . . .


உன் ஸ்மரணையில் என்றும்
க்ருஷ்ணன் நிறைந்திருப்பதாக . . .


உன் நேரங்களில் க்ருஷ்ணனின்
அழியாத ஐஸ்வர்யம் நிறைந்திருப்பதாக . . .


உன் பிள்ளைகளின் வாழ்வில்
க்ருஷ்ணனின் கருணா கடாக்ஷம்
பரிபூரணமாக நிறைந்திருப்பதாக . . .


உன் ஆத்மாவில் க்ருஷ்ணன்
என்றும் நீங்காது நிறைந்திருப்பதாக . . .


உன்னுடைய எல்லாவற்றிலும்
குருவருள் நிறைந்திருப்பதாக . . .


நிறைவாய் வாழ்வாய் . . .
இறையோடு வாழ்வாய் . . .
குறைவிலாமல் வாழ்வாய் . . .
குருவோடு வாழ்வாய் . . .


Read more...

செவ்வாய், 26 ஜூன், 2012

ஒரு இடம் தருவீரா . . .

ராதேக்ருஷ்ணா



திருப்பாணரே . . .
கார்த்திகையின் ரோஹிணி பெற்ற
உத்தம நல் முத்தே . . .



காவேரியின் மடியில்,
உறையூரில் உதித்த
உன்னத மாணிக்கமே . . .



உடலால் ஒதுங்கியிருந்தாலும்,
உள்ளத்தால் ரங்கனோடு
இணைந்திருந்த அற்புதமே . . .



பணிவினாலும்,பக்தியினாலும்
பூலோக வைகுந்த ராணி
ஸ்ரீரங்கநாயகிக்கு ப்ரிய புத்ரனானவரே . . .



வீணையை மீட்டி, பக்தியைப் பாடி,
தேவாதிதேவன் ரங்கநாதனை
வசப்படுத்தின ஆழ்வாரே . . .



 தீண்டத்தகாதவர் என்று உலகோர் ஒதுக்க,
ஸ்ரீரங்கனோ என் பாணன் என்று உரைக்க,
ஸ்ரீரங்கத்தில் நுழைந்த அடியவரே . . .



கல் எடுத்து அடித்த ப்ராம்மணரான
லோக சாரங்க முனிவரையே வாஹனமாக்கி
ஸ்ரீரங்கம் வந்த முனிவாஹனரே . . .



அமலனை,ஆதிபிரானை,விமலனை,
விண்ணவர் கோனை,நிமலனை,
தன்னுள் அடக்கிய வீரரே . . .



கண்ணுள் ரங்கனின் பாதத்தையும்,
சிந்தையுள் ரங்கனின் செவ்வாயையும்,
சித்தத்தில் ரங்கனின் திருக்கண்களையும்,
ரங்கனுக்குள் தன்னையும் வைத்த பாணரே !



எனக்கும் ரங்கனின் திருமேனியில்
ஒரு இடம் தருவீரா . . .

நானும் உம்மோடு பக்தி செய்ய
ஒரு இடம் தருவீரா . . .

அடியேனும் உம்மோடு வசிக்க
ஒரு இடம் தருவீரா . . .

காத்திருக்கிறேன் . . .
திருப்பாணரின் பாததூளி கோபாலவல்லி !





Read more...

திங்கள், 25 ஜூன், 2012

நம்பினால் நம்புங்கள் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
நானும் ஆழ்வாராக வேண்டும் !
 
 
நம்மாழ்வார் போல்
16 வருஷம் தவம் செய்யவேண்டும் !
 
 
மதுரகவியார் போல்
குரு கைங்கர்யம் செய்யவேண்டும் !
 
 
பொய்கையாழ்வார் போல
பெரிய விளக்கு ஏற்றவேண்டும் !
 
 
பூதத்தாழ்வார் போல்
அன்பைப் பொழிய வேண்டும் !
 
 
பேயாழ்வார் போல்
திருவின் மணாளனைக் காணவேண்டும் !
 
 
திருமழிசையாழ்வார் போல்
பெருமாளை எழுப்ப வேண்டும் !
 
 
குலசேகர ஆழ்வாரைப் போல்
எல்லாவற்றையும் துறக்கவேண்டும் !


பெரியாழ்வாரைப் போல்
பத்மநாபனுக்கு பல்லாண்டு பாட வேண்டும் !


ஆண்டாளைப் போல்
என் அரங்கனின் மனைவியாகவேண்டும் !


திருப்பாணாழ்வாரைப் போல்
ஒதுங்கி ஒரு பக்தி செய்யவேண்டும் !


தொண்டரடிப்பொடியாழ்வார் போல்
திருந்தி பக்தி செய்யவேண்டும் !


திருமங்கையாழ்வாரைப் போல்
வாளால் நாராயணனை மிரட்ட வேண்டும் !


இது சாத்தியமா ?


சத்தியமாய் இது சாத்தியமில்லை . . .


நான் என் பலத்தை நம்பினால் . . .
சத்தியமாய் இது சாத்தியமில்லை . . .

நான் க்ருஷ்ணனை நம்பினால் . . .
சத்தியமாய் இது சாத்தியமில்லை . . .


ஆனால் அடியேன் நம்புவதோ
காரேய் கருணை ராமானுசனை . . .


அதனால் இது சத்தியமாய் சாத்தியம் . . .



நானும் ஆழ்வாராவேன் . . .

ராமானுஜனை நம்பினால் மோக்ஷம் !
ராமானுஜனை நம்பினால் பாவம் அழியும் !
ராமானுஜனை நம்பினால் எதுவும் நடக்கும் !


ராமானுஜனை நம்பினால்
நானும் ஆழ்வார்தான் . . .
நீயும் ஆழ்வார்தான் . . .


நம்பினால் நம்புங்கள் . . .



Read more...

சனி, 23 ஜூன், 2012

நானா பேசுகிறேன் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
நானா பேசுகிறேன் . . .
 
 
நானா பேசுகிறேன் . . .
என் க்ருஷ்ணனைப் பற்றி ? ! ?
 
 
என்னால் பேச முடியுமா . . .
பரப்ரும்ம பரமாத்மாவைப் பற்றி ? ! ?
 
 
எனக்கு தகுதி இருக்கிறதா . . .
உத்தம பக்தியைப் பற்றிச் சொல்ல ? ! ?
 
 
என்னால் இயலுமா . . .
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனை வர்ணிக்க ? ! ?
 
 
என்ன தெரியும் எனக்கு . . .
உலகையே நடத்திக்கொண்டிருக்கும்
சூத்திரதாரியைப் பற்றி ? ! ?
 
 
நான் என்ன ஞானியா . . .
அடுத்தவருக்கு பகவானை
உள்ளபடி சொல்லிக்கொடுக்க ? ! ?
 
 
உத்தம பக்தனா நான் . . .
மஹாத்மாக்களைப் பற்றி,
உள்ளபடி உபன்யசிக்க ? ! ?
 
 
எதுவுமே எனக்குத் தெரியாது . . .
 
நான் பேசவில்லை . . .
அவன் பேசுகிறான் . . .
 
நான் சொல்லவில்லை . . .
அவன் சொல்லவைக்கிறான் . . .
 
நான் ரசிகன் . . .
நான் அடியவன் . . .
நான் குழந்தை . . .
நான் அவனுடையவன் . . .
 
இதுவே எனக்குத் தெரியும் . . .
 
மற்றவை எல்லாம்
அவன் செயல் . . .
 
 

Read more...

வியாழன், 21 ஜூன், 2012

ரத யாத்திரை . . .

ராதேக்ருஷ்ணா
 
 
ஜகந்நாதா . . .
சமத்தாக ரதத்தில் உட்கார்ந்து
இருக்கவேண்டும் . . .
புரிந்ததா . . .
 
 
பலராமா . . .
ஜாக்கிரதையாக ஜகந்நாதனை
பார்த்துக்கொள்ளவேண்டும் . . .
தெரிந்ததா . . .
 
 
சுபத்ரா . . .
ஜகந்நாதன்,பலராமன் கைகளை
விடாமலிருக்கவேண்டும் . . .
விளங்கியதா . . .
 
 
மூவரும் சமத்தாக சென்று
அழகாக திரும்பவேண்டும் . . .
சரியா . . .
 
 
ஜனங்களின் மனம் குளிர
ஆடிப் பாடி மகிழவேண்டும் . . .
தெரிந்ததா . . .
 
 
சீக்கிரம் போய்விட்டு,
சீக்கிரம் வரவேண்டும் . . .
சரியா . . .
 
 
அம்மா உங்களுக்காக
நிறைய பக்ஷணங்கள் செய்து
காத்திருப்பேன் . . .
 
 
நீங்கள் வந்தவுடன் பசிக்கும் . . .
நிறைய தருவேன் . . .
 
 
ரதத்தில் போகிற வழியில்
சாப்பிடவும் நிறைய திண்பண்டங்கள்
வைத்திருக்கிறேன்  . . .
நல்லா சாப்பிடனும் . . .
 
 
ஜோரா விளையாடனும் . . .
சமத்தா திரும்பனும் . . .
 
 
அப்பதான் அம்மா ராத்திரிக்கு
உங்கள் மூன்று பேருக்கும்
நிறைய கதைகள் சொல்லுவேன் . . .
 தாலாட்டு பாடுவேன் . . .
 
 
ஜகந்நாதா . . .
வழியில் க்ருஷ்ண சைதன்யரைப்
பார்த்தால் நான் கேட்டதாகச் சொல் . . .
 
 
பலராமா . . .
வழியில் நித்தியான மஹாப்ரபுவைப்
பார்க்கும்போது நான் கட்டாயம் அவனை வரச்சொன்னதாகச் சொல் !
 
 சரி . . . சரி . . . கிளம்புங்கள் !
பக்தர்கள் காத்திருக்கிறார்கள் . . .


 

Read more...

வெள்ளி, 15 ஜூன், 2012

வாழ்வின் மலை . . .

ராதேக்ருஷ்ணா


திருநீர்மலை . . .


திருமங்கை ஆழ்வாரையும்
ஆறு மாதம் காக்க வைத்த
நீர்மலை . . .


வால்மீகி மஹரிஷியின்
ஆசை தீர ராமனைக் காட்டின
நீர்மலை . . .


ரங்கனும் பூதேவி ஸ்ரீதேவியோடு
சுகமாய் சயனக்கோலத்தில் இருக்கும்
நீர்மலை . . .


உலகளந்தானும் ஒய்யாரமாய்
நின்று அருள் பாலிக்கும்
நீர்மலை . . .


ப்ரஹ்லாதனைக் கொண்டாடும்
நரசிம்மனும் சாந்தமாய் இருக்கும்
நீர்மலை . . .


எனக்கு நிறைய நாம ஜபம்
கொடுத்து,என்னைப் பக்குவப்படுத்தின
நீர்மலை . . .


அமைதியான ஒரு திவ்யதேசம் . . .
ஏகாந்தமாய் ஒரு திவ்யதேசம் . . .
ஆர்ப்பாட்டமில்லாத ஒரு திவ்யதேசம் . . .


நினைத்தால் நான் போவேன் . . .
என்னை மறந்து அமர்ந்திருப்பேன் . . .
என் கண்ணனை நான் அனுபவிப்பேன் . . .

நீர்மலையே நீ என் வாழ்வின் மலை . . .
நீர்மலையே என்னை வாழவைக்கும் மலை . . .


Read more...

ஞாயிறு, 10 ஜூன், 2012

கோபிகா கீதம் . . .

ராதேக்ருஷ்ணா


கோபிகா கீதம் . . .


தன்னை மறந்த கோபிகைகளின்
ப்ரேம கீதம் !


தங்கள் வீடுகளை விட்ட
பக்தைகளின்  உன்னத கீதம் !


லோக மரியாதையை விட்ட
உத்தமிகளின் கீதம் !


வேத வார்த்தையை மீறின
தைரியசாலிகளின் கீதம் !


 சாஸ்திர தர்மத்தை தள்ளின
பெண்களின் கீதம் !


உற்றாரையும் பெற்றோரையும்
ஒதுக்கினவர்களின் கீதம் !


கணவரையும், குழந்தைகளையும்
மறந்தவர்களின் கீதம் !


அஹம்பாவத்தையும் மமகாரத்தையும்
கொன்றவர்களின் கீதம் !


க்ருஷ்ணனின் ஆசையை
பூர்த்தி செய்தவரின் கீதம் !


சாக்ஷாத் மன்மத மன்மதனாக
கிருஷ்ணனை வசீகரித்த கீதம் !


ராதிகாவின் தாசிகளின்
விரஹ தாப கீதம் !


நம் பாவத்தை களைந்து
நமக்கு பக்தியைத் தரும் கீதம் !


அர்த்த ராத்திரியில்
ஒரு காதல் கீதம் !


கிருஷ்ணனே ஒளிந்துகொண்டு
ரசித்துக் கேட்ட கீதம் !


யமுனை ஆற்றங்கரையில்
ஒரு யஞ்ய கீதம் !


என்னை மயக்கின ஒரு கீதம் !
நான் பைத்தியமான ஒரு கீதம் !
என்னை அழ வைத்த கீதம் !

எனக்கு கிருஷ்ணனை தந்த கீதம் !
என் கிருஷ்ணனை நான் அனுபவித்த கீதம் !

கோபிகா கீதம் . . .
பாகவத சாரம் . . .
பாகவத ரஹஸ்யம் . . .

தனியாய் பாடு . . .

தானே க்ருஷ்ணன்  வருவான் . . .

நானும் ஒரு கோபியே . . .

 

Read more...

இன்றே புரிந்தது !

ராதேக்ருஷ்ணா


ஒன்று எனக்குப் புரிந்தது !
எனக்கு இன்றே புரிந்தது !
இன்று நன்றாய் புரிந்தது !


நான் என்னைப் பற்றி
யோசிப்பதை விட
பார்த்தசாரதி என்னைப் பற்றி
நிறைய யோசிக்கிறான் !


என் எதிர்காலத்தை
என்னை விட பார்த்தசாரதி
தெளிவாய் அறிகின்றான் !


என் உடலின் பலத்தையும்,
என் மனதின் பலவீனத்தையும்,
என்னை விட பார்த்தசாரதி
சரியாக கணித்திருக்கிறான் !


 என் வாழ்வை, என் தேவைகளை
என்னை விட நன்றாக
பார்த்தசாரதி கவனித்துக்கொள்கிறான் !




என் கடந்த காலத்தை
நான் மறந்தாலும்,
என் பார்த்தசாரதி நன்றாக
ஞாபகம் வைத்திருக்கிறான் !




என் நிகழ்காலத்தை
என்னை விட என் பார்த்தசாரதி,
துல்லியமாய் கவனிக்கிறான் !




என் எதிர்காலத்தை
என்னை விட என் பார்த்தசாரதி
தெளிவாய் பார்க்கிறான் !


இவ்வளவும் அவன் செய்யும்போது,
நான் என் வாழ்க்கையில்
செய்யவேண்டியது எதுவுமில்லை !


ஒன்று உண்டு . . .
நான் செய்ய வேண்டியது . . .
பார்த்தசாரதியின் பாதமே
கதியாகக் கொண்டு,
ஒழுங்காக வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி மனம் நோகாமல்
வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி சந்தோஷப்படும்படி
வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி திருப்தியாகும்படி
வாழவேண்டியது . . .


இதுவே எனக்குப் புரிந்தது . . .
இன்றே புரிந்தது . . .
தெளிவாய் புரிந்தது . . .

Read more...

சனி, 9 ஜூன், 2012

சமத்தாக யோசி . . .

ராதேக்ருஷ்ணா


எல்லோரும் வெள்ளைக்கு
நடுவிலிருக்கும் ஒரு கறையைப்
பார்த்தால் . . .
நீ அந்தக் கறையைச் சுற்றியிருக்கும்
வெள்ளையைப் பார் !


எல்லோரும் ரோஜாச் செடியில்
உள்ள முட்களை கவனித்தால் . . ,
நீ அந்த முள்ளுச் செடியில் மலரும்
ரோஜாக்களைப் பார் !


எல்லோரும் கோடைக் காலத்தில்
சூரியனை சபித்தால் . . ,
நீ சூரிய வெப்பத்தின் சக்தியை
உபயோகப்படுத்தப் பார் !


எல்லோரும் மழையை வெறுத்து
ஒதுங்கி நின்றால் . . ,
நீ அந்த மழையில் நனைந்து
உன்னை குளிராக்கிக் கொள் !


எல்லோரும் பிரச்சனைகளில்
துவண்டு அழும்போது . . ,
நீ பிரச்சனைகளை உனது
வெற்றிப் படியாக்கிக் கொள் !


எல்லோரும் செலவுகளைக் கண்டு
வெறுத்து புலம்பினால் . . ,
நீ செலவுகளையே உனது
சேமிப்பாக வரவாக மாற்றி விடு !


எல்லோரும் பயத்தினால் வாழ்வை
யோசிக்க மறக்கும்போது . . ,
நீ தைரியத்தை மூலதனமாகக் கொண்டு
மாற்றி யோசிப்பாய் !


யோசிக்காமல் வாழமுடியாது !
சரியாக யோசிக்காமல் ஜெயிக்கமுடியாது !
தப்பாக யோசித்தால் தப்பிக்கமுடியாது !



மாற்றி யோசி . . .
விதவிதமாய் யோசி . . .
வித்தியாசமாய் யோசி . . .
விசித்திரமாய் யோசி . . .
விநோதமாய் யோசி . . .


எல்லோரும் எதைப் பலவீனமாக
நினைக்கிறார்களோ, அதை நீ
பலமாக மாற்றிக்கொள் !


எல்லோரும் எதைப் பலமாக
வைத்திருக்கிறார்களோ, அதை நீ
உன் அடிமையாக்கிக் கொள் !


பணத்தை உன் அடிமையாக்கு . . .
க்ருஷ்ணனுக்கு நீ அடிமையாயிரு . . .


இந்திரியங்களை உனக்கு அடிமையாக்கு . . .
குருவுக்கு நீ கொத்தடிமையாயிரு . . .


ஆசைகளை உன் கொத்தடிமையாக்கு . . .
நாமஜபத்திற்கு நீ நிரந்தர அடிமையாயிரு . . .


சரியாக யோசி . . .
சமத்தாக யோசி . . .
பலமாக யோசி . . .

அப்பொழுது சுலபமாய் ஜெயிப்பாய் !

இல்லையேல் தவறாக யோசிப்பதை விடு !
உடனே விடு !
இப்பொழுதே விடு !

நிம்மதியாய் அனுபவி . . .
நித்தியமாய் அனுபவி . . .
சுகமாய் அனுபவி . . .

வாழும் வரை அனுபவி . . .
வாழ்வை அனுபவி . . .


Read more...

வெள்ளி, 8 ஜூன், 2012

நீ தோற்பதில்லை . . .

ராதேக்ருஷ்ணா



வானத்திற்கு எல்லையில்லை !
 நீ வானம் போலே . . .

மேகங்கள் நிரந்தரமில்லை !
துன்பங்கள் மேகங்கள் போலே . . .


சூரியனில் இருட்டில்லை !
நீ சூரியன் போலே . . .



சூரியனை கொசு நெருங்குவதில்லை !
பிரச்சனைகள் கொசு போலே . . .

பூமியின் சுழற்சி தடைபடுவதில்லை !
நீ பூமியைப் போலே . . .


கடலை யாரும் அடக்கமுடிவதில்லை !
நீ கடலைப் போலே . . .

 
காற்றை யாரும் நிறுத்தமுடிவதில்லை !
நீ காற்றைப் போலே . . .


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது . . .
நீயும் வெல்லும் பசியோடிரு . . .
 தோல்வி என்னும் புல்லைத் தீண்டாதே !


மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது . . .
முயற்சி தோற்கலாம் நீ தோற்பதில்லை . . .
நீ தோற்றாலும் உன் சக்தி இளைப்பதில்லை !


உன்னுள் ஒரு உன்னத சக்தி உண்டு !
 உன்னுள் ஒரு அதிசய பலம் உண்டு !
உன்னுள் ஒரு ரஹஸ்ய உத்வேகம் உண்டு !

வென்று காட்டுவாய்  . . .
வாழ்ந்து காட்டுவாய்  . . .
வரலாற்றை மாற்றிக் காட்டுவாய்  . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP