ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

திருமோகூர் . . .


ராதேக்ருஷ்ணா


மார்கபந்து . . .
வழித்துணைவன் . . .

மார்கம் இல்லாமல்
அலைபவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கத்தை விட்டு
வழிதவறினவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கம் புரியாமல்
தவிப்பவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கம் தெரிய,
மார்கம் புரிய,
மார்கத்திற்கு பந்து கிடைக்க,
மார்கபந்துவை அனுபவிக்க
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

பக்தி மார்கம் தெளிவாய் புரிய
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

ஞான மார்கத்தில் சுகமாய் பயணிக்க
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

வைராக்கியத்தோடு மார்க்கம் அமைய
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

குருவின் மார்கத்தில் செல்ல
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

சரணாகதி மார்கத்தைப் பின்பற்ற
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

திருமோகூர் . . .
ஊர் பெயரே எத்தனை அழகு . . .

பெருமாள் திருநாமமோ
மார்கபந்து என்னும்
வழித்துணை பெருமாள் !

இன்னொரு திருநாமமோ
காளமேகப் பெருமாள் !

மழை தரும் மேகம் போன்று
கருணை மழையைக் கொட்ட
நின்றிருக்கும் காளமேகப் பெருமாள் !

நாங்கள் போயிருந்த சமயமோ
காள மேகங்கள் கர்ஜித்து
இவரே உனக்கு வழித்துணைவன்
என்று பறை சாற்றினவே . . .

எத்தனை பெரிய கோயில் . . .
எத்தனை அழகான மார்கபந்து . . .

அழகான ப்ரார்த்தனா சயன ரங்கன் !
திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும்
ப்ரார்த்திக்க சயனக்கோலத்தில்
திருப்பாற்கடல் நாதன் சன்னதி !

மோஹினி அவதாரம் எடுக்க
பெருமாள் தீர்மானித்த திருமோகூர் . . .

எல்லோரையும் விட அழகு
எங்கள் மோஹனவல்லித் தாயார் . . .

குங்குமப்பூ அழகி !
மஞ்சள் திருமேனி அழகி !
கருணா கடாக்ஷ அழகி !
 
 நம் மோஹத்தை அழித்து,
பெருமாளிடம் நம்மை மோஹிக்கச்
செய்யும் அழகி மோஹனவல்லி . . .

வைத்த கண்ணை எடுக்கப் பிடிக்கவில்லை !

அற்புத சுதர்சன சக்கரத்தாழ்வாரும்
மோஹம் தருகிறாரே . . .

என் செய்வேன் பிள்ளாய் ? ! ?

திருமோகூர் திவ்யதேசமா . . .
இல்லை . . .
திருமோகூர் மோஹ தேசம் . . .
நம்மை மோஹிக்கப் பண்ணும் தேசம் . . .

நான் போனேன் . . .
மோஹித்துப் போனேன் . . .

மீண்டும் என்று என்
மோஹத்திற்கு மார்கமான பந்துவை
நான் காண்பேன் ? ? ?

என் மோஹனபந்துவை
என்று கண்ணாரக் காண்பேன்  ? ? ?

மார்கம் காட்டும் மார்கபந்துவே,
கருமாணிக்க காளமேகமே,
என் வீட்டு மார்கம் நீ அறிவாயே !
இப்பக்கம் வந்து உன் மோஹமழையை
என் மேல் பெய்வாயா ?

என் மோஹம் தீர மார்கம் செய்வாயா ?

இல்லை ...திருமோகூர் திருமோகூர்
என்று பிதற்றி,
நான் என் குல மார்கத்தை
விட்டு பித்தனாய் அலையச் செய்வாயோ ?

அடியேன் வாழ்க்கையில்
செய்த பெரும் தவறு . . .

திருமோகூர் சென்றது தான் . . .

இல்லையெனில் இப்படி
வெட்கமில்லாமல் என் மோஹத்தை
ஊருக்குச் சொல்வேனா ?

ஐயோ . . .
என் மோஹத்தால்,
மார்கபந்துவின் மீதுள்ள மோஹத்தால்,
வெட்கம் அழிந்தேனே . . .

ஹே பிள்ளாய் !
மார்கபந்துவிடம் இந்த
கோபாலவல்லியின் மார்கத்தைச்
சொல்லி அந்த காளமேகத்தை
இங்கே அனுப்பி வைப்பாயா ?

இல்லையேல் நீயும்
என்னைப் போல்
மார்கபந்துவிடம் மோஹப்பட்டு
மார்கம் மறப்பாயா . . .



 
 

Read more...

சனி, 28 ஏப்ரல், 2012

குணசீலம் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
குணசீலா . . .
 
உனது பக்திக்காகவே
என் வேங்கடபதி காவிரி
ஆற்றங்கரைக்கு வந்தான் . . .
 
குணசீலா . . .
 
உன் பக்தியில் மயங்கி
உன் பூஜைகளை எல்லாம்
சுகமாக ஏற்றான் . . .


குணசீலா . . .

உன் பெயரையே
ஊருக்கும் தந்துவிட்டான்
உன் ப்ரசன்ன வேங்கடாசலபதி . . .


குணசீலம் . . .
குணசீல ரிஷியின் தபோபூமி . . .

வேங்கடவன் ப்ரசன்ன வேங்கடேசனாக
காட்சி தரும் புண்ணியபூமி . . .


பித்தர்களை தெளிய வைக்கும்
காவிரியின் ஆற்றங்கரை பூமி . . .
 
 
ப்ரசன்ன வேங்கடாசலா . . .

என் பித்தத்தையும் தெளியவை !

என் காமப்பித்தையும் தெளிய வை !

என் பொறாமைப் பித்தையும் மாற்றிக்காட்டு !

என் அஹங்காரப் பித்தையும் அழித்துப்போடு !

என் சந்தேகப் பித்தையும் கொன்று போடு !

எனது குழப்பப் பித்தையும் தெளிய வை !
 
என் எல்லாப் பித்தையும் மாற்றி
என்னை உன் பித்தனாய் மாற்று . . .
 
எனக்கு எல்லாப் பித்தும்
தலையேறியிருக்கிறது . . .
 
உன்னிடம் பித்தேற வை . . .
 
குணசீலா . . .
உன்னைப் போல் என்னையும்
வேங்கடவனின் பித்தனாக்கு . . .
 
குணசீலா . . .உன் அருகில் ஒரு இடம் தா !
 
என் மனதில் உன் வேங்கடவன்
வாழ ஒரு வரம் தா . . .
 
நான் என்று பித்தனாவேன் ? ! ?
 
பித்தனாய் குணசீலத்தில் என்று
அடைக்கலம் புகுவேன் ? ! ?
 
க்ருஷ்ண பித்தனாய் என்று
குணசீலத்தில் திரிவேன் ? ! ?
 
 
 
 

Read more...

புதன், 25 ஏப்ரல், 2012

எனக்குப் பரிசு !

ராதேக்ருஷ்ணா
 
 
என் ராமானுஜா !
 நீயே எனக்கு கதி . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு பலம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு துணை . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு வழி . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு குரு . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு நண்பன் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு செல்வம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு சொந்தம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு ராஜா . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு கல்வி . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு சொத்து . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு தெய்வம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்குக் குழந்தை . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு எஜமானன் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு ஆதாரம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனது வாழ்க்கை . . .
 
என் ராமானுஜா !
நீயே என் காதல் . . .
 
என் ராமானுஜா !
 நீயே எனக்கு சர்வம் . . .
 
என் ராமானுஜா . . .
உன்னை ஸ்ரீரங்கத்தில் பார்த்துவிட்டேன் !
 
என் ராமானுஜா . . .
நீ என்னோடு இருப்பாய் !
 
என் ராமானுஜா . . .
நீ தான் எனது ரக்ஷகன் !
 
ராமானுஜா . . .
தயிர்காரிக்கு மோக்ஷம் தந்த
கருணை தெய்வமே !
 
ராமானுஜா . . .
பெண்ணிடம் மயங்கியிருந்த
பிள்ளை உறங்காவில்லியைக்
காத்த நாயகனே !
 
ராமானுஜா . . .
ஊமைக்கு உன் திருவடியைத்
தந்த உத்தம ஆசார்யனே !
 
இந்த கோபாலவல்லிக்கும் தா . . .
 
உன்னைத் தா . . .
உன் பாதுகையைத் தா . . .
உன் மனதைத் தா . . .
உன் வீரத்தைத் தா . . .
உன் பலத்தைத் தா . . .
உன் பக்தியைத் தா . . .
உன் வைராக்கியத்தைத் தா . . .
உன் ஞானத்தைத் தா . . .
 
 ஒரு கைங்கர்யம் தா . . .
 
வடுகநம்பியாய் நான் மாறவேண்டும் !
உனக்கு பாலமுது தரவேண்டும் . . .
 
கிடாம்பி ஆச்சானாக நான் மாறவேண்டும் !
உனக்குத் தளிகை பண்ணவேண்டும் . . .
 
கூரத்தாழ்வானாய் நான் மாறவேண்டும் !
உனக்காக பரமபதம் செல்லவேண்டும் . . .
 
ராமானுஜா . . .
நான் அடியேனாக மாறவேண்டும் . . .
உனக்கு அடியவனாக மாறவேண்டும் . . .
 
உன் பிறந்த நாளைக்கு
நீ எனக்கு தர வேண்டிய பரிசு இதுவே !
 
உன் பிறந்தநாளுக்காகக்
காத்திருக்கிறேன் . . .
 
எனக்குப் பரிசு தா . . .
 
உன் பிறந்தநாள்...
அடியேன் மாறும் நாளாகட்டும் !
 

Read more...

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பாரதி . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 பாரதி . . .

ப்ராம்மண வீரன் . . .

தேசக் காதலன் . . .

ஜாதிப் புரட்சிக்காரன் . . .

க்ருஷ்ணனின் தாசன் . . .

காளியின் வேலைக்காரன் . . .

தமிழ் சேவகன் . . .
 
வறுமையிலும் வீரன் . . .
 
பணத்திற்கு விலை கொடுக்காதவன் . . .
 
விடுதலை விரும்பி . . .
 
நல்ல ரசிகன் . . .
 
உத்தமக் கவிஞன் . . .
 
சமுதாய சீர்திருத்தவாதி . . .
 
மஹாகவி . . .
 
ஆனால் எங்கள் சுயநல
ஜனங்களால் ஒதுக்கப்பட்டவன் . . .
 
வறுமையில் மஹாகவியை
அழவைத்த கேடுகெட்ட சமுதாயமே;
நீ கெடுவாய் . . .
 
நல்ல வேளை . . .
எங்கள் தமிழ் கவியின்
கஷ்டத்தை உணர்ந்தது ஒரு யானையே . . .
 
ஆமாம் . . .
பார்த்தசாரதியின் யானைக்கு
மட்டுமே முண்டாசுக் கவிஞனின்
மானமும்,மனமும்,கனவும் புரிந்தது . . .
 
அதனால் இனியும் பாரதி
இங்கிருந்தால் இந்த உலகம்
அவனை அழித்துவிடும் என்று
தானே பழியைச் சுமந்தது . . .
 
மஹாகவியை உணர்ச்சியால்
வேகமாய் ஆசிர்வதித்தது . . .
 
மோக்ஷம் அடைந்தான் அந்த
மரணத்தை வென்றவன் . . .
 
இன்றும் எங்கள் நெஞ்சில்
நீங்கா இடம் பெற்றான் . . .
 
பார்த்தாசாரதியின் யானையே
நீயே என் பாரதியை இந்த
உலகத்தாரிடமிருந்துக் காத்தாய் . . .
 
பாரதி . . .
நீ வாழ்ந்தாய் . . .
நீ வாழ்கின்றாய் . . .
நீ வாழ்வாய் . . .
 
 
 
 
 

Read more...

திங்கள், 16 ஏப்ரல், 2012

ஏன் வாழவேண்டும் ? ? ?

ராதேக்ருஷ்ணா


ஏன் வாழவேண்டும் . . .


எத்தனை கவலைகள் !
இதோடு ஏன் வாழவேண்டும் ?


எத்தனை பிரச்சனைகள் !
இவைகளோடு ஏன் வாழவேண்டும் ?


எத்தனை அவமானங்கள் !
இதோடு ஏன் வாழவேண்டும் ?

எவ்வளவு வலிகள் மனதிற்குள் !
 அதோடு இங்கே வாழவேண்டுமா ?




ஒவ்வொரு நாளும் போராட்டம் !
அவசியம் வாழத்தான் வேண்டுமா ?




வாழ்ந்து என்ன பிரயோஜனம் ? ! ?




வாழ்வதால் என்ன லாபம் ? ! ?




வாழ்க்கையே பாரம் . . .


போதுமே இந்த வாழ்க்கை . . .

மரணம் வராதா . . .
உடனே வராதா . . .
எனக்கு விடுதலை தராதா ?


ஐயோ . . .என்னால் முடியவில்லை !



கதறினேன் . . .கதறுகின்றேன் !


நிராதரவாய் நிற்கிறேன் . . .
புரியாமல் வாழ்கின்றேன் . . .
விடியலைத் தேடுகிறேன் . . .

அழுது அழுது
கண்கள் களைத்தன . . .

யோசித்து யோசித்து
மூளை அயர்ந்தது . . .

புலம்பி புலம்பி
என் மனம் சோர்ந்தது . . .


ஒன்றும் புரியாமல்
பிரமை பிடித்தால் போல்
இருந்தேன் . . .

யார் எனக்கு
சமாதானம் சொல்லியும்
ஒரு பிரயோஜனமுமில்லை . . .


அப்படியே இருந்தேன் . . .

திடீரென்று மனதில் ஒரு
சமாதானம் . . .

இனம் புரியாத ஒரு
தைரியம் . . .

வாழவேண்டும் என்று
ஒரு வைராக்கியம் . . .

வாழ்ந்துதான் பார்ப்போமே
என்று ஒரு எண்ணம் . . .


வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .


இப்படித்தான் நாம் எல்லோரும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . . .


இறந்தால் தேவலை என்று
நாம் ஆசைப்பட்ட போதெல்லாம்
நம்மை ஏதோ ஒன்று தடுத்ததே . . .




நாம் வாழவேண்டும் என்று
உள்ளில் இருந்து ஒன்று சொல்கின்றதே !




அதுதான் க்ருஷ்ணன் . . .
அதுதான் உனக்கும் எனக்கும்
அவன் சொல்லும் பகவத் கீதை . . .


அதுவே நம்மை வாழவைக்கிறது  . . .
அவனே நம்மை வாழவைக்கிறான் . . .


வாழவைக்கும் . . . வாழவைப்பான் . . .


மரணம் நம்மைத் தேடி
வரும் வரை வாழ்வோம் . . .



Read more...

வியாழன், 12 ஏப்ரல், 2012

இவர்கள் எனக்குண்டு !

ராதேக்ருஷ்ணா


குழந்தை . . .
குழந்தையாய் இருக்கிறேன் . . .

குழந்தையின் தேவைகளை
பெற்றோர் கவனிப்பர் . . .
என் தேவைகளை
ராதையும் க்ருஷ்ணனும் கவனிக்கிறார்கள் . . .

குழந்தையின் மலமூத்திரத்தை
அம்மா சுத்தம் செய்கிறாள். . .
என் மனதின் அழுக்குகளை
ராதிகா ராணி சுத்தம் செய்கிறாள் !

குழந்தையின் சுகத்தை
பெற்றோர் யோசிக்கிறார்கள் !
என் சுகத்தை ராதிகாவும் கண்ணனும்
யோசிக்கிறார்கள் !

குழந்தைக்கு நல்லதையும் கெடுதலையும்
பெற்றோர் சொல்லித்தருகின்றனர் !
எனக்கு நல்லதையும் கெட்டதையும்
க்ருஷ்ணனும் ராதேயும்
சொல்லித்தருகின்றனர் !

குழந்தையின் அழுகுரலுக்கு
பெற்றோர் செவி சாய்கின்றனர் !
என் அழுகைக்கு ராதையும்
கண்ணனும் ஓடிவருகின்றனர் !

குழந்தையின் எதிர்காலத்தை
பெற்றோர் முடிவு செய்கின்றனர் !
என்னுடைய எதிர்காலத்தை
க்ருஷ்ணனும் ராதாமாதாவும்
முடிவு செய்திருக்கிறார்கள் !

இப்படி குழந்தையைப் போல்
என்னை ராதாமாதாவும்,
க்ருஷ்ண பிதாவும் தாங்கும்போது
நான் குழந்தையாய் இருக்கவே
என்றும் ஆசைப்படுகிறேன் . . .

எது நடந்தாலும் இவர்கள் எனக்குண்டு !

இது போதும் . . .
இந்த வாழ்வில் நான் வெல்ல . . .

இது போதும் . . .
இந்த உலகில் நான் வாழ . . .

இது போதும் . . .
நான் குழந்தையாய் குதூகலமாய்
என்றும் சிரித்திருக்க . . .


Read more...

திங்கள், 9 ஏப்ரல், 2012

நடக்கின்றேன் . . .

ராதேக்ருஷ்ணா


நடப்பது நன்மைக்கே . . .

என் பத்மநாபனோடு நடந்தேன் . . .

நடக்கும்போது
என் மனதில் சிந்தனைகளின் ஓட்டம் !

நான் ஏன் இவனோடு நடக்கவேண்டும் ?
 என்ன அவசியம் ?
இவனோடு நடப்பதால் என்ன ப்ரயோஜனம் ?


எனக்குப் பதில் கிடைத்தது . . .

என்னால் மனதை அடக்கி
வாழ்க்கையை நடத்தமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் இந்திரியங்களை
நல்வழியில் ஈடுபடுத்தமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் கர்மங்களை
சிரத்தையோடு செய்யமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் என் பலத்தினால்
காமத்தை ஜெயிக்கமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் என் கோபத்தை
கட்டுப்படுத்த முடியவில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என் புத்தி சாதுர்யத்தினால்
நான் என் ப்ராரப்த கர்மாவை
தொலைக்கமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் நல்ல பக்தனில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் உத்தம ஞானியில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் எல்லாவற்றையும் துறந்த
சன்னியாசியில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் சம்சார சாகரத்தில்
உழண்டுகொண்டிருக்கும் ஒரு
அதம ஜீவன் . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் கையாலாகதவன் . . .

என் பத்மநாபனைத் தவிர
எனக்கு வேறு ரக்ஷகன் இல்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் அவனோடு
ஆறு மாதத்திற்கு ஒரு முறை
சங்குமுக கடற்கரைக்கு
நடக்க மட்டுமே முடியும் . . .

அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

இதை மட்டுமே நான் செய்வேன் . . .
மற்றவை அவனிஷ்டம் . . .

அனுபவத்தில் நான் கண்டது . . .

நடப்பது நன்மைக்கே . . .
பத்மநாபனோடு நடப்பது நன்மைக்கே . . .
 என் பத்மநாபனோடு நடப்பது நன்மைக்கே . . .

Read more...

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சுகமான வேட்டை . . .

ராதேக்ருஷ்ணா

சுகமான வேட்டை . . .

என் பத்மநாபன்
 என் காமத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் கோபத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் வெறுப்பை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் துக்கத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் அஹம்பாவத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் சுயநலத்தை  வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் பொறாமையை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் குழப்பங்களை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் அசிரத்தையை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் திமிரை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் பயத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் ப்ராரப்தத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் பாவத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் சஞ்சலத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் வயிற்றெரிச்சலை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் கெட்ட எண்ணங்களை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் வியாதிகளை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் களைப்பை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என்னை பவித்திரமாக்கினான் !

என் பத்மநாபன்
என்னை மீட்டுவிட்டான் !

என் பத்மநாபன்
என்னைக் காப்பாற்றிவிட்டான் !

என் பத்மநாபன்
தன்னை எனக்குத் தந்துவிட்டான் !

என் பத்மநாபன்
என்னை தன்னோடு வைத்துக்கொண்டான் !

என் பத்மநாபா . . .
இனி வேறு ஒரு சிந்தனை வேண்டாம் !

என் பத்மநாபா . . .
இனி உன்னைத் தவிர
வேறு எதுவுமே வேண்டாம் !

இன்று உன்னோடு நீராடவேண்டுமே . . . 

 

Read more...

வியாழன், 5 ஏப்ரல், 2012

வேட்டைக்காரன் . . .

ராதேக்ருஷ்ணா

வேட்டை . . .
வேட்டைக்காரன் . . .
காடு . . .

ஒரு கையில் வில்லோடு,
செம்பவள வாயில் புன்னகையோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

ஒரு கையில் அம்போடு,
உள்ளத்தில் கருணையோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

ஒரு பக்கம் நரசிம்ம மந்திரியோடு,
கண்களில் காதலோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

ஒரு பக்கம் யுவராஜ க்ருஷ்ணனோடு,
சாந்தமான திருமுகத்தோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

முன்னே ப்ரியதர்சினி கஜராணியோடு,
பின்னே சங்கீதக் கச்சேரியோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

சர்வாபரண பூஷிதனாக,சர்வ அலங்கார
சாக்ஷாத் மன்மத மன்மதனாக
ஒரு வேட்டைக்காரன் . . .

முப்பதுமுக்கோடி தேவர்களும்,
பக்த ஜனங்களும் திருவடி தொழும்
ஒரு வேட்டைக்காரன் . . .

இல்லாதவரும்,இருக்கின்றவரும்,
பொல்லாதவரும்,நல்லவரும் விரும்பும்
ஒரு வேட்டைக்காரன் . . .

நாத்திகனும்,ஆத்திகனும்,
ஊரும்,உலகமும்,நாடும்,நகரமும் பேசும்
ஒரு வேட்டைக்காரன் . . .

வேட்டைக்காரன்
என் அந்தப்புர நாயகன்
அனந்தபத்மநாபன் . . .

வேட்டை
துஷ்ட நிக்ரஹம்
சிஷ்ட பரிபாலனம் . . .

வேட்டையாடும் காடு
அனந்தனும் அந்தமில்லாதவனும்
உறையும் திருவனந்தபுரம் . . .

வேட்டை நாள் . . .
உத்தமமான பங்குனி உத்திரமான
சுபயோக சுபதினமான இன்று . . .

நீ செய்யவேண்டியது . . .
மானசீகமாய், வேகமாய்
திருவனந்தபுரத்திற்கு
வரவேண்டியது . . .

புறப்படு . . .வந்துவிடு . . . கொண்டாடு




Read more...

புதன், 4 ஏப்ரல், 2012

உன்னோடு பேச !

ராதேக்ருஷ்ணா
 
 
யாரையும் எடுத்தெறிந்து பேசாதே . . .
 
யாரையும் அவமரியாதையாய் பேசாதே . . .
 
யாரையும் கிண்டலாய் பேசாதே . . .
 
யாரையும் நோகடித்துப் பேசாதே . . .
 
யாரையும் அசிங்கமாய் பேசாதே . . .
 
யாரும் அழும்படி பேசாதே . . .
 
யாரும் நொந்துபோகும்படி பேசாதே . . .
 
யாரும் வெறுக்கும்படி பேசாதே . . .
 
யாரையும் வெறுப்பேத்திப் பேசாதே . . .
 
யாரையும் தப்பாய் பேசாதே . . .
 
ஏனெனில் எல்லோருக்கும்
க்ருஷ்ணன் இருக்கிறான்  . . .
 
நீ இதையெல்லாம் செய்தால்
பின்னாளில் உன்னோடு பேச
ஒருவரும் இருக்கமாட்டார்கள் . . .
 
நீ எதையெல்லாம் இன்று
பேசினாயோ நிச்சயம் அவையெல்லாம்
உனக்கே வந்து சேரும் . . .
 
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ எப்பொழுதும் நல்லதையே பேசவேண்டும் !
 
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ எல்லோரிடமும் அன்பாய் பேசவேண்டும் !
 
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ என்றும் வினயத்தோடு பேசவேண்டும் !
 
க்ருஷ்ணன் பேச வேண்டுமா ? ! ?
 
இனி உன் பேச்சை மாற்றினால்
உன் க்ருஷ்ணன் உன்னோடு பேசுவான் !
 
 
 
 
 

Read more...

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

உரசல் . . .

ராதேக்ருஷ்ணா

உரசல் . . .

ஒவ்வொரு நாளும்
வாழ்வில் உரசல்கள் . . .

பயத்திற்கும் தைரியத்திற்கும்
தனிமையில் உரசல் . . .

ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும்
புரியாத உரசல் . . .

அஹம்பாவத்திற்கும் பணிவிற்கும்
மரியாதை உரசல் . . .

அன்பிற்கும் விரோதத்திற்கும்
போட்டி உரசல் . . .

பாசத்திற்கும் உரிமைக்கும்
போராட்ட உரசல் . . .

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்
மயக்க உரசல் . . .

சொத்திற்கும் சுகத்திற்கும்
பங்கு உரசல் . . .

குழப்பத்திற்கும் தெளிவிற்கும்
யோசனை உரசல் . . .

சந்தேகத்திற்கும் நம்பிக்கைக்கும்
தீர்மான உரசல் . . .

வெற்றிக்கும் தோல்விக்கும்
முயற்சி உரசல் . . .

ஆத்தீகத்திற்கும் நாத்தீகத்திற்கும்
நம்பிக்கை உரசல் . . .

புத்திக்கும் மனதிற்கும்
ஆசை உரசல் . . .

தேவைக்கும் ஆடம்பரத்திற்கும்
குழப்ப உரசல் . . .

எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்திற்கும்
தடுமாற்ற உரசல் . . .

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
நிகழ்வில் உரசல் . . .

இந்த உரசல்களுக்குள்ளே
நாம் வாழப் பழகிவிட்டோம்  . . .

இந்த உரசல்களில்
ஒவ்வொன்றும் மாறி மாறி
வெல்கிறது . . .

சில சமயம் இந்த உரசல்களில்
நாம் களைத்துப்போனது தான் மிச்சம் !

ஆனாலும் உரசல்கள் முடிவதில்லை . . .


Read more...

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ராமன் எத்தனை ராமனடி !

ராதேக்ருஷ்ணா


ராம் . . .
ஸ்ரீராம் . . .
சீதாராம் . . .
ஜய் ஸ்ரீ சீதாராம் . . .


ராமன் எத்தனை ராமனடி !


ஜய் தசரத ராம் . . .
பித்ரு வாக்யத்தைக் காப்பாற்றினவன் !
 
 ஜய் கௌசல்யா ராம் . . .
பெற்ற வயிற்றை பெருமைப்படுத்தினவன் !
 
ஜய் அயோத்யா ராம் . . .
மக்களை தன் வசப்படுத்தினவன் !

ஜய் வசிஷ்ட ராம் . . .
குருவின் உபதேசத்தை செயல்படுத்தினவன் !

 ஜய் விஸ்வாமித்ர ராம் . . .
குருவின் பாரத்தைத் தீர்த்தவன் !

ஜய் கைகேயி ராம் . . .
கைங்கர்ய சிகாமணியாய் மாற்றினவன் !

ஜய் சுமித்ரா ராம் . . .
பகவத் பாகவத பக்தியை நிரூபித்தவன் !

ஜய் லக்ஷ்மண ராம் . . .
பக்தனை சொத்தாய் கருதியவன் !

ஜய் பரத ராம் . . .
பொறுப்பையும் பெருமையையும் தந்தவன் !

 ஜய் சத்ருக்ன ராம் . . .
பாகவத பக்தியை கொண்டாடினவன் !

ஜய் சீதா ராம் . . .
பத்னியின் காதலுக்குத் தன்னைத் தந்தவன் !

ஜய் ஜனக ராம் . . .
பக்தனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவன் !

ஜய் அகல்யா ராம் . . .
பக்தையைப் பதிவிரதையென்று சொன்னவன் !

ஜய் குக ராம் . . .
நட்பை,நண்பனை ரசித்தவன் !

ஜய் வனவாச ராம் . . .
வைராக்கியத்தைச் சொல்லித்தந்தவன் !

ஜய் சபரீ ராம் . . .
மோக்ஷத்திற்கு சாக்ஷியாய் நின்றவன் !

ஜய் சுக்ரீவ ராம் . . .
நட்பிற்கு மரியாதை செய்தவன் . . .

ஜய் ஆஞ்சனேய ராம் . . .
பக்தனுக்குத் தன்னை தானம் தந்தவன் !

ஜய் விபீஷண ராம் . . .
சரணாகத வத்சல ராஜாதி ராஜன் !

ஜய் வால்மீகி ராம் . . .
ராமாயணத்தைத் தந்தவன் !

ஜய் லவகுசா ராம் . . .
ராமாயணத்தைப் ப்ரகடனம் செய்தவன் !

இன்னும் எத்தனையோ ராமன் . . .

என் ராமன் . . .
ஜய் கோபாலவல்லி ராம் . . .
க்ருஷ்ணனாய் லீலை செய்பவன் . . .

உன் ராமன் . . .
யோசி . . . கண்டுபிடி . . . அனுபவி . . .


Read more...

எப்பொழுது கிளம்பட்டும் ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
இந்த உலகை விட்டுச் செல்ல
நான் தயார் . . .

நான் இங்கே
புரிந்து கொண்டது இவ்வளவு தான் !


மனிதர்கள் மாறுவார்கள் . . .
நீ என்றும் மாறுவதில்லை . . .


பணம் வரும் போகும் . . .
உன் கருணை என்னை விட்டு
ஒரு நாளும் விலகுவதில்லை . . .


ஆரோக்கியம் கூடும் . . .குறையும் . . .
உன் அன்பு ஒரு நாளும்
குறைவதேயில்லை . . .


பந்துக்கள் வருவார்கள் . . .போவார்கள் . . .
நீ என்னை விட்டு நீங்குவதில்லை . . .


சரீரம் நிரந்தரமல்ல . . .
ஆத்மா அழியாதது . . .
மனம் மாறக்கூடியது . . .
பக்தி காப்பாற்றும் . . .
நாம ஜபம் சத்தியம் . . .
சரணாகதி உயர்ந்தது . . .

இவை எல்லாம்
உன் அருளால் புரிந்தது . . .

அதனால் இந்த உலகை
விட்டு வர நான் தயார் . . .

நான் எப்பொழுது கிளம்பவேண்டும்
என்று நீ தான் முடிவு செய்யவேண்டும் . . .

கிளம்பும் வரை நான்
உன்னை நினைத்து வாழ்வேன் . . .

நான் எப்பொழுது கிளம்பட்டும் ?

 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP