ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 மார்ச், 2012

திருமழிசை . . .

ராதேக்ருஷ்ணா
 
 
திருமழிசை ஆழ்வாரே . . .
நீர் வாழ்க . . .
 
 
திருமலைக்குச் செல்லும்
வழியில் திடீரென்று திருமழிசையில்
நுழைந்தோம் . . .
ஜகந்நாதன் இழுத்தான் . . .
 
 
எத்தனை நாளாக
செல்லவேண்டும் என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன் . . .
 
 
எத்தனை நாளாக
ஒரு சிஷ்யன் அழைத்துக்
கொண்டேயிருந்தான் . . .
 
 
எத்தனை முறை திருப்பதிக்கு
அந்த வழியாக
சென்றிருக்கிறேன் . . .
 
 
ஆனால் ஒரு நாள் கூட
போக முடியவில்லை . . .
 
 
ஆனால் இந்தமுறை
திருமழிசை ஆழ்வாரும்,
ஜகந்நாதனும் என்னை
இழுத்துவிட்டார்களே . . .
 
 
திருமழிசை ஆழ்வார்
பிறந்த ஸ்தலத்திற்குச்
சென்றதே பரம சுகம் . . .
 
 
பார்கவ முனிவரும்,
கனகாங்கி தேவியரும்
பெற்ற பிண்டாகாரமான
பிள்ளை பிறந்த ஊர் . . .
 
 
பிரம்புத்தூற்றில்
பிண்டத்தை போட்டுவிட
ஜகந்நாதன் உடலும்,
உயிரும் தந்த ஊர் . . .
 
 
தன் தரிசனம் தந்து,
ஜகந்நாதன் அழகாய் மறைய
குழந்தை அழ திருவாளன்
அதைக் கேட்ட ஊர் . . .
 
 
திருவாளனும்,அவர் மனைவியும்
தன் பிள்ளையாய் திருமழிசை ஆழ்வாரை
வளர்த்த ஊர் . . .
 
 
வயோதிக தம்பதிகள்
தந்த பாலை மட்டும் அருந்தி
தன் பலத்தை குழந்தை
நிரூபித்த ஊர் . . .
 
 
7 வயதில் ஜகத்காரண
வஸ்துவைத் தேடி
வேதத்தில் கண்டுபிடித்து
அதை ஆழ்வார் தியானித்த ஊர் . . .
 
 
 சிவபெருமானும் திருமழிசை
ஆழ்வாரை பக்திசாரர்
என்று கொண்டாடின ஊர் . . .


வீற்றிருக்கும் ஜகந்நாதன்
தன்னை விட திருமழிசை ஆழ்வார்
உயர்ந்தவர் என்று சொல்லும் ஊர் . . .


திருமழிசை ஆழ்வாரின்
வலது பெருவிரலில் கண்ணைக்
காட்டும் அழகான ஊர் . . .
 
 
அமைதியான திருமழிசையின்
அழகிலும்,ஜகந்நாதனின் சொரூபத்திலும்,
ஆழ்வாரின் ஆசீர்வாதத்திலும்
நான் என்னையே மறந்தேன் . . .
 
 
திரும்பவும் திருமழிசை
செல்ல ஆசையோடு காத்திருக்கிறேன் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP