ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2012

மஹாத்மா . . .

ராதேக்ருஷ்ணா



மஹாத்மா . . .



நீயும் மஹாத்மாவாகு . . .




உன்னாலும் முடியும் !




உனக்குள்ளும் க்ருஷ்ணன் இருக்கிறான் !




நாம ஜபம் செய்துவந்தால்
உன் மனம் மாறும் !




உன் மனம் மாறினால்
உன் குணம் மாறும் !




உன் குணம் மாறினால்
உன் செய்கை மாறும் !




உன் செய்கை மாறினால்
உன் சிந்தனை மாறும் !




உன் சிந்தனை மாறினால்
உன் வாழ்க்கை மாறும் !




உன் வாழ்க்கை மாறினால்
க்ருஷ்ணனுக்கு உன்னைப் பிடிக்கும் !




க்ருஷ்ணனுக்கு உன்னைப்
பிடித்துவிட்டால் நீயும் மஹாத்மாதான் !




மஹாத்மாவாக மாற நீ தயாரா . . .




உன்னை மாற்ற நான் தயார் . . .




வா . . .
புதியதோர் உலகம் செய்வோம் . . .


பக்தி உலகம் செய்வோம் . . .


பாகவத உலகம் செய்வோம் . . .

இதைத்தான் பாகவதம் சொல்கிறது !


பாகவதம் உன்னை
பாகவதராக்குகிறது . . .


பாகவதரே வாரும் . . .
நம் க்ருஷ்ணனை அனுபவிப்போம் . . .


உம் பக்தி அனுபவத்தை சொல்லும் . . .


கூடி இருந்து குளிருவோம் . . .

 

Read more...

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

காமம் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
காமம் . . .
 
உடலின் தேவையா ?
உடலின் தேவைதான் . . .
 
 
மனதின் ஆசையா ?
மனதின் தாக்கம் அதிகம் . . .
 
 
இயற்கையின் உந்துதலா ?
நிச்சயமாக இயற்கையானதுதான் . . .
 
 
உண்மையில் அவசியமா ?
 மனிதரைப் பொறுத்து,மனதைப் பொறுத்து
மாறுபடும் . . .

 
இல்லாமல் வாழமுடியுமா ?
நிச்சயமாக முடியும் . . .
முதலாழ்வார்கள்,எம்பார் கோவிந்தர்,விவேகானந்தர்,ரமணர்,
போன்ற பலர் வாழ்ந்துள்ளனர் . . .
இன்றும் பலர் உண்டு . . .

 
 
அனுபவித்தால் குற்றமா ?
தர்மத்திற்கு விரோதமில்லாத
காமம் நான் என்று கண்ணனே கூறுகிறான் . . .
தர்மத்திற்கு விரோதமான காமம் குற்றமே !
 
 
தெய்வம் சம்மந்தப்பட்டதா ?
தெய்வத்தின் சக்தியினால் தானே
காமத்தினால் இரு உடல் கூடி
ஒரு உடல் உற்பத்தியாகிறது !
 
 
இரசாயன மாற்றமா ?
 உடலில் ஒரு குறிப்பிட்ட
வயதில் உண்டாகும்
இரசாயன மாற்றமே காமம் !
 
இளமையின் தேடலா ?
இளமையின் பலத்தில்
மிக முக்கிய தேடலாக உள்ளது !
 
 
எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதா ?
சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானதே !
 
 
காமம் கேவலமானதா ?
ஒரு எல்லையைத் தாண்டினால்
நிச்சயம் கேவலமானதே . . .
 
 
காமம் தவமா ?
தெய்வ தியானத்துடன் கூடின
காமம் நிச்சயம் தவமே . . .
ஜயதேவர் பத்மாவதி தம்பதியரின்
காமம் தெய்வீகமானதே . . .
 
 
காமம் பலமா ?
பகவானின் நாமத்துடன் கூடிய
தர்ம சம்மதமான காமம் பலம் தரும் !
 
 
காமம் பலவீனமா ?
உடலை அனுபவிப்பதையே
முக்கியமாகக் கொண்ட காமம்
நிச்சயம் பலவீனமானதே !
விஸ்வாமித்திரரின் காமம்
அவரை பலவீனமாக்கியது !
 
 
காமத்தினால் தெய்வம் கிட்டுமா ?
எத்தனையோ மஹாத்மாக்களைப்
பெற்றவர்கள் உடல் கூடிதானே
அவர்களைப் பெற்றனர் . . .
 
 
உன் காமத்தை இப்போது நீ ஆராய்ச்சி செய் !
 
 
காமம் மிகவும் நுணுக்கமானது !
உள்ளபடி புரிந்தவர் வெகு சிலரே !
 
காமத்தினால் வீணானவர் பலர் !
காமத்தை ஜெயித்தவர் சிலர் !
காமத்தை அடக்கினவர் வெகு சிலர் !
 
 
காமத்தை உபயோகப்படுத்தினவர்
மிகச் சிலர் . . .
 
 
இப்போது உன் மனதை கவனி !
 அதன் தாபத்தைக் கவனி !
அதன் கேள்விகளைக் கவனி !
 
பதிலைத் தேடு . . .
 
 
உன் காமம் உன்னை
க்ருஷ்ணனிடம் கொண்டு சென்றால்
அது மிகவும் உயர்ந்தது . . .
 
 
உன் காமம் உன்னை
நரகத்திற்கு அழைத்துச் சென்றால்
அது மிகவும் ஆபத்தானது . . .


என் காமம் கண்ணனுக்காம் . . .

கோபிகள் தங்கள் காமத்தை
கண்ணனுக்குத் தந்து
ப்ரேமையாக மாற்றிக்கொண்டார்கள் !

நீ ? ! ?

 
 
 

Read more...

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

மறப்பாய் . . . மன்னிப்பாய் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
மறப்பாய் . . . மன்னிப்பாய் . . .
 
 
எல்லோரும் தவறு செய்பவர்களே !
 
 
தவறு செய்யாமல் யாருமில்லை !
 
 
நீயும் எத்தனையோ தவறுகள்
செய்திருக்கிறாய் . . .
செய்துகொண்டிருக்கிறாய் . . .
செய்யப்போகிறாய் . . .
 
 
க்ருஷ்ணன் உனது
எத்தனையோ தவறுகளை
மன்னித்திருக்கிறான் . . .
மன்னித்துக்கொண்டிருக்கிறான் . . .
மன்னிக்கப்போகிறான் . . .
 
 
அதுபோல் நீயும்
அடுத்தவரின் குற்றங்களை
மன்னிப்பாய் . . .மறப்பாய் . . .
 
 
குற்றங்கள் இல்லையென்றால்
கருணைக்கு பலமேது . . .
 
 
குற்றங்கள் இல்லையென்றால்
மன்னிப்பிற்கு மதிப்பேது . . .
 
 
நீ யாரையும் குற்றவாளியாக
ஒருபோதும் நினைக்காதே . . .
 
 
உன்னை உலகம்
குற்றவாளியாகப் பார்த்தாலும்
நீ உலகையே நேசி . . . .
 
 
க்ருஷ்ணன் குற்றங்களைப்
பார்ப்பதில்லை . . .
குணங்களைப் பார்க்கிறான் . . .
 
 
 அதனாலேயே எல்லோரையும்
எப்போதும் நேசிக்கிறான் . . .
 
 
நீயும் நேசி . . .
எல்லோரையும் நேசி . . .
எப்போதும் நேசி . . .
 
நேசித்துப் பார் . . .
 உலகமே உனக்கு வசப்படும் . . .
 
 
 குற்றங்களை மறந்து மனிதரைப் பார் !
எல்லோரும் தெய்வமாகத் தெரிவர் . . .
 
 
குற்றத்தை மட்டும் பார் . . .
தெய்வம் கூட குற்றவாளியாய் தெரியும் !
 
மாறு . . .
மனதை மாற்று . . .
 வாழ்வை மாற்று . . .
 
உலகை மாற்று . . .
இன்றே . . .இங்கே . . . இப்பொழுதே ! ! !
 
 

Read more...

இதில் என்ன தப்பு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
முயற்சிக்காதே . . .
 
ஒரு நாளும் முயற்சிக்காதே . . . 
 
நீ சிறந்த பக்தன்/பக்தை
என்று உலகில் நிரூபிக்க
ஒரு நாளும் முயற்சிக்காதே . . .
 
 
பக்தி என்பது உனது
தனிப்பட்ட விஷயம் . . .
 
 
அதில் அடுத்தவருக்கு
ஒரு சம்மந்தமும் இல்லை . . .
 
 
கடவுளை நம்புவதும்,
நம்பாதிருப்பதும் அவரவர்
மனது,காலம்,வாழ்க்கையைப்
பொறுத்து அமைகிறது . . .
 
 
முதலில் நம்பாதவர்
பிறகு நம்புவதும் உண்டு ! ! !
 
 
முதலில் நம்பினவர்
பிறகு சந்தேகிப்பதும் உண்டு ! ! !
 
 
பக்தி என்பது குழந்தையின்
இனம் புரியாத சந்தோஷம் போன்றது !
 
 
ஒரு குழந்தையின் சந்தோஷத்தை
யாராலும் உள்ளபடி சொல்லவேமுடியாது !
 
 
ஒரு குழந்தையின் சந்தோஷத்தின்
காரணத்தை கண்டுபிடிப்பதும் கஷ்டம் !
 
 
குழந்தை தன் மனதைக் கொண்டு
தன் சந்தோஷத்தை அனுபவிக்கிறது !
 
 
அதுபோலே பக்தன்/பக்தை
தன் மனதினால் சந்தோஷத்தை
அனுபவிக்கிறார் . . .
 
 
இதில் என்ன தப்பு . . .
 
 
பக்தியைப் பற்றி
தெரியாதவர்களுக்கு இதில் என்ன கவலை ?
 
 
நாஸ்தீகர்களுக்கு
இதில் ஏன் பொறாமை ?
 
 
 விஞ்ஞானி தன் ஆராய்ச்சியில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
சம்சாரி தன் குடும்பத்தில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
குடிகாரன் போதையில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
குழந்தை பொம்மையில்
சந்தோஷம் காண்கிறது . . .
 
 
இளவயது உடலுறவில்
சந்தோஷம் காண்கிறது . . .
 
 
முதியவயது அக்கறையில்
சந்தோஷம் காண்கிறது . . .
 
 
திருடன் திருட்டில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
 இப்படி ஒவ்வொருவரும்
ஏதோ ஒன்றில் சந்தோஷம்
அடைகிறார்கள் . . .
 
 
அது போலே பக்தரும் பக்தியில் . . .
 
 
இதில் என்ன குற்றம்  . . .
 இதில் என்ன பைத்தியக்காரத்தனம் . . .
இதில் என்ன மூடத்தனம் . . .
 
நீ உன் பக்தியை அனுபவி . . .
 
மற்றவற்றை ஒதுக்கித் தள்ளு . . .
 
 
 

Read more...

வியாழன், 23 பிப்ரவரி, 2012

யோசிக்காதே . . .


ராதேக்ருஷ்ணா


யோசிக்காதே . . .


நிறைய யோசித்துவிட்டாய் !


யோசித்து யோசித்து
உன் மூளை களைத்ததுதான் மிச்சம் !


 கொஞ்சம் உன் யோசனைகளை
மூட்டைகட்டி ஓரமாக வை !


கெட்டதை யோசிப்பதை விடு !


நல்லதை யோசிப்பதையும் விடு !


 துன்பங்களை யோசிப்பதை விடு !


இன்பங்களை யோசிப்பதை விடு !


நஷ்டங்களை யோசிப்பதை விடு !


லாபங்களை யோசிப்பதை விடு !


சண்டைகளை யோசிப்பதை விடு !


சமாதானத்தை யோசிப்பதை விடு !


கடந்தகாலத்தைப் பற்றி யோசிப்பதை விடு !


எதிர்காலத்தைப்பற்றி யோசிப்பதை விடு !


குடும்பத்தைப்பற்றி யோசிப்பதை விடு !


பந்தங்களின் யோசனையை விடு !


பாவங்களின் யோசனையை விடு !


புண்ணிய யோசனைகளை விடு !


வீட்டு யோசனைகளை விடு !


நாட்டு யோசனைகளை விடு !


வியாதியைப் பற்றி யோசிப்பதை விடு !


ஆரோக்கிய யோசனைகளை விடு !


பணத்தைப் பற்றிய யோசனையை விடு !


சொத்து யோசனையை விடு !


பட்ட கஷ்டங்களின் யோசனையை விடு !


அடைந்த அவமானங்களின்
யோசனையை விடு !


எல்லோரைப் பற்றிய
யோசனைகளை விடு !


சாப்பாட்டு யோசனையை விடு !


 மரணத்தைப் பற்றிய யோசனையை விடு !


இப்படி எல்லா யோசனைகளையும்
தள்ளிக்கொண்டே வா . . .

எல்லா யோசனைகளையும்
விட்டுக்கொண்டே வா . . .

உன் மனம் நிம்மதியடையும் . . .

நான் சொல்வது உனக்கு
புதியதாக இருக்கும் . . .

தினமும் இரவு நீ
எல்லா யோசனைகளையும்
விடுவதாலேயே நிம்மதியாக தூங்குகிறாய் !


அதுபோலே
விழித்திருக்கும்போதும்
யோசனை இல்லாமல் வாழ்ந்து பார் . . .


பிறகு புரியும் . . .

யோசிக்காமல் இருப்பது
எத்தனை சுகம் என்பது !


யோசிக்காமல் இரு . . .

உன் பலம் உனக்குப் புரியும் . . .

க்ருஷ்ண க்ருபை உனக்குப் புரியும் . . .

வாழ்க்கை உனக்குப் புரியும் . . .

ஆனந்தம் உனக்குப் புரியும் . . .

 எனக்குப் பிறகு சொல் . . .

எனக்குச் சொல்லவேண்டும்
என்று யோசிப்பதையும் விடு . . .

மனம் லேசாகும் . . .

 

Read more...

புதன், 22 பிப்ரவரி, 2012

எல்லாம் சரியாகும் . . .

ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றையும் மற . . .


அடுத்தவரின் குற்றங்களை மற !


உன் காயங்களை மற !


உன் அவமானங்களை மற !


உன் பந்தங்களின்
பைத்தியக்காரத்தனங்களை மற !


உனது தோல்விகளை மற !


உன் வெற்றிகளை மற !


உன் கவலைகளை மற !


எல்லாவற்றையும் க்ருஷ்ணன்
கவனித்துக்கொண்டிருக்கிறான் !


உன்னால் எதையும் மாற்றமுடியாது !

நீ உன்னை மாற்றிக்கொள் !


நீ மாறினால் உன்னால்
க்ருஷ்ணனின் லீலைகளை
சரியாகப் புரிந்துகொள்ளமுடியும் !





எல்லாம் சரியாகும் . . .
 நிச்சயம் சரியாகும் . . .
சத்தியமாக சரியாகும் . . .


நீ க்ருஷ்ணனை அனுபவித்துக்கொண்டிரு !
அவனை மட்டும் நினைத்துக்கொண்டிரு !
மற்றதை எல்லாம் மற . . .


மறந்து போ . . .
உனது மனதை வாட்டும்
எல்லாம் உனக்கு மறந்துபோகட்டும் !


நிம்மதியாய் இரு கண்ணே . . .

உன் மனது லேசாகிறது . . .

உன் மனது சிரிக்கிறது . . .

உன் மனது நம்பிக்கை அடைகிறது . . .

உன் மனது சந்தோஷத்தைத்
தவிர எல்லாவற்றையும் மறக்கட்டும் . . .


எல்லாவற்றையும் மறந்து
சிரி பார்க்கலாம் . . .


என் சமத்துகுட்டி . . .
இப்படித்தான் எப்பவும்
சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் !


சிரி . . .
நிம்மதியாய் சிரி . . .
சந்தோஷமாய் சிரி . . .


 
க்ருஷ்ணன் இருக்கான் . . .
எல்லாம் சரியாகும் . . .

மனதை அலட்டிக்கொள்ளாதே . . .



Read more...

திங்கள், 20 பிப்ரவரி, 2012

மேல்கோட்டை . . .

ராதேக்ருஷ்ணா
 
ராமானுஜா . . .
உன்னுடைய மேல்கோட்டைக்கு
உன் குழந்தை வருகிறேன் . . .
 
 
சம்பத்குமாரா . . .
உன்னை தரிசிக்க உன் தாசன்
மேல்கோட்டைக்கு வருகிறேன் . . .
 
 
பீவி நாச்சியார் . . .
 உன் காதலனின் செல்லப்பிள்ளை
மேல்கோட்டைக்கு வருகிறேன் . . .
 
 
திருநாராயணா . . .
 ராமானுஜா தாசன் உன்னைப் பார்க்க
மேல்கோட்டைக்கு வருகிறேன் . . .
 
 
ப்ரஹ்லாத வரதா . . .
அழகிய சிங்கா . . .உன்னைப் பார்க்க
மேல்கோட்டைக்கு வருகிறேன் . . .


மேல்கோட்டை புண்ணிய பூமியே . . .
இந்தக் குழந்தைக்கு உன் மஹிமையை
உள்ளபடி காட்டிக்கொடு . . .

மேல்கோட்டைக்கு நமஸ்காரம் . . .

என் ஜன்மாவில் உயர்ந்த நாள் இதுவே !


 

Read more...

வியாழன், 16 பிப்ரவரி, 2012

விட்டுக்கொடு . . .

ராதேக்ருஷ்ணா

விட்டுக்கொடு . . .

விட்டுக்கொடுத்தவர்கள்
கெட்டுப்போனதில்லை . . .


சில இடங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில பேரிடம்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில விஷயங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில சந்தர்ப்பங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில காரியங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


விட்டுக்கொடுப்பதால்
நீ வாழ்வில் உயர்ந்துகொண்டேயிருக்கிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பெருமை அடைகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பலம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ ஆசிர்வாதம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பக்குவப்படுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ அடுத்தவரை கடனாளியாக்குகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ அதிகம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ இன்பம் அடைகிறாய் !

கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார் !

உன் அன்பு எல்லைகளைக் கடக்கும் !

 
 

Read more...

புதன், 15 பிப்ரவரி, 2012

மன்னிப்புக் கோருகிறேன் . . .


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா . . .
உன்னிடம் ஒரு வேண்டுகோள் !

நான் தெரிந்து பலரின்
மனதைப் புண்படுத்தி இருக்கிறேன் !
 அவர்கள் மனதிற்கு
சமாதானம் தா . . .

நான் தெரியாமல் பலரின்
நெஞ்சை காயப்படுத்தி இருக்கிறேன் !
அவர்கள் நெஞ்சத்திற்கு
ஆறுதல் தா . . .

நான் என் உடலால்
சிலருக்குக் கஷ்டம் கொடுத்திருக்கிறேன் !
அவர்கள் உடலுக்கு
இதம் தா . . .

நான் என் மனதால்
சிலருக்குக் கஷ்டம்
நினைத்திருக்கிறேன் !
அவர்களுக்கு நிம்மதி தா . . .


க்ருஷ்ணா . . .
என்னால் கஷ்டம் அடைந்த
அனைத்து ஜீவர்களிடம்
நான் என் மனதார
மன்னிப்புக் கோருகிறேன் . . .


உனக்குத் தெரியும் !
என்னால் துன்பம்
அனுபவித்தவர்கள் அனைவரையும் !


இனி என்னால் ஒரு
ஜீவனுக்கும்
ஒரு துன்பம் நேரக்கூடாது !


தயவு செய்து
நான் யாருக்கும் கஷ்டம்
தராமல் இருக்கும்படியாக
இருக்க நீ ஆசிர்வாதம் செய் !


க்ருஷ்ணா . . .
மன்னித்து விடு  . . .


உன் குழந்தைக்கு
உன்னிடம் மன்னிப்புக்
கேட்பதைத் தவிர
இந்த வாழ்வில் வேறு
எதுவும் உருப்படியாகச்
செய்யத்தெரியாது ! ! !

 

Read more...

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கலங்காமல் நிதானமாயிரு . . .

ராதேக்ருஷ்ணா
மாற்றமே இல்லாதது
மாற்றம் . . .
மாற்றவே முடியாதது
மாற்றம் . . .
தவிர்க்க முடியாதது
மாற்றம் . . .
உலகில் நிரந்தரமானது
மாற்றம் . . .

காலத்தினால் மாறாதது
மாற்றம் . . .


பணத்தினால் மாற்றமுடியாதது
மாற்றம் . . .


புத்தியினால் தவிர்க்கமுடியாதது
மாற்றம் . . .


மாற்றம் என்ற ஒன்றுதான்
உலகில் தினமும்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது !


அதனால் நீ தைரியமாக இரு !


உன் வாழ்விலும்
ஒரு நல்ல மாற்றம்
நடந்துகொண்டிருக்கிறது !


நிச்சயம் நீ எதிர்பார்க்கும்
நல்லமாற்றம்
ஒரு நாள் வரும் !


தேவையில்லாத கெட்டவைகள்
நல்லவைகளாக மாறும்
காலம் தூரத்திலில்லை !


அதனால் நீ உன் மனதை
நல்வழியில் மாற்றிவிடு . . .


மற்றவை மாறும் . . .


கலங்காமல் நிதானமாயிரு . . .




Read more...

சனி, 11 பிப்ரவரி, 2012

முதியோர் இல்லம் . . .

ராதேக்ருஷ்ணா
முதியோர் இல்லம் . . .

உலகிலே ஒரு நரகம் . . .
 அதுதான் முதியோர் இல்லம் . . .

 
வயதானவர்களை
தண்டிக்கும் ஒரு நரகம் . . .


பெற்றபிள்ளைகளே
பெற்றோரை தண்டிக்கும் ஒரு நரகம் . . .

தூக்கி வளர்த்தவர்களை
வளர்க்கப்பட்டவர்களே
தள்ளிவிடும் ஒரு நரகம் . . .
ஆலமரத்தை விழுதுகளே
ஒதுக்கிவைக்கும் ஒரு நரகம் . . .


உண்ணும்,உடையும்,உறைவிடமும்
தந்தவர்களை உறவுகளே
உதாசீனமாய் வைக்கும் ஒரு நரகம் . . .


கருவறையில் சுமந்தவளை,
சும்மாய் கிட என்று சிசுவே
சிறை வைக்கும் ஒரு நரகம் . . .
நெஞ்சில் சுமந்த தகப்பனை
பிள்ளையே வஞ்சித்து வைத்து
தனிமைப்படுத்தும் ஒரு நரகம் . . .
தாலாட்டு பாடினவளை
வாயார வைது பிள்ளைகளே
தவிக்கவைக்கும் ஒரு நரகம் . . .


தொப்புள்கொடி வழியாக
உணவு,உதிரம்,உயிர்,உடல்
தந்தவளுக்கு மனதில் பாரம்
தந்து நடைப்பிணமாய்
மாற்றும் ஒரு நரகம் . . .


உச்சி முகந்தவளின் எச்சில்
கசந்து அறுவருப்பாகி
உயிரோடு பாடையிலேற்றும்
ஒரு நரகம் முதியோர் இல்லம் . . .


கேட்டதையெல்லாம் தந்த
முட்டாள் தகப்பனை
அறிவு ஜீவி குழந்தைகள்
அஹம்பாவத்தால் தள்ளி
வைக்கும் ஒரு நரகம் . . .


ஐயோ . . .
முதியோர் இல்லங்கள்
இல்லாமல் போகட்டும் . . .


முதியோர் இல்லங்கள்
இருப்பதால்தானே
இந்தப் பாவிகள் பெற்றோர்களை
பாடாய்படுத்துகிறார்கள் . . .

 
வயதான காலத்தில் வேண்டுவது
வெறும் உடலில் சௌகரியம் மட்டுமல்ல !


இளவயதில் தான் தன்
குழந்தைகளுக்குத் தந்த
அன்பை திரும்பவும் அனுபவிக்கவே
வயதானவர்கள் வேண்டுவது !


அன்பைத் தராத இந்தப் பாவிகள்
தாயையும் தந்தையையும்
விஷம் தந்து கொன்றுவிடலாம் . . .



க்ருஷ்ணா . . .
பெற்றோரை முதியோர் இல்லங்களில்
விடும் மஹாபாபிகளை
இங்கேயே,இப்போதே தண்டித்துவிடு !



பெற்றோரை முதியோர் இல்லங்களில்
தள்ளிவிடும் பாபிகளுக்கு
வயதான காலத்தில் எல்லா
கஷ்டங்களும் வந்து சேரும் . . .



இது சாபமல்ல . . .
இது சத்தியம் . . .

இது புலம்பலல்ல  . . .
இது இயற்கையின் சட்டம் . . .

இது கோபமல்ல . . .
இது தர்ம சாஸ்திரம் . . .



Read more...

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

என் வாழ்க்கை . . .

ராதேக்ருஷ்ணா
 
என் வாழ்க்கை !

என் வாழ்க்கை
என்னை நேசிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை மதிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை கொண்டாடுகிறது !

என் வாழ்க்கை
என்னை ரசிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை கொஞ்சுகிறது !

என் வாழ்க்கை
என்னை உயர்த்துகிறது !

என் வாழ்க்கை
என்னை பக்குவப்படுத்துகிறது !

என் வாழ்க்கை
எனக்கு உதவுகிறது !

என் வாழ்க்கை
எனக்கு நம்பிக்கை அளிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை ஆசிர்வாதிக்கிறது !

என் வாழ்க்கை
என்க்கு உதவுகிறது !

என் வாழ்க்கை
என்னிடம் விளையாடுகிறது !

என் வாழ்க்கை
எனக்கு அறிவைத் தருகிறது !

என் வாழ்க்கை
என்னுடன் இருக்கிறது !

என் வாழ்க்கை
எனக்கு பலம் தருகிறது !

என் வாழ்க்கை
எனக்கு சொல்லிக்கொடுக்கிறது !

என் வாழ்க்கை
என்னோடு இருக்கிறது !

என் வாழ்க்கை
என் பலம் . . .

என் வாழ்க்கை
என் தனம் . . .

என் வாழ்க்கை
என் வெற்றி . . .

என் வாழ்க்கை
என்னிடம் நம்பிக்கை வைக்கும்போது
நான் ஏன் என் வாழ்க்கையின் மேல்
நம்பிக்கை வைக்கக்கூடாது ? ! ?

என் வாழ்க்கை
என்னை ரசிக்கும்போது
நான் ஏன் என் வாழ்க்கையை
ரசிக்கக்கூடாது ? ! ?

என் வாழ்க்கை
என்னிடம் அக்கறையோடு
நடக்கும்போது,
நான் ஏன் என் வாழ்க்கையில்
அக்கறை கொள்ளக்கூடாது ? ! ?

யார் வேண்டுமானாலும்,
என்ன வேண்டுமானாலும்,
சொல்லட்டும் . . . நினைக்கட்டும் !

என் வாழ்க்கை என்னுடைய வாழ்க்கை !

அதை நான் வாழ்ந்தே தீருவேன் . . .

என் வாழ்வே உனக்கு நன்றி  . . .

நீயும் உன் வாழ்க்கையை ரசி . . .

நீயும் உன் வாழ்க்கையை அனுபவி . . .

நீயும் உன் வாழ்க்கையை மதி . . .

நீயும் உன் வாழ்க்கையை உபயோகப்படுத்து !



Read more...

புதன், 8 பிப்ரவரி, 2012

உன்னை தண்டிக்கும் !

ராதேக்ருஷ்ணா

வயதானால்
வாயை மூடிக்கொண்டுதான்
இருக்கவேண்டுமா ?

வயதானால்
எல்லோருடைய செய்கையையும்
பொறுத்துக்கொள்ளத்தான்
வேண்டுமா ?

வயதானால்
சிறியவர்களின் எல்லா
நடத்தைகளையும்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா ?

வயதானால்
நோய் வந்துவிட்டால்
உடனே செத்துத்தான்
ஆகவேண்டுமா ?

வயதானால்
வாழ்வில் நடைப்பிணமாய்
வாழ்ந்தாகவேண்டுமா ?



வயதானால் என்ன ?
உடல் பலம் போனால் என்ன ?



வயதானால் புலம்பக்கூடாதா ?
வயதானால் அழக்கூடாதா ?
வயதானால் ஒதுங்கவேண்டுமா ?



வயதானால் வைத்தியம்
செய்துகொள்ளக்கூடாதா ?



வயதானவர்கள் பாரம் அல்ல . . .



நம் கையில் இருக்கும் பொக்கிஷம் !

பொன் முட்டையிடும் வாத்து . . .

உனக்கு க்ருஷ்ண ஆசிர்வாதம்
என்னும் பொன் முட்டை தரும் வாத்து !

உனக்கு பக்குவம் என்னும்
பொன் முட்டை தரும் வாத்து !

உனக்கு தைரியம் என்னும்
பொன் முட்டை தரும் வாத்து !

முதுமையை நீ
அடையும் முன்பு
உனக்கு அதை
புரியவைக்கும் பொக்கிஷம் !

முதுமை உனக்கும் உண்டு !
முதுமை எனக்கும் உண்டு !

நாளை நமக்கும் உடல் பலகீனம் உண்டு !

நாளை நமக்கும் வியாதி உண்டு !

நாளை நமக்கும் தளர்ச்சி உண்டு !

நாளை நமக்கும் மரணப் படுக்கை உண்டு !

நாளை நமக்கும் முடியாத்தனம் உண்டு !

இளைஞர்களே ஜாக்கிரதை . . .

முதியவரை நீ அவமதித்தால்
உன்னை முதுமை தண்டிக்கும் !
உன் முதுமை உன்னை தண்டிக்கும் !
தண்டித்தே தீரும் . . .

விடாது உன் முதுமை . . .

ஜாக்கிரதை . . .

Read more...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இந்துவின் அழுகை !

ராதேக்ருஷ்ணா
 
 
வரதராஜா . . .
மதமாற்றத்தை தடை செய் !
 
ரங்கராஜா . . .
மதமாற்றத்தை தடுத்து நிறுத்து !
 
ஸ்ரீநிவாஸா . . .
மதம் மாறினவர்களை சரி செய் !
 
பாண்டுரங்கா . . .
மதம் மாற்றுபவர்களை அடக்கி வை !
 
த்வாரகாதீசா . . .
மதம் மாற்றும் பணத்தை அழித்துப் போடு !
 
பார்த்தசாரதி . . .
மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வா !
 
குருவாயூரப்பா . . .
மதம் மாறுதல் துரோகம் என்று புரிய வை !

பத்மநாபா . . .
இந்து மதத்தை காக்க உடனே வேட்டையாடு !
 
நம் பாரதத்தைக் காத்திடுங்கள் . . .
ஒரு இந்து குழந்தையின் அழுகையிது !


Read more...

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

வைத்தியரே . . .


ராதேக்ருஷ்ணா

வைத்தியரே . . .
என் வியாதிகளைச்
சொல்கிறேன் . . .

பிறகு என்ன மருந்தோ
கொடுங்கள் . . .

என்னை அஹம்பாவ
வ்யாதி படுத்தி எடுக்கிறது !

எனக்கு தற்பெருமை
மிகவும் அதிகமாக இருக்கிறது !



எனக்கு எல்லையில்லாத
காமம் பாடாய் படுத்துகிறது !

இரவு பகல் என்றில்லாமல்
கோபம் என்னை ஆட்டிவைக்கிறது !

நாள் கிழமை என்று பாராமல்
பொறாமை என்னை ஆள்கிறது !

இடம் பொருள் பாராமல்
வெறுப்பு என்னை வாட்டி வதைக்கிறது !

உடல் ஒரு காரியத்தில்
ஈடுபடும்போது மனம் வேறோரிடத்தில்
அலை பாய்கிறது !

ஆசைக்கு எல்லையில்லாமல்
அது இஷ்டப்படி செல்கிறது !

இந்த வியாதிகளினால்
நான் படும் பாட்டை என்னால்
உள்ளபடி சொல்லமுடியவில்லை !

இந்த வியாதிகளை நான் சொன்னால்
மற்றவர்கள் கேலியாய் சிரிக்கின்றனர் !

பல வைத்தியரைப் பார்த்தேன் . . .

எல்லோரும் என் உடலுக்கு
மருத்துவம் செய்கிறார்கள் . . .

ஆனால் நீர் ஒருவரே
உடல்,உள்ளம்,ஆத்மா
என்ற மூன்றிர்க்கும் வைத்தியம்
செய்வதாய் கேள்விப்பட்டேன் . . .

அதனால் உம்மைக் கண்டு
என் வியாதிகளைச் சொல்லி
மருந்து வாங்க வந்தேன் . . .

வைத்தியரே . . .
வயதான வைத்தியரே . . .
வீரராகவ வைத்தியரே . . .

என் வியாதிகளுக்கு
ஒரே மருந்து தாரும் . . .
சுலபமான மருந்தாயிருக்கட்டும் . . .
செலவில்லாத மருந்தாயிருக்கட்டும் . . .

நான் பரம ஏழை . . .
என்னிடத்தில் நிறைய தனமில்லை . . .

வைத்தியர் வீரராகவர் சொன்னார் . . .

"உன் வியாதிகளுக்கு ஒரே மருந்து . . .
என்னிடம் சரணடை "

அடியேன் சொன்னேன் . . .
"ஆஹா . . .அற்புதமான மருந்து"
இவ்வளவு நாள் இது தெரியவில்லையே . . .

சரி பரவாயில்லை . . .

இதோ சாப்பிட்டுவிட்டேன் என் மருந்தை . . .

வீரராகவா . . .
உன்னிடம் சரணடைந்தேன் . . .

என் வியாதிகள் தீர்ந்தது . . .

இப்போது நான் சுகமாயிருக்கிறேன் . . .

நன்றி . . .வைத்திய வீரராகவா . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP