ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பீஷ்மா . . .

ராதேக்ருஷ்ணா

பீஷ்மாஷ்டமி . . .
பீஷ்மரின் கடைசி நாள் !

பீஷ்மர் இந்த உலகை விட்டு
தன் வீர உடலை விட்டு
வைகுந்தம் அடைந்த நாள் இன்று !

பீஷ்மா . . .
எனக்கு உன்னைப் போல்
வைராக்கியமில்லை . . .

பீஷ்மா . . .
எனக்கு உன்னைப் போல்
சஹஸ்ர நாமம் சொல்லவராது . . .



பீஷ்மா . . .
எனக்கு உன்னைப் போல்
க்ருஷ்ணனை ஜெயிக்கமுடியாது . . .

பீஷ்மா . . .
என்னால் உன்னைப் போல்
தியாகம் செய்ய முடியாது . . .


பீஷ்மா . . .
என்னால் உன்னைப் போல்
அம்புப்படுக்கையில் படுக்கமுடியாது . . .


பீஷ்மா . . .
என்னால் உன்னைப் போல்
க்ருஷ்ணனை வசப்படுத்தமுடியாது . . .


பீஷ்மா . . .
என்னால் முடிந்தது இது தான் . . .
உன்னை நமஸ்காரம் செய்கிறேன் . . .

நீ அடைந்ததை எல்லாம்
நான் அடைய எனக்கு
ஆசீர்வாதம் செய் . . .



உன் க்ருஷ்ணனிடம்
என்னைச் சேர்த்துவிடு . . .



உன் க்ருஷ்ணனுக்கு
என்னை அர்ப்பித்துவிடு . . .

உன் க்ருஷ்ணனிடம்
எனக்கு சிபாரிசு செய் . . .

பீஷ்மா . . .
உன்னைப் போல் நானும்
க்ருஷ்ணனை அந்திமகாலத்தில்
தரிசிக்க அருள் செய் . . .



எனக்கு ஒரு தகுதியுமில்லை . . .



ஆனால் உன் தகுதியை
நான் நம்புகிறேன் . . .



இந்தக் குழந்தையை கரையேற்று ! ! !

Read more...

திங்கள், 30 ஜனவரி, 2012

உன் ஆசைப்படி . . .


ராதேக்ருஷ்ணா


ஜெய் ஸ்ரீ பூவராஹா . . .
ஜெய் ஸ்ரீ லக்ஷ்மி வராஹா . . .
ஜெய் ஸ்ரீ ஆதி வராஹா . . .


ஜெய் ஸ்ரீ திருவிடவெந்தை வராஹா . . .


வராஹ மூர்த்தியே . . .
உமக்கு நமஸ்காரம் ! ! !

நீ மட்டுமே இந்த பூமிக்கு
சொந்தக்காரன் . . .


நாங்கள் எல்லோரும்
இங்கே வாடகைக்கு
வாழ்கின்றோம் . . .


எங்கள் இஷ்டப்படி
வாழ்கின்றோம் . . .


நாங்கள் யாரும்
உன் இஷ்டப்படி வாழ்வதில்லை !


எங்களை மன்னித்துவிடு . . .


ஒரு நாள் அஹம்பாவத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் தற்பெருமையோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் பயத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் கோபத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் குழப்பத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் துன்பத்தோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் சண்டையோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் வெட்டியாய்
வாழ்கிறோம் . . .

ஒரு நாள் உற்சாகத்தோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் வெறுப்போடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் காமத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் பொறாமையில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் புலம்பலில்
வாழ்கிறோம் . . .


மறந்து போய் சில நாள்
பக்தியோடு வாழ்கிறோம் . . .


ஏதோ சில நாள்
நாமஜபத்தோடு வாழ்கிறோம் . . .


எங்கள் வாழ்க்கையை
நாங்கள் மதிக்கவுமில்லை . . .
கொண்டாடுவதுமில்லை . . .
உபயோகப்படுத்துவதுமில்லை . . .


ஆனாலும் ஹே பூவராஹா . . .
உன் பூமியில் எங்களுக்கு
வாழும் அதிகாரம் தந்திருக்கிறாய் . . .


உனக்கு எப்படி நன்றி
சொல்வது என்று
எனக்குத் தெரியவில்லை . . .


உன் ஆசைப்படி ஒரு
நாளாவது நான் இந்த
வாழ்வில் வாழ ஆசி கூறு . . .

உன் ஆசை என் ஆசையாகட்டும் !

 அப்பொழுது தான் உன் மஹிமை
எனக்குப் புரியும் !



Read more...

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

நிரந்தர வீடு . . .

ராதேக்ருஷ்ணா
வீடு . . .
நான் சொன்ன வீடுகள் . . .
உனக்குப் புரிந்ததோ,
இல்லையோ . . .
நான் காலி செய்த வீடுகள் . . .
உனக்குத் தெரிந்ததுதான் . . .
நீயும் இது மாதிரி
நிறைய வீடுகளை
காலி செய்து விட்டாய் . . .
வீடு என்று சொன்னது
உடலை . . .

முதலில் நான் இருந்த வீடு
க்ருஷ்ணனோடு
பரமானந்தம் என்னும் வீடு !
அதைத் தான் விட்டுவிட்டேன் . . .

பிறகு நான் அடைந்த வீடு
ஒரு பூச்சியின் உடல் . . .
பல்லி போன்ற பெரிய
ஜந்துக்களுக்கு உணவாக
ஆனதால் அதை காலி செய்தேன் !

அடுத்ததாக நான் அடைந்த வீடு
பன்றியின் சரீரம் . . .
சாக்கடையில் வாழ்க்கை . . .
நோயினால் அந்த வீட்டை
நான் காலி செய்தேன் !

அடுத்து நான் அடைந்த வீடு
பறவையின் சரீரம் . . .
நிச்சயம் மரணம் எல்லா
உடலுக்கும் உண்டு . . .
அதனால் பறவை உடலை
விட்டு காலி செய்தேன் !

அதன்பிறகு எனக்கு
மிருக உடல் கிடைத்தது . . .
மிருகங்களுக்குள்ளே
சண்டையினால் அந்த உடலை
விட்டு காலி செய்தேன் !

இப்படியாகச் சுற்றி அலைந்த நான்
மரமாக,செடியாக,கொடியாக
ஆசைப்பட்டு அதுவாக ஆனேன் !
இயற்கையின் வேகத்தில்
அந்த உடலும் நஷ்டம் ஆனது !
இப்படி பல உடல் என்னும்
வீட்டில் வாழ்ந்து இறந்து
சுற்றிக்கொண்டிருந்தேன் ! ! !

க்ருஷ்ணன் தன் கருணையினால்
என்னை மனித உடலில்
வாழ வாய்ப்பு தந்தான் !

இந்த மனித உடல் குருவின்
ப்ரசாதத்தால் எனக்குக் கிடைத்தது !

நாமஜபம் விடாது சொன்னால்
நிச்சயம் நான் பரமானந்தம்
என்னும் என் பழைய வீட்டை
சீக்கிரம் அடைந்து விடுவேன் . . .

இதுவே நான் சொன்ன
வீட்டை காலி செய் . . .

இப்பொழுது புரிந்ததா . . .

நீயும் நானும் ஆத்மா . . .

நாம் பல பல உடல்களில்
சுற்றிக்கொண்டிருந்தோம் . . .

இன்று இங்கே மனிதராய்
வாழ்கிறோம் . . .

சீக்கிரம் நாம் பரமானந்தம்
என்னும் பழைய வீட்டை
அடைந்தாகவேண்டும் . . .

அதுவே நம் நிரந்தர வீடு . . .

அதுவே நிம்மதியான வீடு . . .
முழித்துக்கொள்  . . .
ஆயத்தப்படுத்திக்கொள்  . . .
அடைந்தே தீருவோம் . . .


Read more...

சனி, 28 ஜனவரி, 2012

வீட்டை காலி செய் . . .

ராதேக்ருஷ்ணா

வீடு . . .
வீட்டை காலி செய் . . .

எத்தனை வீட்டை காலி செய்வது  ?

முதலில் ஒரு அற்புதமான
வீட்டில் நிம்மதியாய் இருந்தேன் . . .
ஏனோ அதை விட்டேன் !
நான் செய்த பெரிய தவறு ! ! !


பிறகு ஒரு சிறிய வீடு
கிடைத்தது . . .
சுகமாய் இருந்தது !
சில பலசாலிகள்
என்னைப் பாடாய் படுத்தினர் !
வீட்டைக் காலி செய் என்று
என்னை துரத்திவிட்டனர் . . .
அதனால் அந்த வீட்டைக்
காலி செய்தேன் . . .

வேறு ஒரு வீட்டிற்குச்
சென்றேன் . . .
சுற்றிலும் சாக்கடை !
இருப்பினும் எனக்கு மிகவும்
பிடித்திருந்தது . . .
நன்றாக இருந்தேன் . . .
வியாதிகள் என்னை
வீட்டை காலி செய் என்றது . . .
 வேறு வழியில்லாமல்
காலி செய்தேன் . . .


மீண்டும் ஒரு வீட்டிற்கு
மாறினேன் . . .
மரத்தின் மேல் வாழ்க்கை !
ஆகாயமே வழி . . .
வீட்டை காலி செய் என்று
மரணம் எனக்கு உத்தரவிட்டது !
அழுதேன். . .கெஞ்சினேன் . . .
ஒரு பிரயோஜனமுமில்லை . . .
அந்த வீட்டையும் காலி செய்தேன் !


பிறகு காட்டிலே ஒரு வீடு
கிடைத்தது !
ஒவ்வொரு நாளும்
போராட்டம் . . .
இருந்தாலும் பந்துக்களுடன்
ஆனந்தமாய் இருந்தேன் !
பந்துக்களுடன் சண்டை . . .
என்னை அவர்களே
வீட்டை விட்டுத் துரத்தினர் . . .
நொந்துபோய் அந்த வீட்டை
விட்டு வெளியேறினேன் !


இந்த தொந்தரவே வேண்டாம்
என்று ஒரே இடத்தில்
இருக்கும்படியாக,பச்சை
வண்ண வீட்டில் நான்
தனியே வாழ்ந்தேன் . . .
இயற்கையின் வேகத்தில்
என் வீடு காணாமல் போனது . . .
நானும் வீட்டைக் காலி செய்தேன் !




இப்படியே பல வீடுகளைக்
காலி செய்துவிட்டேன் !
நொந்துபோனது தான் மிச்சம் !


எந்த வீடும் நிரந்தரமில்லை . . .
பட்டபிறகே புரிந்தது . . .



மீண்டும் என் பழைய
வீட்டை அடைய நான்
தற்காலிகமாக ஒரு
வீட்டைத் தேடினேன் . . .


ஒரு நல்ல வீடு
கிடைத்திருக்கிறது . . .


இந்த வீட்டை என்னை
நம்பிக் கொடுத்தவர்
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் . . .

இந்த வீட்டிற்க்காக க்ருஷ்ணனிடம்
உத்திரவாதம் கொடுத்தது
சத்குரு . . .


இந்த வீட்டிற்க்கான வாடகை
விடாது நாமஜபம் . . .


நிச்சயம் இந்த வீட்டில்
தங்கி என் பழைய வீட்டைக்
கண்டுபிடித்துவிடுவேன் . . .


என் பழைய வீட்டிற்க்கு
செல்வதற்க்காகவே
நான் இந்த வீட்டில்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .


சீக்கிரம் என் பழைய வீட்டை
நான் அடையவேண்டும் . . .





Read more...

திங்கள், 23 ஜனவரி, 2012

அவன் க்ருபை போதும் . . .

ராதேக்ருஷ்ணா

நான் ஒன்றும் பெரிய
பக்தனில்லை . . .

நான் ஒன்றும் உத்தம
சன்னியாசியில்லை . . .

நான் எல்லாவற்றையும்
வெறுத்த தியாகியுமில்லை . . .

நான் எதையும் விடத்தயாராயிருக்கும்
வைராக்கியசாலியில்லை !

நான் எதையும் தாங்கும்
இதயம் படைத்தவனில்லை !

நான் எப்போதும் பொறுமையைக்
கடைபிடிக்கும் உத்தமனில்லை !



நான் விடாது நாமஜபம்
செய்யும் ஆசையுடையவனில்லை !



நான் எல்லாவற்றையும்
உணர்ந்த ஞானியுமில்லை !



இது தான் என் உண்மை நிலவரம் !

இதையும் தாண்டி
க்ருஷ்ணனை நான் நேசிக்கிறேன்
என்றால் அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
அவன் நாமம் என் வாயில்
வருகிறதென்றால்
அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
உலகம் என்னை க்ருஷ்ண பக்தன்
என்று ஏற்றுக்கொண்டிருக்கிறதென்றால்
அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
நான் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேனென்றால்
அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
நான் ஆனந்தமாயிருக்கிறேன்
என்றால் அது அவன் க்ருபை. . .

இதையும் தாண்டி
நான் தைரியமாய் இந்த உலகில்
வாழ்கின்றேனென்றால்
அது அவன் க்ருபை . . .

எனக்கு இது போதும் . . .
ஆம் . . .
அவன் க்ருபை போதும் . . .

க்ருஷ்ண க்ருபை போதும் . . .

என்றும் இது போதும் . . .


Read more...

உடன்படிக்கை . . .

ராதேக்ருஷ்ணா

என் மனமே . . .

உன்னிடம் சிலவற்றை
நான் எதிர்பார்க்கிறேன் . . .

அதை நான் உன்னிடமே
உள்ளபடி கூறுகின்றேன் . . . 

என் மனமே அமைதியாயிரு !


என் மனமே அசராமலிரு !


என் மனமே நிதானமாயிரு !


என் மனமே குதூகலமாயிரு !


என் மனமே தைரியமாயிரு !


என் மனமே நம்பிக்கையோடிரு !


என் மனமே அன்போடிரு !

என் மனமே சிரத்தையோடிரு !


என் மனமே விழித்திரு !


என் மனமே தனித்திரு !


என் மனமே பசித்திரு !


என் மனமே திருப்தியாயிரு !


என் மனமே ஆனந்தமாயிரு !


என் மனமே க்ருஷ்ணனோடிரு !


என் மனமே குருவோடிரு !


என் மனமே . . .


நீ சரியாயிருந்தால்
நான் சரியாயிருப்பேன் . . .


நான் சரியாயிருந்தால்
நீ நிம்மதியாயிருப்பாய் . . .


நாம் இருவரும்
ஒருவரை ஒருவர்
சார்ந்தே இருக்கிறோம் . . .


நம்மில் யார்
சரியில்லையென்றாலும்
கஷ்டம் நம் இருவருக்குமே !


அதனால் போட்டி வேண்டாம் . . .


இருவரும் சரியாயிருக்க
இன்று முதல்
உடன்படிக்கை செய்துகொள்வோம் !


இனி நம் வாழ்வு சுகப்படட்டும் ! ! !

Read more...

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இது தேவையா . . .? ? ?

ராதேக்ருஷ்ணா

பயந்து என்ன கண்டாய் ?

குழம்பி என்ன கண்டாய் ?

தப்பிக்க நினைத்து என்ன கண்டாய் ?

சோர்ந்து என்ன கண்டாய் ?

நொந்து என்ன கண்டாய் ?

புலம்பி என்ன கண்டாய் ?

அழுது என்ன கண்டாய் ?


நடுங்கி என்ன கண்டாய் ?


கதறி என்ன கண்டாய் ?

கவலைப்பட்டு என்ன கண்டாய் ?

வெறுத்து என்ன கண்டாய் ?

வயிறெரிந்து என்ன கண்டாய் ?

சபித்து என்ன கண்டாய் ?


பொறாமைப்பட்டு என்ன கண்டாய் ?

என்ன கண்டாய் ?

கொஞ்சம் நினைத்துப் பார் !


நிம்மதியைக் கொன்றாய் . . .


சிரிப்பை இழந்தாய் . . .


நம்பிக்கையை விட்டாய் . . .


ஆரோக்கியத்தை தொலைத்தாய் . . .

நாட்களை வீணடித்தாய் . . .


நேரத்தைக் கெடுத்தாய் . . .


வாழ்வை நரகமாக்கினாய் . . .

இது தேவையா . . .? ? ?

நம்பிக்கையோடு இரு . . .
சிரித்துக் கொண்டே இரு . . .
நாமத்தை ஜபித்துக்கொண்டிரு . . .


வாழ்க்கை தானாக நடக்கும் . . .




Read more...

வெள்ளி, 20 ஜனவரி, 2012

முடிவு உன் கையில் . . .


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா . . .
உன்னிடம் சில உண்மைகளை
நான் சொல்லப்போகிறேன் . . .

க்ருஷ்ணா . . .
அவையெல்லாம் உனக்குத்
தெரிந்ததுதான் . . .
இருந்தாலும் சொல்லவேண்டும்
என்று தோன்றுகிறது . . .


க்ருஷ்ணா . . .
என்னை சரிசெய்ய
என்னால் முடியவில்லை . . .
உனக்கு நான் வேண்டுமானால்
என்னை சரிசெய்துகொள் . . .

க்ருஷ்ணா . . .
என்னால் தவறுகள்
செய்வதை விடமுடியவில்லை . . .
உனக்கு என் தவறுகள் பிடிக்கவில்லை
என்றால் என்னை தடுத்தாட்கொள் . . .

க்ருஷ்ணா . . .
எனக்கு ஆசைகளை
அடக்க முடியவில்லை . . .
உனக்கு என்னைப் பிடிக்குமென்றால்
என்னை ஆசைகளை வெல்ல வை . . .

க்ருஷ்ணா . . .
என்னால் எதையும் ஒழுங்காக
செய்யமுடியவில்லை . . .
நீ தான் என்னை ஒழுங்காக
எல்லாவற்றையும் செய்ய வைக்கவேண்டும் !


க்ருஷ்ணா . . .
எனக்கு ஒரு பொறுப்புமில்லை . . .


க்ருஷ்ணா . . .
எனக்கு எதிலும் அக்கறையில்லை . . .


க்ருஷ்ணா . . .
நான் வெட்டியாய் வாழ்கிறேன் . . .


க்ருஷ்ணா . . .
நான் இன்னும் உருப்படவில்லை . . .


க்ருஷ்ணா . . .
உனக்கு வேண்டுமானால்
என்னை சரி செய்துகொள் . . .


க்ருஷ்ணா . . .
உன்னைத் தவிர யாராலும்
என்னை சரிசெய்ய முடியாது . . .


சரி செய்தால் உனக்கு சந்தோஷம் . . .


இல்லையென்றால் நான்
இப்படியேதான் வாழ்ந்துகொண்டிருப்பேன் . . .


இது உனக்கும் தெரியும் !
எனக்கும் தெரியும் !


இனி முடிவு உன் கையில் . . .



Read more...

வியாழன், 19 ஜனவரி, 2012

கருணை காட்டுங்கள் . . .

ராதேக்ருஷ்ணா



நெஞ்சே ! ராமன் சொல்வதைக் கேள் !
மனமே ! க்ருஷ்ணன் சொல்வதைக் கேள் !
புத்தியே ! குரு சொல்வதைக் கேள் !

தலையே ! பஜனைக்கு ஏற்றபடி ஆடு !

கண்களே ! சூர்தாசர் கண்டதைக் காண் !
 
   காதுகளே ! சுகப்ரும்மம் சொல்வதைக் கேள் !

மூக்கே ! திருத்துழாயின் வாசனையை நுகர் !

நாக்கே ! குலசேகரர் சொல்வதைச் செய் !

வாயே ! பகவத் ப்ரசாதத்தைச் சாப்பிடு !

தோள்களே ! பகவானின் பல்லக்கை தூக்கு !

கைகளே ! பாகவத கைங்கர்யம் செய் !

விரல்களே ! பாண்டுரங்கனைத் தடவு !

தொடைகளே ! கண்ணனைத் தாங்கு !

கால்களே ! சத்சங்கத்திற்கு மட்டுமே நட !

என் உடலே . . .
கொஞ்சம் ஒத்துழை . . .


என் இந்திரியங்களே . . .
கொஞ்சம் உதவி செய்யுங்கள் . . .


என் மனமே . . .
கொஞ்சம் தயவு காட்டு . . .


என் நெஞ்சே . . .
கொஞ்சம் வாழ வை . . .

என் புத்தியே . . .
கொஞ்சம் சொல்படி கேள் . . .


நீங்களே உதவவில்லை
என்றால்,
இந்த உலகில் வேறு யார்தான்
எனக்கு உதவமுடியும் . . .


தயவு செய்து உதவுங்கள் . . .


உங்களிடம் மாட்டிக்கொண்ட
ஒரு பாவப்பட்ட மனிதனின்
கெஞ்சலைக் கொஞ்சம் கேளுங்கள் . . .


கருணை காட்டுங்கள் . . .



Read more...

செவ்வாய், 17 ஜனவரி, 2012

உலக அதிசயம் . . .

ராதேக்ருஷ்ணா


மனிதருக்காக ஏங்கினால்
நீ ஒரு பைத்தியம் . . .

மனிதரை நம்பினால்
நீ ஒரு பைத்தியம் . . .

மனிதரிடம் எதிர்பார்த்தால்
நீ ஒரு பைத்தியம் . . .

மனிதரிடம் அன்பைத் தேடினால்
நீ ஒரு பைத்தியம் . . .

மனிதருக்காக் காத்திருந்தால்
நீ ஒரு பைத்தியம் . . .

மனிதரிடம் உண்மையை
எதிர்பார்த்தால்
நீ ஒரு பைத்தியம் . . .

மனிதரிடம் அக்கறையை
எதிர்பார்த்தால்
நீ ஒரு பைத்தியம் . . .


மனிதரிடம் உதவியை
எதிர்பார்த்தால்
நீ ஒரு பைத்தியம் . . .


மனிதரிடம் மரியாதையை
எதிர்பார்த்தால்
நீ ஒரு பைத்தியம் . . .


மனிதரிடம் நேர்மையை
எதிர்பார்த்தால்
நீ ஒரு பைத்தியம் . . .


மனிதரிடம் நீ
எதை எதிர்பார்த்தாலும்
உனக்கு துக்கமே . . .


அவர்களாக நல்லவராய்
இருந்தால் சந்தோஷப்படு . . .


அதுவும் அவர்கள் அப்படியே
இருப்பார்கள் என நீ நினைத்தால்
சத்தியமாய் நீ ஒரு பைத்தியம் . . .


இன்று உதவி செய்தால்
ஏற்றுக்கொள் . . .


நாளை உன்னை வீசியெறிந்தாலும்
ஏற்றுக்கொள் . . .


யாரும் இங்கே ஒரே மாதிரி
இருப்பதில்லை . . .


இதற்கெல்லாம் நீ
வருத்தப்பட்டால்,
உன் கண்ணன் உனக்குத்
தரும் சந்தோஷத்தை எல்லாம்
யார் அனுபவிப்பது . . .


மனிதா . . . மனிதரைப் புரிந்து கொள் . . .


யார் எப்படியோ,
எதுவும் நீ உள்ளபடி அறியாய் . . .


அதனால் மனிதரைப் பற்றிய
உனது கற்பனைகளை
தூக்கி எறிந்து விட்டு உலகைப் பார் . . .


மனித மிருகம் . . .
சமயத்தில் மனிதனாய் இருக்கும் . . .
சமயத்தில் மிருக மனிதனாயிருக்கும் . . .

மனிதர் கொஞ்சம் மிருகத்தனமாய்
இருந்தால் மனித மிருகம் . . .


மனிதர் கொஞ்சம் மனிதராய்
இருந்தால் மிருக மனிதன் . . .


மனித மிருகம் . . .
என்ன செய்யுமென்று
யாருக்கும் தெரியாது . . .


மனிதமிருகம். . .
மனிதனாய் மட்டுமே வாழ்ந்தால்
அதுவே உலக அதிசயம் . . .


உலகின் பெரிய அதிசயம் . . .


நீ மனித மிருகமா . . .
மிருக மனிதனா . . .


மனிதா . . .
நீயே கண்டுபிடி . . .

Read more...

நீயில்லாமல் நானில்லை . . .

ராதேக்ருஷ்ணா 


என்னை நான் தேடுகிறேன் !


காமத்தில் மூழ்கிவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

கோபத்தில் மாட்டிக்கொண்ட
என்னைத் தேடுகிறேன் !

பயத்தில் ஒளிந்துகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

அஹம்பாவத்தில் சிக்கிகொண்டிருக்கும் 
என்னைத் தேடுகிறேன் !

சுயநலத்தில் சுழன்றுகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

குழப்பத்தில் கரைந்துவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

திடீரென நான் எனக்கு
கிடைக்கிறேன் . . .

பல சமயங்களில் நான்
எனக்குக் கிடைப்பதில்லை . . .

சில சமயங்களில் நான்
எனக்கு ரொம்ப அழகாகக் கிடைக்கிறேன் !

அந்த சில சமயங்கள்
நான் நாமத்தை ஜபிக்கும் நேரங்கள் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நா ஜபித்தால் நான் எனக்குக்
கிடைக்கிறேன் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நான் மறந்தால் என்னை
நான் தேடவேண்டி உள்ளது . . .

எவ்வளவு தேடினாலும்
நான் எனக்குக் கிடைப்பதில்லை . . .

திரும்பவும் நா நாமத்தை
ஜபித்தால் கிடைக்கிறேன் . . .

என்ன அதிசயம் இது . . .

நான் எனக்குக் கிடைக்கும்போது
எத்தனை சந்தோஷம் . . .

நான் என்னைத் தேடும்போது
எத்தனை துக்கம் . . .

கிருஷ்ணா . . .
ஒன்று தெளிவாய் புரிந்தது . . .

நீயில்லாமல் நானில்லை . . .

நீயில்லாத நான் கொடுமை . . .

நீயில்லாத நான் அசிங்கம் . . .

நீயில்லாத நான் கேவலம் . . .

நீயில்லாத நான் பயங்கரம் . . .

நீயில்லாத நான் அழுக்கு . . .

நீயில்லாமல் நான் நானில்லை . . .

நீயில்லாத நான் தேவையில்லை . . .

Read more...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எல்லா உயிர்களும் வாழ்க . . .

ராதேக்ருஷ்ணா
 
 
பொங்கலோ . . . பொங்கல் . . .
சூரியதேவா நீ வாழ்க . . .
 
கோமாதா நீ வாழ்க . . .
காளையே நீ வாழ்க . . .
 
வயல்வெளியே நீ வாழ்க . . .
தண்ணீரே நீ வாழ்க . . .
 
உழவே நீ வாழ்க . . .
பூமிப்பந்தே நீ வாழ்க . . .
 
எல்லா உயிர்களும் வாழ்க . . .
எல்லா சுகமும் பெறுக . . .
 
எல்லா வளமும் எல்லோருக்கும்
உரித்தாகுக . . .
 
எல்லா ஆசீர்வாதமும் கிடைக்க . . .
 
பொங்கலோ . . . பொங்கல் . . .

Read more...

சனி, 14 ஜனவரி, 2012

நல்லதெல்லாம் பிறக்கட்டும்!

ராதேக்ருஷ்ணா

தை பிறந்தால் வழி பிறக்கும் !

பக்தி பிறந்தால் நிம்மதி பிறக்கும் !

நாமஜபம் பிறந்தால் குதூகலம் பிறக்கும் !

பணிவு பிறந்தால் பக்குவம் பிறக்கும் !


நம்பிக்கை பிறந்தால் வெற்றி பிறக்கும் !

ஒற்றுமை பிறந்தால் ஆனந்தம் பிறக்கும் !

அன்பு பிறந்தால் அமைதி பிறக்கும் !

சரணாகதி பிறந்தால் சுதந்திரம் பிறக்கும் !

இன்று முதல் நல்லதெல்லாம் பிறக்கட்டும் !


Read more...

யோகியாய் மாறுவோம் ! ! !


ராதேக்ருஷ்ணா


இந்தப் போகியில்
மதமாற்றம்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
லஞ்ச லாவண்யம்
 எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
ஏழைகளின் ஏழ்மை
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
பெண்களின் கஷ்டங்கள்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
பெற்றோர்களின் மனவருத்தங்கள்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
வயதானவர்களின் கண்ணீர்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
குடும்பச் சண்டைகள்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
இளைஞர்களின் சோம்பேறித்தனம்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
தீவிரவாதிகளின் தீவிரவாதம்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
பாரதத்தின் கஷ்டங்கள்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
எல்லோருடைய மனதின் வலிகள்
எரிந்து சாம்பலாகட்டும் !

இந்தப் போகியில்
நமது பக்தி
ஓங்கி வளரட்டும் !

இந்தப் போகியில்
க்ருஷ்ண நாம ஜபம்
ஓங்கி வளரட்டும் !

இந்தப் போகியில்
நாம் யோகியாய் மாறுவோம் ! ! !


Read more...

வியாழன், 5 ஜனவரி, 2012

ரகசியமாய் . . .


ராதேக்ருஷ்ணா

வைகுண்ட ஏகாதசி . . .

என் கண்ணன் கண் விழிக்கும் நாள் !

ராஜாதி ராஜன் கண் மலரும் நாள் !

கண் விழித்தாயா கண்ணா . . .


ஆனந்தமாய் உறங்கி எழுந்தாயா கண்ணா . . .


கண் விழித்தவுடன் யாரை முதலில்
பார்த்தாய் கண்ணா . . .


இந்த வைகுண்ட ஏகாதசியில்
என்ன விசேஷம் . . .


இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
யாரெல்லாம் வைகுண்டம் வருகிறார் ?


இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
வைகுண்டத்தில் என்ன விசேஷம் ?


இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
யாருக்கெல்லாம் தரிசனம் ?


இந்த வைகுண்ட ஏகாதசியின்
த்வாதசிக்கு எங்கே ஆகாரம் ?


இந்த வைகுண்ட ஏகாதசி
யாரோடு கண் விழிக்கப்போகிறாய் ?

இந்த வைகுண்ட ஏகாதசி இரவுக்கு
யார் வீட்டில் தங்கப்போகிறாய் ?


இந்த வைகுண்ட ஏகாதசியில்
யாருக்கெல்லாம் என்ன தரப்போகிறாய் ?

இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
எங்கெல்லாம் போகப்போகிறாய் ?




ரகசியமாய் எனக்குச் சொல் . . .


நான் யாருக்கும் சொல்லமாட்டேன் . . .



Read more...

செவ்வாய், 3 ஜனவரி, 2012

நீ யாரோ . . .எந்த ஊரோ . . .


ராதேக்ருஷ்ணா

உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமா ?
தெரியாதென்றாலும் குற்றமில்லை !
க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகத் தெரியும் . . .

உனக்கு க்ருஷ்ணனைப் பிடிக்குமா ?
இல்லையென்றாலும் கவலையில்லை !
க்ருஷ்ணனுக்கு உன்னைப் பிடிக்கும் . . .

உனக்கு க்ருஷ்ணனோடு இருக்க ஆசையா ?
இல்லையென்றாலும் பாவமில்லை !
க்ருஷ்ணனுக்கு உன்னோடு இருக்க ஆசை . . .

நீ யாரோ . . .எந்த ஊரோ . . . எந்த மொழியோ . . .
என்ன வயதோ . . .என்ன ஜாதியோ . . .
ஆணோ/பெண்ணோ . . .
நீ க்ருஷ்ணனின் செல்லக்குழந்தை . . .

இந்த நினைவிலேயே வாழ்ந்து பார் . . .

நீ க்ருஷ்ணனின் செல்லக்குழந்தை . . .


Read more...

என்னைப் பார்த்து . . .

ராதேக்ருஷ்ணா

என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார் . . .
"நீ வாழ்வில் முன்னேறமாட்டாய் "
 .....

நான் பதில் சொன்னேன் . . .
"மிகவும் சந்தோஷம்!
அதனால் நிச்சயம் க்ருஷ்ணன்
என்னைக் காப்பாற்றுவான் "


என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார் . . .
"உனக்கு அறிவே கிடையாது"
.....

நான் பதில் சொன்னேன் . . .
"மிகவும் நல்லது !
அதனால் க்ருஷ்ணன்
என் கூடவே இருப்பான் "


என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார் . . .
" நீ ஒரு கோழை"
.....

நான் பதில் சொன்னேன் . . .
"ஆஹா...ரொம்ப சந்தோஷம் !
அதனால் க்ருஷ்ணன் என்னை விட்டு
ஒருபோதும் விலகவே மாட்டான் "

உலகம் என்னைப் பார்த்து
எதையாவது சொல்லும் . . .

நானும் அதற்கு ஏதேனும்
பதில் சொல்வேன் . . .

என் பதில் உலகத்திற்கு புரிந்ததா
இல்லையா எனக்குத் தெரியாது !
எனக்கு அந்தக் கவலையுமில்லை !

என் க்ருஷ்ணனின் அருள்
என்னோடு என்றுமிருக்கிறது . . .
என் க்ருஷ்ணன் என்றும்
என்னைக் காப்பாற்றுகிறான் . . .
என் க்ருஷ்ணன் என்னை
எப்பொழுதும் நேசிக்கிறான் . . .
என் க்ருஷ்ணன் என்னை
ஒரு நாளும் கைவிடமாட்டான் . . .

இதுவே நான் புரிந்துகொண்டது . . .


Read more...

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நாம் ஒன்று நினைத்தால் . . .

ராதேக்ருஷ்ணா
நாம் ஒன்று நினைத்தால்,
தெய்வம் வேறொன்றை நினைக்கிறது !

இதுதான் பொதுவாக
எல்லோரும் சொல்லும் வார்த்தை . . .

ஆனால் இது தவறு . . .

தெய்வம் நல்லதை நினைக்க
நாம் தான் தவறானதைக் கேட்கிறோம் . . .

நாம் ஆசையால் நினைக்கிறோம் . . .
தெய்வம் நல்லதை நினைக்கிறது . . .

நாம் தேவையில்லாததை நினைக்கிறோம் . . .
தெய்வம் தேவையானதை மட்டுமே
நினைக்கிறது . . .

நாம் அகம்பாவத்தில் நினைக்கிறோம் . . .
தெய்வம் அன்போடு நினைக்கிறது . . .

நாம் அவசரமாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் நிதானமாய் நினைக்கிறது . . .

நாம் அசிங்கமாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் அழகாய் நினைக்கிறது . . .

நாம் தவறாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் சரியாய் நினைக்கிறது . . .

நாம் பிடிவாதமாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் உறுதியாய் நினைக்கிறது . . .

நாம் யோசிக்காமல் நினைக்கிறோம் . . .
தெய்வம் யோசித்து நினைக்கிறது . . .

நாம் தடுமாறி நினைக்கிறோம் . . .
தெய்வம் தடுமாற்றமில்லாமல் நினைக்கிறது !
நாம் நினைத்தே வீணானோம் . . .
தெய்வத்தின் அருளை தடுத்தோம் . . .
வாழ்வை பாழாக்கினோம் . . .

அதனால் இனி நாம் நினைக்கவேண்டாம் ...
நாம் நினைப்பதை நிறுத்துவோம் . . .
தெய்வம் மட்டும் இனி நினைக்கட்டும் . . .
அது மட்டுமே நடக்கட்டும் . . .

நாம் தெய்வத்தின் வழியில் செல்வோம் . . .
இன்று முதல் தெய்வமே வழி . . .
இன்று முதல் தெய்வமே கதி . . .
இன்று முதல் தெய்வமே பொறுப்பு . . .

நாம் இருப்போம் சுகமாக . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP