ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜனவரி, 2011

என் அன்புக் காதலா !

ராதேக்ருஷ்ணா

என் அன்பு க்ருஷ்ணனுக்கு !
சாக்ஷாத் மன்மத மன்மதனுக்கு !
கரு நீல கட்டழகனுக்கு !

ஒரு தாசியின் காதல் கடிதம் !
ரகசியமாய் ஒரு காதல் கடிதம் !
வெட்கத்தைவிட்டு எழுதும் கடிதம் !

 க்ருஷ்ணா . . .
உன்னையே நம்புகின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னையே நேசிக்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னையே தொழுகின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னிடமே கேட்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னிடமே பேசுகின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னையே நினைக்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
 உன்னிடமே யாசிக்கின்றேன் !

க்ருஷ்ணா . . .
உன்னிடத்தில் கதறுகின்றேன் !

க்ருஷ்ணா . . .க்ருஷ்ணா. . .க்ருஷ்ணா . . .

என்னவென்று சொல்வேனடா என் கண்ணே !
உன்னையே காதலிக்கிறேன் . . .

இந்தக் கோபிக்காக
உன்னிடம் தூது செல்ல யாருமில்லை . . .

அதனால் என்னையே உன்னிடம்
தூது அனுப்பினேன் . . .

ஆனால் உன்னிடம் வந்த நான்
என்னை மறந்துவிட்டேன் . . .

அதனால் திரும்பவும் தேடினேன் . . .
உன்னிடம் தூது செல்ல ஒருவரை . . .

தேடித் தேடி கடைசியாக
ஒரு நல்ல தூதுவன் கிடைத்தான் . . .


அவனை நான் உனக்கு
அறிமுகப்படுத்துகிறேன் . . . 


அவன் பஞ்சபாண்டவருக்காகத்
தூது சென்றவன் . . .
த்வாரகையின் நாதன் !
ஸ்ரீமதி ருக்மிணியின் கணவன் !
தேவகியின் பிள்ளை !
யசோதையின் தத்துப்பிள்ளை !
வசுதேவரின் தவப்புதல்வன் !
நந்தகோபரின் அன்புச்செல்வன் !
குழலூவதில் மன்னன் !
வெண்ணை திருடுவதில் சமர்த்தன் !
மாடு மேய்ப்பதில் கெட்டிக்காரன் !
பெண்களை அழவைப்பதில் ப்ரியன் !
நம்பினவரைக் காப்பதில் தவறாதவன் !
உடல் வண்ணத்தில் கருப்பன் !
பொய் சொல்பவர்களின் ராஜன் !
காக்க வைப்பதில் முதல்வன் !
காதலை ரசிக்கும் ரசிகன் !
உபதேசிப்பதில் ஜகத்திற்கு ஆசார்யன் !
ராதிகாவின் ப்ரேம நாயகன் !
 கோபர்களைக் காக்கும் தலைவன் !
ராச நாட்டியத்தில் ராஜாதி ராஜன் !
ஏங்க வைப்பதில் சூரன் !
அனாதைகளின் அன்பன் !
தீனர்களின் தோழன் !
உள்ளத்தைக் கொள்ளையடிப்பதில் கள்ளழகன் ! 
மொத்தத்தில் சகலகலா வல்லவன் ! 
  
என் காதலை நான் இவனிடமே
சொல்லி அனுப்புகிறேன் . . . 

இவன் பெயர் கண்ணன் . . .
கோபிகைகளின் காதலன் . . .
அவனுக்கு காதல் என்றால்
ரொம்பவும் பிடிக்குமாம் !

அதனால் அவனை உன்னிடம்
தூது அனுப்புகின்றேன் !
நீயும் இவனிடம் ஜாக்கிரதையாக இரு !
நல்லவன் தான் . . .ஆனாலும்
மிகவும் ஜாக்கிரதையாக இரு !
உன் மனதையும் கொள்ளையடித்துவிடுவான் !
நீ எனக்கு வேண்டும் !
இவனுக்கு அடிமையாகி விடாதே !
ஜாக்கிரதை . . . ஜாக்கிரதை ! 

அந்தக் கண்ணன் இந்தக் கோபியின்
காதலை உன்னிடம் சொல்வான் !

அதைக் கேட்டவுடன் தாமதிக்காமல் வா !

தாமதித்தால் உனக்குத் தான் நஷ்டம் !
ஒரு நல்ல காதலியை இழப்பாய் . . .

 என் அன்புக் காதலா !
உன் காதலினால் வாழும்/வாடும்
ராதிகா தாசி கோபாலவல்லி . . .
 
 

Read more...

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நீயே சாட்சி . . .

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
எனது நல்ல செயல்களுக்கு
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது கெட்ட செயல்களுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நல்ல எண்ணங்களுக்கு
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது கெட்ட எண்ணங்களுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது முயற்சிகளுக்கமும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது சோம்பேறித்தனத்திற்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது தைரியத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பயத்திற்கு
நீயே சாட்சி . . . 
 
க்ருஷ்ணா . . .
எனது முட்டாள்தனத்திற்கு
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது புத்திசாலித்தனத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது காமத்திற்கும்
நீயே சாட்சி . . .
 
க்ருஷ்ணா . . .
எனது பக்திக்கும்
நீயே சாட்சி . . .

 
க்ருஷ்ணா . . .
எனது அறியாமைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது ஞானத்திற்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வருத்தத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது கோபத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பொறாமைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது அன்பிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது தோல்விகளுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வெற்றிகளுக்கும்
நீயே சாட்சி . . . 

க்ருஷ்ணா . . .
எனது அஹம்பாவத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது அழுகைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது சிரிப்பிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நடிப்பிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நகைச்சுவைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நம்பிக்கைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வலிகளுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
என் லக்ஷியங்களுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது உண்மைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பொய்மைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பாபத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது புண்ணியத்திற்க்கும்
நீயே சாட்சி . . . 

க்ருஷ்ணா . . .
எனது மனதிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வாக்குக்கும்
நீயே சாட்சி . . . 

க்ருஷ்ணா . . .
என் வாழ்க்கைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனக்கும் நீயே சாட்சி . . .

அதனால் சாட்சிக்காரா . . .

நீயே சரி செய் . . .

எல்லோரும் சொல்லுவார்கள் . . .
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட,
சண்டைக்காரன் காலில் விழுவது மேல் . . .

ஆனால், அர்ஜுனன் எனக்குச்
சொல்லித்தந்த பாடம் . . .
சண்டைக்காரன் காலில் விழுவதை விட,
சாட்சிக்காரன் காலில் விழுவது மேல் . . .

இதுவல்லவா சுலபம் . . .
ஏனெனில் உலகமே என்னோடு
சண்டைபோடுகிறது . . .
ஏன் ! உலகம் . . .
நானே என்னோடு சண்டையல்லவா
ஒவ்வொரு நிமிடமும்
போட்டுக்கொண்டிருக்கின்றேன் . . .

ஆனால் சாட்சிக்காரன் நீ மட்டும்தானே . . .

அதனால் நான் தீர்மானமாக முடிவெடுத்துவிட்டேன் !

நிரந்தர சாட்சிக்காரனான உன் காலில்
விழுந்தால் தான் இந்தக் கொடிய, சுயநல
சண்டைக்காரர்களிடமிருந்து
நிரந்தரமாகத் தப்பிக்கமுடியும் ! ! !

அதனால் நின்னைச் சரணடைந்தேன் . . .
கண்ணா . . .
நின்னையே சரணடைந்தேன் . . .
நின்னை மட்டுமே சரணடைந்தேன் . . .

காப்பாற்று . . .காப்பாற்று . . .காப்பாற்று . . .

உன்னை சரணடைந்ததற்க்கும்,
க்ருஷ்ணா . . .நீயே சாட்சி . . .

என்னைக் காப்பாற்று என்று அலறுவதற்க்கும்,
க்ருஷ்ணா. . .நீயே சாட்சி . . .

 அதனால் சாட்சிக்காரா !
எல்லோரிடமும் நீயே சாட்சி சொல் . . . 
எமனிடமும் நீயே சாட்சி சொல் . . .

 

Read more...

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அருகதை . . .

ராதேக்ருஷ்ணா

அருகதை உண்டு !
உனக்கு அருகதை உண்டு !   

பூமியில் நீ வாழ
உனக்கு அருகதை உண்டு . . .

உன் வாழ்வை வளமாக்கிக்கொள்ள
உனக்கு அருகதை உண்டு . . .

உன் எண்ணங்களை உயர்த்திக்கொள்ள
உனக்கு அருகதை உண்டு . . .

உன் திறமைகளை வளர்த்துக்கொள்ள
 உனக்கு அருகதை உண்டு . . .

உன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள
உனக்கு அருகதை உண்டு . . .

உன் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெற
உனக்கு அருகதை உண்டு . . .

உன் தோல்விகளை வெற்றிகளாக்கிக் கொள்ள
உனக்கு அருகதை உண்டு . . .

உண்டு . . . 

 

Read more...

வியாழன், 27 ஜனவரி, 2011

உன்னால் முடியுமா ? ! ?

ராதேக்ருஷ்ணா

உன்னால் முடியுமா ? . . .

இந்தக் கேள்வியே அபத்தமானது . . .

உன்னால் முடியும் . . .
உன்னாலும் முடியும் . . .
உன்னால் சத்தியமாக முடியும் . . .
உன்னால் எப்பொழுதும் முடியும் . . .
உன்னால் எல்லா இடங்களிலும் முடியும் . . .
உன்னால் எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியும் . . .

நம்பு . . .நம்பு . . .நம்பு . . .

நம்பிக்கையினால் வீணானவர்கள் எவருமில்லை . . .

ஆனால் அதற்கு முதலில்
உன்னைப் பற்றி நீ
நன்றாக அறிந்துகொள்வது மிக மிக அவசியம் . . .

கொஞ்சம் உன்னை ஆராய்வோம் . . .வா . . . 

நீ ஏன் எப்பொழுதும்
உன்னைப் பற்றி அதிகமாக
கற்பனை செய்துகொள்கிறாய் ?

உன்னைப் பற்றி நீ ஏன்
பல சந்தர்ப்பங்களில்
தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய் ?

உன்னிடம் நீ ஏன்
எப்பொழுதும் அதிகமாகவே
எதிர்பார்க்கிறாய் ?

உன்னைப் பற்றி
மற்றவர்கள் கொண்டாடினால்
ஏன் உன்னையே மறக்கிறாய் ?

மற்றவர் உன்னைக் கேவலப்படுத்தினால்
உன்னையே நீ ஏன் வெறுத்து
ஒதுக்கி, நொந்துபோகிறாய் ?

இவையெல்லாம் சரி செய்துகொள் !

நான் சொல்லாத,உனக்குள்ளிருக்கும்
தேவையில்லாத எண்ணங்களை தூர எறி ! 
 
போதும் . . .
இனியும் என்னால் முடியாது என்று நினைக்காதே !

மற்றவர்களால் எந்த உயர்ந்த
இடத்தை அடைய முடிந்ததோ,
அதை அடைய உனக்குள் சக்தி இருக்கிறது ! 

சாக்கடையில் வாழ்ந்துகொண்டு,
அசிங்கத்தைத் தின்னும் பன்றி கூட
தன்னைப் பற்றி தாழ்வாக நினைப்பதில்லை !

 உன்னால் முடியும்  . . .

இதுவே உனக்கு நீ சொல்லும் மந்திரம் . . .

இதையே ஜபித்துக்கொண்டு வா . . .

க்ருஷ்ணனின் ஆசி உனக்குப்
பூரணமாக இருக்கிறது . . .

முயன்று காட்டு . . .
வென்று காட்டு . . . 
வாழ்ந்து காட்டு . . .


Read more...

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இந்து . . .

ராதேக்ருஷ்ணா

இந்து . . .

இதை மறக்காதே . . .

உனக்கு க்ருஷ்ணனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு நாராயணனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு ப்ரும்மதேவனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . . 

உனக்கு சிவனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு முருகனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு விநாயகரைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு காளியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு லக்ஷ்மிதேவியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு சரஸ்வதி தேவியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . . 

உனக்கு இந்திரனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு நவக்ரஹங்களைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு சூரியனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு ஐயப்பனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு ஆஞ்சநேயரைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு சுடலை மாட சாமியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு எல்லை ஐயனாரைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . . 

நீ ஸ்ரீ வைஷ்ணவனாயினும்,
முதலில் இந்து . . .

நீ வீர சைவமாயிருப்பினும்,
முதலில் இந்து . . . 
 
 நீ அத்வைதியாயினும்,
முதலில் இந்து . . .

நீ விசிஷ்டாத்வைதியாயினும்,
முதலில் இந்து . . .

நீ த்வைதியாயினும்,
முதலில் இந்து . . .

அதிகமாகச் சொல்ல என்ன அவசியம் ? 

நீ இந்து மதத்தின் எந்தப் பிரிவிலிருந்தாலும்
நீ முதலில் இந்துவே . . .

இதுதான் நம் அனைவரின் முதல் அடையாளம் . . . 

நீ இந்து . . .
ஒரு நாளும் இதை மறக்காதே . . .

இதை மறந்ததால் தான்
நமக்குள் பல குழப்பங்கள் . . .

இதை மறந்ததால் தான்
இன்று மத மாற்றங்கள் . . .

இனியும் நமக்குள் பேதமில்லை . . .

இனி நாம் முதலில் இந்து . . .
பிறகுதான் . . .
தெய்வ நம்பிக்கையைக் கொண்டு
அடையாளங்கள் . . .

நீ இந்து . . .
நான் இந்து . . .
நாம் இந்து . . .

இதுவே நமது தாரக மந்திரமாகட்டும் . . .



Read more...

சனி, 22 ஜனவரி, 2011

திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

ராதேக்ருஷ்ணா



திருமழிசை ஆழ்வார்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

சுதர்சன சக்கரத்தின் அம்சமாக வந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !
  
தை மகத்தில் பிண்டாரூபமாய் அவதரித்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !
 
பார்கவ முனி குமாரரின்
 திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

கனகாங்கியின் செல்லக் குமாரனின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருமழிசையின் தலைவன்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

ஜகந்நாதனின் கருணைக் குழந்தையின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருவாளனின் தத்துப் பிள்ளையின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

கணிகண்ணனின் சதாசார்யரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

பேயாழ்வாரின் சத்சிஷ்யரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருவல்லிக்கேணியில் யோகத்திலிருந்த யோகியின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

சிவபெருமானால் பக்திசாரரான பக்தரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

முதலாழ்வார்களுக்கு எதிரொலி தந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் ! 

கிழவிக்கும் யௌவனம் தந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

பெருமாளை சொன்ன வண்ணம் செய்வித்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

பிராமணர்களுக்கு வேதத்தை புரியவைத்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் ! 

இதயத்தில் திருப்பாற்கடலை காட்டியவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

  குடந்தையுள் கிடந்தவனை எழவைத்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருச்சந்தவிருத்தம் தந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

நான்முகன் திருவந்தாதி பாடினவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

  திருக்குடந்தையில் பரமபதித்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருமழிசை ஆழ்வார்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

 

Read more...

வெள்ளி, 21 ஜனவரி, 2011

நான் ஒரு கருவி . . .

ராதேக்ருஷ்ணா

நான் ஒரு கருவி . . .

நிச்சயம் நான் ஒரு கருவி மட்டுமே . . .

இதில் துளியும் சந்தேகம் இல்லை . . .

இந்த உடம்பிலிருந்து நடக்கும்
அத்தனை விதமான நல்லவைகளுக்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே. . .

இந்த மனதில் உண்டாகும்
சகல விதமான அற்புதமான எண்ணங்களுக்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

இந்த வாயிலிருந்து வரும்
உத்தமமான அன்பு வார்த்தைகள் அனைத்திற்க்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

இந்த கைகள் செய்யும் அற்புதமான
காரியங்களுக்கும்,உதவிகளுக்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

இந்த மூளையின் அற்புதமான
நல்ல சிந்தனைகள் அனைத்திற்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

சத்தியம் . . .
எல்லா நல்லவைக்கும் கண்ணனே காரணம் . . .
 நான் ஒரு கருவி மட்டுமே . . .

அதனால் மனமே .  .  ,
நீ என்னை ஏமாற்றப்பார்க்காதே . . .

என்னால் நடைபெறும் 
எல்லா கெட்டவைகளுக்கு மட்டுமே
நான் பொறுப்பாளி . . .

அதனால் ஹே மனமே !
 என்னை ஏமாற்றி
அகம்பாவக்குழியில் இட்டு
புதைத்துவிடாதே . . .

நான் ஒரு கருவி மட்டுமே . . .
இதை கண்ணன் எனக்குப் புரியவைத்துவிட்டான் . . .
நிச்சயம் நான் உன்னிடம் ஏமாறவேமாட்டேன் . . .

கண்ணன் நிச்சயமாக என்னை
உன்னிடம் ஏமாறவிடமாட்டான் . . .

நான் ஒரு கருவி . . .
நான் ஒரு கருவி மட்டுமே . . .

நான் ஒரு கருவி தான் . . .
இந்தக் கருவி ஒழுங்காகயில்லை என்றால்
கண்ணன் வேறு ஒரு கருவியைக் கொண்டு
நல்லவைகளை செய்துமுடிப்பான் . . .

நான் கண்ணன் கையில்
நல்ல கருவியாக இருக்கும் வரை
எனக்கு நல்லதே . . .

கண்ணா . . .
என்றும் உனக்கு ஏற்ற
நல்ல கருவியாக என்னை வைத்துக்கொள் . . .

இந்தக் கருவி சரியில்லையென்றால்
சரி செய்து வைத்துக்கொள் . . .

மனமே . . .
மீண்டும் சொல்கிறேன் . . .
நான் ஒரு கருவி . . .
கர்த்தா கண்ணனே . . .
நான் அல்லவே அல்ல . . .

நான் ஒரு கருவி மட்டுமே . . .

 

Read more...

புதன், 19 ஜனவரி, 2011

எம்பார் கோவிந்தர் . . .

ராதேக்ருஷ்ணா

எம்பார் கோவிந்தர் . . .

அன்றொரு நாள் இதே நாளில்
[தை புனர்வசு, 1021ம் வருடம்]
ஸ்ரீ வைஷ்ணவம் பெற்ற தவப் பிள்ளை ! 


ஸ்வாமி இராமானுஜரின் சித்திப் பிள்ளை !

மழலை மங்கலத்தின் செல்லப் பிள்ளை !

தை புனர்வசு பெற்றெடுத்த முத்துப் பிள்ளை !

பெரிய திருமலை நம்பியின் சகோதரி பிள்ளை !

கருடாழ்வாரின் அம்சத்தோடு பிறந்த உத்தமப் பிள்ளை !

விந்திய மலைக்காட்டில் ராமானுஜரைக் காத்த பிள்ளை !

கங்கையில் லிங்கம் கை கொணர்ந்த பிள்ளை !

சிவ பூஜை செய்த ஸ்ரீ வைஷ்ணவப் பிள்ளை !

 திருமலை நம்பியால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பிள்ளை !

குருவின் படுக்கையில் படுத்துறங்கிய பிள்ளை !

பாம்பிற்கும் நல்லது செய்யும் பித்துப் பிள்ளை !

 இராமானுஜரால் தானம் பெறப்பட்ட பிள்ளை !

தனிமையில் மனைவியை அனுபவிக்காத
வைராக்யப் பிள்ளை !

துறவறம் சிறந்த அறம் என்று துறவியான பிள்ளை !

தன் குணங்கள் ஆசார்யரின் கிருபை என்ற பிள்ளை !

தாசியின் வீட்டு வாசலில் தன்னை மறந்திருந்த பிள்ளை !

குலபாத்திரத்திற்க்கும் ராமானுஜ நாமத்தை வைத்த பிள்ளை !

குழந்தைகளின் மேனிக்கும் பரியும் பாசப் பிள்ளை !

சரணாகதி ரக்ஷிக்கும் என்று  ராமானுஜரிடம் வாதிட்ட பிள்ளை !

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு
என்னிதயத்துளதால் இல்லை எனக்கெதிர்,
இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிரென்ற
சத்சிஷ்ய பிள்ளை . . .

ஸ்ரீ ராமானுஜ பாதுகையை தலையில் வைத்து
பெரியாழ்வார் திருமொழிக்கு அர்த்தம்
சொன்ன திவ்யமான பிள்ளை . . .

எம்பெருமானாரின் பெயரைச் சுறுக்கி
எம்பாராக வைத்துக்கொண்ட உரிமைப் பிள்ளை ! 

ஹே பூமா தேவியே . . .
மீண்டும் ஒரு முறை
இந்தப் பவித்ரமான பிள்ளையை
பெற்றெடுத்து எங்களுக்குத் தா . . .


எம்பார் கோவிந்தர் திருவடிகளே
சரணம் . . . சரணம் . . . சரணம் . . .

எம்பார் வம்சத்தாருக்கு
நாங்கள் குற்றேவல் . . .


Read more...

திங்கள், 17 ஜனவரி, 2011

கவலையை மறக்க !



ராதேக்ருஷ்ணா


சிலர் கவலையை மறக்க
குடிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
புகை பிடிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
தொலைக்காட்சி பார்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
திரைப்படம் பார்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
செய்தித்தாள் வாசிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
கதைபுத்தகம் படிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
விளையாடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
வெளியிடங்களுக்குச் செல்வர் . . .

சிலர் கவலையை மறக்க
காலார சிறிது நேரம் நடப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
நன்றாக தூங்குவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
தூக்க மாத்திரை சாப்பிடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
 பெண்களிடம் செல்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
குழந்தைகளை கொஞ்சுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
செடி,கொடிகளை வளர்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
ஜோஸ்யரிடம் வழி கேட்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
விளையாட்டை ரசிப்பார்கள் . . . 

சிலர் கவலையை மறக்க
செல்லப் பிராணிகளை வளர்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பொது சேவை செய்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
எதையாவது எழுதுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
வேலைக்குச் செல்வார்கள் . . .


 இதில் எதையெல்லாம் நீ
செய்கிறாய் என்று குறித்துக்கொள் . . .

அதில் எவையெல்லாம்
பைத்தியக்காரத்தனம் என்பதை தேர்வு செய் . . .

அவைகளை ஒவ்வொன்றாக
விட்டு விடு . . .

கடைசியில் எதுவுமே உன்னிடத்தில்
மிஞ்சாது . . .

இப்பொழுது இன்னும் சிலர்
செய்யும் விஷயங்களைச் சொல்கிறேன் . . .

சிலர் கவலையை மறக்க
கோயிலுக்குச் செல்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பூஜை செய்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பாராயணம் செய்வார்கள் . . . 

சிலர் கவலையை மறக்க
தியானத்தில் ஈடுபடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
  ப்ரார்த்தனை செய்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பகவானின் நாமத்தை ஜபிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
சத்சங்கத்திற்கு செல்வார்கள் . . . 

சிலர் கவலையை பகவானுக்கு
அர்ப்பணம் செய்து விடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
சத்குரு சொல்படி நடப்பார்கள் . . .

இதில் ஒன்றையோ அல்லது
பலவற்றையோ செய்து கொண்டே வா . . .

கவலையென்றால் என்னவென்று
உன் மனம் உன்னைக் கேட்க்கும் . . .

பிறகு நீ உன் மனதிற்கு பதில் சொல் . . .


 

Read more...

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

நானும் ,கண்ணனும் . . .

ராதேக்ருஷ்ணா

நான் : கண்ணா . . .
மாடு மேய்க்கப் போகிறாயா ?

கண்ணன் : ஆமாம் . . .
நீயும் வருகிறாயா ?



நான் : கண்ணா . . .
எனக்கு மாடு மேய்க்கத் தெரியாதே ?

கண்ணன் : கவலை வேண்டாம் . . .
நான் உனக்குச் சொல்லித் தருகிறேன் !



நான் : கண்ணா . . .
எனக்கு பயமாயிருக்கிறதே . . .

கண்ணன் : கவலையே வேண்டாம் . . .
நான் உன்னோடு கூடவே இருக்கின்றேன் !



நான் : கண்ணா . . .
எப்பொழுதும் கூட இருப்பாயா ?

கண்ணன் : [சிரித்துக்கொண்டே]
இதில் என்ன சந்தேகம் ?



நான் : தெரியவில்லை . . .
நீ இருப்பது புரியவில்லை . . .?

கண்ணன் : உனக்குத் தெரிகிறதோ இல்லையோ ?
உனக்குப் புரிகிறதோ இல்லையோ ?
ஆனால் நான் உன்னோடு இருப்பது சத்தியம் . . .



நான் : ஒரு வேளை நான் உன்னை
மறந்துவிட்டால் போய்விடுவாயா?

கண்ணன் : நீயே என்னைத் துரத்தினாலும்
நான் உன்னை விட்டுப் போகமுடியாது . . .



நான் : ஏன் அப்படி ?

கண்ணன் : அது அப்படித்தான்  , , , 
 
 
நான் : அதான்...ஏன் அப்படி ?

கண்ணன் : அது என் சுபாவம் . . .
என்னால் யாரையும் விட்டு விலகமுடியாது . . .



நான் : நான் மிகவும் மோசமானவன் . . .

கண்ணன் : உன்னை நான் சரி செய்வேன் . . .



நான் : என்று நான் சரியாக இருப்பேன் . . .

கண்ணன் : அந்தக் கவலை உனக்கெதற்கு ?



நான் : என்னைப் பற்றி நான் கவலைப்படாமல்
வேறு யார் கவலைப்படுவார்கள் ? ? ?

கண்ணன் : அதற்குத் தான் நானிருக்கிறேனே . . .
உன்னைப் பற்றிக் கவலைப்படவும்,
உன்னைக் காப்பாற்றவும்,
உனது தேவைகளை கவனிக்கவும் நானிருக்க
உனக்கென்ன கவலை . . .


நான் : ஆனாலும் . . . 

கண்ணன் : போதும் உன் அகம்பாவம் . . .
அதை நிறுத்து . . .
நான் இருக்கிறேன் . . .
உன்னைக் காப்பாற்ற . . .

இனி கவலையில்லாமல் இரு . . .


நான் :  {கண்ணீரில் கரைகிறேன்}
இது போதும் கண்ணா . . .
இந்த வார்த்தைக்காகத் தான் ஏங்கினேன்  . . .

கண்ணன் : {என் தோளில் கைபோட்டு}
சரி . . சரி . .வா. . 
மாடு மேய்க்கப் போகலாம் . . .

நான் : {மனதிற்க்குள்}
கண்ணா  . . .என்றும் நீயே கதி எனக்கு . . .

  
 

Read more...

சனி, 15 ஜனவரி, 2011

பொங்கலோ . . . பொங்கல் . . .

ராதேக்ருஷ்ணா

பொங்கல் . . .

இந்தப் பொங்கலில்
பக்தியை அரிசியாக இடுவோம் . . .


இந்தப் பொங்கலில்
ஞானத்தை பானையாக்குவொம் . . .


இந்தப் பொங்கலில்
வைராக்யத்தை தீயாகக் கொள்வோம் . . .


இந்தப் பொங்கலில்
நாமஜபத்தை பாலாக ஊற்றுவோம் . . .


இந்தப் பொங்கலில்
சத்சங்கத்தை மஞ்சள்கொத்தாகக் கட்டுவோம் . . .


இந்தப் பொங்கலில்
பரமானந்தம் பொங்கட்டும் . . .


பொங்கலோ . . .பொங்கல் . . .
பொங்கலோ . . .பொங்கல் . . .
பொங்கலோ . . .பொங்கல் . . .

இந்தப் பொங்கலில்
க்ருஷ்ணனோடு கரும்பு தின்போம் . . .

இந்தப் பொங்கலில்
ராதிகாவோடு பொங்கல் வைப்போம் . . .

இந்தப் பொங்கலில்
கோபர்களோடு மாடுகளைக் குளிப்பாட்டுவோம் . . .

இந்தப் பொங்கலில்
கோபிகைகளோடு கோலம் போடுவோம் . . .

இந்தப் பொங்கலில்
யசோதையோடு கூட்டாஞ்சோறு சமைப்போம் . . .

இந்தப் பொங்கலில்
நந்தகோபரோடு சோறு உண்போம் . . .

இந்தப் பொங்கலில்
ப்ருந்தாவனத்தில் வண்டியில் சுற்றுவோம் . . .
 
இந்தப் பொங்கலில்
பக்தர்களோடு கூடியிருந்து குளிர்வோம் . . .


இந்தப் பொங்கலில்
சத்குருவோடு யமுனையில் குளிப்போம் . . .

இந்தப் பொங்கலில்
பக்தர்களின் பாத தூளியில் புரளுவோம் . . .


இந்தப் பொங்கலில்
எல்லோரும் பக்தராக மாறுவோம் . . .

பொங்கலோ . . .பொங்கல் . . .
பொங்கலோ . . . பொங்கல் . . .
பொங்கலோ . . .பொங்கல் . . .


Read more...

வெள்ளி, 14 ஜனவரி, 2011

புதியன புகுவாய் . . .

ராதேக்ருஷ்ணா
போகி வந்ததா . . .

பழையன கழிந்தாயா ?
புதியன புகுந்தாயா ?

நீ களையாத பழையன
பலவற்றை இங்கே நான் சொல்லவா ?

கோடி ஜன்மாவாக
நீ களையாதது உன்
பழைய அகம்பாவத்தை . . .

பல ஜன்மங்களாக
நீ களையாதது உன்
பழைய சுயநலத்தை . . .

பல வருஷங்களாக
நீ களையாதது உன்
பழைய சந்தேகத்தை . . .

பல பிறப்புகளாக
நீ களையாதது உன்
பழைய பாபங்களை . . .

பல கோடி ஜன்மங்களாக
நீ களையாதது உன்
பழைய கர்ம வினைகளை . . .

பல நாட்களாக 
நீ களையாதது உன்
பழைய சோம்பேறித்தனங்களை . . .

பல பிறவிகளாக
நீ களையாதது உன்
பழைய அறியாமைகளை . . .

பல ஜன்மாக்களாக
நீ களையாதது உன்
பழைய காமத்தை . . .

பல பிறவிகளாக
நீ களையாதது உன்
பழைய கோபத்தை . . .

இப்படி பல
பழைய குப்பைகளை
இன்னும் நீ களையவில்லை . . .

போகி முடிந்துவிட்டதே
என்று நீ நினைக்கிறாயா ?

நாள் முடிந்தால் அந்தப்
பண்டிகை முடிந்ததென யார் சொன்னார் ?

நம் போகிப்பண்டிகை
இன்னும் முடியவில்லை . . .

நீ உடனே உன்னிடம்
இருக்கும் இத்தனை
பழைய விஷயங்களையும்
களைந்து விடு . . .

களைந்து விட்டு வா . . .

பிறகு சொல்கிறேன் . . .

களைந்து விட்டாயா ? ! ?

இப்போது உன் மனம்
வெற்றிடமாக இருக்குமே . . .

எதையெதை எடுத்தாயோ,
அந்தந்த இடங்களில்
வேறு நல்லவற்றை வைப்போம் வா . . .

அகம்பாவத்தை எடுத்த
இடத்தில் பக்தியை வை . . .

சுயநலத்தை எடுத்த
இடத்தில் நாமஜபத்தை வை . . .

சந்தேகத்தை எடுத்த
இடத்தில் நம்பிக்கையை வை . . .

பாபத்தை எடுத்த
இடத்தில் சத்சங்கத்தை வை . . .

கர்ம வினைகளை எடுத்த
இடத்தில் சத்குருவை வை . . .

சோம்பேறித்தனத்தை எடுத்த
இடத்தில் சிரத்தையை வை . . .

அறியாமைகளை எடுத்த
இடத்தில் க்ருஷ்ணனை வை . . .

காமத்தை எடுத்த
இடத்தில் ப்ரேமையை வை . . .

கோபத்தை எடுத்த
இடத்தில் பணிவை வை . . .

இன்னும் எதையெல்லாம்
களைந்தாயோ, அந்த இடங்களில்
பக்தர்களை வை . . .

நிதானமாகச் செய் . . .
அவசரம் ஒன்றுமில்லை . . .

இப்படியே பழையன கழிது,
புதியன புகுவாய் . . .

வாழ்வை வெல்வாய் . . .

இந்தப் பொங்கலில்
ஞானம் பொங்கி வழியட்டும் . . .

Read more...

புதன், 12 ஜனவரி, 2011

யாரால் முடியும் ?

ராதேக்ருஷ்ணா

விவேகம் இருந்தால் அறிவு வளரும் . . .

விவேகம் இருந்தால் பக்தி வரும் . . .

விவேகம் இருந்தால் தைரியம் வரும் . . .

விவேகம் இருந்தால் பலம் அதிகமாகும் . . .

விவேகம் இருந்தால் பண்பு வரும் . . .

விவேகம் இருந்தால் உலகம் உன்னிடம் மயங்கும் . . .

விவேகம் இருந்தால் உலகம் உனக்கு அடிமையாகும் . . .

விவேகம் இருந்தால் நீ வானையும் வளைக்கலாம் . . .

விவேகம் இருந்தால் உன்னை ஜெயிக்கலாம் . . .

விவேகம் இருந்தால் விரோதியும் அடிபணிவான் . . .

விவேகம் இருந்தால் உயிர்கள் உன்னை வணங்கும் . . .

விவேகம் இருந்தால் தெய்வம் நீ சொல்லக் கேட்க்கும் . . .

விவேகம் இருந்தால் உன் வார்த்தை வேதமாகும் . . .

விவேகம் இருந்தால் உலகை நீ மாற்றலாம் . . .

விவேகம் இருந்தால் உன்னைத் தேடிப் புகழ் வரும் . . .

விவேகம் இருந்தால் நீ தெய்வமாகலாம் . . .

விவேகம் இருந்தால் நீ ஆனந்தமாவாய் . . .

உனக்கு விவேகமில்லை என்பது
உனக்கே நன்றாகத் தெரியும் . . .

பிறகு இவையெல்லாம் எப்படி நடக்கும் ?

கவலையே வேண்டாம் . . .
ஒரே வழி . . .

 விவேகானந்தனைப்பிடி . . .

ஸ்வாமி விவேகானந்தரின் வழியைக் கடை பிடி . . .
 
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையைப் படி . . .

விவேகமில்லாதவரைக்
காப்பாற்ற
விவேகானந்தரைத் தவிர
யாரால் முடியும் இந்த புவிதனில் ? ? ?

 

Read more...

சனி, 8 ஜனவரி, 2011

பொறாமை ? ! ?

ராதேக்ருஷ்ணா

பொறாமை  . . .

இந்த பொறாமைக்குச் சமமான
பயங்கரமான ராக்ஷசன்
உலகில் எவருமில்லை . . .

இந்த பொறாமை ஒன்றே
மனிதனின் நிம்மதியைக்
குலைக்கப் போதுமானது . . .

இந்தப் பொறாமையினால் தானே
துரியோதனன் குருக்ஷேத்திர
யுத்தத்திற்கு தயாரானான் . . .

இந்தப் பொறாமையினால் தானே
யாதவப்ரகாசர் ஸ்வாமி இராமானுஜரைக்
கொல்ல முயற்சித்தார் . . .

இந்தப் பொறாமை எத்தனை பேரை
தின்று தீர்த்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை சகோதரர்களை
பிரித்துவைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை குடும்பங்களை
நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை முறை
நம்முடைய மனதை நோகடித்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை முறை
மற்றவரை அவமானப்படுத்த
நம்மைத் தூண்டியிருக்கிறது . . .

இந்தப் பொறாமை எவ்வளவு தடவை
நம்மை அடுத்தவரின் கஷ்டத்தைப் பார்த்து
சந்தோஷமாக சிரிக்கவைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை பலமாக
பலமுறை நம்முடைய ஞானத்தை
அழித்துப்போட்டிருக்கிறது . . .

ஹே பொறாமையே !
என்னை விட்டு ஓடி விடு . . .

ஹே பொறாமையே !
தயவு செய்து என்னை வாழ விடு . . .

ஹே பொறாமையே !
என் நிம்மதியைத் திருடாதே . . .

ஹே பொறாமையே !
என் மனதைக் கெடுக்காதே . . .

ஹே பொறாமையே !
என்னை ராக்ஷசனாக்காதே . . .

ஹே பொறாமையே !
எனது நல்ல சிந்தனைகளைக் கொல்லாதே . . .

ஹே பொறாமையே !
என்னைக் கெடுக்காதே . . .

ஹே பொறாமையே !
என்னை அழித்துவிடாதே . . .

ஹே க்ருஷ்ணா . . .
இந்தப் பொறாமையிடமிருந்து
என்னைக் காப்பாற்றிக்கொள்ள
என்னால் முடியவில்லை . . .

ஹே க்ருஷ்ணா . . .
இந்தப் பொறாமையின்
தீயிலிருந்து என்னை மீட்டு
உன் அருகில் வைத்துக்கொள் . . .

ஹே க்ருஷ்ணா . . .
எனக்கு நன்றாகத் தெரியும் . . .
உனக்கு இந்தப் பொறாமை
துளிகூடப் பிடிக்காது . . .

எனக்கும் இந்தப் பொறாமை
துளிகூடப் பிடிக்கவில்லை . . .

ஆனால் இந்தப் பொறாமைக்கு
என்னை ரொம்பப் பிடித்திருக்கிறது . . .

அதனால் என்னை பூரணமாக
அனுபவித்துக்கொண்டிருக்கிறது . . .

தயவு செய்து நீ என்னை அநுபவி . . .

ஐயோ . . .
இந்தப் பொறாமையை கொன்றுவிடு . . .

என் க்ருஷ்ணா. . .
என்னைக் காப்பாற்று . . .
என்னைக் கரையேற்று . . .

பலகோடி ஜன்மாக்கள்
பொறாமையினால் வீணாகிவிட்டது . . .

இனியும் எனக்கு ஒரு பொறாமை
வேண்டவே வேண்டாம் . . .

பொறாமை இல்லாத மனம்
எனக்கு அருள் செய் இறைவா . . .

 
 

Read more...

வியாழன், 6 ஜனவரி, 2011

க்ருஷ்ணன் ஒரு நாளும் . . .

ராதேக்ருஷ்ணா

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
கைவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
ஒதுக்கமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
ஏமாற்றமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
தோற்கவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நஷ்டப்படவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
வீண் போகவிட மாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
துரோகம் செய்யவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நீங்கமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
வெறுக்கமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
பயமுறுத்தமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
அவமானப்படுத்தமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நொந்துபோக விடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நாஸ்தீகனாக விடமாட்டான் . . .

இத்தனையையும் அடியேன்
என் பக்தியையும், நாமஜபத்தையும் கொண்டு
சொல்லவில்லை . . .

அவனுடைய அற்புதமான கருணையை
நம்பியே சொல்கிறேன் . . .

அவன் கருணையையும்,
அவனையும் நம்பினார் கெடுவதில்லை . . .


Read more...

புதன், 5 ஜனவரி, 2011

துவண்டு போகாதே . . .

ராதேக்ருஷ்ணா

துவண்டு போகாதே . . .
துன்பங்களைக் கண்டு துவண்டு போகாதே . . .

துவண்டு போனால் நீ
விதியின் முன் கோழையாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
மற்றவரின் தயவுக்காக ஏங்குவாய் . . .

துவண்டு போனால் நீ
உன் முன்னே அவமானப்படுவாய் . . .

துவண்டு போனால் நீ
நிகழ்வுகளுக்கு அடிமையாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
இயற்கையின் விதியை மீறிவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
சூழ்நிலைக் கைதியாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
முட்டாளாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
எல்லோரிடமும் தோற்றுவிடுவாய் . . .

 துவண்டு போனால் நீ
கொசுவை விட சிறியதாகிவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
சிறு தூசிக்கும் பயப்படுவாய் . . .

துவண்டு போனால் நீ
பகவானின் கருணையை அறியமாட்டாய் . . .

துவண்டு போனால் நீ
உன் வாழ்க்கையை ரசிக்கமாட்டாய் . . .

துவண்டு போனால் நீ
உன்னையே வெறுத்துவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
உனக்கு வரும் நன்மைகளை தடுத்துவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
உன்னையே இழந்துவிடுவாய் . . .

அதனால்
துவண்டு போகாதே . . .
எந்த நிலையிலும் துவண்டு போகாதே . . .
எதற்க்கும் துவண்டு போகாதே . . .

நீ உன் வாழ்க்கையை வாழாமல்
துவண்டு போனால்,
உன் வாழ்க்கை அழும் . . .

உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேண்டும் . . .

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP