ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஒரே கவலை . . .

ராதேக்ருஷ்ணா


என் வாழ்க்கை
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் உடல்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
 
என் பெற்றோர்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
 
என் படிப்பு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
 
என் திறமை
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . . 
 
என் பலம்
 பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் சக்தி
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
 
என் தைரியம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
 
என் நம்பிக்கை
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
 
என் புத்திசாதுர்யம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் அறிவு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் மனம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் குணம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . . 

என் புலன்கள்  
  பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் குடும்பம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . . 

என் வெற்றி
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . . 

என் சந்தோஷம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் லாபம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் ஆரோக்கியம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் லக்ஷியம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .
  
என் சிரிப்பு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் அழகு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் சேமிப்பு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் ஆடைகள்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் மதிப்பு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் புகழ்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் வசதி
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் சௌகரியங்கள்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் நண்பர்கள்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் பக்தி
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் நாமஜபம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் ஞானம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் வைராக்கியம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் ஐஸ்வர்யம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் குதூகலம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் நுண்ணறிவு
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் குரு
  பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

என் ராதேக்ருஷ்ணாசத்சங்கம்
பத்மநாபர் தந்த ப்ரசாதம் . . .

இத்தனை ப்ரசாதங்கள் தந்துவிட்டான் . . .
இன்னும் தந்துகொண்டேயிருக்கிறான் . . .
இன்னமும் தரப்போகிறான் . . .

இதை உள்ளபடி அனுபவிக்க
எனக்குத் தெரியவில்லையே ? ! ?

இதுதான் என் ஒரே கவலை . . . 

என்ன செய்வேன் நான் ? ? ?

 நீயாவது பதில் சொல்லேன் . . .
 
 

Read more...

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வா ! வா ! தா ! தா !

ராதேக்ருஷ்ணா


சத்குரு சத்குரு வா வா . . .
குழந்தைக்கு பக்தி தா தா !

மீரா மீரா வா வா . . .
குழந்தைக்கு பஜனை தா தா !

சைதன்யா சைதன்யா வா வா . . .
குழந்தைக்கு நாமஜபம் தா தா !

ஆண்டாள் ஆண்டாள் வா வா . . .
குழந்தைக்கு மாலை தா தா !

கோபி கோபி வா வா . . .
குழந்தைக்கு ப்ரேமை தா தா !

மதுரகவி மதுரகவி வா வா . . .
குழந்தைக்கு சடகோபா தா தா !

ராமானுஜா ராமானுஜா வா வா . . .
குழந்தைக்கு சரணாகதி தா தா !

பத்மநாபா பத்மநாபா வா வா . . .
குழந்தைக்கு அனந்தபுரம் தா தா !

ப்ரஹ்லாதா ப்ரஹ்லாதா வா வா . . .
குழந்தைக்கு நரசிம்மா தா தா !

சுதாமா சுதாமா வா வா . . .
குழந்தைக்கு ஸ்நேகம் தா தா !

பார்த்தசாரதி பார்த்தசாரதி வா வா . . .
குழந்தைக்கு கீதை தா தா !

வராஹா வராஹா வா வா . . .
குழந்தைக்கு மடியை தா தா !

ஹயக்ரீவா ஹயக்ரீவா வா வா . . .
குழந்தைக்கு ஞானம் தா தா ! 
  
வரதா வரதா வா வா . . .
குழந்தைக்கு சிரிப்பை தா தா !

ஸ்ரீநிவாசா ஸ்ரீநிவாசா வா வா . . .
குழந்தைக்கு லட்டு தா தா !

ரங்கா ரங்கா வா வா . . .
குழந்தைக்கு மோக்ஷம் தா தா !

வைத்தமாநிதி வைத்தமாநிதி வா வா . . .
குழந்தைக்கு குருபக்தி தா தா ! 

விட்டலா விட்டலா வா வா . . .
குழந்தைக்கு அன்பைத் தா தா !

ஜகந்நாதா ஜகந்நாதா வா வா . . .
குழந்தைக்கு பலம் தா தா !

த்வாரகாதீசா த்வாரகாதீசா வா வா . . .
குழந்தைக்கு சக்தி தா தா !

வ்யாஸா வ்யாஸா வா வா . . .
குழந்தைக்கு வேதம் தா தா ! 

வால்மீகி வால்மீகி வா வா . . .
குழந்தைக்கு ராமாயணம் தா தா !

சுகப்ரும்மா சுகப்ரும்மா வா வா . . .
குழந்தைக்கு பாகவதம் தா தா !

பீஷ்மா பீஷ்மா வா வா . . .
குழந்தைக்கு ஸஹஸ்ரநாமம் தா தா ! 

நாதமுனி நாதமுனி வா வா . . .
குழந்தைக்கு திவ்யப்ரபந்தம் தா தா !

ராகவேந்திரா ராகவேந்திரா வா வா . . .
குழந்தைக்கு வைராக்யம் தா தா ! 

பெண்பிள்ளை பெண்பிள்ளை வா வா . . .
குழந்தைக்கு ரஹஸ்யம் தா தா ! 

நாம்தேவ் நாம்தேவ் வா வா . . .
குழந்தைக்கு அபங்கம் தா தா !

பட்டத்ரி பட்டத்ரி வா வா . . .
குழந்தைக்கு நாராயாணீயம் தா தா !

ஜயதேவா ஜயதேவா வா வா . . .
குழந்தைக்கு அஷ்டபதி தா தா ! 

துளசிதாஸ் துளசிதாள் வா வா . . .
குழந்தைக்கு சாலீசா தா தா !

ஆஞ்சநேயா ஆஞ்சநேயா வா வா . . .
குழந்தைக்கு தைரியம் தா தா ! 

தேவகி தேவகி வா வா . . .
குழந்தைக்கு நம்பிக்கை தா தா !

வசுதேவா வசுதேவா வா வா . . .
குழந்தைக்கு பொறுமை தா தா ! 

யசோதா யசோதா வா வா . . .
குழந்தைக்கு கயிறு தா தா ! 

நந்தகோபா நந்தகோபா வா வா . . .
குழந்தைக்கு ப்ருந்தாவனம் தா தா ! 

ராதே ராதே வா வா . . .
குழந்தைக்கு கிச்சா தா தா !

கிச்சா கிச்சா வா வா . . .
குழந்தைக்கு ராதே தா தா !

    

Read more...

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இன்று விதை . . .

ராதேருஷ்ணா

இன்று விதை . . .

நல்ல நம்பிக்கையை
இன்றே விதை . . .

ஊழலில்லாத பாரதம்
என்னும் ஆசையை இன்றே விதை . . .

பயமில்லாத வாழ்க்கை
என்னும் லக்ஷியத்தை இன்றே விதை . . .

ஆரோக்கியமான உடல்
என்னும் கனவை இன்றே விதை . . .

கவலையில்லாத மனம்
என்னும்  தேவையை இன்றே விதை . . .

ஒளிமயமான எதிர்காலம்
என்ற தைரியத்தை இன்றே விதை . . .

க்ருஷ்ணனிஷ்டப்படி வாழ்க்கை
என்ற ரஹஸ்யத்தை இன்றே விதை . . .

 ஹிந்துஸ்தான் அமையும்
என்ற வைராக்யத்தை இன்றே விதை . . .

விதைத்து விட்டு மறந்து விடு . . . 

ஒரு நாள் முளைக்கும் . . .

சத்தியமாக முளைத்தே தீரும் ! ! !

Read more...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஜோரா சொல்லு . . .

ராதேக்ருஷ்ணா

ஜோரா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

அன்பா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

அழகா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

ஆசையா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

இப்பவே சொல்லு . . .
ராதே ராதே ! ! !

எப்பவும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

இங்கேயும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

அங்கேயும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

எங்கேயும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

ஆடிண்டு சொல்லு . . .
ராதே ராதே ! ! !

பாடிண்டு சொல்லு . . .
ராதே ராதே ! ! !

குதிச்சிண்டு சொல்லு . . .
ராதே ராதே ! ! !

குழந்தையாய் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

ராதே ராதே ! ! !
கண்ணன் வர்றான் . . .

ராதே ராதே ! ! !
ஆனந்தம் தர்றான் . . .

Read more...

ரஹஸ்யம் ! ! !

ராதேக்ருஷ்ணா

இது ஒரு ரஹஸ்யம் . . .

ஆனந்தத்தின் ரஹஸ்யம் !

அன்பின் ரஹஸ்யம் !

விடுதலையின் ரஹஸ்யம் !

வாழ்வின் ரஹஸ்யம் !

உன்னத ரஹஸ்யம் !

பயனுள்ள ரஹஸ்யம் !

வீண்போகாத ரஹஸ்யம் !

மஹாத்மாக்கள் சொன்ன ரஹஸ்யம் !

வாழ்வைக் காக்கும் ரஹஸ்யம் !

வாழ்வளிக்கும் ரஹஸ்யம் !

மரணத்திலும் சுகம் தரும் ரஹஸ்யம் !

மோக்ஷம் தரும் ரஹஸ்யம் !

அது இது தான் !

இன்று முதல்,
"க்ருஷ்ணா . . .
உன்னிஷ்டம் என்னிஷ்டம்"
என்று சொல்லிவிடு . . .

அவ்வளவுதான் . . .

இனி உன் வாழ்வில் எல்லாம் அவனிஷ்டம் !

அவனிஷ்டமே ரொம்பவும் நல்லது . . .


Read more...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

வெளிவேஷம் . . .


ராதேக்ருஷ்ணா




பாரதியே வா . . .
மீண்டும் ஒரு முறை
வீரமாகப் பாடு . . .


காந்தியே வாரும். . .
இன்னொரு சத்தியாக்ரஹத்தை
தொடங்கும் . . .


சுபாஷ் சந்திர போஸே வாரும் . . .
ரத்தம் தருகிறோம் . . .
எங்களுக்கு சுதந்திரம் தாரும். . .


திலகரே வாரும் . . .
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை
என்று எங்களுக்குச் சொல்லித்தாரும். . .


கப்பலோட்டிய தமிழா . . .
எங்கே போனீர் . . .
சுதேசிக் கப்பலை ஓட்டிக் காட்டும் . . .


பகத்சிங்கே வா . . .
மீண்டும் ஒரு புரட்சி செய் . . .
எங்களுக்குப் போராடச் சொல்லிக்கொடு . . .


கொடி காத்த குமரா . . .
நம் தேசியக் கொடியை
உயர்த்திப் பிடிக்க ஓடி வா . . .


வீரபாண்டிய கட்டபொம்மா . . .
இந்நாட்டின் விரோதிகளைக்
கொல்ல வா . . .


ஜான்சி ராணி லக்ஷ்மியே . . .
தேசப்பற்றில்லாத இந்தியரின்
தலையைக் கொய்ய வா . . .


சத்ரபதி சிவாஜியே . . .
இந்நாட்டை ஆளும் கொள்ளையரை
அடக்க குதிரை மீதேறி வா . . .


இந்தியாவின் இரும்பு மனிதா . . .
இந்நாட்டின் கோயில்களைக்
காக்க விரைந்தோடி வா . . .



இன்னும் பெயர் சொல்ல மறந்த,
பெயர் தெரியாத சுதந்திரத் தியாகிகளே
வேகமாக வாரீர் . . .


ஊழலிலும்,அசிரத்தையிலும்,
சுயநலத்திலும் மூழ்கிக்கொண்டிருக்கும்
பாரதத்தைக் காக்க வாருங்கள் . . .


உங்களால் மட்டுமே முடியும் . . .
எங்களை வழி நடத்த யாருமில்லை . . .
எங்களுக்கும் பொறுப்பில்லை . . .


நீங்கள்தான் இந்த நாட்டை
அன்னியரிடமிருந்து காத்தீர் . . .


இப்போது நம் நாட்டை
நம்மவரிடமிருந்து காப்பாற்ற
வாரீர். . . வாரீர் . . . வாரீர் . . .


இங்கே வெட்டியாக ஒரு
சுதந்திர தினக் கொண்டாட்டம் . . .


இனிப்பைத் திண்பதும்,
போட்டிகள் வைப்பதும்,
தற்பெருமை பேசுவதும்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும்,
வயிறு முட்டத் திண்பதும்,
சோம்பேறியாய் தூங்குவதும்,
இவையே இவர்கள் கொண்டாடும்
சுதந்திர தினம் . . .


யாரை ஏமாற்ற இந்த வெளிவேஷம் . . .


எங்களின் முகமூடிகளைக்
கிழிக்க வாருங்கள் . . .


எங்களின் மனச்சாட்சியைக்
கேள்விகேட்க வாருங்கள் . . .


அப்பொழுதாவது நாங்கள்
திருந்துவோமா ? ! ?


எதிர்கால சந்ததி எங்களை
கேள்விகேட்கும் முன்பு
எங்களை சரி செய்ய வாருங்கள் . . .


நாளைய பாரதம் . . .? ! ?


காலம் பதில் சொல்லும் . . .


சொல்லடா க்ருஷ்ணா . . .
ஏனிந்தக் கொடுமை ? ? ?
யார் செய்த சூழ்ச்சி ? ? ?
எந்தத் தலைமுறையின் சாபம் ? ? ?


நாங்கள் திருந்தும் காலம் என்றோ ? ? ?


திருந்துவோமா . . .? ? ?
இல்லையென்றால்
வந்து இந்த அசுரர்களை
பூண்டோடு அழித்துவிடு . . .


நாளைய பாரதம் வளமாகட்டும் . . .





Read more...

புதன், 10 ஆகஸ்ட், 2011

தெய்வத்தின் காடாம் !


ராதேக்ருஷ்ணா



திவாகர முநியை  இழுத்த காடாம் !

கிருஷ்ணன் தானே ஆசைப்பட்டு ஓடிவந்த காடாம் !

புலையஸ்த்ரீ காட்டிக்கொடுத்தக் காடாம் !

இலுப்பை மரப் பொந்தில் தெய்வம் தெரிந்த காடாம் !

18மைல் தூரம் தெய்வம் படுத்த காடாம் !

பக்தனுக்காகத் தன்னைச் சுருக்கின தெய்வத்தின் காடாம் !

பில்வமங்களத்து ரிஷியை வசீகரித்த காடாம் !

தேங்காய் சிரட்டையில் நெய்வேத்தியம் தரும் காடாம் !

உப்பு மாங்காயை ரசிக்கும் தேவாதிதேவனின் காடாம் !

12008 சாளக்ராமங்களின் சங்கமக் காடாம் !

தீராத நோய் எல்லாம் தீர்க்கும் காடாம் !

வினைகளிலிருந்து காக்கும் காடாம் !

ஸ்வாமி நம்மாழ்வாருக்கு பிடித்த காடாம் !

நித்தம் ஸ்ரீவேலி நடக்கும் காடாம் !

அசுரரை வேட்டையாடும் அரசனின் காடாம் !

ஆராட்டை அனுபவிக்கும் காடாம் !

லக்ஷ தீபத்தில் ஜொலிக்கும் காடாம் !

ஆளவந்தாரை அசர வைத்த காடாம் !

ஸ்வாமி ராமானுஜரை திகைக்கவைத்த காடாம் !

சங்குமுகத்தை எல்லையாகக் கொண்ட காடாம் !

ஸ்வாதித் திருநாளும் தன்னை அர்ப்பணித்த காடாம் !

வாழைப்பழமும் ராமகதையைத் தரும் காடாம் !

பழத்தின் தோலும் மஹாபாரதப் பாட்டைத் தரும் காடாம் !

ஒற்றைக்கல்லில் தரிசனம் செய்யவைக்கும் காடாம் !

மூன்று வாசலில் முதல்வனைக் தரிசிக்கும் காடாம் !

அற்புத சிங்கமும் ராமாயணம் கேட்கும் காடாம் !

பொய்யனும் பெண் வேஷமிடும் காடாம் !

ப்ரியதர்ஷினிக்கு மிகவும் பிடித்த காடாம் !

பிள்ளைகள் மணலில் ரமிக்கும் காடாம் !

பத்மதீர்த்த கரையில் இருக்கும் காடாம் !

பேயையும் கட்டி வைக்கும் காடாம் !

போத்திகளின் புகலிடமான காடாம் !

தமரைத் தாங்கும் தாமரையாளின் காடாம் !

தாமரைக் கையனின் தனிப்பெரும் காடாம் !

சிவனும் ஒதுங்கின காடாம் !

பிரமனும் தவமிருக்கும் காடாம் !

தேவர்களும் காத்திருக்கும் காடாம் !

பாகவத சப்தத்தில் திளைக்கும் காடாம் !

ராமாயண சப்தத்தில் ரமிக்கும் காடாம் !

வந்தாருக்கு சோறு போடும் காடாம் !

நாலு வேதமும் எதிரொலிக்கும் காடாம் !

நல்லவர்களைக் காப்பாற்றும் காடாம் !

நல்லவென்னவெல்லாம் தரும் காடாம் !

கதியற்றவருக்கு கதியான காடாம் !

நிதிக்கு குறைவில்லா காடாம் !

சரஸ்வதியும் கொலுவிருக்கும் காடாம் !

குமரனும் மாமனைத் தேடி வரும் காடாம் !

வெள்ளையனும் தொழுத காடாம் !

இந்திரனும் வாஹனம் தாங்கும் காடாம் !

குரங்குக்கும் வெண்ணை பிடிக்கும் காடாம் !

ராஜனையும் தாசனாக்கும் ராஜாதிராஜனின் காடாம் !

கோடி கோடியாய் புதையல் கிடைக்கும் காடாம் !

ஆயிரம் தலை பாம்பு காவல் காக்கும் காடாம் !

அனைவரையும் அசத்தும் காடாம் !

இன்று உலகே அசந்து பார்க்கும் காடாம் !

என் மன்னவனின் காடாம் !

என் காதலனின் காடாம் !

என் நாயகனின் காடாம் !

என்னை அடிமையாக்கிய காடாம் !

என்னால் மறக்கமுடியாத காடாம் !

என் வம்சமே கைங்கர்யத்திற்கு ஏங்கும் காடாம் !

என் குலதெய்வத்தின் காடாம் !

மலை நாட்டின் தலைக் காடாம் !

கடவுளின் சொந்தக் காடாம் !

அழகன் பத்மநாபனின் அனந்தன் காடாம் !


Read more...

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உன்னைத் தாடா . . .

ராதேக்ருஷ்ணா


புத்தம் புது மனசு வேண்டும் !

நித்தம் நாமஜபம் வேண்டும் !

க்ருஷ்ணன் தெரிய வேண்டும் !


ராதிகா தாஸியாக வேண்டும் !


ப்ருந்தாவனத்தில் பிறவி வேண்டும் !


க்ருஷ்ணனிடமிருந்து முத்தம் வேண்டும் !


க்ருஷ்ணனோடு ஆட வேண்டும் !


க்ருஷ்ணனை அணைக்க வேண்டும் !


க்ருஷ்ணனை முத்தமிட வேண்டும் !


க்ருஷ்ணனைக் கொஞ்ச வேண்டும் !


க்ருஷ்ணன் என்னிடம் கெஞ்ச வேண்டும் !


க்ருஷ்ணன் என்னை அனுபவிக்கவேண்டும் !


க்ருஷ்ணனை நான் ரசிக்க வேண்டும் !


க்ருஷ்ணன் என்னை ருசிக்க வேண்டும் !


எல்லாவற்றையும் மறக்கவேண்டும் !


அப்படியே உயிரைவிட்டு விடவேண்டும் !


க்ருஷ்ணா !


சிக்கிரம் வாடா . . .
என் உயிரே வாடா . . .
தாமதம் செய்யாதேடா . . .


உன்னைத் தாடா  . . .
உடனே தாடா . . .

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP