ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஜூலை, 2011

வந்தோமய்யா !

ராதேக்ருஷ்ணா


திருமலைக்கு வந்தோமய்யா !
திருவருள் கிடைத்தய்யா . . .

திருப்பதிக்கு வந்தோமய்யா !
உன் தரிசனம் தந்தாயய்யா . . .

திடீரென வந்தோமய்யா !
திக்குமுக்காட வைத்தாயய்யா . . .

திமிரோடு வந்தோமய்யா !
திருந்தி திரும்பினோமய்யா . . .

காமத்தோடு வந்தோமய்யா !
ப்ரேமையைத் கொடுத்தாயய்யா . . .

சுயநலத்தோடு வந்தோமய்யா !
சுத்தமாக்கி சரிசெய்தாயய்யா . . .

நோயோடு வந்தோமய்யா !
ஆரோக்கியத்தை அளித்தாயய்யா . . .

கவலையோடு வந்தோமய்யா !
ஆனந்தத்தை பொழிந்தாயய்யா . . .

பயத்துடன் வந்தோமய்யா !
அபயமளித்து ஆட்கொண்டாயய்யா . . .

சந்தேகத்தோடு வந்தோமய்யா !
சமாதானம் செய்தாயய்யா . . .

மிருகமாய் வந்தோமய்யா !
மனிதராய் மாற்றினாயய்யா . . .

பாரத்தோடு வந்தோமய்யா !
பாசத்தோடு பார்த்தாயய்யா . . .

பசியோடு வந்தோமய்யா !
ப்ரசாதம் ஊட்டினாயய்யா . . .

களைத்து வந்தோமய்யா !
பலத்தோடு திரும்பினோமய்யா . . .

நம்பி வந்தோமய்யா !
வீண்போகாதபடி காத்தாயய்யா . . .

ஏழுமலைக்கு வந்தோமய்யா !
வாழ்வில் விளக்கேற்றினாயய்யா . . .

ஒன்றும் நாங்கள் தரவில்லையய்யா !
நீயும் எங்களை ஒதுக்கவில்லையய்யா . . .

மலையப்பா . . .ராஜா. . .கலியுக தெய்வமே !
உனக்குச் சமம் உலகில் இல்லையய்யா . . .


Read more...

ஞாயிறு, 24 ஜூலை, 2011

மாறுதல் வரும் . . .

ராதேக்ருஷ்ணா


எப்பொழுதும் எதையாவது
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய் !

இனிமேல் இதையே சொல் !

இதை மட்டுமே சொல் !

இதையும் எழுதி வை !



எங்கள் வீட்டில் சந்தோஷம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பக்தி என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் அன்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் அமைதி என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் வினயம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் சமாதானம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் தீர்வு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் ஆதரவு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பண்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பாதுகாப்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் கலாசாரம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் சிரிப்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் தைரியம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பலம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் நீங்காத செல்வம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் ஆசிர்வாதம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் குரு க்ருபை என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் க்ருஷ்ணன் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் சத்சங்கம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பாகவதர்கள் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் நாமஜபம் என்றுமுண்டு !

இதை எழுதி தினமும் வாசி . . .

ஒரு வாரத்தில் மாறுதல் வரும் . . .

உன் மனதிலும் , உன் வீட்டிலும், உன் வாழ்விலும். . .


Read more...

சனி, 23 ஜூலை, 2011

எழுதி வை ! ! !

ராதேக்ருஷ்ணா


மனமே மனிதனின் பலம் !

அதனால் உன் மனதில்
எழுதப்படும் நல்லெண்ணங்கள்
ஒரு நாளும் வீணாவதில்லை !

இதை எழுதி வை ! ! !


எங்கள் வீட்டில் வியாதி இல்லை !

எங்கள் வீட்டில் கஷ்டங்கள் இல்லை !

எங்கள் வீட்டில் பிரச்சனைகள் இல்லை !

எங்கள் வீட்டில் குழப்பங்கள் இல்லை !

எங்கள் வீட்டில் சண்டைகள் இல்லை !

எங்கள் வீட்டில் சச்சரவுகள் இல்லை !

எங்கள் வீட்டில் சோம்பேறித்தனம் இல்லை !

எங்கள் வீட்டில் பொறாமை இல்லை !

எங்கள் வீட்டில் சந்தேகங்கள் இல்லை !

எங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இல்லை !

எங்கள் வீட்டில் சாப்பாட்டிற்கு குறைவு இல்லை !

எங்கள் வீட்டில் ஆயுளுக்கு குறைவு இல்லை !

எங்கள் வீட்டில் அழுகை இல்லை !

எங்கள் வீட்டில் நாஸ்தீகம் இல்லை !

எங்கள் வீட்டில் பயம் இல்லை !

எங்கள் வீடு க்ருஷ்ணனின் ப்ரசாதம் . . .


அதனால் எங்கள் வீட்டில் ஒரு குறையுமில்லை . . .


ஒரு நாளும் ஒரு குறையுமில்லை . . .


இதை எழுதி வை . . .


உன் மனதிலும் உன் வீட்டிலும் . . .



Read more...

திங்கள், 11 ஜூலை, 2011

க்ருஷ்ணனின் அவதாரம் . . .

ராதேக்ருஷ்ணா

எங்கே போய்விடும் காலம் . . .

இழந்த காலத்தைப் பற்றி
நான் கவலைப்படப்போவதில்லை !

எதிர் காலத்தைப் பற்றி
நான் கனவு காணப் போவதில்லை !

என்னிடம் இருப்பதோ
என் வாழ்வின் இந்த நிகழ் காலம் !

இது மட்டுமே சத்தியம் . . .

இதை நான் அவமதித்தால்
இல்லை எனக்கு எதிர்காலம் . . .

கடவுளின் ஆசிர்வாதம் நிகழ்காலம் !

கடவுளின் அருள் நிகழ்காலம் !

கடவுளின் வரம் நிகழ்காலம் !

அத்ருஷ்டத்தின் உண்மையான
அர்த்தம் நிகழ்காலம் !

வாய்ப்புகளின் சங்கமம்
நிகழ்காலம் !

எதிர்காலத்தின் அஸ்திவாரம்
நிகழ்காலம் !

இறந்தகாலம் என்னைப்
பரிகசிக்கிறது . . .

எதிர்காலம் என்னைப்
பயமுறுத்துகிறது . . .

நிகழ்காலம் என்னை
வரவேற்கிறது . . .

அதனால் நிகழ்காலமே
என்னுடைய தேர்வு . . .

க்ருஷ்ணன் எனக்குச்
சொல்லிக்கொடுத்த ரஹஸ்யம். . .
நிகழ்காலத்தில் இரு . . .

நீயும் இருந்து பார் . . .

மனிதர் சில சமயத்தில்
கடந்தகாலத்தில் இருக்கின்றனர் . . .

மனிதர் சில சமயத்தில்
எதிர்காலத்தில் இருக்கின்றனர் . . .

ஆழ்ந்த தூக்கத்தில்தான்
நிகழ்காலத்தில் இருக்கின்றனர் . . .

நிகழ்காலத்தில் இருப்பவருக்கு
ஒரு நாளும் தோல்வியில்லை . . .

நிகழ்காலத்தில் இருப்பவருக்கு
வாழ்வில் பிரச்சனையில்லை . . .

நிகழ்காலத்தில் இருப்பவருக்கு
உலகமே வசப்படும் . . .

நிகழ்காலமே ! நீயே என் பலம் . . .
நிகழ்காலமே ! நீயே என் வெற்றி . . .
நிகழ்காலமே ! நீயே என் வாழ்க்கை . . .

நிகழ்காலம் க்ருஷ்ணனின் அவதாரம் . . .


Read more...

ஞாயிறு, 10 ஜூலை, 2011

யாரை நம்பி . . .

ராதேக்ருஷ்ணா

யாரை நம்பி யார்
பிறந்தார் ?

யாரை நம்பி யார்
வளர்ந்தார் ?

யாரை நம்பி யார்
வாழ்கின்றார் ?

யாரை நம்பி யார்
தூங்குகின்றார் ?

யாரை நம்பி யார்
சாப்பிடுகின்றார் ?

யாரை நம்பி யார்
வேலைக்குச் செல்கின்றார் ?


யாரை நம்பி யார்
சேமிக்கின்றார் ?

யாரை நம்பி யார்
வீடு கட்டுகிறார் ?

யாரை நம்பி யார்
கல்யாணம் செய்கின்றார் ?

யாரை நம்பி யார்
குழந்தை பெறுகின்றனர் ?

யாரை நம்பி யார்
குழந்தையை வளர்கின்றார் ?

யாரை நம்பி யார்
கண் விழிக்கின்றார் ?

யாரை நம்பி யார்
திட்டமிடுகின்றார் ?

யாரை நம்பி யார்
குறை சொல்கிறார் ?

யாரை நம்பி யார்
பக்தி செய்கின்றார் ?

யாரை நம்பி யார்
கடவுளை நம்புகின்றார் ?

யாரை நம்பி இந்த உலகம்
செல்கிறது ?

யாரை நம்பி இந்த மிருகங்கள்
வாழ்கின்றன ?

யாரை நம்பி இந்தப் பறவைகள்
வானில் பறக்கின்றன ?

யாரை நம்பி இந்தப் பூச்சிகள்
அலைகின்றன ?

யாரை நம்பி இந்த மரம்,செடிகள்
வளர்கின்றன ?

யாரை நம்பி இந்த பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறது ?

யாரை நம்பி இந்தச் சூரியன்
வெளிச்சம் தருகின்றது ?

யாரை நம்பி இந்த நக்ஷத்திரங்கள்
பிரகாசிக்கின்றன ?

யாரை நம்பி இந்தக் கண்கள்
பார்க்கின்றன ?

யாரை நம்பி இந்தக் காதுகள்
கேட்கின்றன ?

யாரை நம்பி இந்த வாய்
பேசுகின்றது ?

யாரை நம்பி இந்தக் கைகள்
வேலை செய்கின்றன ?

யாரை நம்பி இந்தக் கால்கள்
நடக்கின்றன ?

யாரை நம்பி இந்த மூச்சு
உள்ளும் வெளியும் செல்கிறது ?

யாரை நம்பி நாம் எங்கே செல்கிறோம் ? ? ?

கண்டுபிடி . . .

உன் நம்பிக்கையைக் கவனி . . .
உன் நம்பிக்கையைப் பலப்படுத்து . . .
உன் நம்பிக்கையை சோதனை செய் . . .
உன் நம்பிக்கையை தீர்மானி . . .

என் நம்பிக்கை க்ருஷ்ணன் . . .
என் நம்பிக்கை நாமஜபம் . . .
என் நம்பிக்கை சரணாகதி . . .

இப்பொழுது உன் நம்பிக்கையை நீ சொல் . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP