ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 மார்ச், 2011

நீ . . .நீயாக இரு !

ராதேக்ருஷ்ணா

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
 நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு ! 

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு ! 

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

  நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் நிழலை
உன் நிழலாக ஆக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் பாணியை
உன் பாணியாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு . . .
உனக்கென்று தனித்தன்மை உண்டு . . .
அதை இழந்துவிடாதே . . .

நீ . . .நீயாக இரு !
அடுத்தவராய் நீ மாறினால்,
உன்னால் ஆனந்தப்படமுடியாது . . .

நீ . . .நீயாக இரு !
நீ நீயாக இருப்பதில்
நேர்த்தியைக் கொண்டு வா . . .

நீ . . .நீயாக இரு !
அப்பொழுதுதான் நீ
உலகில் அபூர்வமாகத் தெரிவாய் . . .

நீ . . .நீயாக இரு !
சூரியன் சந்திரனாவதில்லை . . .
சந்திரன் நட்சத்திரமாவதில்லை . . .

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !
 காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் ! 
 
  
நீ . . .நீயாக இரு !
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !
அதில் வெட்க்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !


 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு ! 
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு ! 
உலகம் ஒரு நாள்.
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு ! 
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !
நீ . . .நீயாக மட்டுமே இரு ! 
 
  

Read more...

செவ்வாய், 29 மார்ச், 2011

இனியாவது வாழ்வோம் . . .

ராதேக்ருஷ்ணா

பிறந்துவிட்டோம் . . .
வாழ்ந்து பார்ப்போம் !

தோற்றுவிட்டோம் . . .
ஜெயித்துப் பார்ப்போம் !

ஏமாந்துவிட்டோம் . . .
ஜாக்கிரதையாய் இருப்போம் !

நொந்துவிட்டோம் . . .
உற்சாகம் கொள்வோம் !

துங்கிவிட்டோம் . . .
முழித்துக்கொள்வோம் !

திட்டிவிட்டோம் . . .
அன்பாய் பேசுவோம் !

அவமானப்பட்டோம் . . .
நிரூபணம் செய்வோம் !

உளறிக்கொட்டினோம் . . .
தெளிவாய் பேசுவோம் !

செலவழித்துவிட்டோம் . . .
சேமிக்கத் தொடங்குவோம் !

அழித்துவிட்டோம் . . .
புதியதாய் விதைப்போம் !

அழுக்காக்கிவிட்டோம் . . .
சுத்தம் செய்வோம் !

புலம்பிவிட்டோம் . . .
சிரித்துக் காட்டுவோம் !

அழுதுவிட்டோம் . . .
ஆனந்தத்தை அனுபவிப்போம் !

பொறாமை பட்டோம் . . .
மனதார வாழ்த்துவோம் ! 

மறந்துவிட்டோம் . . .
ஞாபகம் கொள்வோம் !

அவசரப்பட்டுவிட்டோம் . . .
நிதானம் கொள்வோம் !

வியாதியை அநுபவித்தோம் . . .
ஆரோக்கியமாய் இருப்போம் !

இனியாவது சுகப்படுவோம் . . .
இனியாவது நிம்மதியை ருசிப்போம் !
இனியாவது வாழ்வோம் . . . 

Read more...

வெள்ளி, 25 மார்ச், 2011

அன்புள்ள த்வாரகாநாதனுக்கு!

ராதேக்ருஷ்ணா

அன்புள்ள த்வாரகாநாதனுக்கு !
கோபாலவல்லி எழுதுவது . . .

த்வாரகாநாதா . . .
எப்படி இருக்கிறாய் ! ? !

த்வாரகாதீசா . . .
உன் ஸ்மரணையே சுகம் !

மீரா ப்ரபோ கிரிதாரி . . .
உன் திருமேனி சுகம்தானே ! ? !

தேவகி நந்தனா . . .
உன் ராஜதானி சௌக்கியம்தானே ! ? !

வசுதேவ புத்திரா . . .
ஹோலி நன்றாக விளையாடினாயா ! ? !

பலராம சகோதரா . . .
மாடுகள் எல்லாம் நலம்தானே ! ? !

ப்ரேம ஸ்வரூபா . . .
ருக்மிணியை படுத்தாமலிருக்கிறாயா ! ? !

ரண சோட் நாதா . . .
பலராமன் சொல்படி கேட்கிறாயா ! ? !

நவநீதசோரா . . .
தேவகி மாதா நலம் தானே ! ? !

கோமதீ நதி தீர லோலா . . .
மீன்களோடு விளையாடுகிறாயா ! ? !

சுதாமா சகா . . .
அவல் சாப்பிட்டாயா ! ? !

நரசிம்ம மேத்தா சேவகா . . .
யாருக்கு என்ன கொடுத்தாய் ! ? !

பண்ஹாஜி ரஜபுத்ர நாதா . . .
பீதாம்பரம் ஜாக்கிரதை தானே ! ? !

ராமதாஸ ஸ்வாமி . . .
த்வாரகையில் தானே இருக்கிறாய் ! ? !

ருக்மிணீ காந்தா . . .
துர்வாசர் வம்பேதும் செய்யவில்லையே ! ? !

உத்தவ ராஜா . . .
யாருக்காவது கடிதம் எழுதினாயா ! ? !

வல்லபரின் செல்லமே . . .
சமத்தாகச் சாப்பிடுகிறாயா ! ? !

கருடக் கொடியோனே . . .
எத்தனை கொடிகளை கிழித்தாய் ! ? !

பார்த்தனுக்கு சாரதியே . . .
யாரை அக்னியிலிருந்து காப்பாற்றினாய் ! ? !

சந்தான கோபாலா . . .
சமீபத்தில் வைகுண்டம் போனாயா ! ? !

மோக்ஷ த்வாரிகா ராஜனே . . .
கிணற்றிலிருந்து யாரை மீட்டாய் ! ? !

சம்சார சாகர ரக்ஷகா . . .
உன் குழந்தைகள் சுகம்தானே ! ? !

புராண புருஷா . . .
பேரன் பேத்திகள் நலம் தானே ! ? !

அழகு மன்மதா . . .
ஆண்டாள் அங்கே வந்தாளோ ! ? !

பக்த ஹ்ருதய சஞ்சாரி . . .
நாரதரை திணறடித்தாயா ! ? !

அனாத நாதா . . .
சத்யபாமா படுத்தாமலிருக்கிறாளா ! ? !

தீன பந்தோ . . .
சாம்பன் சாபம் வாங்காமலிருக்கிறானா ! ? !

ரஹஸ்ய மானுஷ வேஷதாரி . . .
ப்ரபாச க்ஷேத்திரம் போகவில்லையே ! ? !

ஸ்ரீ க்ருஷ்ண ராமா. . .
ஆஞ்சனேயர் வந்தாரா ! ? !

சீக்கிரம் பதில் அனுப்பு . . .

ருக்மிணியின் காதல் கடிதத்தை
தினமும் வாசிப்பது போல்
இந்தக் கோபாலவல்லியின்
கடிதத்தையும் தினமும் வாசி ! ! !

என்னை அழைத்துப் போக
சீக்கிரமே வா ! ! !

வரவில்லையென்றால்,
உயிரை விடமாட்டேன் ! ! !
உன்னைப் பற்றி ஊரில்
அவதூறு சொல்வேன் ! ! !

என்ன சொல்வேன் தெரியுமா ?

த்வாரகை போனேன் . . .
பைத்தியமானேன் . . .
பக்தர்களிடம் சொல்வேன் !
நீங்கள் யாரும் போகவேண்டாமென்று !

இப்படிக்கு உன்னுடைய . . .
கோபாலவல்லி . . .

Read more...

புதன், 23 மார்ச், 2011

இதுவல்லவோ அற்புதம் !

ராதேக்ருஷ்ணா

அதிசயம் !

என்னை உன்னி க்ருஷ்ணன்
குருவாயூருக்கு
அழைத்து வந்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

எவ்வளவு ஆசையோடு
என்னை என் அப்பன்
தன்னுடைய குருவாயூருக்கு
கூப்பிட்டு வந்திருக்கின்றான் !
இதுவல்லவோ அற்புதம் !

எத்தனை நாள் ஆசை!
யாருக்கும் தெரியாத ஆசை !
அவனுக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த ஆசை !
அதை பூர்த்தி செய்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் ! 

எனக்கு குருவாயூரப்பன்
அவனுடைய தரிசனத்தைத்
தந்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

குட்டி க்ருஷ்ணன்
என்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு
தரிசனம் தந்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

வசுதேவர் தலையில்
வைத்துக்கொண்டு செல்லும்
அலங்காரத்தோடு
இந்தத் தோழனுக்குக் காட்சி தந்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

தான் சாப்பிடும் போது,என்னையும்
சாப்பிட வைத்து ஆனந்தமாக
தரிசனம் தந்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

ப்ரசேதசர்களுக்கு ருத்ரன்
வாசுதேவ மஹிமையைச்
சொன்ன நாராயண சரஸின்
கரையில் என்னை உட்கார வைத்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

இந்த ரஹஸ்ய பக்தனை
அவனுடைய ஊரில்
புதியதாக பாகவத ரஹஸ்யத்தை
சொல்லவைத்து விட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

யானையின் மேல் ஊர்வலமாக
வந்து என்னை ஆனந்தத்தில்
திணறடித்து விட்டான் !
இதுவல்லவோ அதிசயம் !

இந்தக் கள்ளக் க்ருஷ்ணன்,
க்ருஷ்ணனே ஆராதனம் செய்த
கள்ளனல்லவா !
அதனால் கள்ளத்தனமாக
எனக்கு அனுக்ரஹம் செய்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

எத்தனை விதமான ப்ரசாதங்களை
எனக்காக விசேஷமாக
இந்தக் குழந்தை தந்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

குருவாயூருக்கு வருபவர்கள்,
எப்பொழுதும் அதிசயங்களையே
எதிர்பார்த்து வருகிறார்கள் !

என்னைப் பொறுத்தவரை
இங்கே வருவதே அற்புதம் !

உன்னிக்ருஷ்ணனைத் 
தரிசிப்பதே அற்புதம் !

அவன் ப்ரசாதத்தை
அனுபவிப்பதே அற்புதம் !

குருவாயூரில் ஒரு நாள்
தங்குவதே அற்புதம் !

வேறு என்ன அற்புதம் வேண்டும் ? ? ?

Read more...

வியாழன், 17 மார்ச், 2011

கோடி நமஸ்காரங்கள் !

ராதேக்ருஷ்ணா

தேவகி மாதா !

உன் திருவடிகளில்
கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய மணி வயிற்றுக்கு
கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய வாத்சல்ய பாவத்திற்கு
கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய பரிதவிப்பிற்கு
கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய அசராத மனதிற்கு
 கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய மாறாத நிதானத்திற்கு
கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய த்ருட பக்திக்கு
கோடானு கோடி நமஸ்காரங்கள் !

உன்னுடைய நிர்மலமான இதயத்திற்கு
கோடானு கோடி நமஸ்காரங்கள் !
 
இன்னும் சொல்லவேண்டும் . . .
காத்திரு . . . 

  

Read more...

திங்கள், 14 மார்ச், 2011

சௌக்கியமாயிருடா . . .

ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா !
 நன்றாக சாப்பிட்டாயா ?

க்ருஷ்ணா !
எல்லாவற்றையும் சாப்பிட்டாயா ?

க்ருஷ்ணா !
வயிறு நிறைந்ததா ?

க்ருஷ்ணா !
 த்ருப்தியாக சாப்பிட்டாயா ?

க்ருஷ்ணா !
 உனக்குப் பிடித்திருந்ததா ?

க்ருஷ்ணா !
வேறு ஏதேனும் வேண்டுமா ?

க்ருஷ்ணா !
பால் குடித்தாயா ?

க்ருஷ்ணா !
சீக்கிரம் படுத்துக்கொள் . . .

க்ருஷ்ணா !
நன்றாகத் தூங்கு . . .

க்ருஷ்ணா !
 காலையில் பொறுமையாக எழுந்திரு . . .

க்ருஷ்ணா !
நாளை மாடு மேய்க்கப் போகவேண்டாம் . . .

க்ருஷ்ணா !
நான் கால் பிடித்து விடவா ?

க்ருஷ்ணா !
நான் கையில் சொடுக்கு எடுக்கவா ?

க்ருஷ்ணா !
நிறைய தண்ணீர் குடி . . .

க்ருஷ்ணா !
இன்னொரு தாம்பூலம் வேண்டுமா ?

க்ருஷ்ணா !
ஜீரணத்திற்கு கஷாயம் தரட்டுமா ?

க்ருஷ்ணா !
வா ! மடியில் படுத்துக்கொள் ! ! !

க்ருஷ்ணா !
தாலாட்டுப் பாடவா !

க்ருஷ்ணா !
ஒரு நிமிஷம் . . .
இரு . . .இரு . . .
த்ருஷ்டி சுத்திப்போடுகிறேன்  . . .

இந்த தேவர்களின்
பொறாமைக் கண்கள்
உன் மீது பட்டிருக்கிறது ! ! !

அப்பாடா . . .
எத்தனை த்ருஷ்டி . . .
என் பட்டுக்குஞ்சலத்திற்கு . . .

அச்சோடா ! ! !
ராஜா . . .
செல்லமே . . .
சமத்தே . . .

நன்னாயிருடா . . .
என் தங்கமே . . .

த்வாரகாதீசா . . .
சௌக்கியமாயிருடா . . .

 

Read more...

ஒரே ஒரு காரணம் . . .

ராதேக்ருஷ்ணா


என்னை மறந்தேன் !

என் வயதை மறந்தேன் !

என் குலத்தை மறந்தேன் !

என் கௌரவத்தை மறந்தேன் ! 

என் ஜாதியை மறந்தேன் !

என் பொறுப்பை மறந்தேன் !

என் நிலைமையை மறந்தேன் !

என் உடலை மறந்தேன் !

என் இனத்தை மறந்தேன் !

 என் குடும்பத்தை மறந்தேன் !

என் தோழர்களை மறந்தேன் !

எனக்குப் பிடித்தவர்களை மறந்தேன் !

எனக்குத் தெரிந்தவர்களை மறந்தேன் !

என் பெயரை மறந்தேன் !

என் தாய்மொழியை மறந்தேன் !

என் படிப்பை மறந்தேன் !

என் உடமைகளை மறந்தேன் ! 

என் ஊரை மறந்தேன் !

என் உருவத்தை மறந்தேன் !

என் தேவையை மறந்தேன் !

என் எதிர்காலத்தை மறந்தேன் !

என் நிகழ்காலத்தை மறந்தேன் !

என் கடந்தகாலத்தை மறந்தேன் !

தேதியை மறந்தேன் !

கிழமையை மறந்தேன் !

மாதத்தை மறந்தேன் !

வருஷத்தை மறந்தேன் !

நேரத்தை மறந்தேன் !

இருப்பை மறந்தேன் !

இறப்பை மறந்தேன் ! 

ஏன் இத்தனை மாற்றங்கள் ? ? ?

ஒரே ஒரு காரணம் . . .

த்வாரகா ! ! !

எப்படி இந்த மாற்றம் ? ! ?

நான் குழந்தையாகிவிட்டேன் ! ! !

ஆம் ! த்வாரகாநாதன் என்னை
குழந்தையாக மாற்றிவிட்டான் ! ! !

 

Read more...

வெள்ளி, 11 மார்ச், 2011

நீ தயாரா ! ! !

ராதேக்ருஷ்ணா


மீரா . . .
க்ருஷ்ணனின் ப்ரிய சகி !

மீரா . . . 
க்ருஷ்ணனின் ப்ரிய கோபி !

மீரா . . . 
க்ருஷ்ணனின் ப்ரிய தாஸி !

மீரா . . . 
க்ருஷ்ணனின் ப்ரிய நாயகி !

மீரா . . .
க்ருஷ்ணனின்  செல்லக்குட்டி !

மீரா . . .
க்ருஷ்ணனின் ப்ரேம நிதி !

மீரா . . .
க்ருஷ்ணனின் ரஹஸ்ய சொத்து !

மீரா . . .
க்ருஷ்ணனின் விசேஷ முத்து !

மீரா . . .
க்ருஷ்ண ப்ரேம ரசிகை !

மீரா . . .
க்ருஷ்ண லீலா சூடாமணி !

மீரா . . .
க்ருஷ்ண பஜன ராணி !

மீரா . . .
க்ருஷ்ண ஸ்ருங்கார ப்ரியை !

மீரா . . .
க்ருஷ்ண ஸ்மரண யுவராணி !

மீரா . . .
ராதா க்ருஷ்ண பக்த ப்ரியை !

மீரா . . .
க்ருஷ்ண ராச நித்ய சகி !

மீரா . . .
ராதிகா க்ருஷ்ண நிரந்தர தாஸி !

மீரா . . .
க்ருஷ்ணனுக்கு ப்ரேமை தரும் ப்ரேமி !

மீரா . . .
வ்ருந்தாவன பித்து . . .

மீரா . . .
த்வாரகாநாத ஆகாரம் . . .

மீரா . . .
என் அம்மா . . .

மீரா . . .
என் தோழி . . .

மீரா . . .
என் குரு . . .

மீரா . . .
என் யஜமானி . . .

மீரா . . .
வேறொன்றும் வேண்டாம் கண்ணா !

என்றும்,
மீராவின் தாஸியாக வாழ வரம் கொடு !

க்ருஷ்ணா . . .
நீ எனக்கு மீரா மாதாவின்
தாஸியாக வரம் தந்தால்,
அதற்குப் பதிலாக என்னுள் இருக்கும்
உனக்கு உடனேயே
மோக்ஷம் தருவேன் . . .

நீ தயாரா ? ? ?

க்ருஷ்ணா . . .
சீக்கிரம் பதில் சொல் . . .

எனக்கு மீரா மாதா வேண்டும் ! ! !

Read more...

வியாழன், 10 மார்ச், 2011

பக்தனின் பக்தன் . . .

ராதேக்ருஷ்ணா

சுதாமா . . .

க்ருஷ்ண சுதாமா . . .

நீ தான் பிராம்மணன் !

நீ மட்டுமே பிராம்மணன் ! 

நாங்கள் எல்லோரும் வேஷதாரிகள் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
ஒரு க்ருஷ்ண பக்தி வேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு படிக்கவேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு விளையாட வேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு ஓரறையில் தங்கவேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
வைராக்யம் வர வேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
தரித்திரத்தைக் கண்டு பயப்படாத
உள்ளம் வேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனைப் பார்க்க நடக்கவேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனுக்கு அவல் கொடுக்கவேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனிடம் எதுவும் கேட்காத
மனம் வேண்டும் !

சுதாமா ! ! !
எனக்கு உன்னைப்போல் வாழவேண்டும் !

சுதாமா ! ! !
ஆசைவயப்பட்ட என்னைக் காப்பாற்று !
அகம்பாவியான என்னைக் கரையேற்று !
சுயநலப்பிசாசான என்னை நல்லவனாக்கு !

சுதாமா ! ! ! குசேலா ! ! !
எனக்கு க்ருஷ்ணனைக் காட்டவேண்டியது
உன் பொறுப்பு ! ! !

என்ன தைரியத்தில் இப்படிக் கேட்கின்றேன் !

இது தைரியமில்லை . . .

உன்னிடத்தில் உள்ள உரிமை ! ! !

அதனால் தானே உங்கள் என்று
மரியாதையாகக் கூப்பிடாமல்
உன்னை என்று ஒருமையில்
அழைக்கின்றேன் ! ! !

சுதாமா ! ! !
உன்னை வேண்டுகிறேன் ! ! !
எனக்கு என் க்ருஷ்ணனைக் காட்டு ! ! !

உன்னுடைய சுதாமாபுரிக்கு வந்தேன் ! ! !
உன்னைப் புரிந்துகொண்டேன் ! ! !
 உன் மனதின் வைராக்யம் அறிந்தேன் ! ! !

சுதாமா புரி . . .
க்ருஷ்ணசகா புரி . . .
உன்னத பிராம்மண புரி . . .
அற்புத பக்திபுரி . . .
அமைதியான ஆனந்தபுரி . . .

சுதாமா ! ! !
என் மனதில் உன்னை வைத்தேன் ! ! !

இனி என் மனதில் க்ருஷ்ணனை
பிரதிஷ்டை செய்யவேண்டியது
உன் வேலை  ! ! !

சுதாமா ! ! ! சுதாமா ! ! ! சுதாமா ! ! !

இந்தப் பெயரை ஜபிப்பதற்கே
க்ருஷ்ணன் நிச்சயம் என்னிடம் வருவான் ! ! !

க்ருஷ்ணன் எனக்கு அருள்செய்வான் ! ! !

க்ருஷ்ணா ! ! !
இனி நான் உன் பக்தனில்லை ! ! !
உன் பக்தனின் பக்தன் . . .


 

Read more...

ஞாயிறு, 6 மார்ச், 2011

அனுபவித்தேன் !

ராதேக்ருஷ்ணா


அனுபவித்தேன். . .த்வாரகாதீசனை !

அனுபவித்தேன். . . மீராவை உண்டவனை !

அனுபவித்தேன். . . ருக்மிணியின் காதலனை !

அனுபவித்தேன். . . ப்ரத்யும்னனின் தகப்பனை !

அனுபவித்தேன். . . அநிருத்தனின் தாத்தாவை !

அனுபவித்தேன். . .போரிலிருந்து ஓடி வந்தவனை !

அனுபவித்தேன். . .குசேலரிடம் அவல் பிடுங்கினவனை !

அனுபவித்தேன். . . ப்ராம்மணனின் குழந்தைகளை தந்தவனை !

அனுபவித்தேன். . .அஷ்ட மஹிஷிகளின் அரசனை !

அனுபவித்தேன். . .யாதவர்களின் ராஜாதிராஜனை !

அனுபவித்தேன். . .16100 ராணிகளின் நாயகனை !

அனுபவித்தேன். . .தராசில் அமர்ந்தவனை !

அனுபவித்தேன். . .ஸ்யமந்தகமணியை மீட்டவனை !

அனுபவித்தேன். . .சங்கநாதம் முழங்கியவனை !

அனுபவித்தேன். . .தேவகியின் பிள்ளையை !

அனுபவித்தேன். . .வசுதேவரின் புத்ரனை !

அனுபவித்தேன். . .நிற்கும் பத்மநாபனை !

இன்னும் அனுபவிப்பேன் . . .
என்றும் அழகனை . . .

விடமாட்டேன் . . .
என் த்வாரகாநாதனை ! ! !  

   

Read more...

சாந்தி நிலவட்டும் !

ராதேக்ருஷ்ணா

அஹம்பாவம் அழியட்டும் !

சுயநலம் அழியட்டும் !

பொறாமை அழியட்டும் !

சந்தேகங்கள் அழியட்டும் !

வெறுப்பு அழியட்டும் !

பகைமை அழியட்டும் !

வேற்றுமை அழியட்டும் !

சோம்பேறித்தனம் அழியட்டும் !

குழப்பங்கள் அழியட்டும் !

கெட்டஎண்ணங்கள் அழியட்டும் !

கெட்ட வார்த்தைகள் அழியட்டும் !

கொடூர குணங்கள் அழியட்டும் !

நிம்மதி வளரட்டும் !

அன்பு வளரட்டும் !

ஆனந்தம் வளரட்டும் !

பக்தி வளரட்டும் !

நாமஜபம் வளரட்டும் !

ஞானம் வளரட்டும் !

வைராக்யம் வளரட்டும் !

உலகில் சாந்தி நிலவட்டும் !


 

Read more...

வெள்ளி, 4 மார்ச், 2011

அனுபவிக்க வா !

ராதேக்ருஷ்ணா
த்வாரகா செல்கிறேன் !
என் பத்மநாபனின்
பிறந்த ஊரிற்கு செல்கிறேன் !

ஸ்ரீ கிருஷ்ணனின் லீலா
பூமிக்கு செல்கிறேன் !
ருக்மிணி பிராட்டியின் கல்யாணம்
நடந்த ஊரிற்கு செல்கிறேன் !
16108 பட்ட மஹிஷிகளின்
ஆனந்த பூமிக்கு செல்கிறேன் !
குசேலரும் அவல் கொடுத்த
சுக பூமிக்கு செல்கிறேன் !
16108 கிருஷ்ணனை நாரதர்
தரிசித்த பூமிக்கு செல்கிறேன் !
கிருஷ்ணன் அப்பாவாக
லீலை செய்த பூமிக்கு செல்கிறேன் !
கிருஷ்ண தாத்தாவின்
அந்தப்புர பூமிக்கு செல்கிறேன் !
உத்தவரும் ஆனந்தமாய்
தன்னை மறந்த பூமிக்கு செல்கிறேன் !
வசுதேவர், தேவகியின் கிருஷ்ண
தரிசன பூமிக்கு செல்கிறேன் !
சந்தான கோபால லீலா
நடந்த பூமிக்கு செல்கிறேன் !
அர்ஜுனனும், பிராமணனும்
வைகுந்தம் சென்ற பூமிக்கு செல்கிறேன் !
ஓணானுக்கும் கண்ணன்
கிடைத்த பூமிக்கு செல்கிறேன் !
கிருஷ்ணன் தான் சத்தியவான்
என்று நிரூபித்த பூமிக்கு செல்கிறேன் !

மீரா மாதாவை தன்னுள்
வைத்துக்கொண்ட பூமிக்கு செல்கிறேன் !

த்வாரகா !
எங்கள் ஆழ்வார்களின் பிரபந்தத்தில்
திளைக்கும் த்வாரகாவிர்க்கு செல்கிறேன் !
நீயும் வா !
என்னோடு வா !
கண்ணனை அனுபவிக்க வா !
உன்னை அர்ப்பணிக்க வா !
 

Read more...

வியாழன், 3 மார்ச், 2011

அசராத மனம் !

ராதேக்ருஷ்ணா 

எத்தனை துன்பங்கள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை அவமானங்கள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை பிரச்சனைகள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை தடைகள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை தோல்விகள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை பயங்கரங்கள்
நடந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை இழப்புகள்
ஏற்பட்டாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனைபேர் ஏமாற்றினாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

வடிகட்டின முட்டாளாக
இருந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

உடலில் ஊனமிருந்தாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

உதவிக்கு யாருமே இல்லையென்றாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

ஊரே ஒதுக்கித் தள்ளினாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

உற்றாரே பகைவர் ஆனாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எல்லாவற்றையும் இழந்தாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

அசராத மனம் தா !
க்ருஷ்ணா ஒரு நாளும்
அசராத மனம் தா !

அசராத மனம் தா !
க்ருஷ்ணா எதற்கும்
அசராத மனம் தா !

அசராத மனம் தா !
க்ருஷ்ணா எப்பொழுதும்
அசராத மனம் தா !

க்ருஷ்ணா நீ தான் மனம் என்று
நீதானே கீதையில் சொன்னாய் . . .

அதனால் என் மனமான நீ
என்றும் திடமாக இரு . . .


Read more...

செவ்வாய், 1 மார்ச், 2011

உன் பொறுப்பு !

ராதேக்ருஷ்ணா

கண்ணா!
எனக்கு எது நல்லதென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது சுகமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது தேவையென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது தேவையற்றது என்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது கெடுதல் என்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
என் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எங்கு இருக்கவேண்டுமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எப்படி இருந்தால் சரியென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் யாரோடு பழகினால் இதமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எதைப் பேசினால் சரியென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எதை, எப்படிச் செய்தால் நல்லதென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எதைச் சாப்பிட்டால் உத்தமமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எந்த ஆடையை உடுத்தினால்
அழகென்று உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எப்படி காரியங்களைச் செய்தால்
அற்புதமாக இருக்குமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

உனக்கு நன்றாகத் தெரியும் ;
அதனால் உன்னையே சரணடைந்தேன் !

கண்ணா ! 
 எனக்கு ஒன்றும் ஒழுங்காகத் தெரியாது !

கண்ணா ! 
அடியேன் உன்னையே நம்புகிறேன் !

கண்ணா !
நீ தான் என் வாழ்வை நடத்தவேண்டும் !

தயவு செய்து என் வாழ்வை
என் பொறுப்பில் விட்டுவிடாதே !

என் வாழ்க்கையை
உன் பொறுப்பிலேயே வைத்துக்கொள் !

பல கோடி ஜன்மங்களாக
என் வாழ்க்கை என் பொறுப்பிலிருந்து
சீரழிந்தது மட்டும் தான் மிச்சம் !

இந்த வாழ்க்கையாவது உருப்படட்டும் !

அதனால் கண்ணா !
என் வாழ்க்கை உன் பொறுப்பு !

myLot User Profile

Read more...

என் கடமை !

ராதேக்ருஷ்ணா

எனக்கென்று தனியாக
எத்தனை விஷயங்களை
என் க்ருஷ்ணன்
தந்திருக்கின்றான் . . .

ஆஹா ! நினைத்தாலே
மேனி எல்லாம் சிலிரிக்கிறது ! 

என் க்ருஷ்ணன்
எல்லாவற்றையும் பார்க்கத்
தனியாக எனக்கென்று
கண்களைத் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
எல்லாவற்றையும் கேட்கத்
தனியாக எனக்கென்று
காதுகளைத் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
வேலைகளைச் செய்யத் 
தனியாக எனக்கென்று
கைகளைத் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
உலகில் நடை போடுவதற்குத்
தனியாக எனக்கென்று
கால்களைத் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
எல்லோரிடமும் பேசுவதற்குத்
 தனியாக எனக்கென்று
வாய் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
எல்லாவற்றையும் சிந்திப்பதற்கு
தனியாக எனக்கென்று
புத்தியை தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
எல்லாவற்றையும் ருசிப்பதற்கு
தனியாக எனக்கென்று
நாக்கைத் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
எல்லா வாசனைகளையும் அனுபவிக்க
தனியாக எனக்கென்று
மூக்கைத் தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
இந்த வாழ்வை அனுபவிக்க
தனியாக எனக்கென்று
ஒரு உடலை தந்திருக்கின்றான் . . .

என் க்ருஷ்ணன்
இந்த வாழ்வில் நான் ஜெயிப்பதற்கு
தனியாக எனக்கென்று
திறமைகளைத் தந்திருக்கின்றான் . . .

யார் கண்களாலும்
நான் பார்க்கவேண்டிய
அவசியமேயில்லை !

யார் காதையும்
இரவல் வாங்கிக்கொண்டு
நான் கேட்கவேண்டியதில்லை !

யாருடைய வாயையும்
வாடகை வாங்கி நான்
பேசவேண்டிய அவசியமில்லை !

இது போல் அடுத்தவர்
உடலைக் கொண்டு இந்த
வாழ்வை நான் வாழவேண்டிய
துர்பாக்கியம் இல்லை !

ஆஹா !
க்ருஷ்ணா !
அற்புதம் ! அதிசயம் ! சுகம் !




எனக்கென்று தனியாக நீ
சுவாசம் தந்திருக்கிறாய் !

எனக்கென்று தனியாக நீ
தூக்கம் தந்திருக்கிறாய் !

எனக்கென்று தனியாக நீ
பலம் தந்திருக்கிறாய் !

எனக்கென்று தனியாக நீ
உணர்வுகளைத் தந்திருக்கிறாய் !

எனக்கென்று தனியாக நீ
ஒரு வாழ்வைத் தந்திருக்கிறாய் !

நான் தான் ஒழுங்காக இதையெல்லாம்
உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும் !

வேறு ஒன்றுமே விசேஷமாக
நான் செய்யவேண்டாம் ! ! !

எல்லாவற்றையும் நீ தந்துவிட்டாய் ! ! !

இனி வாழ்வது என் கடமை !

உன் கடமை எல்லாம் தந்துவிட்டாய் ! ! !

இனி என் கடமையைச்
சத்தியமாக நான் ஒழுங்காகச் செய்வேன் ! ! !

க்ருஷ்ணா . . .
நன்றி . . .
க்ருஷ்ணா . . .






Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP