ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 பிப்ரவரி, 2011

வாழ்கிறேன் ! ! !

ராதேக்ருஷ்ணா

வாழ்கின்றேன் !

எதற்காக வாழ்கிறேன்  . . .
 தெரியாது !

  ஏன் வாழவேண்டும் . . .
தெரியாது !

எப்படி வாழவேண்டும் . . .
தெரியாது !

ஆனாலும் வாழ்கின்றேன் . . .

எனக்கு வாழத் தகுதியிருக்கிறதா ?
தெரியாது . . .

என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ?
தெரியாது . . .

 ஆனாலும் வாழ்கின்றேன் ! ! !

என் வாழ்வினால் என்ன ப்ரயோஜனம் ?
தெரியாது . . .

நான் வாழாவிட்டால் என்ன நஷ்டம் ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கின்றேன் ! ! !

இதுவரை வாழ்ந்து என்ன சாதித்தேன் ?
தெரியாது . . .

என் வாழ்வின் லக்ஷியம் என்ன ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கின்றேன் ! ! !

நான் ஒழுங்காக வாழ்கிறேனா ?
தெரியாது . . .

நான் திருப்தியாக வாழ்கிறேனா ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கிறேன் . . .

எத்தனை நாள் வாழப்போகிறேன் ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கிறேன் . . .

க்ருஷ்ணன் இஷ்டப்படி வாழ்கிறேனா ?
தெரியாது . . .

தெய்வத்தை பூரணமாக நம்புகின்றேனா ?
தெரியாது . . .

ஆனாலும் வாழ்கிறேன் ! ! !

இப்படி ஒன்றும் தெளிவில்லாமல்
ஏன் வாழவேண்டும் ? ? ?

என்னையே நான் கேட்கிறேன் ! ! !

என் மனம் எனக்குச் சொன்ன பதில் . . .

காத்திரு . . .
ஒரு நாள் க்ருஷ்ணனைப் பார்ப்பாய் . . .
அதற்காக வாழ்ந்துகொண்டிரு . . .

எத்தனையோ ஜன்மங்கள் வாழ்ந்துவிட்டாய் !

இந்தப் பிறவியிலும் வாழ்ந்து விடு !

வாழ்க்கைக்காக வாழ் . . .

ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்தாலும்,
க்ருஷ்ணனுக்கு உன்னைத் தெரியும் . . .

அதனால் வாழ் . . .
என் மனம் எனக்குச் சொன்னது . . .

அதனால் வாழ்கிறேன் . . .
அதனால் வாழ்வேன் . . .

வாழ்ந்தே தீருவான் . . .

என் க்ருஷ்ணனுக்காக வாழ்கின்றேன் . . .

Read more...

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

அணுகுமுறை !

ராதேக்ருஷ்ணா

அணுகுமுறை . . .

இன்று பலபேர்
மறந்த ஒரு விஷயம் . . .

சூழ்நிலைக் கைதியாகாமல்
இருப்பதற்கான ஒரே வழி
அணுகுமுறை !

சூழ்நிலை எப்படியிருந்தாலும்
அணுகுமுறையைக் கொண்டே
வெற்றியும் தோல்வியும் !

சரியான அணுகுமுறை
வெற்றியைத் தரும் !
தவறான அணுகுமுறை
தோல்வியைத் தரும் !

தைரியமான அணுகுமுறை
பலம் தரும் !
பயத்தோடு கூடின அணுகுமுறை
பலத்தைக் குறைக்கும் !

தெளிவான அணுகுமுறை
நன்மை தரும் !
குழப்பமான அணுகுமுறை
நன்மையைத் தள்ளிப்போடும் !

   தப்பிக்கும் மனப்பான்மையோடு
சூழ்நிலையை அணுகினால்,
உன்னால் வெல்ல முடியாது !

சூழ்நிலையை சாதகமாக்கிக்
கொண்டு வாழ நினைத்தால்,
உன்னால் வெல்ல முடியும் !

மரங்களும் சூழ்நிலைகளை
சாதகமாக்கிக்கொண்டு வாழ்கின்றன !

விலங்குகளும் சூழ்நிலைகளுக்கு
இரையாகாமல் ஜெயிக்கின்றன !

பறவைகளும் சூழ்நிலைகளுக்குத்
தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொண்டு
வாழ்ந்துகொண்டிருக்கின்றன !

நீயும் தாயின் வயிற்றில் இருந்தபோது,
உன் தாயின் அசைவிற்கு ஏற்ப
அசைந்து வாழ்ந்து பிறந்திருக்கிறாய் !

எத்தனையோ முறை நீயும்
வாழ்வில் பலவித கடினமான
சூழ்நிலைகளை அற்புதமாக
அணுகி வென்றிருக்கிறாய் !

அதனால் முடியும் !
உன்னால் முடியும் !

நீ தோல்வி காணும் போது
எல்லாம் உன் அணுகுமுறை
தவறென்பதை புரிந்துகொள் !

நீ வெற்றி பெறும்போதெல்லாம்
உன் அணுகுமுறை எதுவென்பதை
நன்றாக கவனித்து மனதில்
சரியாகக் குறித்துக்கொள் !

ஒவ்வொரு முறையும் உன்
அணுகுமுறையை நன்றாகக் கவனி !

உன் அணுகுமுறை தான் உன் வாழ்க்கை !

உன் அணுகுமுறை தான் உன் வெற்றி !

உன் அணுகுமுறை தான் உன் ஆனந்தம் !

உன் அணுகுமுறை தான் உன் தோல்வி !

உன் அணுகுமுறை தான் உன் துக்கம் !

உன் அணுகுமுறை தான் உன் பலம் !

உன் அணுகுமுறை தான் உன் பலவீனம் !

உன் அணுகுமுறை தான் உன் ரஹஸ்யம் !

அணுகுமுறைதான் ரஹஸ்யம் !

இனிமேலாவது அணுகுமுறையைக் கவனி . . .


Read more...

வியாழன், 24 பிப்ரவரி, 2011

அதைச் செய் !

ராதேக்ருஷ்ணா

பக்தியை அநுபவி . . .

பக்தியை பாரமாக்கிக்கொள்ளாதே . . .

பக்தியை ரசி . . .

 பக்தி என்பது நம்பிக்கை . . .
 நீ சந்தோஷமாக வாழவே பக்தி !
உன் மனதில் என்றும் அவநம்பிக்கை
வராமல் இருக்கவே பக்தி !

 உனக்கு நாம ஜபம் செய்தால்
நல்ல நம்பிக்கை வருகிறதா ?
அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு கோயிலுக்குச் சென்று,
ப்ரார்த்தனை செய்தால்
நல்ல நம்பிக்கை வருகிறதா ?
அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு ஸ்லோகங்களைச் சொன்னால்
நல்ல நம்பிக்கையும் பலமும் வருகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு பஜனை செய்தால்
நம்பிக்கையும், சமாதானமும் கிடைக்கிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

 உனக்கு சத்சங்கம் கேட்டால்
தைரியமும், தெளிவும் உண்டாகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு கோயிலில் கைங்கர்யம் செய்தால்,
தெய்வ சான்னித்தியம் புரிகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்குப் பக்தர்களுடன் இருந்தால்
பக்தி நன்றாய் வருகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு வீட்டில் சிறிது நேரம்
பூஜை செய்தால் மனது லேசாகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு ஸ்லோகங்களைக் கற்றுக்கொண்டால்,
தெய்வ நம்பிக்கை அதிகமாகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு சிறிது நேரம் தியானத்தில்
அமர்ந்தால், நிம்மதி கிடைக்கிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு பக்தர்களின் சரித்திரங்களை
படித்தால், பகவான் புரிகின்றானா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !
  
இது போல் பல வழிகள் உண்டு . . . 

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே !

எந்தக் காரணம் கொண்டும்,
நீ செய்யும் காரியத்திலோ,
அனுபவிக்கும் பக்தியிலோ,
அஹம்பாவம் மட்டும் வரக்கூடாது !

நீ செய்யும் பக்திதான் உயர்ந்தது என்று
எண்ணிவிடாதே !

உன் பக்தியை எல்லோரும் கொண்டாடவேண்டும்
என்று எதிர்பார்க்காதே !

நீ பக்தியை அநுபவி !
அதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு !

அதைச் செய் !
அதை மட்டுமே செய் !


 




Read more...

மனிதா . . .

ராதேக்ருஷ்ணா

மனிதா . . .
பக்தி என்பது கட்டாயம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது வேஷம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது கட்டளை இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது தேடுதல் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது மயக்கம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது கட்டுப்படுத்த அல்ல . . .

மனிதா . . .
பக்தி என்பது அடிமைபடுத்துதல் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது கற்பனை இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது குழப்புதல் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது போட்டி இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது வசியம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது மாயை இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது பிடிவாதம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது கொடுமை இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது உடலை வருத்துதல் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது அதிசயங்கள் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது புத்தகப் படிப்பு இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது பெருமை இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது அதிசயம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது அத்ருஷ்டம் இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது கனவு இல்லை . . .

மனிதா . . .
பக்தி என்பது அன்பு . . .

மனிதா . . .
பக்தி என்பது சத்தியம் . . .

மனிதா . . .
பக்தி என்பது ஆதாரம் . . .

மனிதா . . .
பக்தி என்பது அனுபவம் . . .

மனிதா . . .
பக்தி என்பது சுகம் . . .

மனிதா . . .
பக்தி என்பது சுலபம் . . .

மனிதா . . .
பக்தி என்பது சமாதானம் . . .

மனிதா . . .
பக்தி என்பது தைரியம் . . .

மனிதா . . .
பக்தி என்பது பலம் . . .

மனிதா . . .
பக்தி என்பது ஆகாரம் . . .

மனிதா . . .
பக்தி என்பது வழி . . .

மனிதா . . .
நீ அனுபவிப்பது பக்தியா ?
உன்னையே நீ கேள்  !

பதிலைக் கண்டுபிடி . . .

ஒரு வேளை நீ அனுபவிப்பது
பக்தி என்றால் விடாமல் செய் . . .

ஒரு வேளை நீ அனுபவிப்பது
பக்தியில்லை என்றால் கற்றுக்கொள் . . .

பக்தி செய் . . .

அதை ஒழுங்காகச் செய் . . .

தெரிந்து செய் . . .

புரிந்து செய் . . .

 

Read more...

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

எனக்கென்ன ?

ராதேக்ருஷ்ணா

யார் பொய் சொன்னால் எனக்கென்ன ?
நான் உண்மையாய் இருந்தால்
எனக்கு நல்லது . . .

யார் திருட்டுத்தனம் செய்தால் எனக்கென்ன ?
நான் நேர்மையாய் இருந்தால்
எனக்கு ஆனந்தம் . . .

யார் என்ன பாவம் செய்தால் எனக்கென்ன ?
நான் பாவம் செய்யாதவரை
எனக்கு நிம்மதி . . .

யார் சோம்பேறியாய் இருந்தால் எனக்கென்ன ?
நான் சுறுசுறுப்பாய் இருந்தால்
என் வாழ்வில் வெல்வேன் . . .

யார் யாரைப் பற்றி குற்றம் சொன்னால் எனக்கென்ன ?
நான் யாரையும் குற்றம் சொல்லாதவரை
என் மனது சமாதானமாக இருக்கும் . . .

யார் கடமையில் தவறினால் எனக்கென்ன ?
நான் என் கடமையை ஒழுங்காகச் செய்தால்
என் வாழ்க்கை சிறக்கும் . . .

யார் பக்தி செய்யாவிட்டால் எனக்கென்ன ?
நான் உண்மையான பக்தி செய்தால்
எனக்கு க்ருஷ்ணன் கிடைப்பான் . . .

யாருக்கு அஹம்பாவம் இருந்தால் எனக்கென்ன ?
எனக்கு அஹம்பாவம் வராதவரை
எனக்கு தொந்தரவில்லை . . .

யார் எப்படி வாழ்ந்தால் எனக்கென்ன ?
நான் உருப்படியாக வாழ்ந்தால்,
என் க்ருஷ்ணன் சந்தோஷப்படுவான் . . .

யார் துரோகம் பண்ணால் எனக்கென்ன ?
நான் யாருக்கும் துரோகம் நினைக்காத வரை
எனக்கு நிம்மதியாய் தூக்கம் வரும்  . . .

யார் ஓடிப் போனால் எனக்கென்ன ?
நான் பிரச்சனைகளைக் கண்டு ஓடாதவரை
எல்லாவற்றையும் ஜெயிப்பேன் . . .

யார் ஏமாற்றினால் எனக்கென்ன ?
நான் அடுத்தவரை ஏமாற்றாதவரை,
என் வாழ்வில் தோல்வியில்லை . . .

யார் கேவலப்படுத்தினால் எனக்கென்ன ?
என் க்ருஷ்ணன் என்னைக் கேவலமாக
நினைக்காதபடி  நான் வாழ்ந்தால் உத்தமம் . . .

இவையெல்லாம் எனக்கு என் க்ருஷ்ணன்
சொன்ன ரஹஸ்யங்கள் . . .

நன்மையும், தீமையும் எனக்கு
யாரும் தர முடியாது . . .

அதனால் நான் தான் சரியாகவேண்டும் . . .

நான் சரியானால் என் வாழ்க்கை நன்றாயிருக்கும் !

நான் சரியாகாத வரை,
என் வாழ்க்கை சரியாகாது ! ! !

என்னைச் சரி செய்யாமல்,
அடுத்தவரைப் பற்றி பேசுவதால் எனக்கென்ன ?

என்னைச் சரி  செய்யாமல்,
அடுத்தவரை குறை கூறுவதால் எனக்கென்ன ?

நான் சரியாக ஆகும் வரை ஓயமாட்டேன் . . .

நான் சரியானால் எல்லாம் சரியாகும் !

இதுவே என் தாரக மந்திரம் !

நான் சரியானால் எல்லாம் சரியாகும் !

Read more...

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

நான் என்ன செய்யட்டும் ?

ராதேக்ருஷ்ணா


ஹே கிளியே !
என் க்ருஷ்ணனின் மதுரமான மொழியைக்
கேட்டதால் பேசிக்கொண்டே இருக்கிறாயோ ?


ஹே குயிலே !
என் க்ருஷ்ணனின் வேணு கானத்தைக்
கேட்ட குஷியில் இப்படிப் பாடுகிறாயா ?


ஹே மயிலே !
என் க்ருஷ்ணனைப் பார்த்ததால்
ஆனந்தத்தில் இப்படி ஆடுகிறாயா ?


ஹே யானையே !
நீ என் க்ருஷ்ணனைப் பார்த்த
சந்தோஷத்தில் உடல் பெருத்தாயோ ?

ஹே சிங்கமே !
நீ என் க்ருஷ்ணனின் நடையழகைக்
கண்டபின் இப்படி நடக்கக் கற்றாயோ ?

ஹே காளையே !
நீ என் க்ருஷ்ணனின் உடல் வனப்பைப்
பார்த்தபின்னே இப்படி ஆனாயோ ?

ஹே தாமரையே !
நீ என் கமலக்கண்ணனின் கண்களைப்
பார்த்ததால் இப்படி வெட்கத்தில் சிவந்தாயோ ?

ஹே துளசியே !
நீ என் க்ருஷ்ணனின் திருமேனியை உரசியதால்
இத்தனை சுகந்தத்தை அடைந்தாயோ ?

ஹே ஆகாசமே !
நீ என் ஷ்யாமளனின் திருமேனியை தரிசித்து
தவம் செய்து இந்த நீல வண்ணத்தைப் பெற்றாயோ ?

ஹே மேகமே !
நீ என் கார்மேக வண்ணனின் கருணையைக் கண்டு,
இந்த காருண்யமயமான கருவண்ணத்தை அடைந்தாயோ ?

 ஹே கடலே !
நீ என் கண்ணனை உன்னுள்ளே தேடித் தேடி
இத்தனை ஆழமானாயோ ?

ஹே பூமியே !
நீ என்னுடைய காதலன் கண்ணனின் பொறுமையைக்
கண்டு இத்தனை பொறுமையை அடைந்தாயோ ?

ஹே மலர்களே !
நீங்கள் எல்லோரும் க்ருஷ்ணனின் சிரிப்பைக்
கண்டுதானே இப்படிச் சிரிக்க தெரிந்துகொண்டீர்கள் ?

ஹே சந்தனமே !
நீ என் க்ருஷ்ணனின் தியாகத்தை அனுபவித்துத்தானே
உன்னைத் தேய்ப்பவருக்கும் நறுமணம் தருகிறாய் ?

ஹே மரங்களே !
நீங்கள் எல்லோரும் என் கண்ணனின் திருவடி நிழலின்
சுகம் தெரிந்துதானே எல்லோருக்கும் நிழல் தருகிறீர்கள் ?

ஹே தண்ணீரே !
என் ப்ரபுவின் ஆத்ம தாகம் தணிக்கும் ரஹஸ்யம்
அறிந்ததால் தானே எல்லோர் தாகத்தையும் தணிக்கக்
கற்றுக்கொண்டாய் ?

ஹே இரவே !
நீ என் க்ருஷ்ணனின் கருப்பு வர்ணத்தைப்
பார்த்து மயங்கித்தானே நீயும் கருப்பானாய் ?

ஹே சூரியனே !
நீ என் ஸ்வாமி கண்ணனின் ப்ரகாசத்தைக்
கொண்டுதானே உலகில் ப்ரகாசிக்கின்றாய் ?

சரி  . . .
நீங்கள் எல்லோரும் கண்ணனோடு
சம்மந்தப்பட்டு இத்தனையும்
செய்கின்றீர்கள் ! ! !

சரி . . .
இப்பொழுது நான் என்ன செய்யட்டும் ?
உங்களைப் போல் நான் க்ருஷ்ணனைக்
கண்டு என்ன செய்யட்டும் ? ? ?

ஆஹா . . .
நான் ஒன்று செய்வேன் ! ! !

நான் சுகமாய் க்ருஷ்ணனை அனுபவிப்பேன் !
உங்களில் க்ருஷ்ணனை அநுபவிப்பேன் !
உங்களோடு க்ருஷ்ணனை அனுபவிப்பேன் !

என்னால் இது மட்டுமே முடியும் !

ஐயா ! எனக்கு இது போதுமே !

நான் என் க்ருஷ்ணனை அனுபவிப்பேன் . . .
 


Read more...

சனி, 19 பிப்ரவரி, 2011

உன் குழந்தையே ! ! !

ராதேக்ருஷ்ணா



க்ருஷ்ணா !
நான் எத்தனை தவறுகள்
செய்தாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் எவ்வளவு மோசமானவனாக
இருந்தாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் உலகின் மோசமான பாபியாகவே
வாழ்ந்தாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் அறிவேயில்லாத முட்டாளாக
இருப்பினும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் உன்னை நம்பவே
இல்லையென்றாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் உன்னை கேவலமாகவே
நினைத்தாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் காமப் பிசாசாகவே
இருந்தாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
எனக்கு வாழத் தெரியாவிட்டாலும்
உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் எல்லாவிதத்திலும் தண்டமாக
இருக்கின்றேன்; எனினும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் கடமைகளிலுருந்து தவறின
ஒழுக்கங்கெட்டவனாயினும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் பொறாமை அரக்கனாகவே
இருந்தாலும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் அஹம்பாவ ராக்ஷசனானாலும்
நிச்சயம் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் சோம்பேறிகளின் ராஜனாக இருந்தாலும்
என்றும் உன் குழந்தையே !




க்ருஷ்ணா !
நான் எல்லாவிதத்திலும் குறை உடையவன் !
நீயோ துளியும் குறையில்லாதவன் !
இருந்தாலும் நான் உன் குழந்தையே !


நான் உன் குழந்தை ! ! !
இது ஒன்று தான் என் பலம் ! ! !
இது மட்டுமே எனக்கு சமாதானம் ! ! !
இதை நம்பியே நான் வாழ்கிறேன் . . .




இந்தக் குழந்தையைக் காப்பாற்று !
எல்லா சமயங்களிலும் காப்பாற்று !
எல்லா இடங்களிலும் காப்பாற்று !
எல்லா விஷயங்களிலும் காப்பாற்று !
எல்லோரிடமிருந்தும் காப்பாற்று !
என்றும் காப்பாற்று !


முதலில் என்னிடமிருந்து
என்னைக் காப்பாற்று . . .


உன் குழந்தையைக் காப்பாற்று ! ! !


எனக்கு பக்தியில்லை !
நான் ஒழுங்காக நாம ஜபம் செய்வதில்லை !
எனக்கு கர்ம யோகம் புரியவில்லை !
நான் ஆத்மா என்ற சிந்தனையில்லை !
எனக்கு உன்னைவிட்டால் கதியுமில்லை !


அதனால் க்ருஷ்ணா !
உன்னைத் தவிர யார் இந்தக் குழந்தையை
ஏற்றுக்கொள்வார்கள் ? ? ?


நீயே சொல் . . . 


அதனால் நீயே உன் குழந்தையைக் காப்பாற்று !





Read more...

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

வென்றே தீருவேன் !

ராதேக்ருஷ்ணா
 
வெல்வேன் . . .
என் அஹம்பாவமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் பொறாமையே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் பயமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் சந்தேகமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் சுயநலமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் குழப்பமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் அசிரத்தையே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் கழிவிரக்கமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் தோல்வி மனப்பான்மையே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் பாபங்களே . . .
நான் உங்களை வெல்வேன் !

வெல்வேன் . . .
என்  பூர்வ ஜன்ம கர்ம வினையே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் கெட்ட எண்ணங்களே . . .
நான் உங்களை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் அறியாமையே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என்னைப் பற்றியிருக்கும் நோய்களே . . .
நான் உங்களை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் காமமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என் கோபமே . . .
நான் உன்னை வெல்வேன் !

வெல்வேன் . . .
என்னை அழிக்கும் குணங்களே . . .
நான் உங்களை வெல்வேன் !

நிச்சயம் வெல்வேன் . . .
இதில் தவறமாட்டேன் . . .
நான் தோற்கமாட்டேன் . . .

க்ருஷ்ணன் என்னோடு இருக்கிறான் !
நாமஜபம் என்னோடு இருக்கிறது !
குரு ஆசிர்வாதம் உள்ளது !

அதனால் சந்தேகமேயில்லை !

நான் வெல்வேன் . . .
வென்றே தீருவேன் . . .







Read more...

சனி, 12 பிப்ரவரி, 2011

koLLaiyadikka vaa . . .


᧾ìÕ‰½¡


¬Éó¾õ §ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

¿¢õÁ¾¢ §ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

»¡Éõ §ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

¨ÅáìÂõ ÅçÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

Àì¾¢ §ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

Á†¡òÁ¡ì¸¨Ç ¾¡¢º¢ì¸§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

«†õÀ¡Åò¨¾ ´Æ¢ì¸§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

Í¿Äò¨¾ «Æ¢ì¸§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

¯Ä¨¸§Â ÁÈ츧ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

ÐýÀí¸¨Ç ¸¨Ç§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

¸÷ÁÅ¢¨É¨Â þøÄ¡Áø ¦ºö§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

À¡Àí¸¨Ç ¸Æ¢ì¸§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

¯ý¨É ¯½Ã§ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

À¡¸Å¾õ Ò¡¢Â §ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

áÁ¡Â½õ ¦¾¡¢Â §ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

¨ÅÌó¾ò¨¾ «ÛÀŢ츧ÅñÎÁ¡ ?
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .

ìÕ‰½ý §ÅñÎÁ¡ ?

¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
þý§È Å¡ . . .
þô¦À¡Ø§¾ Å¡ . . .
¯¼§É Å¡ . . .
µÊ Å¡ . . .
Å¡ . . .Å¡ . . . Å¡ . . .


±ý «Éó¾ÀòÁ¿¡ÀÉ¢ý
¬Éó¾ÒÃò¾¢üÌ Å¡ . . .

±ý ს¾¢Ã¡ƒÉ¢ý
«ó¾ôÒÃò¾¢üÌ Å¡ . . .

±ý §¾Å¡¾¢§¾ÅÉ¢ý
«ÆÌÒÃò¾¢üÌ Å¡ . . .

±ý ¦ºøÄôÀòÁ¿¡ÀÉ¢ý
«ÕûÒÃò¾¢üÌ Å¡ . . .

¬Éó¾ò¨¾ «ÛÀÅ¢ì¸ Å¡ . . .
«Æ¸¨É ú¢ì¸ Å¡ . . .
«Õ¨Çô ¦ÀüÚ즸¡ûÇ Å¡ . . .
Å¡úÅ¢ø ÀÂý ¦ÀÈ Å¡ . . .
Å¡úÅ¢ø ¦ÅøÄ Å¡ . . .
Å¡ú¨Å§Â ¦ÅøÄ Å¡ . . .
ÀòÁ¿¡À¨Éò ¾¡¢º¢ì¸ Å¡ . . .
ÀÂý¦ÀÈ Å¡ . . .
¨ÅÌó¾õ ¸¡½ Å¡ . . .
ÅǦÁøÄ¡õ ¦ÀÈ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
¾£Õõ §¿¡ö Å¢¨É¸¦ÇøÄ¡õ ...Å¡ . ..
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
±ÁÉ¢ý àÐÅ÷¸¨Ç ÐÃò¾Ä¡õ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
Òñ½¢Â¦ÁøÄ¡õ ¦ºöÂÄ¡õ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«ÁÃáö ¬¸¢Å¢¼Ä¡õ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡À¨É «¨½ì¸ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡ÀÉ¢ý ¨¸¨Âô À¢Êì¸ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡ÀÉ¢ý ¾¢ÕÅʨ §ºÅ¢ì¸ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡ÀÉ¢ý ¦ºí¸É¢ Å¡¨Â Õº¢ì¸ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡ÀÉ¢ý Å¢¨Ç¡𨼠ú¢ì¸ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡ÀÉ¢ý ¯òºÅò¨¾ À¡÷ì¸ Å¡ . . .
¾¢ÕÅÉó¾ÒÃõ Å¡ . . .
«Éó¾ÀòÁ¿¡ÀÛìÌ ¯ý¨Éò ¾óÐ,
«Éó¾ÀòÁ¿¡À¨É ¦¸¡û¨ÇÂÊì¸ Å¡ . . .

Read more...

வியாழன், 10 பிப்ரவரி, 2011

அனந்தபத்மநாபா !

ராதேக்ருஷ்ணா



அனந்தபத்மநாபா !
என் நாயகனே . . .


அனந்தபத்மநாபா !
என் காதலனே . . .


அனந்தபத்மநாபா !
என் ரக்ஷகனே . . .


அனந்தபத்மநாபா !
என் தகப்பனே . . .


அனந்தபத்மநாபா !
என் செல்லமே . . .


அனந்தபத்மநாபா !
என் தாயே . . .


அனந்தபத்மநாபா !
என் சகோதரனே . . .


அனந்தபத்மநாபா !
என் நண்பனே . . .


அனந்தபத்மநாபா !
என் தேவையே . . .


அனந்தபத்மநாபா !
என் உயிரே . . .


அனந்தபத்மநாபா !
என் தெய்வமே . . .


அனந்தபத்மநாபா !
என் வாழ்வே . . .


அனந்தபத்மநாபா !
என் பிள்ளையே . . .


அனந்தபத்மநாபா !
என் ரஹஸ்யமே . . .


அனந்தபத்மநாபா !
என் அன்பே . . .


அனந்தபத்மநாபா !
என் அமுதே . . .


அனந்தபத்மநாபா !
என் ஆஹாரமே . . .


அனந்தபத்மநாபா !
என் ஆதாரமே . . .


அனந்தபத்மநாபா !
என் குடும்பமே . . .


அனந்தபத்மநாபா !
என் உலகமே . . .


அனந்தபத்மநாபா !
என் மோக்ஷமே . . .


அனந்தபத்மநாபா !
என் ஆனந்தமே . . .


அனந்தபத்மநாபா !
என் பலமே . . .


அனந்தபத்மநாபா !
என் நலம்விரும்பியே . . .


அனந்தபத்மநாபா !
என் அழகனே . . .


அனந்தபத்மநாபா !
என் விளையாட்டே . . .


அனந்தபத்மநாபா !
என் கண்ணே . . .


அனந்தபத்மநாபா !
என் கண்மணியே . . .


அனந்தபத்மநாபா !
என் கண்ணனே . . .


அனந்தபத்மநாபா !
என் நிதியே . . .


அனந்தபத்மநாபா !
என் சமத்தே . . .


அனந்தபத்மநாபா !
என் காதலியே . . .


அனந்தபத்மநாபா !
என் சகோதரியே . . .


அனந்தபத்மநாபா !
என் பிதாமஹனே . . .


அனந்தபத்மநாபா !
என் வம்சமே . . .


அனந்தபத்மநாபா !
என் தைரியமே . . .


அனந்தபத்மநாபா !
என் வீரமே . . .


அனந்தபத்மநாபா !
என் பிராணனே . . .


அனந்தபத்மநாபா !
என் அனந்தபத்மநாபா !


அனந்தபத்மநாபா !
உன்னைப் பற்றி
நினைப்பதே சுகம் . . .


அனந்தபத்மநாபா !
உன்னைப் பற்றி
பேசுவதே சுகம் . . .


அனந்தபத்மநாபா !

உன்னைச் சுற்றி ஒரு வாழ்க்கை . . .
உன்னையே நினைத்து ஒரு வாழ்க்கை . . .
உனக்காகவே ஒரு வாழ்க்கை . . .
நீயே ஆதாரமாய் ஒரு வாழ்க்கை . . .


இது போதும் . . .
அனந்தபத்மநாபா ! என் அனந்தபத்மநாபா !


 

Read more...

புதன், 9 பிப்ரவரி, 2011

கிச்சா ! கிச்சா !

ராதேக்ருஷ்ணா



கிச்சா ! கிச்சா !
லட்டு கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
பட்டு கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
குஞ்சு கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
அழகு கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
சமத்து கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
ராஜாத்தி கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
குட்டி கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
செல்ல கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
குண்டு கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
கருப்பு கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
எங்க கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
நம்ம கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
ராதேகிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
வா . . . வா . . .கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
ஓடி வா . . .  கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
விளையாட வா . . . கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
மம்மு சாப்பிடலாம் கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
உன்னைத் தா . . . கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
என்னை எடுத்துக்கோ . . . கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
என்னோடு இரு . . . கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
என்னோடு பேசு . . . கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
எனக்கு நீ வேணும் . . . கிச்சா ! ! !


கிச்சா ! கிச்சா !
கிச்சா ! கிச்சா !


அய்யா . . . .கிச்சா . . . வந்தானே !
எனக்கு முத்தம் தந்தானே !
நான் அவனோடு விளையாடப் போறேனே ! ! !




Read more...

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உதயாஸ்தமனம் . . .

ராதேக்ருஷ்ணா


சூர்ய உதயம் . . .
சந்திர அஸ்தமனம் . . .


ப்ரேம உதயம் . . .
காம அஸ்தமனம் . . .


ஞான உதயம் . . .
அஞ்ஞான அஸ்தமனம் . . .


பக்தி உதயம் . . .
பயம் அஸ்தமனம் . . .


வைராக்ய உதயம் . . .
ஆசை அஸ்தமனம் . . .


சத்சங்க உதயம் . . .
சந்தேக அஸ்தமனம் . . .


நாம ஜப உதயம் . . .
புலம்பல் அஸ்தமனம் . . .


அன்பு உதயம் . . .
விரோதம் அஸ்தமனம் . . .


சிரத்தை உதயம் . . .
அசிரத்தை அஸ்தமனம் . . .


ஆனந்த உதயம் . . .
துக்க அஸ்தமனம் . . .


ஆரோக்ய உதயம் . . .
வியாதி அஸ்தமனம் . . .


சத்குரு உதயம் . . .
சஞ்சல அஸ்தமனம் . . .


சரணாகதி உதயம் . . .
சிரமம் அஸ்தமனம் . . .


வினயம் உதயம் . . .
அஹம்பாவம் அஸ்தமனம் . . .


உத்ஸாக உதயம் . . .
சோம்பல் அஸ்தமனம் . . .


மோக்ஷ உதயம் . . .
சம்சார அஸ்தமனம் . . .


ஆத்ம ஸ்வரூப உதயம் . . .
சரீர அபிமான அஸ்தமனம் . . .




ஒவ்வொரு சூர்ய உதயத்திலும்,
புதிது புதிதாய் வாழ்க்கை உதயம் . . .




அதனால் எப்பொழுதும்
சந்தோஷமாயிரு . . .




துக்கத்தை அஸ்தமனம் செய்து,
ஆனந்தத்தை உதயமாக்கிவிடு ! ! !




இப்படி செய்ய நம்மால் ஆகுமோ ?




முடியாது அல்லவா ?




அப்பொழுது திருவனந்தபுரத்தில்,
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியின்
ஒரு நாள்
உதயாஸ்தமன பூஜையில் கலந்து கொள் !




உதயத்திலிருந்து,அஸ்தமனம் வரை
ஸ்ரீ பத்மநாபனை நீ அனுபவித்தால்,
தேவையில்லாதவை அஸ்தமனமாகி,
தேவையானவை நிச்சயம் உதயமாகும் . . .




அதனால் எந்த சூர்ய உதயத்திலிருந்து,
நீ ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியோடு
இருக்கப்போகிறாய் ? ? ?


இன்று நாங்கள் அனுபவித்த
உதயாஸ்தமன பூஜையில்
ஸ்ரீ அனந்த பத்மநாபன்,
அடியேனுக்கு சொன்னவையே இவை !


அடுத்த உதயாஸ்தமன பூஜைக்காக
ஏங்கும் ஸ்ரீ அனந்த பத்மநாபனின்
தாஸர்களின் தாஸானு தாஸன் . . .




ஹே ! பத்மநாபா !
ஒரு ஜன்மா என்னை உனக்குப்
பூஜை செய்யும் அர்ச்சகராக்கி,
நித்யம் உதயாஸ்தமன பூஜை
செய்யவைப்பாயா ?  ?  ?




Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP