ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஜனவரி, 2011

எம்பார் கோவிந்தர் . . .

ராதேக்ருஷ்ணா

எம்பார் கோவிந்தர் . . .

அன்றொரு நாள் இதே நாளில்
[தை புனர்வசு, 1021ம் வருடம்]
ஸ்ரீ வைஷ்ணவம் பெற்ற தவப் பிள்ளை ! 


ஸ்வாமி இராமானுஜரின் சித்திப் பிள்ளை !

மழலை மங்கலத்தின் செல்லப் பிள்ளை !

தை புனர்வசு பெற்றெடுத்த முத்துப் பிள்ளை !

பெரிய திருமலை நம்பியின் சகோதரி பிள்ளை !

கருடாழ்வாரின் அம்சத்தோடு பிறந்த உத்தமப் பிள்ளை !

விந்திய மலைக்காட்டில் ராமானுஜரைக் காத்த பிள்ளை !

கங்கையில் லிங்கம் கை கொணர்ந்த பிள்ளை !

சிவ பூஜை செய்த ஸ்ரீ வைஷ்ணவப் பிள்ளை !

 திருமலை நம்பியால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பிள்ளை !

குருவின் படுக்கையில் படுத்துறங்கிய பிள்ளை !

பாம்பிற்கும் நல்லது செய்யும் பித்துப் பிள்ளை !

 இராமானுஜரால் தானம் பெறப்பட்ட பிள்ளை !

தனிமையில் மனைவியை அனுபவிக்காத
வைராக்யப் பிள்ளை !

துறவறம் சிறந்த அறம் என்று துறவியான பிள்ளை !

தன் குணங்கள் ஆசார்யரின் கிருபை என்ற பிள்ளை !

தாசியின் வீட்டு வாசலில் தன்னை மறந்திருந்த பிள்ளை !

குலபாத்திரத்திற்க்கும் ராமானுஜ நாமத்தை வைத்த பிள்ளை !

குழந்தைகளின் மேனிக்கும் பரியும் பாசப் பிள்ளை !

சரணாகதி ரக்ஷிக்கும் என்று  ராமானுஜரிடம் வாதிட்ட பிள்ளை !

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு
என்னிதயத்துளதால் இல்லை எனக்கெதிர்,
இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிரென்ற
சத்சிஷ்ய பிள்ளை . . .

ஸ்ரீ ராமானுஜ பாதுகையை தலையில் வைத்து
பெரியாழ்வார் திருமொழிக்கு அர்த்தம்
சொன்ன திவ்யமான பிள்ளை . . .

எம்பெருமானாரின் பெயரைச் சுறுக்கி
எம்பாராக வைத்துக்கொண்ட உரிமைப் பிள்ளை ! 

ஹே பூமா தேவியே . . .
மீண்டும் ஒரு முறை
இந்தப் பவித்ரமான பிள்ளையை
பெற்றெடுத்து எங்களுக்குத் தா . . .


எம்பார் கோவிந்தர் திருவடிகளே
சரணம் . . . சரணம் . . . சரணம் . . .

எம்பார் வம்சத்தாருக்கு
நாங்கள் குற்றேவல் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP