ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

என்னைக் காப்பாற்று !

ராதேக்ருஷ்ணா

என்னைக் காப்பாற்று !

க்ருஷ்ணா என்னைக் காப்பாற்று !

எப்படியாவது என்னைக் காப்பாற்று !

உன்னைத் தவிர யாரும் என்னை
இந்த உலகில் காப்பாற்றமுடியாது !

உன்போல் கருணையோ,
அக்கறையோ,அன்போ,
உலகில் யாருக்கும் கிடையாது !

உன்னிடம் மட்டுமே நான்
உரிமையுடன் கேட்க்கமுடியும் !

க்ருஷ்ணா! உன்னால் மட்டுமே
என் மனதை
உள்ளபடி புரிந்துகொள்ளமுடியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
உடலை உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
அழுகை உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கோபமும் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
பயம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
உணர்வுகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
பரிதவிப்பு உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
தேவைகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
வெட்கம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கர்மவினைகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கடந்தகாலம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
நிகழ்காலம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
எதிர்காலம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கேள்விகள் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
கேள்விகளுக்குப் பதில் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
அன்பு உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
தேடல் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
அசட்டுத்தனம் உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
பொறுமை உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே என்
முணுமுணுப்பு உள்ளபடி தெரியும் !

க்ருஷ்ணா! உனக்கு மட்டுமே
என்னைப்பற்றி
எல்லாம் உள்ளபடி தெரியும் !

அதனால் நீ தான் என்னைக்
காப்பாற்றமுடியும் !
இத்தனை நாள் நீ தான் என்னைக்
காப்பாற்றினாய் !
இனியும் நீ தான் என்னைக்
காப்பாற்றவேண்டும் !

க்ருஷ்ணா !
தயவு செய்து என்னைக் காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அகம்பாவிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வேஷதாரிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பொறாமைக்காரர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சுயநலவாதிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பாவிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை காமாந்தகக்காரர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை நம்பிக்கை துரோகிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை தீவிரவாதிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை முட்டாள்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வஞ்சகர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைப் பேய்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைத் திருடர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை மிருகங்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை மனிதர்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் குடும்பத்தினரிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை நாஸ்தீகவாதிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சம்சாரிகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை போலி மதகுருமார்களிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அஞ்ஞானிகளிடமிருந்து
காப்பாற்று !

இவைகளிலிருந்து மட்டும்
காப்பாற்றினால் போதாது !
இன்னும் பல விஷயங்களிலிருந்து
என்னைக் காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அகம்பாவத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சுயநலத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் காமத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கோபத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பலவீனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பயத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அவநம்பிக்கையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் கர்மவினையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பாவத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை தற்பெருமையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை குழப்பத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அழுகையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பொறாமையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கேலிக்கூத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கெட்டவார்த்தைகளிடமிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பாசத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை பந்தத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை விரோதத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சந்தேகத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வியாதிலியிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அருவருப்பிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை சோம்பேறித்தனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை உடல்கவர்ச்சியிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை ஆசையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அசிரத்தையிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கோள்சொல்வதிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை ஏமாற்றுத்தனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னைக் கருமித்தனத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வீண் செலவுகளிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அறைகுறை பக்தியிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை அல்பத்தனங்களிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வேஷ பக்தியிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கற்பனை த்யானத்திலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை கனவுகளிலிருந்து
காப்பாற்று !

க்ருஷ்ணா !
என்னை வயிற்றெரிச்சலிலிருந்து
காப்பாற்று !

இன்னும் சொல்லத்தெரியாத
சொல்லமுடியாத,
எல்லாவற்றிலிருந்தும்
காப்பாற்று !

காப்பாற்று ! காப்பாற்று ! காப்பாற்று !

நான் இந்தப் பிறவியை
அடைவதற்கு முன்னும்
க்ருஷ்ணா ! நீ தான் காப்பாற்றினாய் !

நான் தந்தையின் உடலில்
யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தபோதும்
க்ருஷ்ணா ! நீ தான் காப்பாற்றினாய் !

நான் தாயின் கர்ப்பத்தில்
சிறைபட்ட சமயத்திலும்
க்ருஷ்ணா ! நீ தான் காப்பாற்றினாய் !

நான் இந்த உலகில் வந்து
பிறந்த போதும்,
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றினாய் !

எனக்கு ஒன்றும் தெரியாத போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றினாய் !

நான் வளரும்போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றினாய் !

நான் என்னையே மறந்து
தூங்கும் போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றுகின்றாய் !

நான் கனவில் சஞ்சரிக்கும்போதும்
க்ருஷ்ணா !
நீ தான் என்னைக் காப்பாற்றுகின்றாய் !

க்ருஷ்ணா !
இனியும் காப்பாற்று !
என்றும் காப்பாற்று !
எப்பொழுதும் காப்பாற்று !
எங்கும் காப்பாற்று !
எல்லோரிடமிருந்தும் காப்பாற்று !
எல்லாவற்றிடமிருந்தும் காப்பாற்று !

மரணம் வரையிலும் காப்பாற்று !
மரணத் தறுவாயிலும் காப்பாற்று !
மரணத்திற்குப் பிறகும் காப்பாற்று !

எல்லா ஜன்மத்திலும் காப்பாற்று !
எந்தப் பிறவியிலிருந்தாலும் காப்பாற்று !
எதுவாயிருந்தாலும் காப்பாற்று !
எல்லா லோகங்களிலும் காப்பாற்று !

முக்கியமாக
என்னிடமிருந்து என்னைக் காப்பாற்று !

த்ரௌபதியைக் காப்பாற்றியது
உண்மையென்றால் என்னையும் காப்பாற்று !
கஜேந்திரனைக் காப்பாற்றியது
சத்தியமென்றால் என்னையும் காப்பாற்று !
கோகுலத்தைக் காப்பாற்றியது
நிஜமென்றால் என்னையும் காப்பாற்று !

ஸ்வாமி ராமானுஜரைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !
மீராமாதாவைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !
ப்ரஹ்லாதனைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !
அஜாமிளனைக் காப்பாற்றிய நீ
என்னையும் காப்பாற்றுவாய் !

க்ருஷ்ணா ! உன்னால் முடியும் !
க்ருஷ்ணா ! உன்னால் தான் முடியும் !
க்ருஷ்ணா ! உன்னால் மட்டுமே முடியும் !

சரணாகதி செய்துவிட்டேன் !
எப்போதைக்கும் இப்போதே சொல்லிவிட்டேன் !
உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன் !

க்ருஷ்ணா ! இனி உன் இஷ்டம் !
இனி நான் உன் உடைமை !

உன் பொருளை நீ காப்பாற்றிக்கொள் !

க்ருஷ்ணா !
அதுதான் உனக்கு மரியாதை !

என்னைக் காப்பாற்றி
உன் மரியாதையைக்
காப்பாற்றிக்கொள் ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP