ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 பிப்ரவரி, 2010

உலகை மாற்றுவோம் !



ராதேக்ருஷ்ணா


உலகில் பல அற்புத
மாற்றங்களைச் செய்வது
ப்ரார்த்தனையே !

ப்ரார்த்தனைக்குச் சமமான
உத்தமமான ஒன்று
பூமியில் என்றுமே
இருந்தது கிடையாது !

ப்ரார்த்தனையால்
சாதிக்க முடியாதது
எதுவுமில்லை !

ப்ரார்த்தனை செய்வது
மிகச்சுலபம் !

ப்ரார்த்தனை பகவானையே
கட்டிப்போடும் !

இன்று நமக்குத் தேவை
ப்ரார்த்தனையே !

அதிலும் கூட்டுப் ப்ரார்த்தனை
சத்தியமாகப் பல
பெரிய காரியங்களைச்
சாதித்துத் தரும் !

இன்று நாம் செய்யவேண்டிய
மிக முக்கியமான
ஒரு ப்ரார்த்தனை
நம் வருங்கால சந்ததிக்கானது !

பலரும் செய்ய மறந்த ப்ரார்த்தனை !
கட்டாயம் செய்தேயாக வேண்டிய ப்ரார்த்தனை !
நிச்சயம் மாற்றம் தரும் ப்ரார்த்தனை !

வாருங்கள் !
ஒன்றாய் கூடுவோம் !
உலகை மாற்றுவோம் !

ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா!

ஆஞ்சனேயரே !
எங்கள் குழந்தைகள்
வினயமாயிருக்க
வழிகாட்டுங்கள்!

ப்ரஹ்லாதனே !
எங்கள் குழந்தைகள்
த்ருடமாயிருக்கக் 
கற்றுத் தாருங்கள் !

த்ருவனே !
எங்கள் குழந்தைகள்
விடாது நாமஜபம் செய்ய 
கன்னத்தில் தடவுங்கள்!

மீரா மாதா !
எங்கள் குழந்தைகள்
விடாது க்ருஷ்ண பஜனை செய்ய 
ஒரு கடைக்கண் பார்வை
பாருங்கள்!

 மதுரகவியாழ்வாரே!
எங்கள் குழந்தைகள்
குருவைப் பிடித்துக்கொள்ளச்
செய்யுங்கள்!


வடுகநம்பியே !
எங்கள் குழந்தைகள்
சத்சிஷ்யர்களாயிருக்கச்
க்ருபை செய்யுங்கள்!
 

சஞ்சயரே !
எங்கள் குழந்தைகள்
பகவத் கீதையைக் கேட்க
ஆசிர்வாதியுங்கள் !

சுகப்ரும்ம மஹரிஷியே !
எங்கள் குழந்தைகள்
பாகவதத்தில் திளைக்க
பாத தீக்ஷை செய்யுங்கள் !



ஆண்டாளே !
எங்கள் குழந்தைகள்
க்ருஷ்ணனை கல்யாணம் செய்ய
வழி சொல்லித்தாருங்கள் !

பராசர பட்டரே!
எங்கள் குழந்தைகள்
மனிதரிடம் எப்படி பழகவேண்டும் என்று
வழிகாட்டுங்கள் !


சத்ரபதி சிவாஜியே!
எங்கள் குழந்தைகள்
இந்து தர்மத்தைக் காக்க
அவர்களுக்குத் தைரியத்தைத் தாருங்கள் !


சதாசிவ ப்ரும்மேந்திரரே !
எங்கள் குழந்தைகள்
பற்றில்லாமல் வாழ
பக்குவத்தைத் தாருங்கள் !

ஏகநாதரே !
எங்கள் குழந்தைகள்
எப்பொழுதும் பொறுமையாயிருக்க
அனுக்ரஹியுங்கள் !


சக்குபாய் மாதாவே!
எங்கள் குழந்தைகள்
விட்டலனை கட்டிப்போட
அருள் செய்யுங்கள் !


கோவிந்ததாசரே !
எங்கள் குழந்தைகள்
க்ருஷ்ணனோடு விளையாட
க்ருபை செய்யுங்கள் !

ராமானுஜரே !
எங்கள் குழந்தைகள்
பகவானிடம் சரணாகதி செய்ய
ஒரு வார்த்தை சொல்லுங்கள் !


பீஷ்ம பிதாமஹரே !
எங்கள் குழந்தைகள்
எப்பொழுதும் ஆரோக்கியமாயிருக்க
சஹஸ்ரநாமம் சொல்லி
அசீர்வதியுங்கள் !

சத்குருநாதா !
எங்கள் குழந்தைகள்
க்ருஷ்ணனின் சொத்தாயிருக்க
கட்டளையிடுங்கள் !


க்ருஷ்ணா !
எங்கள் குழந்தைகள்
பாகவதர்களாக இருக்க
விதி செய் !


ராதே !
எங்கள் குழந்தைகள்
உனக்குப் பிடித்த குழந்தையாயிருக்க
தாய்பால் கொடு !


அத்தனை பக்தர்களின்
திருவடிகளிலும்
வந்தனம் செய்கிறோம் !

எதிர்கால,வருங்கால
சந்ததிகள்
ஒரு குறையில்லாமல்,
ஒரு வியாதியில்லாமல்,
ஒரு பொறாமையில்லாமல்,
ஒரு அகம்பாவமில்லாமல்,
ஒரு குழப்பமில்லாமல்,
ஒரு பயமில்லாமல்,
ஒரு முட்டாள்தனமில்லாமல்,
ஒரு சண்டையில்லாமல்,
ஒரு வறுமையில்லாமல்,
ஒரு விரோதமில்லாமல்,

ஆனந்தமாக,ஆரோக்கியமாக,

பக்தியில் கோடீஸ்வரராக,
பகவானிஷ்டப்படி வாழ
அப்போதைக்கு
இப்போதே
சரணாகதி செய்கிறோம் ! ! !


அத்தனை மஹாத்மாக்களும்,
மஹதிகளும்
எங்களின் இந்த ப்ரார்த்தனைக்கு
"அப்படியே நடக்கட்டும்"
என்று ஆசீர்வதியுங்கள் . . .


இதை விட எங்களுக்கு
வேறு என்ன ஆசீர்வாதம் தேவை . . .


இனி உலகம் மாறும் . . .

எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது ! ! !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP