ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஒரு வரம் தா...




ராதேக்ருஷ்ணா


உலகிற்கு என்  பாரதமே
அஸ்திவாரம் !

உலகிற்கு என் பாரதமே
தாய் !

உலகிற்கு என் பாரதமே
ஆதாரம் !

உலகிற்கு என் பாரதமே
குரு !

உலகிற்கு என் பாரதமே
ஒளி விளக்கு !

உலகிற்கு என் பாரதமே
அழகு !

உலகிற்கு என் பாரதமே
வழி காட்டி !

உலகிற்கு என் பாரதமே
பூஜை அறை !

உலகிற்கு என் பாரதமே
கோயில் !

உலகிற்கு என் பாரதமே
தெய்வம் !

உலகிற்கு என் பாரதமே
பல்கலைக்கழகம் !

உலகிற்கு என் பாரதமே
பலம் !

உலகிற்கு என் பாரதமே
திலகம் !

உலகிற்கு என் பாரதமே
ரக்ஷகன் !

உலகிற்கு என் பாரதமே
ஜீவாதாரம் !

உலகிற்கு என் பாரதமே
தோழன் !

உலகிற்கு என் பாரதமே
 குருகுலம் !

உலகிற்கு என் பாரதமே
சமாதானம் !

உலகிற்கு என் பாரதமே
சூரியன் !

உலகிற்கு என் பாரதமே
ப்ராணன் !

உலகிற்கு என் பாரதமே
தொட்டில் !

உலகிற்கு என் பாரதமே
தாலாட்டு !

உலகிற்கு என் பாரதமே
விடியல் !

உலகிற்கு என் பாரதமே
ஆறுதல் !

உலகிற்கு என் பாரதமே
தூதுவன் !

உலகிற்கு என் பாரதமே
 ஆதிமூலம் !

உலகிற்கு என் பாரதமே
அன்பு !

உலகிற்கு என் பாரதமே
தர்மம் !

உலகிற்கு என் பாரதமே
சுமைதாங்கி !

உலகிற்கு என் பாரதமே
ஜீவ ஊற்று !

உலகிற்கு என் பாரதமே
வீடு !

உலகிற்கு என் பாரதமே
ஆனந்தம் ! 

என் பாரதத்தைச் சொல்ல
எந்த மொழியிலும்
என் பாரதத்திற்குச் சமமான
வார்த்தைகளே இல்லை . . .

இது பகவானின் அவதார தேசம்...
இது ரிஷிகளின் தவத்தின் தேசம்... 
இது சித்தர்களின் விளையாட்டு தேசம்...
இது பக்தர்களின் பக்தி தேசம்...
இது உத்தமர்களின் தியாக தேசம்...
இது பதிவ்ரதைகளின் தர்ம தேசம்...
இது தர்மவான்களின் வீர தேசம்...
இது ஞானிகளின் த்யான தேசம்...
இது பாகவதர்களின் அனுபவ தேசம்...
இது வேத மந்திரங்களின் சப்த தேசம்...
இது யோகிகளின் யோக தேசம்...
இது விரக்தர்களின் மௌன தேசம்...
இது குருமார்களின் உபதேச தேசம்...
இது சிஷ்யர்களின் ஆன்மீக தேசம்...
இது கோயில்களின் தேசம்...
இது புண்ணிய நதிகளின் சங்கம தேசம்...
இது மொழிகளின் தெய்வீக தேசம்... 
இது சத்சங்க தேசம்...

  இது குறைவில்லாத தேசம்...
இது ஆனந்த தேசம்...
இது இந்து தேசம்... 
 
 என் பாரதத்தாய் இல்லையென்றால்
உலகம் என்னவாகும் ????????

உலகம் இல்லாமல் போகும்....

என் பாரதம் என்றும் பகவானின் அந்தப்புரம்....

 என் பாரதத்தாயே !
உன்னிடம் இந்த குழந்தையின்
மழலைப் பிரார்த்தனை !


பாரதமாதா ! ! ! 
 தெரிந்தோ, தெரியாமலோ
நான் உன்னை
அவமதித்திருந்தாலோ,
உனக்குக் கஷ்டம் தந்திருந்தாலோ,
உன்னிடத்தில் அபசாரம் செய்திருந்தாலோ,
மன்னித்துவிடு....மன்னித்துவிடு...மன்னித்துவிடு...

 உன் திருவடியை விட்டால்
எனக்கு வேறு கதி கிடையாது....
  
நீ தான் ராமனைத் தந்தாய்...
நீ தான் ஆஞ்சனேயனைத் தந்தாய்... 
நீ தான் க்ருஷ்ணனைத் தந்தாய்...
நீ தான் ராதிகாவைத் தந்தாய்... 
நீ தான் ப்ரம்மனைத் தந்தாய்... 
நீ தான் சிவனைத் தந்தாய்...
நீ தான் தேவியைத் தந்தாய்... 
நீ தான் கணபதியைத் தந்தாய்... 
நீ தான் முருகனைத் தந்தாய்...
நீ தான் ஐயப்பனைத் தந்தாய்...

நீ தான் துருவனைத் தந்தாய்...
நீ தான் ப்ரஹ்லாதனைத் தந்தாய்...
நீ தான் ஜனகரைத் தந்தாய்...
நீ தான் கோபிகளைத் தந்தாய்...
நீ தான் யசோதையைத் தந்தாய்...
நீ தான் நம்மாழ்வாரைத் தந்தாய்...
நீ தான் கண்ணப்பநாயனாரைத் தந்தாய்... 
நீ தான் ஆண்டாளைத் தந்தாய்...
நீ தான் ஸ்வாமி ராமானுஜரைத் தந்தாய்...
நீ தான் சங்கரரைத் தந்தாய்...
நீ தான் மத்வரைத் தந்தாய்... 
நீ தான் மீராவைத் தந்தாய்...
நீ தான் துகாராமைத் தந்தாய்...
நீ தான் க்ருஷ்ண சைதன்யரைத் தந்தாய்...
நீ தான் இராகவேந்திரரைத் தந்தாய்...
நீ தான் அன்னமாச்சார்யரைத் தந்தாய்...
நீ தான் ஜயதேவரைத் தந்தாய்...
நீ தான் பூந்தானத்தைத் தந்தாய்... 
நீ தான் விவேகானந்தரைத் தந்தாய்...

நீ தான் வேதத்தைத் தந்தாய்...
நீ தான் சாஸ்திரங்களைத் தந்தாய்...
நீ தான் இராமாயணம் தந்தாய்...
நீ தான் மஹாபாரதம் தந்தாய்...
நீ தான் பாகவதம் தந்தாய்...
நீ தான் பகவத் கீதையைத் தந்தாய்... 
நீ தான் திவ்யப்ரபந்தம் தந்தாய்...
நீ தான் ஸ்லோகங்களைத் தந்தாய்...
நீ தான் கீர்த்தனைகளைத் தந்தாய்...
நீ தான் பதிகங்களைத் தந்தாய்...
நீ தான் அபங்கங்களைத் தந்தாய்...
நீ தான் நாராயணீயம் தந்தாய்...
நீ தான் ராமசரிதமானசம் தந்தாய்...
நீ தான் அஷ்டபதியைத் தந்தாய்...
நீ தான் பஜ கோவிந்தம் தந்தாய்...
நீ தந்ததை யாரால்
கணக்கு வைத்துக் கொள்ள முடியும் !


உனக்குள் தானே ப்ருந்தாவனம் !
உனக்குள் தானே பர்சானா !
உனக்குள் தானே அயோத்யா !
உனக்குள் தானே குருவாயூர் !
உனக்குள் தானே திருஅனந்தபுரம் !
உனக்குள் தானே திருமலை !
உனக்குள் தானே ஸ்ரீரங்கம் !
உனக்குள் தானே உடுப்பி !
உனக்குள் தானே பண்டரீபுரம் !

உனக்குள் தானே ஜோதிர்லிங்கங்கள் !
உனக்குள் தானே அறுபடைவீடு !
உனக்குள் தானே சபரிமலை !
உனக்குள் தானே கொல்லூர் !
உனக்குள் தானே சோட்டாணிக்கரை !
உனக்குள் தானே அஷ்டவிநாயக் !
உனக்குள் இன்னும்
எத்தனையோ அதிசயங்கள் !
உன்னைத் தவிர யார் உள்ளபடி அறிவார் !



உன் மீது தானே 
கங்கை விளையாடுகிறாள் !
உன் மீது தானே
காவேரியும் ஆடுகின்றாள் !
உன் மீது தானே
யமுனையும் துள்ளுகின்றாள் !
உன் மீது தானே
தாமிரபரணியும் தவமிருக்கிறாள் !
உன் மீது தவழ
யாருக்குத் தான் இனிக்காது....





நீ தான் என் குருஜீஅம்மாவைத் தந்தாய்...
நீ தான் என் குருஜீ அம்மாவை வளர்த்தாய்...
நீ தானே என் குருஜீ அம்மாவை சுமக்கிறாய்...


நீ தந்ததற்கு உலகமே கடன்பட்டிருக்கிறது...

யாராலும் இந்தக் கடனை
அடைக்கவே முடியாது....

உன் மடியில் எனக்கும் ஒரு
இடம் கொடுத்தாயே....

என்னால் ஒன்றும் உனக்குத் தரமுடியாது...

உன்னிடம் யாசிக்கிறேன்...

மீண்டும் மீண்டும் மீண்டும்
உன் மடியில்
நான் பிறக்க,
நான் விளையாட,
நான் வளர,
நான் வாழ,
நான் மடிய,
ஒரு வரம் தா...

வந்தேமாதரம்...

பாரதமாதாவின்
பொற்கமல பாதங்களில்
கோடானு கோடி வந்தனங்கள்...

ஓம் நமோ பாரத !

 



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP