ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 நவம்பர், 2009

கலங்காதே !



ராதேக்ருஷ்ணா


கலங்காதே !


எதற்கும் கலங்காதே !


உன்னைப்பற்றி எத்தனை
அவதூறு சொன்னாலும்
கலங்காதே !

உன் மேல் வார்த்தைகளை
நெருப்பாய் உமிழ்ந்தாலும்
கலங்காதே !

உன் மேல் அபாண்டமாய்
பழி சுமத்தினாலும்
கலங்காதே !

உன்னை புழுவைவிட
கேவலமாக நடத்தினாலும்
கலங்காதே !

உன்னை மனிதராய்
நடத்தாவிட்டாலும்
கலங்காதே !

உன்னை எவ்வளவு பாடாய் 
படுத்தினாலும் 
கலங்காதே !

நீ செய்யாத பாவங்களை நீ

செய்தாய் என்று 
பொய்சத்தியம் செய்தாலும் 
கலங்காதே !

உன்னை பலரோடு தொடர்பு 

செய்து பேசினாலும் 
கலங்காதே !

உன்னிடம் காரியங்களை சாதித்துக்கொண்டு உன்னை எச்சில் இலையாக 

வீசி எறிந்தாலும்
கலங்காதே !


உன்னை நம்பவைத்து ஏமாற்றி 

கழுத்தை அறுத்தாலும் 
கலங்காதே ! 


உன்னை அழிப்பதற்காக உன்னிடம் 
நன்றாகப் பழகுபவர்களே உனக்குக் 
குழி பறித்தாலும் 
கலங்காதே !

உன்னைப் பற்றி எத்தனை

மோசமாகப் பேசினாலும் 
கலங்காதே !

உன் வளர்ச்சியைத் தடுக்க 

எத்தனை சூழ்ச்சி செய்தாலும் 
கலங்காதே !

உன்னை அழிக்க 

எத்தனை விதமான
முயற்சிகள் நடந்தாலும் 
கலங்காதே !

உன் மேல் காரி 

உமிழ்ந்தாலும் 
கலங்காதே !

உன்னை வம்புச்சண்டைக்கு இழுத்து

உன் மன நிம்மதியை 
குலைக்க முயற்சித்தாலும் 
கலங்காதே !


உன்னை பலபேர் முன் எத்தனை 
கீழ்த்தரமான வார்த்தைகளால்
திட்டினாலும் 
கலங்காதே !

உன்னை வேஷதாரி 

என்று ஊர் முன்னே 
கேவலப்படுத்தினாலும் 
கலங்காதே !





எதையும் நீ மனதில் ஏற்றிக்கொண்டால் தான் உனக்கு...
ஏற்றிகொள்ளாதவரை உனக்குத் துளியும் 
சம்மந்தம் இல்லை

 

எல்லாவற்றையும் க்ருஷ்ணனுக்கு 
அர்ப்பணம் செய்துவிடு!

 

உன் க்ருஷ்ணன் உன்னை அறிவான்!
உன் க்ருஷ்ணன் உன் மனதை அறிவான்!
உன் க்ருஷ்ணன் உனக்கு சாக்ஷியாய் இருக்கின்றான்!

 

அதனால் ...
எது வந்தாலும் கலங்காதே !
எது நடந்தாலும் கலங்காதே !
எப்படி நடந்தாலும் கலங்காதே !

 

நீ வீழ மாட்டாய்!
உன் சத்தியம் நிச்சயம் வெல்லும்!
அதுவரை நிதானமாக, த்ருடமாக, தைரியமாக நாமஜபம் செய்து கொண்டேயிரு!









 



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP