ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2009

உன் வாழ்க்கையை வாழ் ! ! !



ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை வாழ் ! ! !

எறும்பு, பட்டாம்பூச்சியின்
வாழ்க்கையை வாழ
ஆசைப்படவில்லை !

நாய், சிங்கத்தைப் பார்த்து
ஒரு நாளும் துளிகூட
பொறாமைப்படவில்லை !

யானை ஆகாயத்தில்
பறக்கும் கிளியைக் கண்டு
ஏக்கப் பெருமூச்சுவிடவில்லை !

காகம்,குயிலின் இசையைக்
கேட்டு தானும் அது போல்
பாட ஏங்கவில்லை ! 

 அதனதன் வாழ்க்கையை அது
வாழ்கின்றது !

நீ மட்டும் ஏன் பொறாமைப்படுகிறாய் !
 நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய் !
நீ மட்டும் ஏன் புலம்புகிறாய் !
நீ ஏன் வருந்துகிறாய் !
நீ ஏன் ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய் !

உன் வாழ்க்கை விசேஷமானது !

நீ அடுத்தவருடைய தூக்கத்தை
தூங்கமுடியாது !

நீ அடுத்தவருடைய பசிக்கு
சாப்பிடமுடியாது !

நீ அடுத்தவருடைய
வாழ்க்கையை வாழமுடியாது !

ஆகாசம் போல் பூமி இல்லை !

பூமி போல் காற்று இல்லை !

காற்று போல் தீ இல்லை !

தீயைப் போல் தண்ணீர் இல்லை !

ஆலமரம் போல் பப்பாளி மரம் இல்லை !

பல்லி போல் புலி இல்லை !

தங்கம் போல் தகரம் இல்லை !

பலாப்பழம் போல் வாழைப்பழம் இல்லை !

கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் இல்லை !


துணி போல் கருங்கல் இல்லை !

சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை !

நாற்காலி போல் கட்டில் இல்லை !  
  
ஒரு மரத்தின் பழங்களிலேயே
ஒன்று போல் மற்றொன்று இல்லை !

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே
ஒருவர் போல் மற்றொருவர் இல்லை !

ஆண்உடல் போல் பெண்ணுடல் இல்லை !
  
நேற்று போல் இன்று இல்லை !
இன்று போல் நாளை இல்லை !

போன நிமிடம் போல் இந்த நிமிடம் இல்லை !
இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இல்லை ! 

ஒன்றுபோல் மற்றொன்று இல்லை !

இத்தனை ஏன் ....
உன் தலைவலி போல் பல்வலி இல்லை!
உன் துன்பக்கண்ணீர் போல்
ஆனந்தக்கண்ணீர் இல்லை !
உன்னுடைய கண் போல் காது இல்லை !


இனியாவது சரியாக சிந்தனை செய் !

அதனால் நீ தனிதான் !
உன் கைரேகை தனிதான் !
உன் தலைமுடி தனி தான் !

உன் பசி தனிதான் !
உன் தேவை தனிதான் !
உன் பலம் தனிதான் !
உன் பலவீனம் தனிதான் !
உன் பிரச்சனை தனிதான் !
உனக்குரிய தீர்வும் தனிதான் !
உன் சிந்தனை தனிதான் !
உன் மனது தனிதான் !
உன் எதிர்பார்ப்பு தனிதான் !
உன் அனுபவம் தனிதான் !
உன் பயம் தனிதான் !
உன் நம்பிக்கை தனிதான் !
உன் தூக்கம் தனிதான் !
உன் மூச்சுக்காற்று தனிதான் !
உன் ப்ராரப்தம் தனிதான் !
உன் வலி தனிதான் !
உன் தேடல் தனிதான் !
உன் கேள்வி தனிதான் !
உன் பதில் தனிதான் !
உன் வாழ்க்கைப்பாடம் தனிதான் !
  
உன் வாழ்க்கை தனிதான் !
உன் வாழ்க்கை அதிசயமானதுதான் !
உன் வாழ்க்கை ஆச்சரியமானதுதான் !
உன் வாழ்க்கை அபூர்வமானதுதான் !
உன் வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான் !
உன் வாழ்க்கை உத்தமமானதுதான் !

உன் நாமஜபம் தனிதான் !
உன் ப்ரார்த்தனை தனிதான் !
உன் க்ருஷ்ணன் தனிதான் !

அதனால் இனியாவது,
உனக்கு
குரு உபதேசித்த பகவன் 
நாமத்தை ஜபித்து, உன் 
ப்ரார்த்தனையை செய்து,
உன் க்ருஷ்ணனை 
அனுபவித்துக்கொண்டு
இன்றிலிருந்து, 
இப்பொழுதிலிருந்து,
உன் வாழ்க்கையை வாழ் !

இனியும் முட்டாள்தனமாக
உன் வாழ்க்கையைக் கேவலப்படுத்தாதே!
உன் வாழ்க்கையை அசிங்கப்படுத்தாதே !
உன் வாழ்க்கையை உதாசீனப்படுத்தாதே !
உன் வாழ்க்கையை வெறுக்காதே !
உன் வாழ்க்கையை நாசமாக்காதே !

உன் வாழ்க்கை, 
உன்னுடைய க்ருஷ்ணன்
 உனக்கென்று தந்த
விசேஷமான ப்ரசாதம் !

இதை ஞாபகம் வைத்துக்கொள் !









0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP