ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மஞ்சனமாடி வந்தான் !



ராதேக்ருஷ்ணா

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
எங்கள் பத்மநாபன்
எல்லையில்லா ஆனந்தக்கடலில்
பக்தர்கள் திளைக்க
ஆராட்டு ஆடி வந்தான் !


ஸ்யானந்தூர அழகன்
மஞ்சனமாடி வந்தான் !

பக்தர்களின் குழந்தை
பக்த குழந்தைகளோடு
மஞ்சனமாடி வந்தான் !


அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்
சங்குமுகக் கடற்கரையில்
மணலில் புரண்டு
மஞ்சனமாடி வந்தான் !


சுவாதித் திருநாளின்
சுந்தரவேந்தன்
சுகமாக
மஞ்சனமாடி வந்தான் !

திருப்பாற்கடல் நாதன்
உப்புக் கடலில்
உவகையோடு விளையாடி
மஞ்சனமாடி வந்தான் !

தசவாதார நாயகன்
நாலு அவதார ரூபனாக
மஞ்சனமாடி வந்தான் !

உப்பு மாங்காய் கடிப்பவன்
உருண்டு உருண்டு
பக்தர்களோடு
சாடிச் சாடி
மஞ்சனமாடி வந்தான் !

தாமரைக் கையன்
தாமரை நாயகியோடு
தள்ளாடித் தள்ளாடி
மஞ்சனமாடி வந்தான் ! 

ஆளவந்தாரை ஸ்ரீ ரங்கத்திலிருந்து
அழைத்து வந்த
அமலன்
மஞ்சனமாடி வந்தான் !



ராமானுஜரை நாடு கடத்திய
ராச மண்டல நாயகன்
மஞ்சனமாடி வந்தான் !




ஆளாய் பறக்கும்
கூட்டத்தின்
ஆகாய ஊர்திகளை
நிறுத்தி,
ராஜாதி ராஜன்
எதற்கும் அடங்காத
தேவாதிதேவன்
மஞ்சனமாடி வந்தான் !


 யவனர்களையும்
சிரம் தாழ வைத்து
செருக்குடன்
மஞ்சனமாடி வந்தான் !

மீன் பிடிக்கும்
கூட்டத்தாரின் தாபம் தீர
தாமரைக் கண்ணன்
மஞ்சனமாடி வந்தான் !

 மும்மதமுடைய
அந்தணர்களை அனைவருடன்
சேர நீராட வைத்து  
மஞ்சனமாடி வந்தான் !

கோபாலவல்லிக்கு
திருக்கோளூரில்
மாநிதியாகக் காட்சி தந்து
மஞ்சனமாடி வந்தான் !

இன்னும் ஆறு மாதம் உண்டே!
அடுத்த ஆராட்டிற்கு !
அதுவரையில் உடல் நிற்குமோ !
உயிர் வாழுமோ !
நினைவும் நிலைக்குமோ !
 சிரத்தை அதிகமாகுமோ !


இவை இருக்குமென்றால்
அடுத்த ஆராட்டிற்கு
அப்போதைக்கு இப்போதே
சொல்லி வைப்போம்!
நாமும் போய் நணுகவேண்டும் !


அதுவரை
பேரும் ஓர் ஆயிரத்துள்
ஒன்று பேசுவோம் !

 








0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP