ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 அக்டோபர், 2009

நீயும் துளசியாகலாமே !



ராதேக்ருஷ்ணா

என்றாவது யோசித்திருக்கிறாயா ? ! ?


உன்னால் உனக்கு என்ன உபயோகம் ?
உன்னால் மற்றவர்களுக்கு என்ன உபயோகம்?
உன்னால் உலகத்துக்கு என்ன உபயோகம் ?
உன்னால் பகவானுக்கு என்ன உபயோகம் ?

 ஒவ்வொரு நாளும்
நீ உனக்கு
உபயோகமாக இரு !
அதாவது உன் ஆத்மாவுக்கு நீ
சமத்தாக இரு!
உன் மனதில் குற்ற உணர்ச்சி
வராதபடி நட !
அகம்பாவத்தில் ஆடாதே !
தற்பெருமையில் குதிக்காதே!
நேரத்தை வீணடிக்காதே !
சோம்பேறியாய் திரியாதே !
புத்திசாலியென்று அலட்டாதே !
 நீ அழகென்று அலையாதே !
உன் உடலைப் படுத்தாதே !



உன்னால் மற்றவர்களுக்கு
உதவி இல்லையென்றாலும்  
உபத்திரவமாக இருக்காதே !
யாரைப் பற்றியும் தவறாக
எதுவும் யாரிடமும் பேசாதே !
யாரையும் கேவலமாக நினைக்காதே !
யாரையும் கேவலப்படுத்தாதே !
யாரையும் அனாதையென்று இகழாதே!
யாருக்கும் கெடுதல் நினைக்காதே !
யாரையும் கெடுக்காதே !



உன்னால் நீ வாழ்கின்ற 
உலகிற்கு நிச்சயம் ஏதாவது 
நல்லது நடக்கவேண்டும் !
உலகை கேவலமாக நினைக்காதே!
உலகை வெறுக்காதே !
உலகை நிந்திக்காதே !
உலகை குப்பையாக்காதே!
உலகின் வளத்தை வீணடிக்காதே!
உலகின் வளத்தை அழிக்காதே !
பசுமையைக் காப்பாற்று !


உன்னால் பகவானுக்கு என்ன 
ப்ரயோஜனமுண்டு ?
நீ உனக்கு ப்ரயோஜனமாக
இருந்தாலே பகவானுக்கு
அதுவே போதும் !
பகவானை நம்பு!
பகவானின் நாமத்தைச் சொல் !
பகவானின் வைபவத்தில் மனதை வை !

உன் வாழ்க்கையை நீ
நல்லபடி வாழ்ந்து, நீ
ஆனந்தத்தில் திளைத்து,
இந்த ஜன்மாவில்
கடைத்தேறினாலே
பகவானுக்கு உபயோகம் !


எல்லோருக்கும் உபயோகமாக
இருக்க முடியுமோ  ? ! ?
யாராவது உண்டோ ? ! ?


உண்டு ! உண்டு ! உண்டு !


துளசியினால் துளசிக்கு உபயோகம் !
துளசியினால் அடுத்தவர்க்கு உபயோகம் !
துளசியினால் உலகத்திற்கு உபயோகம் !
துளசியினால் பகவானுக்கு உபயோகம் !


துளசிதேவி பவித்திரமாக இருப்பதனால்,
அவள் பகவானின் திருமுடியை 
அலங்கரிப்பதால் அவளுக்கு அவளே
ப்ரயோஜனமாகின்றாள் !


துளசியைக் கொண்டு அர்ச்சிக்கும்போது
மற்றவர்களின் பாபமும் அழிகிறதால்,
அவள் மற்றவர்களுக்கு உபயோகமாக
இருக்கிறாள் !


ப்ருந்தாவனம் இருப்பது உலகில்தானே!
துளசிதேவிதானே ப்ருந்தாவனம் !
ப்ருந்தாவனம் ஸ்வயம் க்ருஷ்ணனே !
ஆண்டாளையும் தந்தவள் துளசிதானே!

உலகமே இன்று அவளைக்கொண்டு
க்ருஷ்ணனை அனுபவிப்பதனால்
உலகிற்கு உபயோகமாகிறாள் !


என்றுமே க்ருஷ்ணனிஷ்டப்படி
இருப்பதனால், எப்பொழுதும்
பிரியாதிருக்கும் க்ருஷ்ணப்ரியா !


இன்று அவள் பகவானிடம்
தனனை அர்ப்பித்த நாள் !
க்ருஷ்ணனை கல்யாணம்
செய்துகொண்ட நாள் !
க்ருஷ்ணன் நாற்றத் துழாய்
முடியனான நாள்!


இன்று துளசியைக் கொண்டாடு !
ஆவலுடன் ப்ரார்த்தனை செய் !
என்றுமே துளசியைப் பிடித்துக்கொள்!


தினம் க்ருஷ்ணனுக்கு துளசியைத் தா !



நீயும் துளசியாகலாமே !


பிறகு உன்னையும் தரலாமே!




1 கருத்துகள்:

Radhekrishna Sath Sangam 30 அக்டோபர், 2009 அன்று AM 4:45  

radhekrishna guruji

This message made me realize how pure thulasi's bhakthi was towards krishna...she offered herself to lord Krishna and beautified herself... Hopefully someday, with gurukripai, i should also have the unconditional faith like thulasi to become KRishna priya....

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP